search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BSNL"

    • இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
    • பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி வெளியீடு பற்றிய புது தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

    ஏர்டெல், ஜியோ மற்றும் வி (வோடபோன் ஐடியா) என இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் நாட்டில் 5ஜி சேவையை வெளியிடுவதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. மிக விரைவில் இந்தியாவில் 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இன்னமும் 4ஜி சேவையை நாடு முழுக்க வெளியிட திண்டாடி வருகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் சில பகுதிகளில் வெளியிடப்படும் என கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் புது தகவலின் படி பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் பிஎஸ்என்எல் 4ஜி அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.


    திடீரென 4ஜி வெளியீடு தாமதமாக என்ன காரணம் என்றும் டெலிகாம் நிறுவனம் தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவைகளை வெளியிட விசேஷ உபகரணங்களை வாங்க முடியாமல் தவிப்பதாக தெரிவித்து இருக்கிறார். பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த உபகரணங்களை உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும்.

    உபகரணங்களை வாங்கும் பணிகளை பிஎஸ்என்எல் அடுத்த ஆண்டு தான் நிறைவு செய்யும். 4ஜி அப்கிரேடு பணிகளில் பிஎஸ்என்எல் உள்நாட்டு தயாரிப்புகளையே பயன்படுத்தும், இதுவே வெளியீட்டு தாமதமாக காரணம் ஆகும். இந்தியாவில் 4ஜி சேவைகளை வெளியிடும் போதே பிஎஸ்என்எல் 5ஜி சேவைகளையும் வெளியிட முடியும் என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சக அதிகாரி தெரிவித்து இருக்கிறார்.

    • அசல் அடையாள ஆவணங்களைக் காண்பித்து பின்வரும் சலுகைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
    • 75 நாட்களுக்கு ரூ.775 (ஜிஎஸ்டியுடன்) செலுத்தினால் போதுமானதாகும்.

    திருப்பூர்,ஆக.28-

    திருப்பூரில் நாளை29, நாளை மறுநாள் 30 -ந் தேதிகளில் பி.எஸ்.என்.எஸ். சிறப்பு மேளா நடைபெறுகிறது.இது குறித்து திருப்பூா் பி.எஸ்.என்.எல்.துணை பொது மேலாளா் பி.உஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, பி.எஸ்.என்.எல்.நிறுவனம் சாா்பில் செல்போன் மற்றும் அதிவேக இணைய (பைபா்) சேவையில் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.

    அதன்படி நாளை 29,30-ந்தேதிகளில் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா் சேவை மையம் மற்றும் மேளா நடைபெறும் இடங்களில் தங்களது அசல் அடையாள ஆவணங்களைக் காண்பித்து பின்வரும் சலுகைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.இதில் ரூ.275-க்கு அதிவேக இன்டா்நெட் ப்ரீடம் எனும் குறுகிய கால சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த சேவையில் மாதம் ரூ.449 அல்லது ரூ.599 திட்டத்தில் இணைப்பு பெறும் வாடிக்கையாளா்கள் முதல் 75 நாட்களுக்கு ரூ.275 மற்றும் ஜிஎஸ்டி. செலுத்தினால் போதுமானது.ஓ.டி.டி.தளத்துடன் கூடிய ரூ.999 திட்டத்தில் புதிய இணைப்பு பெறும் வாடிக்கையாளா்கள் முதல் 75 நாட்களுக்கு ரூ.775 (ஜிஎஸ்டியுடன்) செலுத்தினால் போதுமானதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அடர் வனப்பகுதி என்பதால் இங்கு 2 ஜி சேவை மட்டுமே கிடைக்கிறது.
    • கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொலைதொடர்பு டவர் (பி.எஸ்.என்.எல்.) பழுதடைந்துள்ளதால் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுற்றுலா தலங்களான மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

    அடர் வன பகுதி

    இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கி இருந்து தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் படிப்பதற்காக இப்பகுதியை விட்டு வெளியேறி நகர்பகுதியில் சென்று படித்து வருகின்றனர்.

