என் மலர்

  நீங்கள் தேடியது "Amalapaul"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் அமலாபால், தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார்.
  அமலா பால் விவாகரத்துக்கு பிறகு சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். சமூகவலைதளங்களில் கவர்ச்சி படங்களை அடிக்கடி வெளியிடும் அமலாபால் இந்த கட்டுக்கோப்பான உடலுக்கு காரணம் யோகா பயிற்சி என்று கூறியுள்ளார். 

  அவ்வப்போது ஒரு சில யோகாசனங்கள் செய்வதை படமாக வெளியிட்டு வந்த அமலாபால் தற்போது தனது குருஜியுடன் யோகா செய்யும் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். சூரிய நமஸ்காரம் செய்வது போல் போஸ் கொடுத்து இருக்கும் அமலா, ’இரண்டு கைகளையும் தலைக்குமேல் உயரே கூப்பி நமஸ்தே சொல்கிறேன்’ என பதிவிட்டு இருக்கிறார்.  ஒற்றைக் கால் ஆசனம், கால்களையும் முதுகையும் உயரே நிறுத்தியபடியான ஆசனம் என வெவ்வேறு போஸ்களை தந்திருக்கும் அமலாபாலின் பயிற்சிகளை கண்ட ரசிகர்கள், ‘உங்கள் உடல் ரப்பர் போல் வளைகிறதே’ என ஆச்சரியம் வெளியிட்டுள்ளனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ராட்சசன் படம் பற்றிய செய்திக்கு நடிகை அமலாபால் ஆதங்கமாக பதிலளித்திருக்கிறார்.
  ராம்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம், ‘ராட்சசன்’. விஷ்ணு விஷால், அமலா பால் நடித்திருந்த இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

  இந்த நிலையில், ‘தமிழில் விஷ்ணு விஷால் சூப்பராக நடித்திருப்பார். அவரைப்போல தெலுங்கில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாசால் நடிக்க முடியாது’ என அமலாபால் கூறியதாக தெலுங்கு இணையதளங்களில் செய்திகள் வெளியானது. இதை நடிகை அமலாபால் மறுத்திருக்கிறார்.  மேலும் இதுகுறித்து, ‘முட்டாள்தனத்துக்கும் வதந்திக்கும் இடையிலான மெல்லிய கோடு உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை’ என ஆதங்கத்தை கூறியிருக்கிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடற்கரை மணலில் தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக நடிகை அமலாபால் சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். #Amalapaul
  அமலாபால் விவாகரத்துக்கு பின் நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ராட்சசன் படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக நடித்தபோது அமலாவுக்கும், விஷ்ணுவுக்கும் காதல் மலர்ந்திருப்பதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. 

  அதை விஷ்ணு விஷால் உடனடியாக மறுத்து அறிக்கை வெளியிட்டார். அமலாபால் காதல் பற்றி கருத்து எதுவும் சொல்லாமல் நடிப்பிலேயே கவனமாக இருந்தார். படப்பிடிப்பில் விடுமுறை கிடைக்கும்போது எல்லாம் கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பாகி வருகிறார்.   இந்நிலையில் கடற்கரை மணலில் தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக சினேகம் என்று மலையாளத்தில் எழுதி அந்த படத்தை வெளியிட்டிருக்கிறார். அமலாபால் யாருக்கு காதல் சிக்னல் காட்டுகிறார் என ரசிகர்கள் வலைபோட்டு அமலாபால் காதலனை தேடிக்கொண்டிருக்கின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க பிரபல நடிகைகள் கஜோல், அமலாபாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. #Jayalalithaa
  அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்தவர் ஜெயலலிதா. அவரது மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள்.

  ஜெயலலிதாவின் பிறந்த நாளான கடந்த பிப்ரவரி 24-ந்தேதி இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கும் ‘தலைவி’ படத்தின் அதிகாரப்பூர்வ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இது தவிர இயக்குனர் பிரியதர்ஷினி இயக்கும் ‘தி அயர்ன் லேடி’ படத்தில் ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்கிறார். இயக்குனர் பாரதிராஜா, ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க முயற்சித்து வருகிறார்.

  கவுதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை இணையதொடராக இயக்கி வருகிறார். இந்நிலையில் தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தியின் தலைவராக இருக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். அவரே தயாரித்து இயக்கப் போகும் இந்த படத்துக்கு ‘சசி லலிதா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.  சசி லலிதா படத்தில் சசிகலாவின் பார்வையில் ஜெயலலிதா வாழ்க்கை படமாக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க இந்தி நடிகை கஜோலிடம் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். மும்பை சென்று கஜோலை சந்தித்து கதையை கூறிவிட்டு வந்துள்ளார்.

  சசிலலிதா படத்தில் சசிகலா வேடத்தில் நடிக்க அமலா பாலிடம் பேச்சு வார்த்தை நடக்கிறது. அமலா பால் சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் இந்த படத்தில் சசிகலா வேடத்தில் நடிப்பாரா என்பது இனிதான் தெரியும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால், தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். #Amalapaul
  அமலாபால் நடிப்பில் தற்போது ‘அதோ அந்த பறவை போல’ திரைப்படம் உருவாகியுள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து ஆடை என்ற படத்திலும் அமலாபால் நடித்து வருகிறார்.

  நடிகை அமலாபால் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். அது பற்றி எந்த விமர்சனங்கள் வந்தாலும் கவலைப்படுவது இல்லை. கண்டு கொள்வதும் இல்லை.  தற்போது பீச்சில், நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். பீச்சில் அலை சறுக்கு விளையாட்டை கற்று வரும் அமலாபால், அப்போது எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’ படத்திற்கு மிகப்பெரிய கௌரவம் கிடைத்துள்ளது. #Ratsasan
  வணிக ரீதியிலான பொழுதுபோக்கு படங்களின் மத்தியில், ஒரு சில திரில்லர் சினிமாக்கள் மக்களிடையே மிகப்பெரிய அதிர்வுகளை உண்டாக்கும். அந்த வகையிலான ஒரு திரைப்படம் தான் ‘ராட்சசன்’. இப்படத்தின் வித்தியாசமான கதையமைப்பால் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது. 

  இந்த படம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு, வணிக ரீதியாக அதிக வசூல் செய்த படம் என்று நிரூபணம் ஆகியுள்ளது. இது தமிழ் சினிமாவிற்கு பெரும் அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறது. 

  ராட்சசன் படத்தின் பெருமைகளுக்கு மகுடம் சூட்டுவது போல, தற்போது இந்த படம் IMDB தரவரிசையில் இந்தியாவின் சிறந்த படங்களின் வரிசையில் இரண்டாவது மிகச்சிறந்த படமாக மதிப்பிடப்பட்டுள்ளது. தென்னிந்திய திரைப்படங்களின் வரிசையில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இது ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவுக்கே புத்துணர்ச்சி அளித்திருக்கிறது.

  மேலும் IMDB தர வரிசையில் தென்னியந்திய சினிமாக்களில் ராம்சரணின் ரங்கஸ்தலம், விஜய்சேதுபதியின் 96 மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநதி ஆகிய படங்களும் சிறந்த படங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.  ராட்சசன் படத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், கிறிஸ்டோபர் சரவணன் ஆகியோர் நடித்திருந்தனர். ராம்குமார் இயக்க, ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி.டில்லிபாபு தயாரித்திருந்தார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபாலுக்கு, சமூக வலைத்தளத்தில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. #AmalaPaul
  அமலாபால் விவாகரத்துக்கு பிறகு தான் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகி வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். அவர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளியான ராட்ச‌சன் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

