search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bharat Jodo Nyay Yatra"

    • அசாம் மாநில அரசு பல தடைகளை ஏற்படுத்தி வருவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு.
    • வருகிற 25-ந்தேதி வரை அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடை பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

    ராகுல் காந்தி அசாம் மாநிலத்தில் நடைபாதை மேற்கொண்டு வருகிறார். அசாம் மாநிலத்தில் அவருடைய நடை பயணத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

    இந்த நிலையில் இன்று நகோன் பகுதியில் நடைபயணம் மேற்கொள்வதற்காக, பிரத்யேக பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாஜனதா தொண்டர்கள் சிலர் ஜெய் ஸ்ரீராம், மோடி, மோடி என முழக்கமிட்டனர்.

    உடனடியாக பேருந்தை நிறுத்துமாறு டிரைவரிடம் கேட்டுக்கொண்ட ராகுல் காந்தி, கீழே இறங்கி அவர்களை சந்தித்தார். அதன்பிறகு பேருந்தில் இருந்தபடியே அவர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்தார்.

    இது தொடர்பான வீடியோவை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ராகுல் காந்தி "அன்பிற்கான கடை எல்லோருக்காகவும் திறந்திருக்கும். இந்தியா ஒன்றுபடும், இந்துஸ்தான் வெல்லும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை தற்போது அசாமில் நடந்து வருகிறது.
    • இந்த யாத்திரையால் ஊழல் முதல் மந்திரி ஹிமந்தா பீதி அடைந்துள்ளார் என காங்கிரஸ் தெரிவித்தது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் தொடங்கி உள்ளார். இந்த யாத்திரை தற்போது அசாமில் நடந்து வருகிறது.

    அசாமின் லக்கிம்பூருக்குச் சென்றபோது யாத்திரையில் பங்கேற்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், ராகுல் காந்தியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்கள், போஸ்டர்களும் கிழிக்கப்பட்டன.

    இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக பா.ஜ.க.வுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பா.ஜ.க. குண்டர்களால் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் பேனர் கிழிப்பு போன்ற வெட்கக்கேடான செயலை வன்மையாக கண்டிக்கிறோம். இந்திய மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கி உள்ள ஒவ்வொரு உரிமையையும், நீதியையும் காலில் போட்டு மிதிக்க கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. முயற்சிக்கிறது. மக்களின் குரலை நசுக்கி. அதன்மூலம் ஜனநாயகத்தை சிதைக்கிறது. அசாம் பா.ஜ.க. அரசின் இத்தகைய மிரட்டல் மற்றும் தாக்குதல் தந்திரத்துக்கு காங்கிரஸ் ஒருபோதும் அஞ்சாது என பதிவிட்டுள்ளார்.


    • ராகுல் காந்தி 2வது கட்டமாக மணிப்பூரில் இருந்து மும்பை நோக்கி நடைபயணம் தொடங்கி உள்ளார்.
    • தற்போது வடகிழக்கு மாநிலங்களில் அவர் யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

    கவுகாத்தி:

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து, காஷ்மீர் வரை பாத யாத்திரை நடத்தினார். அந்த யாத்திரைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததாக காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள்.

    இதையடுத்து, ராகுலை மீண்டும் நடை பயணம் செல்லுமாறு கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று ராகுல் காந்தி மணிப்பூரில் இருந்து மும்பை நோக்கி நடைபயணத்தைத் தொடங்கி உள்ளார். தற்போது வடகிழக்கு மாநிலங்களில் அவர் யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

    இந்த யாத்திரையில் பங்கேற்குமாறு இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இந்நிலையில், அசாமில் நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி அங்கு பிரம்மபுத்திரா ஆற்றில் படகு சவாரி செய்தார்.

    ஜோர்ஹட் பகுதியில் இருந்து மஜூலி நோக்கிச் செல்வதற்காக நிமாடி கட் படித்துறையில் இருந்து ராகுல் காந்தி படகில் பயணம் செய்தார்.


    • ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை இன்று நாகாலாந்தில் தொடங்கியது.
    • 2-ம் உலகப் போரில் உயிர்நீத்த வீரர்கள் கல்லறைக்கு ராகுல் காந்தி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    கோஹிமா:

    காங்கிரஸ் எம்பியான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையின் இரண்டாவது கட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினார்.

    ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை இன்று நாகாலாந்தில் இருந்து தொடங்கியது. அங்கிருந்த மக்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

    நாகாலாந்து சிறிய மாநிலம் என சொல்லப்படுகிறது. ஆனால் மற்ற மாநில மக்களைப் போலவே உங்களுக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு. அனைவரும் ஒன்று என்பதை வலியுறுத்துவதற்காகவே இந்த யாத்திரை நடத்தப்படுகிறது என தெரிவித்தார்.

    இந்நிலையில், இரண்டாம் உலகப் போரில் உயிர்நீத்த வீரர்கள் கல்லறைக்குச் சென்ற ராகுல் காந்தி அங்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    • ஜனவரி 14-ந்தேதி ராகுல் காந்தி நடைபயணத்தை தொடங்குகிறார்.
    • மணிப்பூரில் இருந்து மகாராஷ்டிரா வரை 14 மாநிலங்கள் வழியாக நடை பயணம் மேற்கொள்கிறார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி மணிப்பூர் மாநிலம் இம்பால் நகரில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வரை நடைபயணம் மேற்கொள்வார் என காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த மாதம் 27-ந்தேதி (டிசம்பர்) சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தகவல் தொடர்பு பொதுச்செயலாளர் (பொறுப்பு) ஜெய்ராம் ரமேஷ் மற்றும் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் இன்று நடைபயணத்திற்கான லோகோ மற்றும் முழக்கம் ஆகியவற்றை வெளியிட்டனர்.

    ராகுல் காந்தி கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி "பாரத் நயா யாத்ரா" என்ற பெயரில் நடைபயணத்தை வருகிற ஜனவரி 14-ந்தேதி முதல் மேற்கொள்கிறார். 14 மாநிலங்கள் வழியாக ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

    மணிப்பூர் தலைநகர் இம்பாலில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

    ×