search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "auction"

    • கும்பாபிஷேகத்திற்கு கூட்டம் அதிகம் வரும் என்பதால் காலி இடத்தை வாடகைக்கு விட வேண்டாம்.
    • நால்ரோடு பகுதியில் கூட்ட நெரிசல் அடிக்கடி ஏற்படுவதால் ரவுண்டானா வரும் சூழ்நிலை உள்ளது.

    குன்னத்தூர்:

    குன்னத்தூர் பேரூராட்சி அவசர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு செயல் அலுவலர் பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். தலைவர் கொமாரசாமி முன்னிலை வகித்தார். குன்னத்தூர் அங்காளம்மன் கோவில் காலி இடத்தை ஏலம் விடுவது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    வெங்கடாசலம் (திமுக) பேசுகையில், அங்காளம்மன் கோவில் இடத்தை வாடகைக்கு விடுவதால் அரசிற்கு வருமானம் இழப்பு ஏற்படும் .ஆகவே இந்த தீர்மானத்துக்கு ஆதரவு கொடுக்க மாட்டோம் என்றார்.

    சரண் பிரபு (அதிமுக) பேசுகையில், அங்காளம்மன் கோவில் இடத்தை வாடகைக்கு விட வேண்டாம் என்று நாங்கள் யாரும் சொல்லவில்லை. தற்போது கோவில் வேலை நடைபெற்று வருகிறது. வேலை முடிந்த பின் கும்பாபிஷேகத்திற்கு கூட்டம் அதிகம் வரும் என்பதால் இப்போதே காலி இடத்தை வாடகைக்கு விட்டால் கூட்டத்தை சமாளிக்க முடியாது. கும்பாபிஷேகம் முடிந்தபின் கோவிலுக்கு எவ்வளவு இடம் உள்ளது ,பேரூராட்சிக்கு எவ்வளவு இடம் உள்ளது என அளவீடு செய்த பின்னர் ஏலம் விடலாம். மேலும் நெடுஞ்சாலைத்துறை மூலமாக ரோடு அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    நால்ரோடு பகுதியில் கூட்ட நெரிசல் அடிக்கடி ஏற்படுவதால் ரவுண்டானா வரும் சூழ்நிலை உள்ளது. எனவே அப்பணிகள் முடிந்த பின் ஏலம் விடலாம் என்றார். இதே கருத்தை அதிமுக., கவுன்சிலர் சுப்பிரமணியம் ஏற்றுக் கொண்டார். பேரூராட்சித்தலைவர் பேசுகையில், அங்காளம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள இடம் கோவிலுக்கு சொந்தமான இடமா? அல்லது பேரூராட்சி இடமா? என்பது தெரியவில்லை. ஆகவே கோவில் வேலை முடிந்தபின் கும்பாபிஷேகம் நடைபெற்ற பிறகு அதிகாரிகளை கொண்டு அளவீடு செய்த பின் கோவிலுக்கு எவ்வளவு இடம் இருக்கிறது என்று அறிந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • கால்நடை வளர்ப்பவர்கள் தங்கள் மாடுகளை தெருவில் சுற்றி திரிய விடுகிறார்கள்.
    • அபராதம் விதித்து உரிமையாளர்களிடம் எச்சரித்து ஒப்படைக்கப்பட்டது.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது.

    பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் கால்நடைகள் வளர்த்து வரும் பொது மக்கள் சிலர், தங்களது வீட்டில் வளர்க்கும் பசு மாடுகளை பிரதான சாலையில் தினமும் சுற்றி திரிய விடுகிறார்கள், இதனால் போக்குவரத்திற்கு இடையூறும், விபத்துகளும் ஏற்படுகிறது. பொது இடங்களில் சுற்றி திரியும் மாடுகள் சாலைகளில் சானம் இடுவதால் சுகாதார கேடு மற்றும் சாலை விபத்து ஏற்பட ஏதவாக உள்ளது.