  சமூக வலைதளங்களில் அவர் சூடான படங்களை வெளியிட்டு சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களையும், கருத்துகளையும் வெளியிட்டுவருவார். அதையொட்டி நாளுக்கு நாள் அவரது சமூகவலைதள ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. அந்த வகையில் தற்போது 20 லட்சம் ரசிகர்களை உருவாக்கியுள்ளார் அமலா பால். இன்ஸ்டாகிராமில் இதுகுறித்து தற்போது பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “20 லட்சம் இன்ஸ்டாகிராம் ரசிகர்களைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.  எனது அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக இருந்துவரும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றி. இது தொடரட்டும். அனைவருக்கும் எனது அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இயக்குனர் சுசி கணேசன் மீது லீனா மணிமேகலை கூறிய குற்றச்சாட்டை நான் ஆதரிக்கிறேன் என்று நடிகை அமலாபால் அறிக்கை வெளியிட்டுள்ளார். #Amalapaul #MeToo
  ‘மீ டூ’  மூலம் பிரபல நடிகைகள், பாடகிகள் உள்ளிட்ட பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகளை ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வரிசையில் கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை, பிரபல இயக்குனர் சுசிகணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியிருந்தார்.

  ஆனால் இந்த குற்றச்சாட்டை சுசிகணேசன் மறுத்தார். மேலும் பொய்யான குற்றச்சாட்டை கூறியதாக வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், நடிகை அமலாபால் லீனா மணிமேகலைக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  அந்த அறிக்கையில், ‘நான் லீனா மணிமேகலையின் இயக்குனர் சுசி கணேசனின் மீதான குற்றச்சாட்டை ஆதரிக்கிறேன். பெண்ணியத்துக்கு சிறிதளவும் மரியாதை தர தெரியாத ஒரு மனிதரிடம் துணை இயக்குனராக அந்த பெண் என்ன பாடுப்பட்டு இருப்பாள் என்பது எனக்கு புரிகிறது.  நான் அவர் இயக்கிய ‘திருட்டு பயலே 2’ படத்தின் கதாநாயகியாக இருந்தாலும், இயக்குனர் சுசி கணேசனுடைய இரட்டை அர்த்தம் தொனித்த பேச்சு, முகம் தெரியா யாருக்கோ அவர் கூறும் பரிந்துரைகள், காரணம் இல்லாமல் உடை ஒட்டு உரசும் மனப்பான்மை என பல்வேறு சங்கடங்களை நான் சந்தித்து இருக்கிறேன். இதை வைத்தே லீனா மணிமேகலை என்ன பாடுபட்டு இருப்பார் என்பதை நான் அறிகிறேன்.

  அந்த கொடுமையை சமூக வலைதளங்கள் மூலம் அவர் வெளியில் சொல்லி இருப்பதற்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். 

  இன்றைய பொருளாதார நிலையும், பெருகி வரும் வேலைக்கென்று வரும் பெண்களின் தொகையும், பெண்களை ஒரு எளிய இரையாக்கி விடுகிறது. அங்கிங்கு எனாது படி அனைத்து தொழிகளிலும், துறைகளிலும் இந்த கொடுமை நடந்து வருகிறது.

  தங்களது மனைவியையும், மகள்களையும் போற்றி காப்பாற்றும் இதே ஆண் சமுதாயம், வெளியே மற்ற பெண்களிடம் தங்களது ஆதிக்க மனப்பான்மையை செலுத்துவது துரதிர்ஷ்டமானது.

  இதுவே இந்தியர்களாகிய நாம் நம்முடைய உண்மையான ஆற்றலை கலை, சேவை மற்றும் ஆன்மீக துறைகளில் வெளிப்படுத்தும் தன்மையை ஊனமாக்குகிறது.  ஆன்மீக துறையிலும், கலை துறையிலும் இருந்து பல உண்மைகள் வெளிவர துவங்கி உள்ளது. இதே போல மற்ற துறைகளிலும், குறிப்பாக அங்கீகரிக்க படாத மற்ற துறைகளில் இருந்தும், மீடூ குறித்த பதிவுகள் வெளிவர வேண்டும்.

