search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ameer"

    • நடிகர் வெற்றிமாறன் பல படங்களை இயக்கியுள்ளார்.
    • இவர் விடுதலை- 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

    தனுஷ் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன்பின்னர் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசூரன், விடுதலை உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது சூரியின் விடுதலை-2 படத்தை இயக்கி வருகிறார். தொடர்ந்து சூர்யாவின் 'வாடிவாசல்' பட பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்.


    சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் 'வாடிவாசல்' படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, 'வாடிவாசல்' திரைப்படத்தில் அமீர் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வட சென்னையில் ராஜனாக அமீர் நடிக்கும் போது நான் சில விஷயங்கள் சொல்லி கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால், வாடிவாசலில் இவர் இருந்தால் பல விஷயங்கள் எனக்கு தெரியும் என்பதற்காக நான் அவரை அணுகினேன் அமீரும் ஓகே சொல்லிவிட்டார் என்று பேசினார்.

    வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'வடசென்னை' திரைப்படத்தில் அமீர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எனக்கு வெற்றிமாறனோ, வெற்றிமாறனுக்கு நானோ தேவைப்படுவது புதிதல்ல.
    • கொஞ்சம் கோபக்காரன் நான் சுயமரியாதையுடன் வாழ்பவன்.

    ரமேஷ் பாலகிருஷ்ணா இயக்கத்தில் அமீர், வெற்றிமாறன் இணைந்து தயாரித்துள்ள படம் 'மாயவலை'. வின்சென்ட் அசோகன், சஞ்சனாஷெட்டி, சரண், தீனா, சத்யா உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் அமீர் நடித்துள்ளார். யுவன்சங்கர் ராஜா படத்திற்கு இசை அமைத்துள்ளார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் அமீர் பேசியதாவது, சினிமா அறிவு உள்ளவர்களை ரசிப்பது தான் எனது வேலை. இந்த படத்தில் நடிப்பதற்கு நிறைய நடிகர்களிடம் சென்றோம். யாரும் நடிக்க வரவில்லை. அதனால் நான் நடித்தேன். இது எனக்கே புது அனுபவமாக உள்ளது. வெற்றிமாறன் படத்தை பார்த்துவிட்டு தானே வெளியிடுவதாக கூறினார். ரஜினிக்கும் விஜய்க்கும் பக்கத்து மாநில சூப்பர் ஸ்டார்கள் தேவைப்படுகிறார்கள். எனக்கு வெற்றிமாறனோ, வெற்றிமாறனுக்கு நானோ தேவைப்படுவது புதிதல்ல. கொஞ்சம் கோபக்காரன் நான் சுயமரியாதையுடன் வாழ்பவன். சூர்யாவிடம் இருந்து ஒதுங்கி விட்டேன். ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு என்னை யாரும் அழைக்கவில்லை. நானும் போகவில்லை என்று கூறினார்.


    வின்சென்ட் அசோகன் பேசியதாவது, அமீர் அண்ணனுக்கு சினிமாமேல் இருக்கும் காதல் தான் எங்கள் இருவருக்கும் பொதுவானது. வட சென்னை படத்தில் அமீர் அண்ணனுடன் இணைந்து நடித்தது அனைவருக்கும் இன்றும் பிடித்த காட்சியாக உள்ளது. 'மாயவலை' படம் வித்தியாசமானதாக அமைந்தது என்று கூறினார்.

    நடிப்பது, இயக்குவது இரண்டும் வேறு வேறு சவாரி இரண்டையும் ஒரு சிலரால் தான் சமாளிக்க முடியும். ரமேஷ் மாயவலை படத்தை நன்றாக எடுத்துள்ளார். எனக்கு திருப்தியான படமாக இந்த படம் வந்துள்ளது என்று கூறினார்.

    • இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'உயிர் தமிழுக்கு'.
    • இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'உயிர் தமிழுக்கு'. இப்படத்தை மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ளார். இப்படத்தில் சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.




    வித்தியாசாகர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், 'உயிர் தமிழுக்கு' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகவுள்ளதாக போஸ்டர் வெளியாகியுள்ளது.

    • தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் 'உயிர் தமிழுக்கு'.
    • இப்படத்தில் இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

    மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் 'உயிர் தமிழுக்கு'. இப்படத்தில் இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும், சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


    வித்தியாசாகர் இசையமைக்கும் இப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது.


