search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Blood donation camp"

    • திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சி மாவட்ட கிளை மற்றும் ஸ்ரீரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய ரத்ததான முகாம் ஸ்ரீரங்கம் அரசு கலை கல்லூரியில் நடைபெற்றது.
    • முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் பேராசிரியர் சீனிவாசராகவன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    திருச்சி :

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சி மாவட்ட கிளை மற்றும் ஸ்ரீரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய ரத்ததான முகாம் ஸ்ரீரங்கம் அரசு கலை கல்லூரியில் நடைபெற்றது.

    இந்த ரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் பேராசிரியர் சீனிவாசராகவன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வெற்றிவேல், கல்லூரியின் முதல்வர் மலர்விழி,

    ரெட் கிராஸ் சொசைட்டியின் திருச்சி மாவட்ட கிளை தலைவர் இன்ஜினியர் ராஜசேகர், யூத் ரெட் கிராஸ் திருச்சி மாவட்ட அமைப்பாளர் குணசேகரன், திருச்சி மாவட்ட ரத்த வங்கி அலுவலர் டாக்டர் வளர்மதி, பாலச்சந்தர், ஸ்ரீரங்கம் அரசு கலைக் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் உண்ணாமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த முகாமில் 100 மாணவ. மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் ரத்ததானம் செய்தனர்.

    • சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘சுதந்திர திருநாள் அமுத பெருவிழா’ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் சிறப்பு ரத்த தான முகாம், நடைபெற்றது
    • முகாமில் 30 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் விளாங்குடியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில், நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 'சுதந்திர திருநாள் அமுத பெருவிழா' கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் சிறப்பு ரத்த தான முகாம், கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    ரத்த தான முகாமிற்கு கல்லூரி முதல்வர் செந்தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் ரத்த மைய மருத்துவர் ஸ்ரீதேவி தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு, ரத்த வகை கண்டறிந்து குருதி தான சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    முகாமில் 30 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. இதில் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் கலந்து கொண்டு, தங்களது ரத்த வகையை அறிந்து கொண்டனர்.

    முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கினைப்பாளர் ஆதிலட்சுமி செய்திருந்தார்.

    • ராஜேஸ்வரி விசுவநாதன் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு நடந்தது
    • 600-க்கும் மேற்பட்ட யூனிட் பெறப்பட்டது

    வேலூர், ஜூலை.30-

    வி.ஐ.டி.யில் ராஜேஸ்வரி விசுவநாதன் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு வி.ஐ.டி. இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் (யூத் ரெட் கிராஸ்) ரத்த தான முகாம் நடந்தது.

    ரத்த தான முகாமை வி.ஐ.டி. வேந்தர் கோ.விசுவநாதன் தொடங்கி வைத்தார். வி.ஐ.டி. துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன் சேகர் விசுவநாதன், இணை துணை வேந்தர் டாக்டர் எஸ்.நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஆர்வமாக பங்கேற்று ரத்த தானம் செய்தனர். 600-க்கும் மேற்பட்ட யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது.

    வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மற்றும் சி.எம்.சி., மேசோனிக் ரத்த வங்கி, ஸ்ரீ நாராயணி மருத்துவ மனை மற்றும் ஆராய்ச்சி மையம், ஆகிய மருத்துவ மனைகளில் உள்ள ரத்த வங்கிகளுக்கு தானமாக வழங்கப்பட்டது.

    • அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு நடந்தது
    • ஒன்றிய குழு தலைவர் தொடங்கி வைத்தார்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே அப்துல் கலாம் நினைவு நாள் விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் மற்றும் ரத்த தானம் முகாம் நடைபெற்றது.

    ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்மணாங்கோவில் ஊராட்சிக்குட்பட்ட புதுப்பேட்டை கிராமத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு அப்துல்கலாம் பசுமை படை குழுவினர் சார்பில் அப்துல் கலாம் சிலைக்கு மாலை அணிவித்து மரக்கன்று நடுதல், ரத்ததான முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    இவ்விழாவிற்கு ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் எஸ்.கே.சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.

    ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ் மரக்கன்றுகள் நட்டு வைத்தார். அதன் பிறகு புதுப்பேட்டை சமுதாய சுகாதார நிலைய மருத்துவமனையில் ரத்த தானம் முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமிற்கு ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.சத்யா சதிஷ் குமார் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார்.

    இம்முகாமில் புதுப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 50 க்கும் இளைஞர்கள் ரத்த தானம் முகாமில் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினார்கள்.