    இது தொடர்பாக நகராட்சி அலுவலகத்திற்கு அடிக்கடி புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. நகர் மன்ற கூட்டங்களிலும் இது தொடர்பாக பலமுறை புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் பேரில் கடந்த காலங்களில் பலமுறை நாளிதழ் வாயிலாக அறிவிப்புகள் வழங்கப்பட்டு, தெருவில் சுற்றும் மாடுகள் நகராட்சி மூலம் பிடிக்கப்பட்டு அபராதம் விதித்து உரிமையாளர்களிடம் எச்சரித்து ஒப்படைக்கப்பட்டது.

    எனினும் கால்நடை வளர்ப்பவர்கள் மறுபடியும் தங்கள் மாடுகளை தெருவில் சுற்றி திரிய விட்டு விடுகிறார்கள்.

    இதனால் தெருவில் சுற்றும் மாடுகளினால் ஏற்படும் தொல்லைகள் குறையவில்லை,

    இனிவரும் காலங்களில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாகவும், விபத்துகள் மற்றும் பொருட்கள் சேதம் ஏற்பட காரணமாகவும் உள்ள சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை தமிழ்நாடு நகராட்சிகள் சட்டம் பொது சுகாதார விதிகள் மற்றும் 1997 ம் வருடத்திய தமிழ்நாடு நகர்ப்புறப் பகுதி கால்நடைகள் மற்றும் பறவைகள் கட்டுப்படுத்துதல் மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் பிரிவு 3,10(1), 10(3) மற்றும் 10(4) சட்டத்தின்படி கால்நடைகள் கைப்பற்றப்படும் எனவும், அவ்வாறு கைப்பற்றி நகராட்சியால் ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அல்லது கோசாலையில் ஒப்படைக்கப்படும் எனவும் இதன் மூலம் இறுதியாக அறிவிக்கப்படுகிறது.

    எனவே, அனைத்து கால்நடை வளர்ப்பவர்கள் தங்கள் கால்நடைகளை தங்கள் சொந்த பொருப்பில், தொழுவத்தில் பராமத்து, கால்நடைகள் தெருவில் சுற்றித்திரியாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுத்து நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் .

    இவ்வாறு அதில் கூறப்படுகிறது.

    • சோழம்பேட்டை திறந்தவெளி கிடங்கில் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு பருத்தி ஏலம் விடப்படும்.
    • இதில் வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை மேலத்தெருவில் உள்ள கிடங்கின் வளாகத்தில் விவசாயிகளிடம் இருந்து பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது.

    இதில் வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர்.

    இந்த ஏலத்தினை மயிலாடுதுறை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாள விநாயகமூர்த்தி அறிவுறுத்தலின் பேரில் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ராஜேந்திரன், மேலாண்மை இயக்குனர் மணிகண்டன் மற்றும் ஊழியர்கள் நடராஜன், சிவபழனி ஆகியோர் மேற்கொண்டனர்.

    இந்த ஏலத்தில் 1,293 குவிண்டால் பருத்தி ரூ.1 கோடியே 3 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

    சோழம்பேட்டை திறந்தவெளி கிடங்கில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு பருத்தி ஏலம் விடப்படும் என்றும், மயிலாடுதுறை பகுதியில் உள்ள அனைத்து பருத்தி விவசாயிகளும் ஏலத்தில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்றும், பருத்திக்கு உரிய தொகை விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சாலைப்புதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ரூ.2.50 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம் நடைபெற்றது
    • கரூர், க.பரமத்தி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    கரூர்,

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகில் உள்ள சாலைப்புதுாரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், கொப்பரை தேங்காய், எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறும். கரூர், க.பரமத்தி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த வாரம் நடந்த ஏலத்தில் 36.61 குவிண்டால் எடை கொண்ட 106 மூட்டை நிலக்கடலை விற்பனைக்கு வந்தது. கிலோ அதிகபட்சம் ரூ.76.30-க்கும், குறைந்தபட்சம் ரூ.65.19-க்கும் சராசரியாக ரூ.71.20 என மொத்தம் ரூ.2 லட்சத்து 54 ஆயிரத்து 468-க்கு விற்பனையானது.

    • வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
    • சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.16 லட்சத்து 80 ஆயிரத்து 415-க்கு விற்பனையானது.

    பரமத்திவேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    தேங்காய்

    இந்த வாரம் நடந்த ஏலத்தில் 43.81½ குவிண்டால் எடை கொண்ட 11 ஆயிரத்து 903 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.23.29-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.17.09-க்கும், சராசரி விலையாக ரூ.21.29-க்கும் என மொத்தம் ரூ. 87 ஆயிரத்து 620-க்கு விற்பனையானது.

    தேங்காய் பருப்பு

    அதேபோல் 191.51½ குவிண்டால் எடை கொண்ட 420 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.74.36-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.71.49-க்கும், சராசரி விலையாக ரூ.73.19-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.73.49-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.25-க்கும், சராசரி விலையாக ரூ.71.99-க்கும் என மொத்தம் ரூ.13 லட்சத்து 58 ஆயிரத்து 232-க்கு விற்பனையானது.

    எள்

    அதேபோல் 18.47 குவிண்டால் எடை கொண்ட 24 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.143.09-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.135.99-க்கும், சராசரி விலையாக ரூ.135.99-க்கும், சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.142.59-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.112.79-க்கும், சராசரி விலையாக ரூ.132.99-க்கும் என மொத்தம் ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்து 563-க்கு விற்பனையானது.

    இதன்படி, சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.16 லட்சத்து 80 ஆயிரத்து 415-க்கு விற்பனையானது.

    • இந்த தெப்பக்குளத்தில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவின் போது தெப்பத்தேர் உற்சவம் கோலாகலமாக நடைபெறும்.
    • ரூ.15 ஆயிரத்திற்கு ஏலம் கோரிய நபருக்கு மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும் முதலையுண்ட பாலகனை சுந்தரர் பதிகம் பாடி உயிருடன் மீட்டது போன்ற புகழ்பெற்ற ஸ்ரீகருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.இந்த கோவில் வளாகத்தில் பிரசித்தி பெற்ற தெப்பக்குளம் உள்ளது.

    இந்த தெப்பக்குளத்தில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவின் போது தெப்பத்தேர் உற்சவம் கோலாகலமாக நடைபெறும். இந்த தெப்பக்குளத்தில் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. தற்போது குளத்தில் மீன்கள் அதிக அளவு உற்பத்தி ஆனதால் மீன்களை பிடிக்க கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஏலம் நடந்தது. இதில் ரூ.15 ஆயிரத்திற்கு ஏலம் கோரிய நபருக்கு மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ.32¾ லட்சத்துக்கு ஏலம் போனது.
    • இந்த வாரம் நடந்த ஏலத்தில் 86.60½ குவிண்டால் எடை கொண்ட 22 ஆயிரத்து 6 தேங்காய் விற்பனைக்கு வந்தது.

    கரூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் கரூர் ஒன்றியம், க.பரமத்தி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    இந்த வாரம் நடந்த ஏலத்தில் 86.60½ குவிண்டால் எடை கொண்ட 22 ஆயிரத்து 6 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.20-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.16.79-க்கும், சராசரி விலையாக ரூ.19.19-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 358-க்கு விற்பனையானது. அதேபோல் 276.39½ குவிண்டால் எடை கொண்ட 557 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.74.86-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.70.55-க்கும், சராசரி விலையாக ரூ.74.16-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.73.66-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.59.06-க்கும், சராசரி விலையாக ரூ.71.36-க்கும் என மொத்தம் ரூ.18 லட்சத்து 91 ஆயிரத்து 539-க்கு விற்பனையானது. அதேபோல் 92.31 குவிண்டால் எடை கொண்ட 124 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.145.19-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.126.99-க்கும், சராசரி விலையாக ரூ.126.11-க்கும், சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.147.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.120.19-க்கும், சராசரி விலையாக ரூ.143.99-க்கும் என மொத்தம் ரூ.12 லட்சத்து 24 ஆயிரத்து 22-க்கு விற்பனையானது.சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.32 லட்சத்து 75 ஆயிரத்து 919-க்கு விற்பனையானது.