    இந்நிலையில், 'உயிர் தமிழுக்கு' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தை இந்த மாத இறுதியில் பக்ரீத் பண்டிகைக்கு வெளியிடும் விதமாக படக்குழுவினர் ரிலீஸ் சம்பந்தப்பட்ட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


    மேலும், தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் மட்டுமல்ல, செண்டிமெண்டாகவும் இந்தப்படத்தை பக்ரீத் பண்டிகை தினத்தில் வெளியிடுவதில் உறுதியாக இருக்கிறேன் என்று தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆதம் பாவா கூறியுள்ளார்.

    • மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன், ஆதிபகவான் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அமீர்.
    • இவர் மதுரையில் நடந்த ரம்ஜான் பண்டிகைக்கான சிறப்பு தொழுகையில் பங்கேற்றார்.

    சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அமீர். அதன்பின்னர் ராம், பருத்திவீரன், ஆதிபகவான் உள்ளிட்ட படங்களை இயக்கி தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். இயக்குனராக மட்டுமல்லாது நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் ராஜன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பலரின் பாரட்டுக்களையும் பெற்றார்.


    அமீர்

    அமீர்


    இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானம், திருமங்கலம், தெற்குவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர். இதில் இயக்குனர் அமீர் உட்பட 500க்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    • விமல் நடிப்பில் இயக்குனர் சரவண சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “குலசாமி”.
    • இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

    நடிகர் விமல், தான்யா ஹோப் நடிப்பில், நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குலசாமி. இப்படத்திற்கு விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ளார். மிக் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் திரையுலகினர், படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஆதம் பாவா பேசியதாவது, இந்த படத்தின் இயக்குனர் சரவணனை உங்களுக்கு நடிகராக தெரியும் ஆனால் அவர் நடிக்க வருவதற்கு முன்னர் இரண்டு படங்களை இயக்கும்போதே அவருடன் நான் பணி புரிந்துள்ளேன் அதை பற்றி சில விஷயங்களை மட்டும் கூறிக் கொள்கிறேன். சுரேஷ் காமாட்சியும் இயக்குனரும் பழைய ஆட்கள். இருபது வருடங்களுக்கு முன்னர் தண்டாயுதபாணி என்ற படத்தை இயக்கி கொண்டிருந்தார். அது அவரது முதல் படம் எனக்கு உதவி இயக்குனராக முதல் படம் , சூட்டிங் துவங்குவதற்கு முதல் நாள் படத்தின் கதாநாயகர் அதிக சம்பளம் கேட்கிறார் என்று மாற்றுகின்றனர்.



    அதன்பின் கதாநாயகர் யார் என்று கேட்டால் தயாரிப்பாளரின் தம்பி மகன் என்று சொல்லுகின்றனர். நான் இதற்கு ஒத்துப் போகவில்லை பத்து வருடம் ஆனாலும் பரவாயில்லை நாம் வேறு படம் பண்ணிக்கொள்ளலாம் என்று கூறினேன், அதற்கு சரவணன் இந்த படமே எனக்கு பதினைந்து வருடம் கழித்து தான் கிடைத்திருக்கிறது என்று கூறினார். அதன்பிறகு நான் அந்த கதாநாயகருடன் பேசினேன் அவர் 3 லட்சதிலிருந்து 1 1/2 லட்சமாக குறைத்துக் கொண்டார். அந்த கதாநாயகர் வேறு யாருமில்லை நம் ஆர்யா தான். ஒரு வழியாக பேசி கஷ்ட பட்டு படத்தை முடித்து விட்டோம்.

    படம் வெளியான பின்னர் தினத்தந்தியில் ஒரு விமர்சனம் வருகிறது. "சக்தி சரவணன் கமர்சியல் இயக்குனர்களில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வருவார்" என்று அதை பல முறை சொல்லி கிண்டலடித்திருக்கிறேன். அதன் பிறகு ஒரு அரசியல் கட்சி நடத்தும் ஒருவரை வைத்து படம் இயக்கினார். அதில் கட்சிக்கு தலைவரை பார்க்க வருபவர்களை எல்லாம் நடிக்க வைத்து படத்தை எடுத்தார். இது போல பல சம்பவங்கள் அவர் வாழ்வில் நடந்துள்ளது. இந்த குலசாமி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்த்ததும் அவருக்கு போன் செய்து வாழ்த்துகள் கூறினேன் உங்களுக்கேற்ற கதையை பிடிதுள்ளீர்கள் கண்டிப்பாக வெற்றிதான் வாழ்த்துகள் என்றேன். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள், இன்னும் பல படங்கள் இயக்க வேண்டும், நன்றி என்றார்.

