search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amazon"

    • கேலக்ஸி S20 FE மாடலை ரூ. 29 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும்.
    • பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யும் போது கூடுதலாக ரூ. 25 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    பிரீமியம் அல்லது மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் வாங்குவது பற்றிய திட்டம், அதற்கான பட்ஜெட் விஷயத்தில் பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்தும். அந்த வகையில், பிரீமியம் மாடல்களின் மீது அதிக சலுகைகள் அல்லது தள்ளுபடி அறிவிக்கப்படும் போது அதுபற்றிய தகவல் வேகமாக பரவுவது இயல்பான காரியம் தான். அந்த வரிசையில், அமேசான் வலைதளத்தில் சாம்சங் கேலக்ஸி S20 FE மாடலுக்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி ரூ. 74 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி S20 FE மாடலை அமேசான் வலைதளத்தில் தற்போது ரூ. 4 ஆயிரத்து 999 விலையிலேயே வாங்கிட முடியும். அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி S20 FE மாடலின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி விலை ரூ. 74 ஆயிரத்து 999 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனினும், இந்த வேரியண்டிற்கு குறுகிய கால சலுகையாக 60 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

     

    இதன் காரணமாக கேலக்ஸி S20 FE விலையில் ரூ. 45 ஆயிரம் வரை சேமிக்க முடியும். இதற்காக பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யவோ அல்லது குறிப்பிட்ட வங்கி கிரெடிட் கார்டையோ பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. குறுகிய கால தள்ளுபடி சேர்த்து கேலக்ஸி S20 FE மாடலை ரூ. 29 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும்.

    விலை குறைப்பு தவிர பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யும் போது கூடுதலாக ரூ. 25 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனினும், இந்த சலுகையை பெற ஸ்மார்ட்போன் சீராக இயங்கும் நிலையில் இருப்பது அவசியம் ஆகும். அனைத்து ஸ்மார்ட்போனிற்கும் ஒரே மாதிரியான மதிப்பு வழங்கப்படாது. ஒவ்வொரு ஸ்மார்ட்போனின் மறுமதிப்பீடு பொருத்து அதற்கான விலை வேறுப்படும்.

    எக்சேஞ்ச் சலுகையில் முழு தள்ளுபடியை பெறும் பட்சத்தில் சாம்சங் கேலக்ஸி S20 FE மாடலை ரூ. 4 ஆயிரத்து 999 விலையிலே வாங்கிட முடியும். இதன் மூலம் அதிகபட்சம் ரூ. 70 ஆயிரம் சேமிக்கலாம்.

    அம்சங்களை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி S20 FE 6.5 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 12MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 8MP டெலிபோட்டோ கேமரா, 32MP செல்ஃபி கேமரா மற்றும் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

    • அமெரிக்க நிறுவனங்கள் ஐரோப்பாவில் பணியாற்றும் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளன.
    • 2023 ஆண்டில் மட்டும் 1,68,918 ஊழியர்களுக்கு பணிநீக்க ஆணையை டெக் நிறுவனங்கள் வழங்கி உள்ளன.

    உலகளவில் பிரபலமாக அறியப்படும் முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்லாயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த ஆண்டு முதலே பணிநீக்க நடவடிக்கைகளால் ஊழியர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கூகுள், மெட்டா, அமேசான் உள்பட உலகளவில் 570 தொழில்நுட்ப நிறுவனங்கள் 2023 ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 68 ஆயிரத்து 918 ஊழியர்களுக்கு பணிநீக்க ஆணையை வழங்கி உள்ளன.

    இதுதவிர, மேலும் பலரை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் இந்த நிறுவனங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இந்த வரிசையில் அமெரிக்க நிறுவனங்கள் தற்போது ஐரோப்பாவில் பணியாற்றும் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளன. எனினும், இந்த பகுதிகளில் உள்ள கடுமையான விதிகள் காரணமாக நிறுவனங்கள் தரப்பில் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர் நல அமைப்புகளிடம் முன்கூட்டியே அறிவிக்காமல் பணிநீக்கம் செய்ய முடியாது என்ற சூழல் நிலவுகிறது.