    • 54 ஆயிரத்து 632 கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.48.36க்கும், குறைந்தபட்சம் ரூ.40.59க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பும் வியாழனன்று சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து் செல்வார்கள்.

    நேற்று வியாழக்கிழமை 67 விவசாயிகள் கலந்து கொண்டு 54 ஆயிரத்து 632 கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியை சேர்ந்த 7 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.48.36க்கும், குறைந்தபட்சம் ரூ.40.59க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.23லட்சத்து 93ஆயிரத்து 136க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • நாமகிரிப்பேட்டையில் ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ் சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது.
    • இந்த ஏலத்தில் 1350 மஞ்சள் மூட்டைகள் ரூ.56 லட்சத்திற்கு விற்பனை ஆனது.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டையில் ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ் சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது.

    இதில் நாமகிரிப் பேட்டை, அரியாக் கவுண்டம்பட்டி, ஒருவன்குறிச்சி, தொப்பபட்டி, புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மஞ்சளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    அதேபோல் ஒடுவன் குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ஈரோடு, சேலம், ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சளை ஏலம் எடுத்தனர்.

    இந்த ஏலத்தில் 1350 மஞ்சள் மூட்டைகள் ரூ.56 லட்சத்திற்கு விற்பனை ஆனது. இதில் விரலி ரகம் 1000 மூட்டைகளும், உருண்டை ரகம் 300 மூட்டைகளும், பனங்காலி ரகம் 50 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டிருந்தன.

    விரலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.5,689-க்கும், அதிகப்பட்சமாக ரூ.7,939-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.2,689-க்கும், அதிகபட்சமாக ரூ.6,609-க்கும், பனங்காலி ரகம் குறைந்த பட்சம் ஒரு குவிண்டால் ரூ.10,102-க்கும், அதிகபட்சமாக ரூ.14,022-க்கும் ஏலம் விடப்பட்டது.

    • வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ரூ.37 லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் ஏலம் போனது.
    • தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.21.65-க்கு விற்பனையானது

    கரூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் கரூர் ஒன்றியம், க.பரமத்தி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    இந்த வாரம் நடந்த ஏலத்தில் 90.31½ குவிண்டால் எடை கொண்ட 23 ஆயிரத்து 930 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.21.65-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.16.55-க்கும், சராசரி விலையாக ரூ.20.59-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 68 ஆயிரத்து 656-க்கு விற்பனையானது. அதேபோல் 166.25 குவிண்டால் எடை கொண்ட 372 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது.இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.73.69-க்கும், சராசரி விலையாக ரூ.75.49-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.74.19-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.75-க்கும், சராசரி விலையாக ரூ.71.85-க்கும் என மொத்தம் ரூ.11 லட்சத்து 92 ஆயிரத்து 828-க்கு விற்பனையானது. விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.147.11-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.140.99-க்கும், சராசரி விலையாக ரூ.145.59-க்கும், சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.148.29-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.126.39-க்கும், சராசரி விலையாக ரூ.144.59-க்கும் என மொத்தம் ரூ.23 லட்சத்து 56 ஆயிரத்து 326-க்கு விற்பனையானது. சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.37 லட்சத்து 17 ஆயிரத்து 810-க்கு விற்பனையானது.

    • மாவட்ட வருவாய் அலுவலரால் 4.7.2023 அன்று முற்பகல் 11.30 மணிக்கு பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
    • ஏலத்தில் கலந்து கொள்வது தொடர்பாக உரிய படிவத்தில் விண்ணப்பத்தினை 3. 7.2023 ஒப்படைக்கவேண்டும் .

