சிவப்பு நிற உடையில் ஹாட்டாக நிற்கும் அமலாபால்.. குவியும் லைக்குகள்

பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலாபால்.இவர் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக உள்ளார்.
அமலாபால்
அமலாபால்
Published on

தமிழ் திரையுலகிற்கு சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். அதன்பின்னர் மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் மலையாள திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால் விரைவிலேயே அவரை விவாகரத்தும் செய்தார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம். இணையத்தில் இவர் புகைப்படங்களை ரசிப்பதற்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் , நடிகை அமலாபால் நீலகிரியிலுள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் சிவப்பு நிற உடையில் போஸ் கொடுத்துள்ள இவர் சிவப்பினால் ஓவியம் தீட்டுங்கள் என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com