அமீரின் 'உயிர் தமிழுக்கு' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு`

அமீரின் 'உயிர் தமிழுக்கு' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு`

இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'உயிர் தமிழுக்கு'.இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
Published on

இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'உயிர் தமிழுக்கு'. இப்படத்தை மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ளார். இப்படத்தில் சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வித்தியாசாகர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், 'உயிர் தமிழுக்கு' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகவுள்ளதாக போஸ்டர் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com