search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "case register"

    மார்த்தாண்டத்தில் சப்-இன்ஸ்பெக்டரை கொன்றவர் நாகர். ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் மீது மாதா சிலையை உடைத்ததாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    மார்த்தாண்டம் அருகே பரக்குன்று பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 63), ஓய்வு பெற்ற சப்-இன்ஸ் பெக்டர். இவர், ஓய்வு பெற்ற பிறகு மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ ஆலயத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று ஆலயத்திற்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் சுந்தர்ராஜனை சரமாரியாக தாக்கினார்.

    இதில் படுகாயம் அடைந்த சுந்தர்ராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவின் காட்சிகளையும் கைப்பற்றிவிசாரணை நடத்தியதில் சுந்தர்ராஜை தாக்கியது ஆணையடி மாத்தார் பகுதியைச் சேர்ந்த ரவி (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அவர் போலீசாரிடம் கூறுகையில், எனது மனைவி என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் நான், மனவருத்தத்தில் இருந்தேன். சம்பவத்தன்று மார்த்தாண்டம் ஆலயத்திற்கு சென்றேன். அப்போது காவலாளி சுந்தர்ராஜை தாக்கினேன். பின்னர் அங்கிருந்து சென்று விட்டேன். திருவட்டார் அருகே ஆணையடி பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தின் சொரூபத்தையும் உடைத்தேன் என்றார். போலீசார் அவரை குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    பின்னர் ரவி, நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    திருவட்டார் பகுதியில் ஆணையடி பகுதியில் மாதா சொரூபத்தை உடைத்ததாகவும், திருவட்டார் போலீசார் ரவி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர், ஏற்கனவே 10நாட்களுக்கு முன்பு தான் ஜெயிலில் இருந்து வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதிய தலைமை செயலகம் முறைகேடு குறித்து வழக்குப்பதிவு செய்ய தடை விதிக்க முடியாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #ADMK #DMK #MKStalin

    சென்னை:

    தி.மு.க. ஆட்சிக்காலத்தில் புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டப்பட்டது. பின்னர் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், அந்த கட்டிடத்தில் அரசு பல்நோக்கு மருத்துவ மனையாக மாற்றப்பட்டது.

    மேலும், அந்த கட்டிடம் கட்டியதல் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, அதுகுறித்து விசாரணை நடத்த ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.ரெகுபதி தலைமையில் ஒரு நலர் கமி‌ஷன் அமைக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கமி‌ஷன் விசாரணை கண் துடைப்பு நாடகம் என்று உத்தரவிட்டார். இதையடுத்து நீதிபதி ரெகுபதி தன் பதவியை ராஜினாமா செய்தார். இதைதொடர்ந்து, புதிய தலைமை செயலகம் கட்டிட முறைகேடு வழக்கு, லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு மாற்றி, தமிழக அரசு உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, புதிய தலைமை செயலகம் கட்டிட முறைகேடு குறித்து இதுவரை ஊழல் தடுப்பு போலீசார் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. என்றார்.

     


    மனுதார் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், இந்த வழக்கை போலீஸ் விசாரணைக்கு மாற்றுவதற்கு முன்பு தலைமை செயலாளர் தீர விசாரிக்க வில்லை. ஆவணங்களை பார்க்க வில்லை. அவர் எத்திரத்தனமாக செயல் பட்டுள்ளார். இப்போது இந்த வழக்கை பற்றி பொதுக்கூட்டத்தில் முதல்அமைச்சர் பேசுகிறார். இதனால் சில அச்சம் ஏற்படுகிறது எனவே வழக்கு பதிவு செய்யவும், விசாரணைக்கு தடை வேண்டும் என்றார்.

    தடை விதிக்க மறுத்த நீதிபதி, வழக்கை வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைக்கிறேன். அதற்குள் எதுவும் நடந்து விடாது. மேலும் ரெகுபதி ஆணையத்தில் இருந்து ஊழல் தடுப்பு போலீசாரிடம் ஆவணங்கள் எப்போது சென்றது என்ற விவரத்தை அட்வகேட் ஜெனரல் அரசிடம் கேட்டு தெரிவிக்கவேண்டும்‘ என்று உத்தரவிட்டார். #ADMK #DMK #MKStalin

    திண்டுக்கல் அருகே மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை அருகே உள்ள நெல்லூரைச் சேர்ந்தவர் சின்னமுருகன். இவரது மகன் பாண்டி (வயது 28) என்பவருக்கும், நரசிங்காபுரத்தைச் சேர்ந்த பிரவீனா (19) என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 

    திருமணத்தின் போது 7 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் சீர் வரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக மேலும் ரூ.1 லட்சம் பணம், 3 பவுன் கூடுதல் வரதட்சணையாக கேட்டு பிரவீனாவை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் கொடுமை படுத்தி வந்துள்ளனர்.

    இது குறித்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பிரவீனா புகார் அளித்தார். அதன் பேரில் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய கணவர் பாண்டி, மாமனார் சின்ன முருகன், மாமியார் மாயக்காள் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் விடிய விடிய நடத்திய வாகன சோதனையில் ஓரே நாளில் 4 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் ‘ஸ்டாமிங் ஆப்ரே‌ஷன்’ நடத்துமாறு நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அவரது உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சிலம்பரசன் மற்றும் தில்லைநடராஜன் மேற்பார்வையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது குடிபோதையில் வாகனம் ஒட்டியதாக 127 வழக்குகள், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டியதாக 1226, லாரிகளில் மணல் திருடிச் சென்றதாக, சீருடை அணியாத டிரைவர்கள், ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஒட்டியது, ஓவர் லோடு, ஓவர் ஸ்பீடு என மொத்தம் 4087 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    இதன் மூலம் அபராதத் தொகையாக, ரூ.3,06,500 வரை வாகன ஓட்டிகளிடம் இருந்து பெறப்பட்டது. இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட்டு சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். #Tamilnews
    ×