    இந்த பகுதி அடர் வனப்பகுதி என்பதால் இங்கு 2 ஜி சேவை மட்டுமே கிடைக்கிறது. இதனை பயன்படுத்தி இப்பகுதி பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் தினமும் செல்போனில் பேசி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாஞ்சோலையை அடுத்த நாலுமுக்கு, ஊத்து பகுதிகளில் அமைந்துள்ள தொலைதொடர்பு டவர் (பி.எஸ்.என்.எல்.) பழுதடைந்துள்ளதால் இப்பகுதிகளில் இருந்து எந்த ஒரு தகவலும் வெளியே சொல்லமுடியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் சமீபத்தில் தொழிலாளி ஒருவர் இறந்துவிட்டார். அதனைக்கூட அவரது மகனுக்கு தெரிவிக்க செல்போனில் தொடர்புகொள்ள முடியவில்லை . உடனடியாக தொலை தொடர்பு சேவையை சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பி.எஸ்.என்.எல். நிறுவனம் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அசத்தலான சலுகையை அறிவித்து இருக்கிறது.
    • இந்த சலுகை குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது.

    இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் விளம்பர நோக்கில் சிறப்பு சலுகையை அறிவித்து இருக்கிறது. அதன்படி பி.எஸ்.என்.எல். பயனர்கள் ரூ. 150 டாப்-அப் செய்தால் ரூ. 150 மதிப்பிலான டாக்டைம் பெற முடியும். அதன்படி பயனர்கள் மேற்கொள்ளும் ரூ.150 ரிசார்ஜில் ஃபுல் டாக்டைம் பெறலாம்.

    விளம்பர நோக்கில் அறிவிக்கப்பட்டு இருப்பதால், இந்த சலுகை மிக குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே கிடைக்கும். இது பற்றி வெளியாகி இருக்கும் அறிவிக்கையின் படி ஃபுல் டாக்டைம் சலுகை ஆகஸ்ட் 15, 2022 துவங்கி ஆகஸ்ட் 21, 2022 வரை வழங்கப்படும். முன்னதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் நீண்ட வேலிடிட்டி கொண்ட புது சலுகைகளை அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


    ரூ. 2 ஆயிரத்து 022 விலையில் அறிவிக்கப்பட்ட பி.எஸ்.என்.எல். சலுகை 300 நாட்கள் வேலிடிட்டி கொண்டது ஆகும். இந்த பிரீபெயிட் சலுகை மாதம் 75 ஜிபி டேட்டா வழங்குகிறது. டேட்டா தீர்ந்த பின் மொபைல் டேட்டா வேகம் 40kbps ஆக குறைக்கப்பட்டு விடும். மேலும் இந்த டேட்டா பலன் முதல் 60 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இதன் பின் பயனர்கள் டேட்டா வவுச்சர்களுக்கு ரிசார்ஜ் செய்து மொபைல் டேட்டா பயன்படுத்த வேண்டும்.

    இவை தவிர பி.எஸ்.என்.எல். ரூ. 3 ஆயிரத்து 299 விலை கொண்ட வருடாந்திர டேட்டா சலுகை மாதம் 2.5 ஜிபி டேட்டாவை 12 மாதங்களுக்கு வழங்குகிறது. மற்றொரு சலுகை ரூ. 2 ஆயிரத்து 299 விலையில் மாதம் 1.5 ஜிபி டேட்டாவை 12 மாதங்களுக்கு வழங்குகிறது. இவை மட்டுமின்றி பி.எஸ்.என்.எல். ரூ. 1,251 விலை வருடாந்திர சலுகையில் மாதம் 0.75 ஜிபி டேட்டா ஒரு வருட வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

    • பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்காக புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது.
    • இந்த சலுகை 300 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.

    இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் ஆயத்தமாகி உள்ளன. இந்த நிலையில், பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்காக புது சலுகையை அறிவித்து இருக்கிறது. ரூ. 2 ஆயிரத்து 022 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய பி.எஸ்.என்.எல். சலுகை 300 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.

