search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கயத்தாறு அருகே கட்டாலங்குளம் பஞ்சாயத்தில் ஐம்பெரும் விழா
    X

    அழகு கலை பயிற்சி முடித்த பெண்களுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்ட காட்சி.

    கயத்தாறு அருகே கட்டாலங்குளம் பஞ்சாயத்தில் ஐம்பெரும் விழா

    • சரவணாவரம் பொது மயானத்தில் கொட்டகை மற்றும் குடிநீர் தொட்டி திறப்பு விழா நடைபெற்றது.
    • கிராமங்களில் இலவசமாக இன்டர்நெட் வை-பை வசதி தொடக்க விழாவும் நடைபெற்றது.

    கயத்தாறு:

    கயத்தாறு யூனியனைச் சேர்ந்த கட்டாலங்குளம் ஊராட்சியில் ஜே.எஸ்.டபிள்யூ பவுண்டேசன் சார்பில் சரவணபுரம், ராமநாதபுரத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் சோலார் நிறுவனத்தின் சார்பில் பட்டியூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறப்பு விழா, கட்டாலங்குளம் கிராமத்தில் பேவர் பிளாக் சாலை திறப்பு விழா, சரவணபுரம், ஆவுடையம்மாள்புரம், பட்டியூர், ஆகிய கிராமத்தில் கிணறுகளின் மூலம் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார் பம்பு அறைகள் திறப்பு விழா, சரவணாவரம் பொது மயானத்தில் கொட்டகை மற்றும் குடிநீர் தொட்டி திறப்பு விழா ஆகிய ஐம்பெரும் விழா நடைபெற்றது.

    மேலும் ஆஸ்கார் டிரஸ்டின் மூலம் 30 இளம்பெண்களுக்கு டெய்லரிங், மற்றும் கட்டாலங்குளம் ஊராட்சி சார்பில் நடத்தப்பட்ட அழகு கலை பயிற்சி வகுப்புகளில் பயிற்சி முடித்த 30 பெண்களுக்கு சாதனையாளர் விருது வழங்கும் விழா, கட்டால ங்குளம் ஊராட்சியில் உட்பட்ட ஆறு கிராமங்களில் இலவசமாக இன்டர்நெட் வை-பை வசதி தொடக்க விழாவும் நடைபெற்றது. விழாவிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பானு முன்னிலை வகித்தார். விழாவில் ஜே.எஸ்.டபுள்யூ பவுண்டேசனின் மேலாளர் ராமச்சந்திரன், வருவாய் வட்டாட்சியர் சுப்புலட்சுமி, கால்நடை உதவி மருத்துவர் கனகலட்சுமி ஆகியோர் பயிற்சிகளில் சிறப்பாக வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு, கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.

    இதில் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ், யுனிவர்சல் மைன் மேலாளர் ராமச்சந்திரன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அனந்தலட்சுமி, யூனியன் பொறியாளர் பாலநமச்சிவாயம், ஒன்றிய பணி பார்வையாளர் பன்னீர்செல்வம், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயச்சந்திரன், ராமலட்சுமி முன்னாள் கவுன்சிலர் மாரி சாமி, ஊராட்சி செயலர் அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாரியம்மாள் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஊராட்சி மன்றத் தலைவர் சேசுபால்ராயன்தம்பா செய்திருந்தார்.

    Next Story
    ×