அமீர் படத்தின் உரிமையை கைப்பற்றிய சுரேஷ் காமாட்சி

ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘உயிர் தமிழுக்கு’.இந்த படத்தில் இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
இயக்குனர் அமீர்
இயக்குனர் அமீர்
Published on

மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் 'உயிர் தமிழுக்கு'. இப்படத்தில் இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும், சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

உயிர் தமிழுக்கு ஃபர்ஸ்ட்லுக்

வித்தியாசாகர் இசையமைக்கும் இப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்‌ஷன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com