    புதிய பி.எஸ்.என்.எல். பிரீபெயிட் சலுகை மாதம் 75 ஜிபி டேட்டா வழங்குகிறது. டேட்டா தீர்ந்த போதும் மொபைல் டேட்டா வேகம் 40kbps ஆக குறைந்து விடும். மேலும் இந்த டேட்டா பலன் முதல் 60 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இதன் பின் பயனர்கள் டேட்டா வவுச்சர்களுக்கு ரிசார்ஜ் செய்து மொபைல் டேட்டா பயன்படுத்த வேண்டும்.

    இதுதவிர ரூ. 2 ஆயிரத்து 022 விலை பி.எஸ்.என்.எல். சலுகை 300 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. நீண்ட வேலிடிட்டி கொண்ட சலுகையை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பயனுள்ளதாக இருக்கும்.


    மற்ற சலுகைகள்:

    புதிதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் பி.எஸ்.என்.எல். ரூ. 2 ஆயிரத்து 022 விலை சலுகை மட்டும் இன்றி நீண்ட வேலிடிட்டி வழங்கும் இதர சலுகைகளையும் பி.எஸ்.என்.எல். வழங்கி வருகிறது. பி.எஸ்.என்.எல். ரூ. 3 ஆயிரத்து 299 விலை கொண்ட வருடாந்திர டேட்டா சலுகை மாதம் 2.5 ஜிபி டேட்டாவை 12 மாதங்களுக்கு வழங்குகிறது.

    மற்றொரு சலுகை ரூ. 2 ஆயிரத்து 299 விலையில் மாதம் 1.5 ஜிபி டேட்டாவை 12 மாதங்களுக்கு வழங்குகிறது. இவை மட்டுமின்றி பி.எஸ்.என்.எல். ரூ. 1,251 விலை வருடாந்திர சலுகையில் மாதம் 0.75 ஜிபி டேட்டா ஒரு வருட வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

    • இந்தியாவில் 5ஜி சேவையை வழங்குவதற்கான ஸ்பெக்ட்ரம் ஏலம் சமீபத்தில் தான் நடைபெற்று முடிந்தது.
    • ஏலத்தில் அதானி குழுமமும் கலந்து கொண்டு 5ஜி அலைக்கற்றைகளை விலைக்கு வாங்கியது.

    மத்திய தொலைத்தொடர்ந்து துறை சார்பில் 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 24 ஆயிரத்து 740 மெகாஹெர்ட்ஸ் வரையிலான ஸ்பெக்ட்ரத்தை ரூ. 88 ஆயிரத்து 078 கோடி செலவில் விலைக்கு வாங்கியது.

    ரிலையன்ஸ் ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் 19 ஆயிரத்து 867.8 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை ரூ. 43 ஆயிரத்து 084 கோடி கொடுத்து வாங்கியது. வோடபோன் ஐடியா நிறுவனம் 3 ஆயிரத்து 300 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை வாங்கி இருக்கிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஒவ்வொரு டெலிகாம் நிறுவனமும் இந்தியாவில் 5ஜி சேவையை வெளியிட துவங்கும் என எதிர்பார்க்கலாம்.


    இந்த நிலையில், பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். இந்தியாவில் 2023 முதல் 5ஜி சேவையை வழங்கும் என மத்திய தொலை தொடர்பு துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்து இருக்கிறார். மத்திய டெலிமேடிக்ஸ் துறை சார்பில் NSA கோர் நெட்வொர்க் உருவாக்கப்பட்டு வருகிறது. இது ஆகஸ்ட் மாதத்திற்குள் தயார் நிலைக்கு வந்து விடும். இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு டிசம்பர் வரை சோதனை நடைபெற இருக்கிறது.

    "அடுத்த ஆண்டு வார்ரில் இந்திய 5ஜி ஸ்டாக் தயார் நிலைக்கு வந்து விடும். அப்போது பி.எஸ்.என்.எல். மூலம் 5ஜி சேவைகள் வழங்கும் பணிகள் துவங்கி விடும்," என மத்திய மந்திரி மேலும் தெரிவித்தார்.

