search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "awards"

    • சென்னையில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது
    • மாவட்ட இந்திய மருத்துவ சங்கத்திற்கு 14 விருதுகள் வழங்கப்பட்டது

    பெரம்பலூர்:

    சென்னை வர்த்தக மையத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் இந்திய மருத்துவ சங்க மாநாடு நடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்ட இந்திய மருத்துவ சங்கத்தின் பணிகளை பாராட்டி 14 விருதுகளை பெரம்பலூர் மருத்துவ சங்கம் சமூக சேவைக்காகமுதல் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. கிராமப்புற பகுதிகளில் அதிகளவில் இலவச மருத்துவ முகாம் நடத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது மேலும் குறிப்பாக பெண்களுக்கு அதிகளவில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தியது. தேசிய மருத்துவ தினத்தை ஒட்டி மக்களுக்கு இலவச சிகிச்சை அளித்தது. தமிழக அளவில் சாதனை படைத்த இந்திய மருத்துவ சங்கத்தில் அதிக அளவில் டாக்டர்களை உறுப்பினர்களாக சேர்த்தது மற்றும் சமூக சேவையினையும் பாராட்டியும் 14 விருதுகளை பெரம்பலூர் மாவட்ட இந்திய மருத்துவர்கள் சங்கத்தினருக்கு சென்னையில் நடந்த சங்க மாநாட்டில் வழங்கப்பட்டது. இதனை பெரம்பலூர் சங்க நிர்வாகிகளும் மருத்துவர்கள், டாக்டர்கள் வல்லபன், சுதாகர், செங்குட்டுவன், சுமதி செங்குட்டுவன், திருமால், ராஜா முகமது, பகுத்தறிவாளன், கலா, நேரு, ரமேஷ், அன்பரசன்ஆகியோரிடம் இந்திய மருத்துவ சங்க தேசிய தலைவர் டாக்டர் ஜெயலால், செயலாளர் டாக்டர்.தியாகராஜன் முன்னிலையில் 14 விருதுகள் பெரம்பலூர் சங்கத்துக்கு வழங்கினர். முன்னதாக புதிய மாநில மருத்துவர் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட டாக்டர் செந்தமிழ் பாரிக்கு பெரம்பலூர் சங்கத்தினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


    • 1000 அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை, தருமம் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு பசுமை பாதுகாவலர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
    • மரக் கன்றுகள் நட்டு சிறப்புற பராமரிக்கும் மாணவ- மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக பசுமை பாதுகாவலர் விருது சான்றிதழ்களும், பதக்கமும் வழங்கப்பட்டது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தளிர்–விடும் பாரதம் சமூக சேவைக்–குழுவின் ஏற்பாட்டில், மரக்கன்றுகளை வளர்த்து பசுமைப் பணியில் ஈடுபட்டு சிறப்பாக செயலாற்றி வரும் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 1000 அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை, தருமம் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு பசுமை பாதுகாவலர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

    இதில் குமாரபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளி மேற்கு காலனி, நகராட்சி நடுநிலைப் பள்ளி நாராயண நகர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தர்மத்தோப்பு-வாசுகி நகர் ஆகிய பள்ளிகளில் செடிகள், மரக் கன்றுகள் நட்டு சிறப்புற பராமரிக்கும் மாணவ- மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக பசுமை பாதுகாவலர் விருது சான்றிதழ்களும், பதக்கமும் வழங்கப்பட்டது.

    நிகழ்வில் தளிர்விடும் பாரதம் சமூக சேவைக் குழுவின்  தலைவர் சீனிவாசன், செயலாளர் பிரபு வரதராஜன், ஜூவல்லரி செந்தில், மகேந்திரன், செல்வராணி உள்ளிட்ட நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள் கெளசல்யமணி, பாரதி, நாகரத்தினம் மற்றும் பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பி னர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சரவணாவரம் பொது மயானத்தில் கொட்டகை மற்றும் குடிநீர் தொட்டி திறப்பு விழா நடைபெற்றது.
    • கிராமங்களில் இலவசமாக இன்டர்நெட் வை-பை வசதி தொடக்க விழாவும் நடைபெற்றது.

