என் மலர்

  சினிமா செய்திகள்

  இப்படி ஒரு கதையை நாம் செய்திருக்கலாமே என்று பொறாமை ஏற்பட்டது.. இயக்குனர் அமீர்
  X

  அமீர் 

  இப்படி ஒரு கதையை நாம் செய்திருக்கலாமே என்று பொறாமை ஏற்பட்டது.. இயக்குனர் அமீர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஜீ5 வழங்கும் "செங்களம்" இணையத் தொடர் மார்ச் 24ம் தேதி அன்று வெளியாகவுள்ளது.
  • "செங்களம்" இணையத் தொடரின் டிரைலர் வெளியீட்டு விழாவில் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

  இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில், கலையரசன், வாணி போஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள செங்களம். இதனை அபி மற்றும் அபி என்டர்டெயின்மென்ட் சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரித்துள்ளார். இந்த இணையத் தொடர், தென் தமிழக பின்னணியில் நடைபெறும் ஒரு பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது. இத்தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.


  அமீர் - எஸ்.ஆர்.பிரபாகரன் - வாணி போஜன்
  அமீர் - எஸ்.ஆர்.பிரபாகரன் - வாணி போஜன்


  இந்நிகழ்வினில் திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் இயக்குனர் அமீர் பேசியதாவது, இந்த படைப்பில் வேலை பார்த்துள்ள பலரும் என்னுடைய நெருங்கிய நண்பர்கள், எல்லோரும் இணைந்து ஒரு நல்ல படைப்பைத் தந்துள்ளார்கள். இந்த டிரைலர் பார்த்த போது, இப்படி ஒரு கதையை நாம் செய்திருக்கலாமே என்று எனக்குப் பொறாமை ஏற்பட்டது.
  ஒரு கலைஞனுக்கு மற்றொரு கலைஞனின் படைப்பைப் பார்த்து இப்படி பொறாமை ஏற்பட்டாலே, அது நல்ல படைப்பாகத் தான் இருக்கும். அந்த வகையில் எஸ் ஆர் பிரபாகரன் இப்போதே ஜெயித்து விட்டார். இந்த டிரைலரில் முதலில் என்னைக் கவர்ந்தது இசை தான் மிகச்சிறந்த இசை. காட்சிகள் அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளனர். ஜீ5 தொடர்ந்து நல்ல படைப்புகளைத் தந்து வருகிறார்கள் அவர்களுக்கு இந்த செங்களம் தொடரும் வெற்றிப்படைப்பாக அமையும். அனைவருக்கும் நன்றி.


  "செங்களம்" இணையத் தொடர் மார்ச் 24ம் தேதியன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×