     

    பணிநீக்க நடவடிக்கைகளுக்கு முன்பு ஊழியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஆணையங்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற சட்டம் அமலில் உள்ளது. இதன் காரணமாக கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களிடம் பணியினை ராஜினாமா செய்ய வலியுறுத்தி வருகின்றன. பிரான்ஸ் நாட்டில் உள்ள ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் ஆல்ஃபாபெட் நிறுவனம், ஊழியர்கள் பணியை ராஜினாமா செய்து, பெரும் தொகையை பணி நீக்க ஊதியமாக பெற்றுக் கொள்ள வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இது போன்ற தகவல்களால், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இயங்கி வரும் கூகுள் அலுவலக ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்படும் சூழலுக்கு ஆளாகியுள்ளனர். கூகுள் போன்றே அமேசான் நிறுவனமும் தனது மூத்த மேலாளர்களிடம், பணியை ராஜினாமா செய்து அதிகபட்சம் ஒரு வருடத்திற்கான சம்பளத்தை பணி நீக்க ஊதியமாக பெற்றுக் கொள்ள வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • ரியல்மி நார்சோ பிராண்டின் புதிய N55 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    • கடந்த சில நாட்களாக N சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கான டீசர் வெளியான நிலையில், தற்போது மாடல் பெயர் ஓரளவுக்கு தெரியவந்துள்ளது.

    ரியல்மி நிறுவனம் தனது சமூக வலைதளங்களில் பிராஜக்ட் N பற்றிய டீசர்களை வெளியிட்டு வந்தது. தற்போது தனது அடுத்த தலைமுறை நார்சோ ஸ்மார்ட்போனின் புதிய டீசரை ரியல்மி வெளியிட்டுள்ளது. ரியல்மி நிறுவனம் புதிய பிராஜக்ட் N-க்காக பிரத்யேக மைக்ரோசைட் ஒன்றை தனது வலைதளத்தில் உருவாக்கி இருக்கிறது.

    இதே மைக்ரோசைட் அமேசான் தளத்திலும் இடம்பெற்றுள்ளது. அதன் படி இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என தெரியவந்துள்ளது. புதிய நார்சோ ஸ்மார்ட்போனின் பெயர் விவரங்களை ரியல்மி நிறுவனம் அறிவிக்கவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் புதிதாக N சீரிசில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் நார்சோ N55 எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. மைக்ரோசைட் விவரங்களின் படி இந்த ஸ்மார்ட்போன் பாக்ஸ் டிசைன், டிஸ்ப்ளே மற்றும் மெல்லிய பெசல்கள் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இதன் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன்கள் வலதுபுறத்தில் உள்ளன. இதில் உள்ள பவர் பட்டினேலேயே கைரேகை சென்சார் பொருத்தப்படுகிறது.

    "அடுத்த தலைமுறை தொழில்நுட்பம், அதன் முந்தைய வெர்ஷனை விட பிரமாண்டமாக இருக்கும்," என ரியல்மி தெரிவித்துள்ளது. மற்றொரு டீசரில் 64, 90, 33, 16 என ஏராளமான எண்கள் இடம்பெற்றுள்ளன. இவை கேமரா, ரிப்ரெஷ் ரேட், ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் முன்புற செல்ஃபி கேமராக்களை குறிக்கும் என கூறப்படுகிறது.

    ரியல்மி நிறுவனம் கடந்த ஆண்டு நார்சோ 50 சீரிசில் ஏராளமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. அந்த வரிசையில், பிராஜக்ட் N ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் 12 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிகிறது. வரும் நாட்களில் இதுபற்றிய கூடுதல் விவரங்கள் அறிவிக்கப்படலாம்.