    கயத்தாறு:

    கயத்தாறு யூனியனைச் சேர்ந்த கட்டாலங்குளம் ஊராட்சியில் ஜே.எஸ்.டபிள்யூ பவுண்டேசன் சார்பில் சரவணபுரம், ராமநாதபுரத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் சோலார் நிறுவனத்தின் சார்பில் பட்டியூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறப்பு விழா, கட்டாலங்குளம் கிராமத்தில் பேவர் பிளாக் சாலை திறப்பு விழா, சரவணபுரம், ஆவுடையம்மாள்புரம், பட்டியூர், ஆகிய கிராமத்தில் கிணறுகளின் மூலம் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார் பம்பு அறைகள் திறப்பு விழா, சரவணாவரம் பொது மயானத்தில் கொட்டகை மற்றும் குடிநீர் தொட்டி திறப்பு விழா ஆகிய ஐம்பெரும் விழா நடைபெற்றது.

    மேலும் ஆஸ்கார் டிரஸ்டின் மூலம் 30 இளம்பெண்களுக்கு டெய்லரிங், மற்றும் கட்டாலங்குளம் ஊராட்சி சார்பில் நடத்தப்பட்ட அழகு கலை பயிற்சி வகுப்புகளில் பயிற்சி முடித்த 30 பெண்களுக்கு சாதனையாளர் விருது வழங்கும் விழா, கட்டால ங்குளம் ஊராட்சியில் உட்பட்ட ஆறு கிராமங்களில் இலவசமாக இன்டர்நெட் வை-பை வசதி தொடக்க விழாவும் நடைபெற்றது. விழாவிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பானு முன்னிலை வகித்தார். விழாவில் ஜே.எஸ்.டபுள்யூ பவுண்டேசனின் மேலாளர் ராமச்சந்திரன், வருவாய் வட்டாட்சியர் சுப்புலட்சுமி, கால்நடை உதவி மருத்துவர் கனகலட்சுமி ஆகியோர் பயிற்சிகளில் சிறப்பாக வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு, கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.

    இதில் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ், யுனிவர்சல் மைன் மேலாளர் ராமச்சந்திரன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அனந்தலட்சுமி, யூனியன் பொறியாளர் பாலநமச்சிவாயம், ஒன்றிய பணி பார்வையாளர் பன்னீர்செல்வம், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயச்சந்திரன், ராமலட்சுமி முன்னாள் கவுன்சிலர் மாரி சாமி, ஊராட்சி செயலர் அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாரியம்மாள் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஊராட்சி மன்றத் தலைவர் சேசுபால்ராயன்தம்பா செய்திருந்தார்.

    • மாவட்ட அளவில் முதலிடத்தை பிடிக்கும் மாணவ -மாணவிகளுக்கு ஒன்றரை பவுன் தங்க செயின் வழங்கப்படும்.
    • 10-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த அமிர்தவல்லி, வர்ஷினி, பரமேஸ்வரி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே அம்மையப்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதன்மைக் கல்வி அலுவலர் தியாகராஜன் தலைமை வைத்தார். தலைமை ஆசிரியர் அருளாளன் வரவேற்று பேசினார். மாணவ -மாணவிகளுக்கு, கலைவாணன் எம்.எல்.ஏ., சைக்கிள்களை வழங்கி பேசும்போது:-

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடத்தை பிடிக்கும் மாணவ -மாணவிகளுக்கு ஒன்றரை பவுன் தங்கச் செயின் வழங்கப்படும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சேகர், ஒன்றிய குழு துணைத் தலைவர் பாலச்சந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர் முருகதாஸ் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஆசிரியர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு பொது தேர்வில் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற அபிநேசா, மாலஸ்ரீ, அட்சயா ஆகியோருக்கும் 10-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த அமிர்தவல்லி, வர்ஷினி, பரமேஸ்வரி ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. முடிவில் உதவி தலைமை ஆசிரியர் ஜான்அருள் நன்றி கூறினார்.