    மேலும் இம்முறையில் ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் தலைமை மீனாட்சி மற்றும் திருப்பத்தூர் சுபாஷ், செந்தில், ஜோலார்பேட்டை ஒன்றிய குழு உறுப்பினர் ரஜினிகாந்த், ராஜேந்திரன், சாந்தன், சத்யநாராயணன், அருண், பிரபு, மற்றும் பொதுமக்கள் இளைஞர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சுகாதார நிலைய மருத்துவ பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரத்ததான முகாம் நடைபெற்றது
    • 40 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் லயன்ஸ் கிளப் சார்பில் கவுள்பாளையம் நகர் புற வாழ்விடவாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ரத்த தான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு லயன்ஸ் கிளப் தலைவர் ஆனந்த் தலைமை வகித்தார். செயலாளர் தமிழ்செல்வன், பொருளாளர் ராஜேஷ், கவுல்பாளையம் ஒற்றுமையே பலம் நலசங்க தலைவர் உத்திரகுமார், செயலாளர் நாகராஜன், பொருளாளர் பாலகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுள்பாளையம் ஊராட்சி தலைவர் கலைச்செல்வன் முகாமினை தொடங்கிவைத்தார்.

    பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை டாக்டர் சத்யா தலைமையிலான செவிலியர்கள் ரத்தம் சேகரித்தனர். இதில் 40 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து ஏழை மாணவனுக்கு கல்வி உதவி தொகை, சங்கத்திற்கு ஸ்பீக்கர் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் ரத்தம் கொடையாளர்கள மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 200 பேருக்கும், சாலையோர பாதசாரிகள் 50 பேருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

    இதில் இந்தியன் ரெட்கிராஸ் மாவட்ட கிளை கவுரவ செயலாளர் ஜெயராமன், லயன் தைரியம், லயன்ஸ்கிளப் செயலாளர் தமிழ்மாறன், இணை பொருளாளர் செல்வராஜ், செந்தில், உதிரம் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நாம் தமிழர் கட்சி மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது
    • முகாமில் 30-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் திருச்செல்வம் தலைமையிலான குழு வினர் செய்திருந்தனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் நேற்று நடைபெற்றது. இதில் தன்னார்வலர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ரத்த தானம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நாம் தமிழர் கட்சி, இளைஞர்கள் சார்பில் நடைபெற்ற முகாமுக்கு மருத்துவர் அருள் தலைமை தாங்கினார். மருத்துவர் அரவிந்த் முன்னிலை வைத்தார்.

    முகாமிற்கான அறிவிப்பை ஏற்றுக்கொண்ட ஏராளமானோர் ரத்த தானம் செய்ய முன்வந்தனர். அதன்படி இந்த முகாமில் 30-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் திருச்செல்வம் தலைமையிலான குழு வினர் செய்திருந்தனர்.

    மருத்துவ அலுவலர்கள் டாக்டர் அருள் டாக்டர் அரவிந்த், சுகாதார ஆ ய்வாளர் திருச்செல்வம் உள்ளிட்ட குழுவினர் இந்த முகாம் மூலம் 30 நபர்களுக்கும் மேல் தானமாக அளித்த ரத்தத்தை பெற்றனர்.

    இதேபோல் பொதுமக்களிடையே ரத்த தானம் செய்வது குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்றும், தானத்தில் சிறந்த தானம் ரத்த தானம் என்பதை மக்கள் உணர்ந்து பிறருக்கு உதவிட வேண்டும் என்றும் இந்த முகாமில் வலியுறுத்தப்பட்டது.

    • அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாபெரும் 24 மணி நேர ரத்ததான முகாம்.
    • ரத்ததான முகாமில் பங்கேற்கும் குருதி கொடையாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவ ட்டம், நன்னிலம்வள்ள லார் குருகுலம் குருதி கொடையாளர் சங்க த்தின் செயற்குழுகூட்டம் நடைபெற்றது. இக்கூட்ட த்திற்கு தலைவர் உத்தமன் தலைமை தாங்கினார். செயலாளர் பரிமளா காந்தி வரவேற்றுப் பேசினார்.

    இக்கூட்டத்தில் வருகின்ற அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாபெரும் 24 மணி நேர ரத்ததான முகாம் நடத்துவது, ரத்ததான முகாமில் பங்கேற்கும் குருதி கொடையாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்குவது, குருதிக் கொடை யாளர்கள் விவரங்கள் அடங்கிய புத்தகம் வெளி யிடுவது, அதிக குருதிக் கொடை வழங்கிய குருதிக் கொடையாளர்கள் கவுரவி ப்பது, மேலும் அன்றைய தினம் தமிழர்களின் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவ முகாம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.முடிவில் பொருளாளர் நந்தன் நன்றி கூறினார்.