    • நாடு முழுவதும் 24,680 கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவை வழங்கப்படுகிறது.
    • புதுச்சேரியில் ஒரு கிராமத்தில் 4ஜி மொபைல் சேவை வழங்கப்பட உள்ளது.

    பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை 1.64 லட்சம் கோடி மதிப்பில் மறுசீரமைப்பு செய்யும் திட்டத்திற்கும், நாட்டில் 4ஜி மொபைல் சேவை இல்லாத கிராமங்களில் ரூ.26,316 கோடி மதிப்பில் அதனை முழுமையாக வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்திருந்தது.

    இதன் மூலம் நாடு முழுவதும் 24,680 கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவை அளிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் அரியலூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, ஈரோடு, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கரூர்,மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம் சிவகங்கை, தென்காசி, உள்பட மொத்தம் 31 மாவட்டங்களில் உள்ள 534 கிராமங்களிலும், புதுச்சேரியில் ஒரு கிராமத்திலும் பி.எஸ்.என்.எல்.4ஜி மொபைல் சேவை அளிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. 

    • பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் 19 ரூபாய்க்கு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் ஒரு மாத வேலிடிட்டி கொண்டதாகும்.
    • உங்கள் சிம்மை ஆக்டிவாக வைக்க இதுவே சிறந்த திட்டமாகும்.

    தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா ஆகியவை தான் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பெரும்பாலான பயனர்கள் இந்த மூன்று நிறுவனங்களில் ஏதாவது ஒன்றைத் தான் பயன்படுத்தி வருகின்றன. பயனர்களை கவர்வதற்காக குறைந்த விலையில் அதிக பலன்களை வழங்கும் திட்டங்களை இந்நிறுவனங்கள் வழங்கி வந்தன.

    ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து, இந்த மூன்று நிறுவனங்களும் தங்கள் திட்டங்களின் விலைகளை கிடுகிடுவென உயர்த்தி விட்டன. அந்நிறுவனங்கள் மலிவான விலையில் வழங்கி வந்த திட்டங்களின் விலையும் தற்போது உயர்த்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனம் ப்ரீபெய்ட் பயனர்களுக்காக குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டம் ஒன்றை ரகசியமாக அறிமுகப்படுத்தி உள்ளது.


    அதன்படி பி.எஸ்.என்.எல் நிறுவனம் 19 ரூபாய்க்கு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், இது ஒரு மாத வேலிடிட்டி கொண்டதாகும். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு, அழைப்பு கட்டணம் 20 பைசாவாக குறைகிறது. இதன்பின் வேறு எந்த ரீசார்ஜும் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் கவலையின்றி மாதம் முழுவதும் காலிங்க் வசதியை பெறலாம். உங்கள் சிம்மை ஆக்டிவாக வைக்க இதுவே சிறந்த திட்டமாகும்.

    • பிஎஸ்என்எல். குடியிருப்பு பகுதி சுற்றிலும் புதர் மண்டி கிடப்பதால் விஷ ஜந்துக்கள் அடிக்கடி வெளியே வருகிறது.
    • குப்பைகள் கொட்டப்படுவதால் குப்பை மேடாக காட்சியளிக்கிறது

    உடுமலை :

    உடுமலை பழனி ரோட்டில் பிஎஸ்என்எல். குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியை சுற்றிலும் புதர் மண்டி கிடப்பதால் விஷ ஜந்துக்கள் அடிக்கடி வெளியே வருகிறது. மேலும் இந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் குப்பை மேடாக காட்சியளிக்கிறது.

    இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு நடக்கவே மிகவும் சிரமப்படுகின்றனர். குடியிருப்பு பகுதியை சுற்றிலும் உள்ள முட்புதர்களை அப்புறப்படுத்தியும் குப்பைகளை வெளியேற்றியும் இந்தப் பகுதியை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • வாடிக்கையாளர் சேவை மையம் நடத்த, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துடன், 5 ஆண்டுக்கு ஒப்பந்தம் ஏற்படுத்தியிருந்தது.
    • நாகர்கோவிலில் வாடிக்கையாளர் சேவை மையம் துவக்கியுள்ளனர்.

    அவினாசி,

    தமிழகம் மற்றும் கேரளாவில் பி.எஸ்.என்.எல்., நிறுவனம், தனது வாடிக்கையாளர் சேவை பிரிவை, கார்வி டிஜி கனெக்ட் என்ற தனியார் நிறுவனம் வசம் ஒப்படைத்திருந்தது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில், இரு மாநிலங்களுக்கான வாடிக்கையாளர் சேவை மையம், 3 ஆண்டாக செயல்பட்டு வந்தது. தமிழக வாடிக்கையாளர் சேவை பிரிவில் 51 பேர், கேரள பிரிவில், 49 பேர் என சுழற்சி முறையில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், வாடிக்கையாளர் சேவை மையம் மூடப்பட்டுள்ளது.

    அந்த நிறுவனத்தினர் கூறுகையில், வாடிக்கையாளர் சேவை மையம் நடத்த, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துடன், 5 ஆண்டுக்கு ஒப்பந்தம் ஏற்படுத்தியிருந்தது. தற்போது ஒப்பந்தத்தை ரத்து செய்து, வேறு நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தினர் நாகர்கோவிலில் வாடிக்கையாளர் சேவை மையம் துவக்கியுள்ளனர் என்றனர்.

    பொதுத்துறை நிறுவனங்களில் நஷ்டத்தில் இயங்கும் துறைகளை மீட்டெடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்த 4 ஆண்டுகளில் சில பொதுத் துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்பனை செய்தும், குத்தகைக்கு விட்டும் பணமாக்குதல் திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. அந்த நிறுவனங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்காக ரூ. 70 ஆயிரம் கோடி மறுமலர்ச்சி திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.

    இந்த திட்டத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மறுமலர்ச்சி திட்டத்தின் ஒருபகுதியாக பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். நிறுவனங்களின் சொத்துக்களை விற்பனை செய்து பணமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

    இரு நிறுவனங்களின் சொத்து விபரங்களை டி.ஐ.பி.ஏ.எம். இணைய தளத்தில் மத்திய அரசு பட்டியலிட்டு உள்ளது. அதில் ஐதராபாத், சண்டிகர், பாவ் நகர், கொல்கத்தா ஆகிய இடங்களில் உள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு சொந்தமான மனை மற்றும் குடியிருப்புகள் பட்டியலிடப்பட்டு உள்ளன.

    இவற்றுக்கான அடிப்படை விலை ரூ. 660 கோடி என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. மும்பையில் வசாரி ஹில் மற்றும் கோரேக்கான் பகுதிகளில் உள்ள எம்.டி.என்.எல். நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்கள் பட்டியலிடப்பட்டு அடிப்படையாக ரூ. 310 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.

    விற்பனை பட்டியலில் உள்ள மும்பை, ஓஷிவாரா பகுதியில் எம்.டி.என்.எல். நிறுவனத்துக்கு சொந்தமான அடுக்கு மாடி குடியிருப்பும் இடம் பெற்றுள்ளது. இந்த அடுக்கு மாடி குடியிருப்பின் விலை ரூ. 52.26 லட்சம் முதல் ரூ. 1.59 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    எம்.டி.என்.எல். நிறுவனத்தின் சொத்துக்களுக்கான இணையவழி ஏலம் வருகிற டிசம்பர் 14-ந் தேதி நடக்கிறது. அடுத்த ஆண்டுக்குள் இந்த இரண்டு நிறுவனங்களின் ரூ. 37 ஆயிரத்து 500 கோடி மதிப்புள்ள சொத்துக்களும் அடையாளம் காணப்பட்டு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பொதுத்துறை நிறுவனங்களில் நஷ்டத்தில் இயங்கும் துறைகளை மீட்டெடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்த 4 ஆண்டுகளில் சில பொதுத் துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்பனை செய்தும், குத்தகைக்கு விட்டும் பணமாக்குதல் திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ரூ. 6 லட்சம்கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

