search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரத்த தானம் முகாம்
    X

    ராத்த தான முகாம் நடந்த காட்சி.

    ரத்த தானம் முகாம்

    • அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு நடந்தது
    • ஒன்றிய குழு தலைவர் தொடங்கி வைத்தார்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே அப்துல் கலாம் நினைவு நாள் விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் மற்றும் ரத்த தானம் முகாம் நடைபெற்றது.

    ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்மணாங்கோவில் ஊராட்சிக்குட்பட்ட புதுப்பேட்டை கிராமத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு அப்துல்கலாம் பசுமை படை குழுவினர் சார்பில் அப்துல் கலாம் சிலைக்கு மாலை அணிவித்து மரக்கன்று நடுதல், ரத்ததான முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    இவ்விழாவிற்கு ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் எஸ்.கே.சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.

    ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ் மரக்கன்றுகள் நட்டு வைத்தார். அதன் பிறகு புதுப்பேட்டை சமுதாய சுகாதார நிலைய மருத்துவமனையில் ரத்த தானம் முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமிற்கு ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.சத்யா சதிஷ் குமார் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார்.

    இம்முகாமில் புதுப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 50 க்கும் இளைஞர்கள் ரத்த தானம் முகாமில் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினார்கள்.

    மேலும் இம்முறையில் ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் தலைமை மீனாட்சி மற்றும் திருப்பத்தூர் சுபாஷ், செந்தில், ஜோலார்பேட்டை ஒன்றிய குழு உறுப்பினர் ரஜினிகாந்த், ராஜேந்திரன், சாந்தன், சத்யநாராயணன், அருண், பிரபு, மற்றும் பொதுமக்கள் இளைஞர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சுகாதார நிலைய மருத்துவ பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×