    • அமேசான் நிறுவனம் 9 ஆயிரம் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய உள்ளது.
    • இந்த அறிவிப்பு அமேசான் நிறுவன ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

    வாஷிங்டன்:

    கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் காரணமாக டுவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் ஊழியர்களில் பெரும்பாலானவர்களை கடந்த ஆண்டு 2-ம் பாதியில் பணி நீக்கம் செய்தது.

    இதையடுத்து, அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்ட அமேசான் நிறுவனமும் கடந்த ஜனவரி மாதம் 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது.

    இந்நிலையில், அமேசான் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடுத்த வாரம் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. இதுதொடர்பாக ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். இவற்றில் பெரும்பாலான ஊழியர்கள் விளம்பரப்பிரிவு மற்றும் இதர பிரிவுகளில் பணியாற்றுபவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன....

    இந்த அறிவிப்பு அமேசான் நிறுவன ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பட்ஸ் ப்ரோ 2R இந்திய விற்பனை விவரங்கள் வெளியாகி உள்ளது.
    • இம்மாத துவக்கத்தில் நடைபெற்ற கிளவுட் 11 நிகழ்வில் ஒன்பிளஸ் நிறுவனம் ஏராளமான சாதனங்களை அறிமுகம் செய்தது.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது கிளவுட் 11 நிகழ்வில் ஒன்பிளஸ் 11, ஒன்பிளஸ் 11R, ஒன்பிளஸ் ப்ரோ 2 வரிசையில் ஏராளமான சாதனங்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இந்திய பயனர்களுக்காக ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2R மாடல் பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டது. ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலுடன் ஒப்பிடும் போது 2R மாடலில் வயர்லெஸ் சார்ஜிங், ஹெட் டிராகிங் போன்ற வசதிகள் வழங்கப்படவில்லை.

    மேலும் பட்ஸ் ப்ரோ 2 மாடலை விட 2R விலை ரூ. 2 ஆயிரம் வரை குறைவு ஆகும். விலை மற்றும் அம்சங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், பட்ஸ் ப்ரோ 2R மைக்ரோசைட் அமேசான் இந்தியா வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி புதிய ஒன்பிளஸ் இயர்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகி இருக்கிறது.

     

    அம்சங்களை பொருத்தவரை புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலில் 48db டெப்த் மற்றும் 4000Hz விட்த் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் 54ms லோ லேடன்சி, மெலோடிபூஸ்ட் டூயல் டிரைவர்கள் 11mm வூஃபர், 6mm டுவீட்டர், டைனாடியோ, டால்பி அட்மோஸ் மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2R அம்சங்கள்:

    ப்ளூடூத் 5.3 (LHDC 5.0/AAC/SBC/LC3)

    டால்பி அட்மோஸ்

    ஸ்பேஷியல் ஆடியோ

    ஒன்பிளஸ் ஆடியோ ID 2.0

    தனித்துவம் மிக்க ஆடியோ

    11mm டைனமிக் டிரைவர் + 6mm டைஃப்ரம் டிரைவர்

    பிரெஷர் சென்சிடிவ் கண்ட்ரோல்

    டூயல் மைக்ரோபோன்

    54ms லோ-லேடன்சி கேமிங்

    இயர்போனுக்கு வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP55), கேஸ்-க்கு IPX4 ரெசிஸ்டண்ட்

    டூயல் கனெக்ஷன்

    இயர்பட்களில் 60 எம்ஏஹெச் பேட்டரி கேசில் 520 எம்ஏஹெச் பேட்டரி

    விலை விவரங்கள்:

    இந்திய சந்தையில் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2R விலை ரூ. 9 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மார்ச் மாத வாக்கில் துவங்க இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2R - அப்சிடியன் பிளாக் மற்றும் மிஸ்டி வைட் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    • அமேசான் வலைதளத்தில் காதலர் தினத்தை ஒட்டி சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • ஸ்மார்ட்வாட்ச், இயர்போன், டேப்லெட், என ஏராளமான பிரிவுகளில் மின்சாதனங்கலுக்கு அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    காதலர் தினத்தை ஒட்டி அமேசான் வலைதளத்தில் Fab Phones Fest Sale அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஏராளமான சலுகை மற்றும் தள்ளுபடிகள் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. இந்த சலுகை மற்றும் தள்ளுபடிகள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மற்றும் அக்சஸரீக்களுக்கு அதிகபட்சம் 50 சதவீதம் வரையிலான தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது.