    குலசாமி திரைப்படம் வருகிற ஏப்ரல் 21 ஆம்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • விமல் நடிப்பில் இயக்குனர் சரவண சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "குலசாமி".
    • இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

    நடிகர் விமல், தான்யா ஹோப் நடிப்பில், நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குலசாமி. இப்படத்திற்கு விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ளார். மிக் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் திரையுலகினர், படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.




    இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குனர் அமீர் பேசியதாவது, இயக்குனர் சரவண சக்தி என்னுடைய நண்பர். நான் நடிக்கும் ஒரு படத்தில் உடன் நடிக்கும் சகோதரர். ஒரு இயக்குனர் நடிகராகும் போது சில சங்கடங்கள் இருக்கும் அதை தீர்த்து வைத்தது சரவண சக்தியும், அண்ணாச்சியும் தான். என்னை மிக மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டார்கள். சரவண சக்தி மிகச்சிறந்த திறமையாளர்.




    இன்று பொன்னியின் செல்வன் படத்தையே புரமோசன் மூலம் தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது. கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் சுற்றி சுற்றி புரமோசன் செய்கிறார்கள் இன்று சினிமாவின் நிலை இதுதான். அப்படி இருக்கும் போது, இந்தப்படத்தின் நாயகன் நாயகி இங்கு இருந்திருக்க வேண்டும். அவர்கள் வராதது எனக்கு வருத்தமே. அந்தக்குறையை ஜாங்கிட் சார் வந்திருந்து நிவர்த்தி செய்துள்ளார். இந்தப்படம் வெற்றியடைய என் வாழ்த்துக்கள். இவ்வாறு அமீர் பேசினார்.

    குலசாமி திரைப்படம் வருகிற ஏப்ரல் 21 ஆம்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    • ஜீ5 வழங்கும் "செங்களம்" இணையத் தொடர் மார்ச் 24ம் தேதி அன்று வெளியாகவுள்ளது.
    • "செங்களம்" இணையத் தொடரின் டிரைலர் வெளியீட்டு விழாவில் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில், கலையரசன், வாணி போஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள செங்களம். இதனை அபி மற்றும் அபி என்டர்டெயின்மென்ட் சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரித்துள்ளார். இந்த இணையத் தொடர், தென் தமிழக பின்னணியில் நடைபெறும் ஒரு பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது. இத்தொடரின்  டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.




    இந்நிகழ்வினில் திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் இயக்குனர் அமீர் பேசியதாவது, இந்த படைப்பில் வேலை பார்த்துள்ள பலரும் என்னுடைய நெருங்கிய நண்பர்கள், எல்லோரும் இணைந்து ஒரு நல்ல படைப்பைத் தந்துள்ளார்கள். இந்த டிரைலர் பார்த்த போது, இப்படி ஒரு கதையை நாம் செய்திருக்கலாமே என்று எனக்குப் பொறாமை ஏற்பட்டது. 




    ஒரு கலைஞனுக்கு மற்றொரு கலைஞனின் படைப்பைப் பார்த்து இப்படி பொறாமை ஏற்பட்டாலே,  அது நல்ல படைப்பாகத் தான் இருக்கும். அந்த வகையில் எஸ் ஆர் பிரபாகரன் இப்போதே ஜெயித்து விட்டார். இந்த டிரைலரில் முதலில் என்னைக் கவர்ந்தது இசை தான் மிகச்சிறந்த இசை. காட்சிகள் அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளனர். ஜீ5 தொடர்ந்து நல்ல படைப்புகளைத் தந்து வருகிறார்கள் அவர்களுக்கு இந்த செங்களம் தொடரும் வெற்றிப்படைப்பாக அமையும். அனைவருக்கும் நன்றி.