    திருப்பூர் :

    ஈரோடு மாவட்டத்தில் நிதிமோசடியில் ஈடுபட்ட தனியார் நிதி நிறுவனத்திற்கு சொந்தமான திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புங்கந்துரை கிராமத்தில் உள்ள நிலம் , திருப்பூர் தனியார் ஈமு பார்ம்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான நாச்சிபாளையம் கிராமத்தில் உள்ள நிலம் ஏலம், திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் இயங்கி வந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான காங்கேயம் வட்டம் நெழலி கிராமத்தில் உள்ள நிலம் ஏலம்விடப்பட உள்ளது.

    மாவட்ட வருவாய் அலுவலரால் 4.7.2023 அன்று முற்பகல் 11.30 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக 2-ம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர், ஏலநிபந்தனைகள் தொடர்பான விபரங்களை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம்,சார் ஆட்சியர் அலுவலகம் ,திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். ஏலத்தில் கலந்து கொள்வது தொடர்பாக உரிய படிவத்தில் விண்ணப்பத்தினை 3. 7.2023 அன்று மாலை5 மணிக்குள் தகுதி பெற்ற அலுவலர் மற்றும் மாவட்டவருவாய் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும் என திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தெரிவித்துள்ளார்.

    மொத்தம் ரூ‌.2 லட்சத்து 87 ஆயிரத்து 642-க்கு வேளாண் விளைபொருட்கள் ஏலம் விடப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளை பொருட்க–ளின் ஏலம் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் முத்தூர் நகர சுற்றுவட்டார மற்றும் ஈரோடு, கரூர் மாவட்ட கிராமப்–பகுதிகளில் கடந்த 2 வார காலமாக எள் அறுவடை பணிகள் தொடங்கப்பட்டு தற்போது வரை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் ஏலம் தொடங்கி நடத்திட தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேளாண் மற்றும் விற்பனை வணிகத்துறை மூலம் அனுமதி வழங்கியது.

    இதன்படி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 5 சிவப்பு ரகம் அடங்கிய எள் மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் டெண்டர் முறையில் நடைபெற்ற ஏலத்தில் சிவப்பு ரக எள் அதிகபட்சமாக ரூ.104.15-க்கும், குறைந்தபட்சமாக ரூ.100.65- க்கும் ஏலம் விடப்பட்டது.

    மேலும் 16 ஆயிரத்து 236 தேங்காய்களும் கொண்டு வரப்பட்டு டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது. இதில் 1 கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.24.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.15.65-க்கும், ஏலம் விடப்பட்டது. மேலும் 59 தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் 1 கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக ரூ.83.30-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.66.75-க்கும் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது.

    மேலும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் 17 சிவப்பு ரக எள் மூட்டைகள் குறைவாகவும் மற்றும் 4 ஆயிரத்து 370 தேங்காய்களும், 15 தேங்காய் பருப்பு மூட்டைகளும் கூடுதலாகவும் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதில் எள் ஒரு கிலோவிற்கு ரூ.2.15 கூடுதலாகவும், தேங்காய் 1 கிலோவிற்கு ரூ.2.60ம், தேங்காய் பருப்பு 1 கிலோவிற்கு ரூ.3.85 குறைவாகவும் விவசாயிகளுக்கு கிடைத்தது.

    மேலும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தேங்காய் பருப்பு விலை கிலோ ரூ.90-ஐ தாண்டி ஏலம் விடப்பட்டு வந்த நிலையில் கடந்த 10 வார காலமாக ரூ.90-க்கும் கீழே விலை சரிந்து ஏலம் விடப்ட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு, எள் மூட்டைகள் 8 டன் அளவில் மொத்தம் ரூ‌.2 லட்சத்து 87 ஆயி–ரத்து 642-க்கு வேளாண் விளைபொருட்கள் ஏலம் விடப்பட்டது.

    இத்தகவலை முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் கே.தங்கவேல் தெரிவித்து உள்ளார்.

    ×