  அரசாங்கமும், நீதி துறையும் எதிர்காலத்தில் இவ்வித கொடுமைகள் நடக்காமல் இருக்க வேண்டி, பெண்களுக்கு தொழில் பாதுகாப்பு முன்னிட்ட பல அம்சங்களை சட்ட ரீதியாக அமல் படுத்த வேண்டும். அவ்விதமான கட்டுப்பாடுகளே பெண்களை போத பொருளாக சித்தரிக்கும் சிலருக்கு எச்சரிக்கை மணியாகும்.

  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் போஸ்டரைப் பார்த்த ரசிகர்கள் அடுத்த சன்னிலியோன் நீங்க தான் என்று விமர்சித்துள்ளார்கள். #Amalapaul
  அமலாபால் ‘ஆடை’ படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ள அவரது முதல் தோற்றம் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. ஆடை இல்லாமல் உடம்பில் காகிதங்களை சுற்றிக்கொண்டு அழுதபடி இருந்தார். அவரது உடம்பில் ரத்தக் காயங்களும் இருந்தன. இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. 

  அதைப் பார்த்து இந்தி நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி என்று பலரும் பேசினர். எந்த தமிழ் நடிகையும் இதற்கு முன்பு இவ்வளவு கவர்ச்சியாக தோன்றியது இல்லை என்கின்றனர். செல்போன்களில் இலவசம் என்று வரும் குறுந்தகவல்களையும் அதனால் பாதிக்கப்படும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்தும் இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது. 

  அமலாபால் பழிவாங்கும் கதாபாத்திரத்தில் வருகிறார். கதை பிடித்ததால் கவர்ச்சிக்கு சம்மதித்ததாக கூறினார். இந்த நிலையில் அமலாபாலின் கவர்ச்சி தோற்றத்துக்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் கிளம்பி உள்ளன. இவ்வளவு கவர்ச்சியாக நடித்துள்ளதால் அவர்தான் அடுத்த சன்னிலியோன் என்று டுவிட்டரில் சிலர் மோசமான கருத்துக்களையும் பதிவிட்டு உள்ளார்கள்.  அதே நேரம் ஆடை இல்லாமல் நடித்துள்ள அவரது துணிச்சலையும் சிலர் பாராட்டி உள்ளனர். விமர்சனங்களுக்கு பதில் அளித்து அமலாபால் கூறும்போது, ‘‘எனது முதல் தோற்றத்தை பார்த்து விமர்சிப்பவர்கள் படத்தை பார்த்து விட்டு பாராட்டுவார்கள். அந்த ஆடையுடன் நான் ஏன் அப்படி நடித்தேன் என்பது படம் பார்க்கும்போது தெரியவரும்’’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விவாகரத்துக்கு பிறகு படங்களில் பிசியாக நடித்து வரும் அமலாபால், எந்த பிரச்சனையாக இருந்தாலும் 2 நாள் தான் என்று கூறியிருக்கிறார். #Amalapaul
  தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் நடித்து வருகிறார் அமலாபால். அவரிடம் காதல், கல்யாணம், விவாகரத்து இவற்றில் இருந்து மீண்டு வந்துவிட்டீர்களா? என்று கேட்டால் ‘இவற்றால் எந்த பாதிப்பும் இல்லை என்றால் அது சுத்த பொய்.