    சலுகை விவரங்கள்:

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடல் ரூ. 77 ஆயிரத்து 899 முதல் கிடைக்கிறது. இதில் அனைத்து சலுகை மற்றும் வங்கி தள்ளுபடிகள் சேர்க்கப்பட்டு இருக்கிறது. அமேஸ்ஃபிட் GTS 2 மினி ஸ்மார்ட்வாட்ச் வங்கி தள்ளுபடி மற்றும் சலுகைகளை சேர்த்து ரூ. 4 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கிறது. நாய்ஸ்ஃபிட் ஃபோர்ஸ் ரக்கட் மாடல் ரூ. 2 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கிறது.

     

    ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மற்றும் வயர்டு இயர்போன்கள் பிரிவில் போட் ஏர்டோப்ஸ் 141 மாடல் ரூ. 1,099 விலையிலும், ஜெபிஎல் வேவ் 200 மாடல் ரூ. 2 ஆயிரத்து 499 விலையிலும், நாய்ஸ் பட்ஸ் VS201 V2 மாடல் ரூ. 999 விலையிலும் சென்ஹெய்சர் IE 100 ப்ரோ இன்-இயர் வயர்டு இயர்போன் ரூ. 6 ஆயிரத்து 900 விலையில் கிடைக்கிறது. சியோமி பேட் 5 மாடல் ரூ. 27 ஆயிரத்து 999 என்றும் ரியல்மி பேட் வைபை 4ஜி டேப்லெட் மாடல் ரூ. 17 ஆயிரத்து 189 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    வங்கி சலுகைகள்:

    ரூ. 4 ஆயிரத்து 999 மதிப்புள்ள பொருட்களை வாங்கும் போது எஸ்பிஐ மேக்ஸ் கிரெடிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மாத தவணைகளில் பத்து சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ. 1000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதே போன்று ஃபெடரல் வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது பத்து சதவீத தள்ளுபடி அல்லது அதிகபட்சம் ரூ. 1250 வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    வங்கி தள்ளுபடி மற்றும் இதர சலுகைகள் மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் விலைகளில் சேர்க்கப்படுகிறது. விற்பனை ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், பிப்ரவரி 14 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    Source: fonearena

    • அமேசான் வலைதளத்தில் ஐபோன் 13 மாடலுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • தற்போது ஐபோன் 13 (128 ஜிபி) மாடல் ரூ. 59 ஆயிரத்து 499 விலையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

    அமேசான் கிரேட் ரிபப்லிக் டே சேல் பிரைம் சந்தா வைத்திருப்போருக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஐபோன் 13 (128 ஜிபி) மாடல் ரூ. 59 ஆயிரத்து 499 விலையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் கூடுதலாக வங்கி சலுகைகளும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி ஸ்டேட் பேங்க் கார்டு வைத்திருப்போர் பத்து சதவீதம் உடனடி தள்ளுபடி, கிரெடிட் கார்டு மாத தவணை முறை, பஜாஜ் ஃபின்சர்வ் இஎம்ஐ கார்டு மற்றும் அமேசான் பே கிரெடிட் கார்டு மூலம் வட்டியில்லா மாத தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    இதுதவிர பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் போது அதிகபட்சம் ரூ. 20 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்த வகையில், அனைத்து சலுகைகளையும் சேர்க்கும் பட்சத்தில் ஐபோன் 13 மாடலை ரூ. 37 ஆயிரத்து 499 விலையில் வாங்கிட முடியும்.

    முன்னதாக ஆப்பிள் ஐபோன் 13 மாடல் ரூ. 79 ஆயிரத்து 900 விலையில் 2021 வாக்கில் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது. அளவில் இந்த மாடல் ஐபோன் 12 போன்றே இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க ஐபோன் 12 மாடலில் இருப்பதை போன்றே 12MP வைடு மற்றும் அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் ஐபோன் 14 பிளஸ் மாடலுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.

