search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AR Rahman"

    • ஏ.ஆர்.ரகுமானை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
    • ஏ.ஆர்.ரகுமானுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ரசிகர்கள் முண்டியடித்தனர்.

    சென்னை அண்ணா சாலையில் புகழ்பெற்ற ஹஸ்ரத் சையத் மூசா காதரி தர்கா உள்ளது. இங்கு அனைத்து சமூக மக்களும் மத வேறுபாடு இன்றி வழிபடுவது வழக்கம்.

    இந்த தர்காவில் சந்தனக்கூடு விழா நடந்தது. இதில் பங்கேற்க இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது காரில் வந்து இருந்தார். தர்காவில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் அவர் கலந்து கொண்டார்.

     அப்போது ஏ.ஆர்.ரகுமானை காண ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்தனர். ரோட்டிலும் திரண்டு நின்றனர். ஏ.ஆர்.ரகுமானுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் முண்டியடித்தனர்.

    இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏ.ஆர்.ரகுமான் வந்த காரை வெளியே எடுக்க முடியவில்லை. இதையடுத்து ஏ.ஆர்.ரகுமான் அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறி வீட்டுக்கு சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து வெளியான லால் சலாம் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
    • லால் சலாம் படத்திற்கு பிறகு, மீண்டும் ஒரு சமூக பிரச்சனையை மையமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கதை எழுதியுள்ளார்.

    தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இத்திரைப்படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறாததால் சினிமாவிலிருந்து சிறுது காலம் அவர் விலகியிருந்தார்.

    இந்நிலையில், நீண்ட வருடங்கள் கழித்து அவர் லால் சலாம் என்ற படத்தை இயக்கினார். அப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும் இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து வெளியான லால் சலாம் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

    லால் சலாம் படத்திற்கு பிறகு, மீண்டும் ஒரு சமூக பிரச்சனையை மையமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கதை எழுதியுள்ளதாகவும், அந்த கதையை நடிகர் சித்தார்த்திடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது, கூடிய விரைவில் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • விண்ணைத் தாண்டி வருவாயா படம் வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவு.
    • இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

    திரை அரங்குகளில் ஏற்கனவே வெளியாகி, பின் மறு வெளியீட்டில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்களில் ஷாருக்கானின் "தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே" முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிக நாள் ஓடிய காதல் திரைப்படம் என்ற பெருமையை சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா சாதனை படைத்துள்ளது.

    கவுதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சிலம்பரசன் மற்றும் திரிஷா நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 14 வருடங்கள் கடந்த நிலையில் ரசிகர்கள் இதனை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

     


    மேலும் சென்னையில் உள்ள மல்டிபிளஸ் திரையரங்கு ஒன்றில் 750 நாட்களுக்கு மேலாக இந்த திரைப்படம் ஓடி கொண்டு இருக்கிறது. இன்றளவும் இந்த படம் இளைஞர்கள், காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆடு ஜீவிதம் என்ற மலையாள படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெறும்
    • சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்று அங்கு ஒட்டகம் மேய்க்கும் ஒரு பட்டதாரி இளைஞன் பற்றிய கதையே இந்த படம் என்று சொல்லப்படுகிறது.

    மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வரும் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ஆடு ஜீவிதம் என்ற மலையாள படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெறும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    இந்த படத்தை இயக்குநர் பிளஸ்சி இயக்கி உள்ளார். பென்யாமினின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார். ஏப்ரல் 10-ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது

    இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்று அங்கு ஒட்டகம் மேய்க்கும் ஒரு பட்டதாரி இளைஞன் பற்றிய கதையே இந்த படம் என்று சொல்லப்படுகிறது. பிருதிவிராஜ் ஒட்டகம் மேய்ப்பவராக நடித்து இருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஐந்து வருடங்களுக்கு முன்பே தொடங்கி பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு சமீபத்தில் முழு படப்பிடிப்பையும் முடித்துள்ளனர். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜோர்டான் மற்றும் சஹாரா மற்றும் அல்ஜீரியாவில் படமாக்கப்பட்டது.

    இந்நிலையில் அண்மையில் ஆடு ஜீவிதம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதில் பிருத்விராஜின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஆண்டுதோறும் கிராமி விருது வழங்கப்பட்டு வருகிறது.
    • சக்தி ஆல்பத்தில் மொத்தம் 8 பாடல்கள் உள்ளன.

    இசை உலகில் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் கிராமி விருதுகள் 1959-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதானது உலகம் முழுவதும் சிறந்த பாடல், ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடல் ஆசிரியர்கள் உள்ளிட்ட இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்தியாவின் சக்தி ஆல்பத்திற்கு கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது. சங்கர் மகாதேவன், செல்வகணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், ஜாகீர் உசேன் ஆகியோர் அடங்கிய இசைக்குழு இணைந்து உருவாக்கிய சக்தி ஆல்பத்தில் மொத்தம் 8 பாடல்கள் உள்ளன.


    இந்த ஆல்பத்திற்கு உயரிய கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது. திஸ் மொமண்ட் ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள சக்தி இசைக்குழுவின் பாடல்களுக்கு உலகின் சிறந்த ஆல்பம் பிரிவில் கிராமி விருது கிடைத்துள்ளது. விருதுபெற்ற சக்தி இசைக்குழுவுக்கு திரையுலகினர் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இந்தியாவிற்கு கிராமி மழை பொழிகிறது" என்று குறிப்பிட்டு விருது வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


    • நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ள திரைப்படம் ‘ஆடு ஜீவிதம்’.
    • இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். இவர் தற்போது 'ஆடு ஜீவிதம்' என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் பிளஸ்சி இயக்கி உள்ளார். பென்யாமினின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார்.


    இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சவுதி அரோபியாவுக்கு வேலைக்கு சென்று அங்கு ஓட்டகம் மேய்க்கும் ஒரு பட்டதாரி இளைஞன் பற்றிய கதையே இந்த படம். பிரித்விராஜ் ஒட்டகம் மேய்ப்பவராக நடித்து இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    ஆடு ஜீவிதம் போஸ்டர்

    இந்நிலையில், 'ஆடு ஜீவிதம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


    • ’லால் சலாம்’ திரைப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய 'லால் சலாம்' படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.


    இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், தன் அப்பா சங்கி இல்லை என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், 'லால் சலாம்' படத்தின் ஜூக் பாக்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், 'திமிறி எழுடா' என்கிற பாடலை மறைந்த பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் சாகுல் ஹமீது பாடியுள்ளனர். ஏ.ஜ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களின் குரலை 'லால் சலாம்' பாடலுக்கு பயன்படுத்தி புது டிரெண்டை உருவாக்கி இருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.


    இந்த ஜூக் பாக்ஸை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், 'பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் சாகுல் ஹமீது குரலை அவர்களின் குடும்பங்களின் அனுமதியோடு தான் பயன்படுத்தினோம். இதற்கான தொகையும் கொடுத்துள்ளோம். தொழில்நுட்பத்தை சரியான வழியில் பயன்படுத்தினால் அது தொல்லை இல்லை" என குறிப்பிட்டுள்ளார்.



    • ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’.
    • இந்த திரைப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய 'லால் சலாம்' படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.


    இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.


    இந்நிலையில், 'லால் சலாம்' படத்தில் இடம்பெற்றுள்ள 'ஜலாலி' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சரத் சந்தோஷ் பாடியுள்ள இந்த பாடலில் 'ஏய் நீ ஆட்டாத வால்.. கிட்ட வந்தா நீ ஹலால்' போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.



    • கடந்த 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்த பவதாரிணி இலங்கையில் நேற்று காலமானார்.
    • இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி பல பாடல்களை பாடியுள்ளார். மேலும் சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். இவரது கணவர் விளம்பர நிர்வாகியாக உள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. 47 வயதான பாடகி பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். இவர் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார்.


    கடந்த 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்த பவதாரிணி இலங்கையில் நேற்று காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் இலங்கையில் இருந்து சென்னை கொண்டுவரப்பட்டு தி. நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.


    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பவதாரணி மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, "பவதாரிணி மறைவு வருத்தம் அளிக்கிறது. இளையராஜாவை தொலைபேசியில் அழைத்து வருத்தம் தெரிவித்தேன்" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாடகி பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்.
    • இவர் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி பல பாடல்களை பாடியுள்ளார். மேலும் சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். இவரது கணவர் விளம்பர நிர்வாகியாக உள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. 47 வயதான பாடகி பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். இவர் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார்.


    கடந்த 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்த பவதாரிணி இலங்கையில் நேற்று காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் இன்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பவதாரிணிக்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மயிலிறகாய்த் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணியின் மதுரமான குரல் இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது. காற்றெல்லாம் தீரா அதிர்வெழுப்பிக் ககனவெளியெங்கும் கதிரொளியாய் விரிகிறது. இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா Our hearts are with you in this time of sorrow" என்று குறிப்பிட்டுள்ளார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் 'தக் லைஃப்' .
    • இந்த படத்தில் நடிகர் கமல் நடிக்கிறார்.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'தக் லைஃப்' (Thug Life). இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் அறிமுக வீடியோவை சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்தது.


    இந்நிலையில், 'தக் லைஃப்' (Thug Life) திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதனை படக்குழு மாஸான வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும், 'இன்று முதல் படப்பிடிப்பு இனிதே ஆரம்பம்' என்று குறிப்பிட்டுள்ளது.


    இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏ.ஆர்.ரகுமான் பல மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
    • இவர் மணிரத்னம் இயக்கும் திரைப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் 'ரோஜா' திரைப்படத்தில் தொடங்கி பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களுக்கும் இசையமைக்கிறார்.


    இவர் இசையமைத்துள்ள 'அயலான்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இதையடுத்து 'லால் சலாம்' திரைப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதுமட்டுமல்லாமல் மணிரத்னம் இயக்கும் 'தக் லைப்', தெலுங்கில் நடிகர் ராம் சரண் நடிக்கும் புதிய படத்திற்கும் இவர் இசையமைக்கிறார்.


    இந்நிலையில் ரசிகை ஒருவர் ஏ.ஆர். ரகுமானிடம் பாடல் பாடும் வீடியோ சமூக வலைதளத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், காரில் உட்கார்ந்திருக்கும் ஏ.ஆர். ரகுமானிடம் வெளிநாட்டு ரசிகை ஒருவர் உங்களின் தீவிர ரசிகர் என்று கூறி உங்களுக்காக ஒரு பாட்டு பாடலாமா எனக் கேட்கிறார். அதற்கு ஏ.ஆர்.ரகுமான் ஆம் என்றவுடன், 'வந்தே மாதரம்' பாடலைப் பாடி காண்பிக்கிறார்.

    உடனே அதை தனது செல்போனில் வீடியோ எடுத்த ஏ.ஆர்.ரகுமான் தனது இணைய பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


    ×