    இதையும் படியுங்கள்... திருடர்களால் கொல்லப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உடல் நல்லடக்கம்

    பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ரூ.4,575 வரையிலான கேஷ்பேக் வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. #BSNL



    பி.எஸ்.என்.எல். நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் கேஷ்பேக் சலுகைகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் சில போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் ரூ.4,575 வரை கேஷ்பேக் பெற முடியும். கேஷ்பேக் தொகையை பெற வாடிக்கையாளர்கள் ஆண்டு சந்தா சலுகைகளை தேர்வு செய்ய வேண்டும்.

    விலை உயர்ந்த முதல் மூன்று நிரந்தர மாதாந்திர ரீசார்ஜ்களில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் 25 சதவிகிதம் கேஷ்பேக் வழங்குவதாகவும், மற்ற விலை குறைந்த போஸ்ட்பெயிட் சலுகைகளை தேர்வு செய்வோர் ஆண்டு சந்தா கட்டணம் செலுத்தும் போது 20 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுவதாக தெரிகிறது.

    ஆறு மாத சலுகைகளுக்கும் பி.எஸ்.என்.எல். கேஷ்பேக் வழங்குகிறது. எனினும் இதற்கான தொகை குறைவாகும். ரூ.1,525 விலையில் வருடாந்திர போஸ்ட்பெயிட் சலுகையை ஒருவர் தேர்வு செய்யும் போது ரூ.4,575 வரை கேஷ்பேக் பெற முடியும். மாதம் ரூ.1,525 மாதாந்திர சலுகைக்கான ஆண்டு சந்தா தொகை ரூ.18,300 முழுமையாக செலுத்தும் போது பயனர்களுக்கு ரூ.4,575 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    இதேபோன்று ரூ.1,125 மாதாந்திர சலுகையை தேர்வு செய்து ஆண்டு சந்தா தொகையை முழுமையாக செலுத்தும் போது ரூ.3,375 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி ரூ.799 போஸ்ட்பெயிட் சலுகையை தேர்வு செய்து ஆண்டு சந்தாவை முழுமையாக செலுத்தினாலும் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.



    விலை குறைந்த ரூ.725 மற்றும் ரூ.525 மாதாந்திர சலுகைகளில் பி.எஸ்.என்.எல். 20 சதவிகிதம் கேஷ்பேக் வழங்குகிறது. பி.எஸ்.என்.எல். ரூ.399, ரூ.325 மற்றும் ரூ.225 போஸ்ட்பெயிட் சலுகைகளுக்கு 10 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஆண்டு சந்தா மட்டுமின்றி ஆறு மாதங்களுக்கான தொகையை செலுத்துவோருக்கும் பி.எஸ்.என்.எல். கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    அந்த வகையில் ரூ.1,525 மாதாந்திர சலுகைக்கு ஆறு மாதங்களுக்கான தொகையை முழுமையாக செலுத்தும் போது 12 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதனால் பயனர்களுக்கு ரூ.1,098 வரை கேஷ்பேக் கிடைக்கும். ரூ.1,125 மற்றும் ரூ.799 போஸ்ட்பெயிட் சலுகைகளுக்கு 12 சதவிகிதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 

    பி.எஸ்.என்.எல். ரூ.725 மற்றும் ரூ.525 சலுகைகளை தேர்வு செய்வோருக்கு 8 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதேபோன்று ரூ.399, ரூ.325 மற்றும் ரூ.225 போஸ்ட்பெயிட் சலுகைகளுக்கு நான்கு சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    புதிய கேஷ்பேக் சலுகை முதற்கட்டமாக கேரளா வாடிக்கையார்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இச்சலுகை மற்ற வட்டாரங்களுக்கும் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு 25 சவிகிதம் கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டது.
    ×