    • 1,130 விளையாட்டு வீரர்களுக்கு காசோலைகள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன
    • முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவு இன்று துவங்குகிறது

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்ற 1130 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.16 கோடியே 28 லட்சத்து 25 ஆயிரத்துக்கான காசோலைகளை வழங்கினார்.

    மேலும் பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டு, பதக்கங்கள் வென்றதற்காக 2018-19 மற்றும் 2019-20-ம் ஆண்டுகளுக்கான 8 சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், 4 பயிற்றுநர்கள், 4 உடற்பயிற்சி இயக்குநர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் 3 நடுவர்கள் என மொத்தம் 19 நபர்களுக்கு முதல்-அமைச்சர் விருதுகளையும், விருதிற்கான ஊக்கத் தொகையாக ரூ.16 லட்சத்து 30 ஆயிரத்துக்கான காசோலைகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.

    விளையாட்டு வீரர்களுக்கு தேவையான விவரங்கள், தகவல்கள், புகார்கள், கோரிக்கைகள் குறித்து தெரிவித்திட தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள "ஆடுகளம்" தகவல் மையத்தின் செயல்பாடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    இந்த தகவல் மையம் காலை 10 மணி முதல் மாலை 5 வரை அனைத்து வேலை நாட்களிலும் செயல்படும். இதுதொடர்பாக 9514000777 என்ற அலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான இணையதள முன்பதிவையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். sdat.tn.govt.in என்ற இணையதளத்தில் இதற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள வசதி மூலமாகவும், ஆடுகளம் ஆன்ட்ராய்டு செயலி மூலமாகவும், அந்தந்த மாவட்ட விளையாட்டு அலுவலகங்களில் நேரடியாகவும் இந்த போட்டியில் பங்கேற்பதற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம்.

    முதற்கட்டமாக கபடி போட்டிக்கான முன்பதிவு பள்ளி, கல்லூரி, பொதுமக்கள் பிரிவு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுப்பிரிவு என 5 பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் அணிகள் பங்கேற்கும் வகையில் பதிவு தொடங்கப்படுகிறது.

    படிப்படியாக தடகளம், கூடைப்பந்து, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்பதற்கான முன்பதிவும் தொடங்கும்.

    விழாவில், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, சிவ. வீ. மெய்யநாதன், மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கடலூர் மாவட்டத்தில் ஜீவன் ரக்ஷா பதாக் தொடர் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
    • தகுதியுடையவர்கள் மாவட்ட சமூகநல அலுவலகம் ,அரசுசேவை இல்ல வளாகம், நெல்லிக்குப்பம் மெயின்ரோடு, கடலூர் என்ற விலாசத்தில் விண்ணப்பங்கள் பெற்று 30 ந்தேதி க்குள் கருத்துருக்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் ஜீவன் ரக்ஷா பதாக் தொடர் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்விருதானது துணிச்சல் மிகுந்த பாராட்டுதலுக்குறிய செயல்கள் செய்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. மனித உயிர்களை காப்பாற்றும் பொருட்டு நீரில் மூழ்கி விபத்தில் சிக்கியவர்கள், தீ விபத்தில் சிக்கியவர்கள், மின்சார விபத்து நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதல் மற்றும் சுரங்க விபத்திலிருந்து மனிதர்களை காப்பாற்றியவர்களுக்கு இவ்விருதானது மூன்று வகைகளாக வழங்கப்படுகிறது. சர்வோட்டம் ஜீவன் ரக்ஷாபதாக், உத்தம் ஜீவன் ரக்ஷாபதாக, ஜீவன் ரக்ஷாபதாக் மேற்கண்ட வகைகள் கொண்ட விருதுகள் பெற தகுதியுடையவர்கள் மாவட்ட சமூகநல அலுவலகம் ,அரசுசேவை இல்ல வளாகம், நெல்லிக்குப்பம் மெயின்ரோடு, கடலூர் என்ற விலாசத்தில் விண்ணப்பங்கள் பெற்று 30 ந்தேதி க்குள் கருத்துருக்களை சமர்ப்பிக்குமாறு கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

