search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அங்காளம்மன் கோவில் இடம் ஏலம் தொடர்பாக குன்னத்தூர் பேரூராட்சியில் அவசர ஆலோசனைக்கூட்டம்
    X

    கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

    அங்காளம்மன் கோவில் இடம் ஏலம் தொடர்பாக குன்னத்தூர் பேரூராட்சியில் அவசர ஆலோசனைக்கூட்டம்

    • கும்பாபிஷேகத்திற்கு கூட்டம் அதிகம் வரும் என்பதால் காலி இடத்தை வாடகைக்கு விட வேண்டாம்.
    • நால்ரோடு பகுதியில் கூட்ட நெரிசல் அடிக்கடி ஏற்படுவதால் ரவுண்டானா வரும் சூழ்நிலை உள்ளது.

    குன்னத்தூர்:

    குன்னத்தூர் பேரூராட்சி அவசர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு செயல் அலுவலர் பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். தலைவர் கொமாரசாமி முன்னிலை வகித்தார். குன்னத்தூர் அங்காளம்மன் கோவில் காலி இடத்தை ஏலம் விடுவது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    வெங்கடாசலம் (திமுக) பேசுகையில், அங்காளம்மன் கோவில் இடத்தை வாடகைக்கு விடுவதால் அரசிற்கு வருமானம் இழப்பு ஏற்படும் .ஆகவே இந்த தீர்மானத்துக்கு ஆதரவு கொடுக்க மாட்டோம் என்றார்.

    சரண் பிரபு (அதிமுக) பேசுகையில், அங்காளம்மன் கோவில் இடத்தை வாடகைக்கு விட வேண்டாம் என்று நாங்கள் யாரும் சொல்லவில்லை. தற்போது கோவில் வேலை நடைபெற்று வருகிறது. வேலை முடிந்த பின் கும்பாபிஷேகத்திற்கு கூட்டம் அதிகம் வரும் என்பதால் இப்போதே காலி இடத்தை வாடகைக்கு விட்டால் கூட்டத்தை சமாளிக்க முடியாது. கும்பாபிஷேகம் முடிந்தபின் கோவிலுக்கு எவ்வளவு இடம் உள்ளது ,பேரூராட்சிக்கு எவ்வளவு இடம் உள்ளது என அளவீடு செய்த பின்னர் ஏலம் விடலாம். மேலும் நெடுஞ்சாலைத்துறை மூலமாக ரோடு அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    நால்ரோடு பகுதியில் கூட்ட நெரிசல் அடிக்கடி ஏற்படுவதால் ரவுண்டானா வரும் சூழ்நிலை உள்ளது. எனவே அப்பணிகள் முடிந்த பின் ஏலம் விடலாம் என்றார். இதே கருத்தை அதிமுக., கவுன்சிலர் சுப்பிரமணியம் ஏற்றுக் கொண்டார். பேரூராட்சித்தலைவர் பேசுகையில், அங்காளம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள இடம் கோவிலுக்கு சொந்தமான இடமா? அல்லது பேரூராட்சி இடமா? என்பது தெரியவில்லை. ஆகவே கோவில் வேலை முடிந்தபின் கும்பாபிஷேகம் நடைபெற்ற பிறகு அதிகாரிகளை கொண்டு அளவீடு செய்த பின் கோவிலுக்கு எவ்வளவு இடம் இருக்கிறது என்று அறிந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Next Story
    ×