search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 4 ஆயிரம் வழக்கு பதிவு- ரூ.3 லட்சம் அபராதம் வசூல்
    X

    திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 4 ஆயிரம் வழக்கு பதிவு- ரூ.3 லட்சம் அபராதம் வசூல்

    திருவள்ளூர் மாவட்டத்தில் விடிய விடிய நடத்திய வாகன சோதனையில் ஓரே நாளில் 4 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் ‘ஸ்டாமிங் ஆப்ரே‌ஷன்’ நடத்துமாறு நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அவரது உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சிலம்பரசன் மற்றும் தில்லைநடராஜன் மேற்பார்வையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது குடிபோதையில் வாகனம் ஒட்டியதாக 127 வழக்குகள், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டியதாக 1226, லாரிகளில் மணல் திருடிச் சென்றதாக, சீருடை அணியாத டிரைவர்கள், ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஒட்டியது, ஓவர் லோடு, ஓவர் ஸ்பீடு என மொத்தம் 4087 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    இதன் மூலம் அபராதத் தொகையாக, ரூ.3,06,500 வரை வாகன ஓட்டிகளிடம் இருந்து பெறப்பட்டது. இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட்டு சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். #Tamilnews
    Next Story
    ×