search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sub inspector killed"

    மார்த்தாண்டத்தில் சப்-இன்ஸ்பெக்டரை கொன்றவர் நாகர். ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் மீது மாதா சிலையை உடைத்ததாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    மார்த்தாண்டம் அருகே பரக்குன்று பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 63), ஓய்வு பெற்ற சப்-இன்ஸ் பெக்டர். இவர், ஓய்வு பெற்ற பிறகு மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ ஆலயத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று ஆலயத்திற்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் சுந்தர்ராஜனை சரமாரியாக தாக்கினார்.

    இதில் படுகாயம் அடைந்த சுந்தர்ராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவின் காட்சிகளையும் கைப்பற்றிவிசாரணை நடத்தியதில் சுந்தர்ராஜை தாக்கியது ஆணையடி மாத்தார் பகுதியைச் சேர்ந்த ரவி (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அவர் போலீசாரிடம் கூறுகையில், எனது மனைவி என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் நான், மனவருத்தத்தில் இருந்தேன். சம்பவத்தன்று மார்த்தாண்டம் ஆலயத்திற்கு சென்றேன். அப்போது காவலாளி சுந்தர்ராஜை தாக்கினேன். பின்னர் அங்கிருந்து சென்று விட்டேன். திருவட்டார் அருகே ஆணையடி பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தின் சொரூபத்தையும் உடைத்தேன் என்றார். போலீசார் அவரை குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    பின்னர் ரவி, நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    திருவட்டார் பகுதியில் ஆணையடி பகுதியில் மாதா சொரூபத்தை உடைத்ததாகவும், திருவட்டார் போலீசார் ரவி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர், ஏற்கனவே 10நாட்களுக்கு முன்பு தான் ஜெயிலில் இருந்து வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    திண்டுக்கல் அருகே குடிபோதையில் பாலத்தில் இருந்து தவறி விழுந்த சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல், ஜூலை. 12-

    திண்டுக்கல் அருகே குடிபோதையில் பாலத் தில் இருந்து தவறி விழுந்த சப்-இன்ஸ்பெக்டர் பரிதா பமாக உயிரிழந்தார்.

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). இவர் ஆயுதப்படை போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். தனது மனைவி ஜெயக்கொடி (46), விஜயபாண்டி (24), மகள் சிவானிகா (20) ஆகியோருடன் சீலப்பாடி ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.

    இவருக்கு சொந்தமான தோட்டம் கல்லாடிப்பட்டி என்ற இடத்தில் உள்ளது. தோட்டத்துக்கு சென்று விட்டு ஊர் திருவிழாவை காண்பதற்காக நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    திண்டுக்கல் அருகே உள்ள அணைப்பட்டி பிரிவு ரோட்டில் கல்பாலத்தின் மீது அமர்ந்து மது அருந்தினார். போதை தலைக்கேறிய நிலையில் பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    10 அடி உயரத்தில் இருந்து விழுந்த முருகேசன் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இன்று காலை அப்பகுதியில் வந்த பொதுமக்கள் மோட்டார் சைக்கிள் மட்டும் தனியாக இருந்ததைப்பார்த்து பாலத்தின் கீழே எட்டிப் பார்த்தனர். அப்போது முருகேசன் தலையில் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்ததைப்பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×