    • “ஜீவன் ரக்ஷா பதக் விருதுகள்” விருதாளரின் மரணத்திற்கு பிறகு வழங்கப்பட்டு வருகிறது.
    • மாவட்ட கலெக்டர் அலுவலகம், அறை எண்.126, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

    சேலம்:

    இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஆயுதப்படைகள், காவல்படைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தீயணைப்பு பணிகள் போன்ற துறைகளில் பணியாற்றி மனிதாபிமானம் சார்ந்த செயல்களில் ஈடுபட்டு வரும் இருபாலினத்தவருக்குமான "ஜீவன் ரக்ஷா பதக் விருதுகள்" விருதாளரின் மரணத்திற்கு பிறகு வழங்கப்பட்டு வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் 2022 -ம் ஆண்டிற்கான "ஜீவன் ரக்ஷா பதக் விருதிற்கு" ஆயுதப்படைகள், காவல்படைகள் மற்றும் அங்கீரிக்கப்பட்ட தீயணைப்பு பணிகள் போன்ற துறைகளில் நீரில் மூழ்குதல், விபத்துகள், தீ சம்பவங்கள் போன்ற சம்பவங்களில் ஒருவரின் உயிரைக் காப்பாற்றுதல், மின்சாரம் நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதல் மற்றும் சுரங்கங்களில் இருந்து மீட்பு நடவடிக்கை போன்ற மனிதாபிமானம் சார்ந்த சிறந்த செயல்களில் ஈடுபட்டுவரும் இரு பாலினத்தவரிடமிருந்தும் கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன.

    மேலும், விண்ணப்பதாரர்கள் தங்கள் மனிதாபிமானம் சார்ந்த செயல்களில் ஈடுபட்டமைக்கான ஆவணங்களுடன் கூடிய கருத்துருவை 25.07.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் மாவட்ட கலெக்டர் அலுவலகம், அறை எண்.126, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். இந்த தகவலை சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • நல்ல சமாரித்தன் விருது வழங்கும் விழா நடைபெற்றது
    • ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சிட்டி சார்பில் நடை பெற்றது

    திருச்சி:

    செயின்ட ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சிட்டி இணைந்து நல்ல சமாரித்தன் விருது வழங்கும் நிகழ்ச்சியை கல்லூரி வளாகத்தில் உள்ள ஏவி அரங்கில் நடத்தியது.

    கிராமங்களில் விரிவாக்கத்துறை செப்பர்டுடன் இணைந்து தன்னார்வமாக கல்வி மற்றும் மக்கள் நல சேவை செய்யும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மக்கள் தொடர்பு செய்தியாளர்கள் ஆகிய தன்னார்வலர்களை தேர்வு செய்து, அவர்களை ஊக்குவிக்கவும், பாராட்டவும், கௌரவவிக்கும் விதமாக நல்ல சமாரித்தன் விருது வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் ரொட்டேரியன் கவர்னர் ஆனந்த ஜோதி ராஜ்குமார் மற்றும் விரிவாக்கத்துறை செப்பர்டு இயக்குநர் அருட்தந்தை பெர்க்மான்ஸ் சே ச மற்றும் ரொட்டேரியன் சீனிவான் ஆகியோர் இவ்விருதுகளை வழங்கினார்கள்.