    அதன்படி ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 14 பிளஸ் ரூ. 75 ஆயிரத்து 999 விலையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இதர வங்கி சலுகைகளை சேர்க்கும் போது ஐபோன் 14 பிளஸ் மாடலை ரூ. 69 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும். ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைனில் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்கள் அதன் அசல் விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. எனினும், ஹெச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 6 ஆயிரம் கேஷ்பேக் பெறலாம்.

    • அமேசான் பிரைம் ஒடிடி சேவையின் புது சந்தா உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
    • புதிய அமேசான் பிரைம் லைட் விலை சற்றே குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    அமேசான் நிறுவனம் இந்திய சந்தையில் தனது பிரைம் சந்தாவை ஓரளவு குறைந்த விலையிலேயே வழங்கி வருகிறது. அமேசான் பிரைம் சந்தாவில் ஸ்டிரீமிங் மட்டுமின்றி ஒரே நாளில் டெலிவரி மற்றும் இலவச அதே நாளில் டெலிவரி போன்ற சேவைகளையும் வழங்கி வருகிறது. இந்த நிலையில், அமேசான் நிறுவனம் பிரைம் லைட் பெயரில் மற்றொரு சந்தா முறையை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அதன்படி அமேசான் பிரைம் லைட் சந்தா ஆண்டிற்கு ரூ. 999 எனும் விலையில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே அமேசான் பிரைம் சந்தா இதே விலையில் வழங்கப்பட்டு வந்தது. எனினும், விலை உயர்வு காரணமாக இது ரூ. 1,499 ஆக மாறி இருக்கிறது. தற்போது புது சந்தா முறை அதன் பீட்டா வெர்ஷனில் தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களிடம் சோதனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இதில் இரண்டு நாட்களில் இலவச டெலிவரி மற்றும் ஒரே நாளில் டெலிவரி போன்ற சேவைகள் சேர்க்கப்பட்டு இருக்கும். அந்த வகையில், இரண்டு நாட்களுக்குள் டெலிவரி வேண்டும் எனில், பயனர்கள் அதற்கான கட்டணத்தை செலுத்த நேரிடும் என்றே தெரிகிறது. இரண்டு நாட்களுக்கு இலவச டெலிவரி மட்டுமின்றி அமேசான் பிரைம் லைட் சந்தாவின் கீழ் பிரைம் வீடியோ தரவுகள் அனைத்தையும் பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது.

    எனினும், குறைந்த விலை கொண்ட சேவையில் பயனர்கள் தரவுகளை HD தரத்தில் மட்டுமே ஸ்டிரீம் செய்ய முடியும். இது தவிர ஸ்டிரீம்களின் இடையில் வரும் விளம்பரங்களையும் பார்க்க நேரிடும். அந்த வகையில் புது அமேசான் பிரைம் லைட் விளம்பரங்கள் அடங்கிய குறைந்த விலை சந்தா என எடுத்துக் கொள்ளலாம். அமேசான் பிரைம் லைட் சந்தா ஒரே சமயத்தில் இரு சாதனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். இதில் ஒன்று நிச்சயம் மொபைல் போனாகவே இருக்க வேண்டும்.

    புதிய அமேசான் பிரைம் லைட் அறிமுகமானால், அமேசான் பிரைம் சந்தா முறையின் விலை ஆண்டிற்கு ரூ. 1499 என்றும், காலாண்டிற்கு ரூ. 459, மாதத்திற்கு ரூ. 179 மற்றும் அமேசான் பிரைம் லைட் சந்தா ஆண்டுக்கு ரூ. 999 என நிர்ணயம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    • அமேசான் வலைதளத்தில் சிறப்பு சலுகைகள் வழங்கும் Great Republic Day சேல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • அடுத்த வாரம் துவங்கும் சிறப்பு விற்பனையில் பல்வேறு பொருட்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    அமேசான் வலைதளத்தில் Great Republic Day Sale நடைபெற இருக்கிறது. அடுத்த வாரம் அதாவது ஜனவரி 17 ஆம் தேதி துவங்கும் சிறப்பு விற்பனை ஜனவரி 20 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. வழக்கத்தை போன்றே சிறப்பு விற்பனை அமேசான் பிரைம் சந்தா வைத்திருப்போருக்கு ஒரு நாள் முன்பே துவங்கி விடும்.

