search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் சுற்றித்திரியும் ஆடு, மாடுகளை பிடித்து ஏலம் விடப்படும்
    X

    சாலையில் சுற்றித்திரியும் ஆடு, மாடுகளை பிடித்து ஏலம் விடப்படும்

    • கால்நடை வளர்ப்பவர்கள் தங்கள் மாடுகளை தெருவில் சுற்றி திரிய விடுகிறார்கள்.
    • அபராதம் விதித்து உரிமையாளர்களிடம் எச்சரித்து ஒப்படைக்கப்பட்டது.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது.

    பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் கால்நடைகள் வளர்த்து வரும் பொது மக்கள் சிலர், தங்களது வீட்டில் வளர்க்கும் பசு மாடுகளை பிரதான சாலையில் தினமும் சுற்றி திரிய விடுகிறார்கள், இதனால் போக்குவரத்திற்கு இடையூறும், விபத்துகளும் ஏற்படுகிறது. பொது இடங்களில் சுற்றி திரியும் மாடுகள் சாலைகளில் சானம் இடுவதால் சுகாதார கேடு மற்றும் சாலை விபத்து ஏற்பட ஏதவாக உள்ளது.

    இது தொடர்பாக நகராட்சி அலுவலகத்திற்கு அடிக்கடி புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. நகர் மன்ற கூட்டங்களிலும் இது தொடர்பாக பலமுறை புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் பேரில் கடந்த காலங்களில் பலமுறை நாளிதழ் வாயிலாக அறிவிப்புகள் வழங்கப்பட்டு, தெருவில் சுற்றும் மாடுகள் நகராட்சி மூலம் பிடிக்கப்பட்டு அபராதம் விதித்து உரிமையாளர்களிடம் எச்சரித்து ஒப்படைக்கப்பட்டது.

    எனினும் கால்நடை வளர்ப்பவர்கள் மறுபடியும் தங்கள் மாடுகளை தெருவில் சுற்றி திரிய விட்டு விடுகிறார்கள்.

    இதனால் தெருவில் சுற்றும் மாடுகளினால் ஏற்படும் தொல்லைகள் குறையவில்லை,

    இனிவரும் காலங்களில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாகவும், விபத்துகள் மற்றும் பொருட்கள் சேதம் ஏற்பட காரணமாகவும் உள்ள சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை தமிழ்நாடு நகராட்சிகள் சட்டம் பொது சுகாதார விதிகள் மற்றும் 1997 ம் வருடத்திய தமிழ்நாடு நகர்ப்புறப் பகுதி கால்நடைகள் மற்றும் பறவைகள் கட்டுப்படுத்துதல் மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் பிரிவு 3,10(1), 10(3) மற்றும் 10(4) சட்டத்தின்படி கால்நடைகள் கைப்பற்றப்படும் எனவும், அவ்வாறு கைப்பற்றி நகராட்சியால் ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அல்லது கோசாலையில் ஒப்படைக்கப்படும் எனவும் இதன் மூலம் இறுதியாக அறிவிக்கப்படுகிறது.

    எனவே, அனைத்து கால்நடை வளர்ப்பவர்கள் தங்கள் கால்நடைகளை தங்கள் சொந்த பொருப்பில், தொழுவத்தில் பராமத்து, கால்நடைகள் தெருவில் சுற்றித்திரியாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுத்து நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் .

    இவ்வாறு அதில் கூறப்படுகிறது.

    Next Story
    ×