    புதுக்கோட்டை மாவட்டம் மேலப்பச்சக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர், சுதா குள்ளம் பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் முத்து குமாரி, பூதக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் உதவி ஆசிரியர் ராமலிங்கம், குமரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யின்தலைமையாசிரியர் சின்னபொண்ணு மற்றும் கொட்டப்பட்டு செயின்ட் லூட்ஸ் உதவி ஆசிரியர் ஆரோக்கிய சுந்தர் மற்றும் கல்லூரியின் பேராசிரியர்கள் உட்பட முப்பது தன்னார்வளர்களுக்கு இவ் விருதுகள் வழங்கப்பட்டது

    ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சிட்டியின் தலைவர் பாலாஜி செயலர் பிரதீப் குமார் மற்றும் விரிவாக்கத்துறையின் ஒருங்கிணைப்பாளர்கள் லெனின், ஜோசப், கிறிஸ்து ராஜா, ஜெயசீலன், பூரண விஸ்வநாதன் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    புயல்,வெள்ளம்,நிலநடுக்கம், தீவிபத்து போன்ற அவசர காலங்களில் மீட்பு பணிகளில் சிறப்பான சேவையாற்றும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. #disastermanagement #disastermanagementawards #disaster
    புதுடெல்லி:

    நிலநடுக்கம், தீவிபத்து, புயல், வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் மீட்பு குழுவினரின் பணிகள் இன்றியமையாததாக இருந்து வருகிறது. தேசிய மீட்பு படை மற்றும் மாநில அரசுகளின் மீட்பு படை வீரர்கள் தங்களது இன்னுயிரை துச்சமாக கருதி ஆபத்தில் சிக்கிய பல நூறு உயிர்களை பேரழிவு காலங்களில் காப்பாற்றுகின்றனர்.

    சில சம்பவங்களில் இந்த வீரர்களுக்கு உறுதுணையாக உள்ளூர்வாசிகள் மற்றும் தொண்டு அமைப்புகளை சேர்ந்தவர்களும் உதவி செய்கின்றனர்.

    இந்நிலையில்,அவசர காலங்களில் மீட்பு பணிகளில் சிறப்பான சேவையாற்றும் தனிநபர்கள் மற்றும் தொண்டு அமைப்புகளுக்கு விருது மற்றும்  ரொக்கப்பரிசு அளித்து ஊக்கப்படுத்த மத்திய அரசு தீர்மானித்தது.

    இதன் அடிப்படையில் ‘சுபாஷ் சந்திரபோஸ் அபாடா பிரபந்தன் புரஸ்கார்’ என்னும் புதிய விருதை ஆண்டுதோறும் வழங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

    பேரிடர் காலங்களில் தங்களால் காப்பற்றப்பட்ட நபர்கள், கால்நடைகள் உள்ளிட்ட விபரங்களை குறிப்பிட்டு தனிநபர் அல்லது எந்த தொண்டு அமைப்புகளை சேர்ந்தவர்களும் உரிய ஆதாரங்களுடன் இந்த விருதுக்காக விண்ணப்பிக்கலாம் என இதுதொடர்பாக மத்திய பேரிடர் மேலாண்மை முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இவ்விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர் தனிநபர்களாக இருந்தால் அவர்களின் சேவையை பாராட்டும் வகையில் நற்சான்றிதழுடன் 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசாக அளிக்கப்படும். தொண்டு அமைப்புகளாக இருந்தால் 51 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசுடன் நற்சான்றிதழும் அளிக்கப்படும். 

    இப்படி விருது பெறும் நிறுவனங்கள் மேற்படி பரிசுத்தொகையை பேரிடர் மீட்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    ‘சுபாஷ் சந்திரபோஸ் அபாடா பிரபந்தன் புரஸ்கார்’ விருதை பெறுவதற்கு தகுதியானவர்கள் 7-1-2019 தேதிக்குள் www.dmawards.ndma.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 

    இந்தியாவில் பிறந்தவர்கள், இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். தேர்வானவர்களின் பெயர்கள் 23-1-2019 அன்று அறிவிக்கப்படும் என  மத்திய பேரிடர் மேலாண்மை முகமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #disastermanagement #disastermanagementawards #disaster
    ×