    புதிய சிறப்பு சலுகை விற்பனையில் ஸ்மார்ட்போன், லேப்டாப், அக்சஸரீக்கள், ஸ்மார்ட்வாட்ச், வீட்டு உபயோக மின்சாதனங்கள், அழகு சாதன பொருட்கள் மற்றும் அமேசான் சாதனங்களான கிண்டில், அலெக்சா, ஃபயர் டிவி உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன.

    அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் மற்றும் அக்சஸரீக்களுக்கு அதிகபட்சம் 40 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுவதாக அமேசான் அறிவித்து இருக்கிறது. ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கு அதிகபட்சம் 75 சதவீதம் தள்ளுபடி, லேப்டாப்களுக்கு அதிகபட்சம் 40 சதவீதம், ஹெட்போன் மற்றும் டேப்லெட்களுக்கு முறையே 75 சதவீதம் மற்றும் 60 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது.

    டிவி மற்றும் வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு அதிகபட்சம் 65 சதவீத தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது. டிவி-க்களுக்கு மாதம் ரூ. 900-இல் இருந்து துவங்கும் வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் வீடு மற்றும் அடுப்பறை பொருட்களுக்கு முறையே 70 சதவீதம் மற்றும் 80 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது. இதே போன்று ஆடைகள், அமேசான் அலெக்சா, ஃபயர் டிவி மற்றும் கிண்டில் உள்ளிட்டவைகளுக்கும் தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது.

    தள்ளுபடி, சிறப்பு சலுகைகள் மட்டுமின்றி வங்கி சார்ந்த சலுகைகளும் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக அமேசான் நிறுவனம் எஸ்பிஐ கார்டு உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. எஸ்பிஐ கிரெடிட் கார்டு மற்றும் மாத தவணை முறை பரிவர்த்தனைகளுக்கு 10 சதவீத தள்ளுபடி கிடைக்கும். இதே போன்று பஜாஜ் ஃபின்சர்வ் மூலம் வட்டியில்லா மாத தவணை முறை சலுகை வழங்கப்படுகிறது. 

    • தற்போது நிலவும் கடினமான பொருளாதார சூழ்நிலையை எதிர்கொள்வது சவாலாக உள்ளது.
    • பணி நீக்கமானது இந்த ஆண்டு தொடக்கத்திலேயே நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருப்பது நிறுவன ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

    வாஷிங்டன்:

    கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் காரணமாக டுவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் ஊழியர்களில் பெரும்பாலானவர்களை கடந்த ஆண்டு 2-ம் பாதியில் பணி நீக்கம் செய்தது. இதைத்தொடர்ந்து புகழ்பெற்ற அமேசான் நிறுவனமும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது.

    இந்நிலையில் அமேசான் நிறுவனத்தின் தலைமை செயலாளர், ஊழியர்களுக்கு இன்று காலை ஒரு செய்தி அனுப்பி உள்ளார். அதில், தற்போது நிலவும் கடினமான பொருளாதார சூழ்நிலையை எதிர்கொள்வது சவாலாக உள்ளது. இதனால் மேலும் 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளோம் என கூறப்பட்டுள்ளது.

    இந்த பணி நீக்கமானது இந்த ஆண்டு தொடக்கத்திலேயே நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருப்பது அந்த நிறுவன ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

    • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மாடலுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • 2021 செப்டம்பர் மாத வாக்கில் ஐபோன் 13 மாடல் ரூ. 79 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஐபோன் 13 மாடலுக்கு அமேசான் வலைதளத்தில் அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி அமேசானில் ஐபோன் 13 ஸ்மார்ட்போனின் 128 ஜிபி மாடலின் விலை ரூ. 67 ஆயிரத்து 490 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.