    • பெரியகுளத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது
    • ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழை வழங்கப்பட்டது.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த தினத்தை அனுசரிக்கும் விதமாக ரத்த தான முகாம் நடைபெற்றது.

    முகாமில் நேரு யுவகேந்திரா செந்தில்குமார் தலைமை வகித்தார். ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் பாரதி முன்னிலை வகித்து ரத்த தானம் செய்தவர்க ளுக்கு சான்றிதழை வழங்கினார்.

    இந்நிகழ்வில் நேரு யுவகேந்திரா தன்னார்வ லர்கள் கோகுல் கிருஷ்ணன், பாலசுப்பி ரமணியன், நாகராஜ், விக்னேஸ்வரன், கனகவேல் மற்றும் ரத்த வங்கி மருத்துவ செவிலியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் வெள்ளிவிழா ஆண்டை கொண்டாடும் விதமாக ரத்ததான முகாம் புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
    • மருத்துவ அலுவலர் டாக்டர்.கிஷோர் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்ததான முகாமில் கலந்துகொண்டு 27 யூனிட் இரத்தம் சேகரித்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் வெள்ளிவிழா ஆண்டை கொண்டாடும் விதமாக ரத்ததான முகாம் புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

    முகாமிற்கு சங்கத்தின் தலைவர் பொறியாளர் பெர்லின் தாமஸ் தலைமை தாங்கினார். புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். வை.முத்துராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார்.

    ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் அந்தோணிசாமி, ரோட்டரி துணை ஆளுநர் சிவாஜி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர்.ராமு, குழந்தைகள் நல மருத்துவர் மகேஸ்வரி, மாவட்ட மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர்.கிஷோர் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்ததான முகாமில் கலந்துகொண்டு 27 யூனிட் இரத்தம் சேகரித்தனர். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். நிறைவில் சங்கத்தின் செயலாளர் பொறியாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    • லாலாபேட்டையில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
    • எம்.எல்.ஏ. ரா.மாணிக்கம் தலைமை வகித்தார்

    கரூர்:

    தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை மற்றும் தனியார் அறக்கட்டளை இணைந்து கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் லாலாபேட்டை கிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடத்திய 3-வது ரத்த தான மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

    குளித்தலை எம்.எல்.ஏ. ரா.மாணிக்கம் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் நிறைமதி முன்னிலை வகித்தார். கிருஷ்ணராயபுரம் ஒன்றிய திமுக செயலாளர் உமாபதி, மருத்துவர் தர்மேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முகாமில் 38 யூனிட் ரத்தம் பெறப்பட்டது. 100க்கும் மேற்பட்டவர்களுக்கு காது, மூக்கு, தொண்டை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் 4 பேர் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டு இலவசமாக மருத்துவம் பார்க்க பரிந்துரை செய்யப்பட்டது. 

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமாரின் பிறந்தநாளை “சமத்துவ ரத்ததான தினமாக” கொண்டாட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமாரின் பிறந்தநாளை “சமத்துவ ரத்ததான தினமாக” கொண்டாட இருக்கிறோம். எனவே கட்சி நிர்வாகிகள் வருகிற 14-ந் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக தங்கள் பகுதிகளிலுள்ள தன்னார்வலர்களுடனோ, என்.ஜி.ஓ. நிறுவனங்களுடனோ, தனியார் மற்றும் பொது நிறுவனங்களுடனோ இணைந்து ரத்ததான முகாம் நடத்த வேண்டும்.

    இதுவரை தமிழகத்தில் நடந்திடாத வகையில் மிகப்பெரிய அளவில் இந்த ரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதே தலைவர் ஆர்.சரத்குமாரின் எண்ணம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட தி.மு.க. மருத்துவர் அணி சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
    நாமக்கல்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட தி.மு.க. மருத்துவர் அணி சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. இந்த முகாமை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பார்.இளங்கோவன் தொடங்கி வைத்தார்.

    மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் கோகுல் கிருபா சங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் தி.மு.க.வினர் 95 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் ராஜேஸ்பாபு, துணை அமைப்பாளர்கள் மதிவேந்தன், பார்த்திபன், சுதா மற்றும் சிவக்குமார், நகர பொறுப்பாளர் மணிமாறன், நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 
    ×