    "செங்களம்" இணையத் தொடர் மார்ச் 24ம் தேதியன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘உயிர் தமிழுக்கு’.
    • இந்த படத்தில் இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

    மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் 'உயிர் தமிழுக்கு'. இப்படத்தில் இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும், சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


    உயிர் தமிழுக்கு ஃபர்ஸ்ட்லுக்

    வித்தியாசாகர் இசையமைக்கும் இப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்‌ஷன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் ஜெய் பீம் படம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் இயக்குனர் அமீர் படக்குழுவினருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமான காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி அது தொடர்பான அறிக்கையை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக 'ஜெய் பீம்' படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும் கோரி வன்னியர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் மூலம் நேற்று சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    அமீர்
    அமீர்

    இந்நிலையில் இயக்குனர் அமீர், ஜெய் பீம் படக்குழுவினருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சமூகநீதியை நிலைநாட்ட வற்பறுத்தும் திரைப்படைப்புகளையும், அதை மிகுந்த சிரமத்துடன் உருவாக்கும் படைப்பாளிகளையும் காக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல ஒரு நல்ல சமூகத்தின் கடமையும் கூட. அந்த வகையில் “ஜெய்பீம்” படக்குழுவினருடன் எப்போதும் நான்…

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    ஒரே மாதிரியான படங்களை எடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை என்று கூறிய இயக்குநர் அமீர், தற்போது சினிமாவின் மீது ஆர்வம் குறைந்துள்ளதாகவும், மண் சார்ந்து படங்களை எடுக்க முயற்சி செய்வதாக கூறினார். #Ameer
    மதுரை அமெரிக்கன் கல்லூரி விஷுவல் கம்யூனிகே‌ஷன் துறை சார்பாக கலை போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து வந்த மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். இதை இயக்குனர் அமீர் தொடங்கி வைத்தார்.

    ‘நான் சினிமாவை வெளியில் இருந்து பார்த்ததற்கும், சினிமா துறைக்கு வந்த பிறகு பார்ப்பதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. அதேபோல் தான் எல்லா துறைகளிலும் இது போன்ற அனுபவம் கிடைக்கும்.

    நமக்கான அடையாளங்களையும், திறமைகளையும் அறிந்து நாம் தான் செயல்பட வேண்டும். ஒரு கட்டத்துக்கு மேல் நம்மை யாரும் இயக்க மாட்டார்கள், நாம் தான் தொடர்ந்து செயல்பட வேண்டும்.

    தற்போது சினிமாவின் மீது ஆர்வம் குறைவாக உள்ளதாக எண்ணுகிறேன். எனவே, அதை போக்க மண் சார்ந்து மக்கள் சார்ந்து அதிக படங்களை எடுக்க முயற்சி செய்வேன்.



    ஒரே மாதிரியான படங்களை எடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. அப்படி நான் விரும்பி சற்று வேறு மாதிரி எடுக்க வேண்டும் என எடுத்த படம் தான் ராம். அது 2 சர்வதேச விருதுகளைப் பெற்றுத்தந்தது.

    மதுரையில் அன்பும் பாசமும் அதிகளவு கொட்டிக்கிடக்கிறது.

    கல்லூரி வாழ்க்கை என்பது ஒரு சுதந்திரமான வாழ்க்கை. அதை முழுமையாக அனுபவிக்க வேண்டும். அரசியல் கூட பேசி தெரிந்து கொள்ள வேண்டும். பிறரின் பிரச்னைகளை உணர வேண்டும்”.

    இவ்வாறு அவர் பேசினார். #Ameer

    தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களுள் ஒருவரான அமீரிடம் ரஜினி, விஜய் இருவரில் யார் வசூலில் முதலிடம் என்று கேட்டதற்கு இயல்பாக பதிலளித்துள்ளார். #Ameer #Rajinikanth #Vijay
    ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே சண்டை கடுமையாக இருக்கும்.

    இதுதொடர்பாக தொலைக்காட்சி பேட்டியில் ‘தமிழகத்தின் வசூலில் யார் நம்பர் 1... ரஜினியா அல்லது விஜய்யா?’ என்று இயக்குனர் அமீரிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அமீர், “தமிழகத்தின் வசூலை வைத்துப் பார்த்தால் விஜய் தான் நம்பர் ஒன்.



    அவரது வசூலை வைத்து பார்த்தால், ரஜினிகாந்த் நம்பர் 2 தான். ஆனால், உலக அளவில் உள்ள வசூலை எடுத்துக் கொண்டால் ரஜினி சார் தான் நம்பர் ஓன். அவருக்கு தமிழ்நாட்டைத் தாண்டி ஆந்திரா, ஐதராபாத், இந்தி திரையுலகம், சீனா, ஜப்பான் என உலகளாவிய மார்க்கெட் இருக்கிறது. ” என்று சாதுர்யமாக பதிலளித்துள்ளார். #Ameer #Rajinikanth #Vijay

    ×