    இதே போன்று தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 22 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் சலுகை அறிவிக்கப்பட்டஉ இருக்கிறது. அதன்படி தள்ளுபடி மற்றும் எக்சேன்ஜ் சலுகைகளை சேர்த்தால் ஐபோன் 13 மாடலை ரூ. 45 ஆயிரத்து 490 விலையில் வாங்கிட முடியும். இவை தவிர வியாபார பரிவர்த்தனைகளில் ஜிஎஸ்டி மூலம் 28 சதவீதம் வரை சேமிக்க முடியும்.

    முன்னதாக 2021 ஐபோன் 13 மாடல் ரூ. 79 ஆயிரத்து 900 விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை ஐபோன் ஐபோன் 13 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா 2532x1170 பிக்சல் XDR OLED டிஸ்ப்ளே, ஏ15 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 13 மாடல் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் 16.2 அப்டேட்டை வெளியிட்டது. இதில் ஏராளமான புது அம்சங்கள், மேம்பட்ட ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, ஃபிரீடம் ஆப், ஆப்பிள் மியூசிக் சிங் மற்றும் 5ஜி போன்ற மிகமுக்கிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் சில அம்சங்கள் புதிதாக வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், சில அம்சங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு தற்போது அவற்றில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

    • அமேசான் வலைதளத்தில் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் சலுகை வழங்கும் சிறப்பு தள்ளுபடி நடைபெற்று வருகிறது.
    • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களுக்கு அவ்வப்போது ஆன்லைன் தளங்களில் அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகிறது.

    அமேசான் வலைதளத்தில் "ஸ்மார்ட்போன் அப்கிரேடு டேஸ்" பெயரில் சிறப்பு விற்பனையை இந்தியாவில் நடத்தி வருகிறது. இதில் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி, வங்கி சலுகைகள், மாத தவணை முறையில் வட்டியில்லா சலுகைகள், எக்சேன்ஜ் தள்ளுபடி என ஏராள பலன்கள் வழங்கப்படுகிறது. தற்போது துவங்கி இருக்கும் சிறப்பு தள்ளுபடி விற்பனை டிசம்பர் 18 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    சிறப்பு விற்பனையில் ஐபோன் 14 மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி ஐபோன் 14 ஸ்மார்ட்போனின் 128 ஜிபி மாடலின் விலை ரூ. 78 ஆயிரத்து 740 என மாற்றப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஹெச்டிஎப்சி வங்கி கார்டுகளுக்கு ரூ. 5 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுதவிர சிட்டி யூனியன் மற்றும் ஹெச்எஸ்பிசி வங்கி கார்டுகளுக்கும் ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஹெச்டிஎப்சி வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளுக்கு ரூ. 5 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஐபோன் 14 மாடலின் விலை ரூ. 73 ஆயிரத்து 740 என மாறி விடுகிறது. இத்துடன் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 28 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்த வகையில், எக்சேன்ஜ் மற்றும் வங்கி சலுகைகளை சேர்க்கும் போது ஐபோன் 14 மாடலை ரூ. 57 ஆயிரம் பட்ஜெட்டில் வாங்கிட முடியும்.

    ஐபோன் 14 அம்சங்கள்:

    அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 14 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள், 60Hz ரிப்ரெஷ் ரேட், ஏ15 பயோனிக் சிப், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 14 மாடல் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் ஐஒஎஸ் 16 வழங்கப்பட்டு இருக்கிறது.

    கனெக்டிவிட்டிக்கு 5ஜி, வைபை, டூயல் சிம், ப்ளூடூத், ஜிபிஎஸ், லைட்னிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12MP வைடு ஆங்கில் கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் டால்பி விஷன் வீடியோ ரெக்கார்டிங் வசதி உள்ளது.

    ×