  நமக்கென்று ஒரு கனவை தேர்ந்தெடுத்து அதில் கவனமாக இருந்தால் போதும். எல்லா துறைகளிலும் நீடித்து இருந்து சாதனை செய்தவர்களை பார்த்தால் இது புரியும்.  அதற்காக வருத்தமே படாமல் வாழ முடியாது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் 2 நாள் துக்கம் அனுபவிச்சுட்டு உடனே வெளியே வந்துவிட வேண்டும். நான் இப்போது முழுக்க சைவத்துக்கு மாறி இருக்கிறேன். இந்த வாழ்க்கை எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கும். நமக்கான சரியான பாடத்தை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று கூறி உள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ், மலையாள மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலாபால், என்னால் சாதாரண பெண்ணாக இருக்க முடியாது என்று கூறியிருக்கிறார். #Amalapaul
  அமலா பால் திருமணமாகி விவாகரத்துக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். பொதுவாக இப்படி நடிக்க வருபவர்களுக்கு கதாநாயகி வேடங்கள் கிடைக்காது. ஆனால் அமலாபால் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வருகிறார். சில படங்களில் அம்மா வேடத்திலும் நடித்தார். 

  இதுபற்றி அவர் கூறும்போது, ‘நடிகை என்றால் கவர்ச்சியாக மட்டும் இல்லாமல் எல்லா விதமான பாத்திரத்திலும் நடிக்க வேண்டும். அம்மாவாக நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஊடகங்கள்தான் தான் அதைப் பெரிது படுத்துகின்றன. கொச்சி, சென்னை இரண்டுமே எனக்கு தாய் வீடு மாதிரி. கொச்சி நான் பிறந்த ஊர். சென்னை நான் வேலை பார்க்கும் ஊர். கொச்சிக்கு போய் விட்டால் அம்மா செல்லமாகி விடுவேன். நன்றாக தூங்குவேன். சாப்பிடுவேன். உடற்பயிற்சி, யோகா எல்லாம் இருக்காது. 

  ஆனால் சென்னைக்கு வந்தால் ‘ஏனோ தானோ’ என்று இருக்க முடியாது. இது வாழ்வு கொடுக்கும் இடம். அதனால் கொஞ்சம் பயபக்தியுடன் இருக்க வேண்டியிருக்கிறது. ஒன்பது வருடமாக சினிமாவில் இருக்கிறேன். எனக்கு சினிமாவைத் தவிர வேறு எதுவும் தெரியாது. முதல் முறையாக ஏதாவது தொழில் செய்யலாமே என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. ஆயுர் வேத ஆரோக்கியம் தொடர்பான தொழிலில் கவனம் செலுத்தலாம் என முடிவு செய்து இருக்கிறேன்.   இதைத் தவிர்த்து நண்பர்களுடன் சேர்ந்து ஒரு சமூக அமைப்பை துவக்கியுள்ளளேன். அதன் மூலம் 100 பேருக்கு கண் அறுவை சிகிச்சைக்கு உதவிட திட்டம் ஒன்றும் இருக்கிறது. மற்றபடி தற்போது மனதில் தோன்றுவதை எல்லாம் கதையாக எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும் உறுதி இந்த அமலா பாலினால் எல்லோரையும் போல ஒரு சாதாரண பெண்ணாக மட்டும் இருக்கவே முடியாது’ என்று கூறி இருக்கிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சினிமாவில் மீண்டும் பிசியாகி இருக்கும் அமலாபால் சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடாத நிலையில், நேற்று கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். #Amalapaul
  அமலாபால் திருமணமாகி விவாகரத்து வாங்கிய நிலையில், மீண்டும் சினிமாவில் பிசியாகி விட்டார். அவர் குடும்பப் பாங்காக நடித்து சமீபத்தில் வெளியான பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

  சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் அமலாபால், அந்த படத்துக்காக சில காலம் படங்கள் வெளியிடாமல் இருந்தார். தற்போது மீண்டும் அதுபோன்ற படங்களை வெளியிட தொடங்கிவிட்டார்.  நேற்று அமலாபால் வெளியிட்ட படம் ஒன்றில் கவர்ச்சி தூக்கலாக இருந்தது. அந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் பெரிய அளவில் பகிர்ந்து வருகின்றனர். விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ராட்ச‌ஷன் படத்தில் நடிக்கும் அமலாபால், அதோ அந்த பறவை போல உள்ளிட்ட சில படங்களில் தனி கதாநாயகியாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #Amalapaul

  ×