search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alastair Cook"

    சக வீரர்களிடம் ஓய்வு முடிவை தெரிவிக்கும்போது அழுது விட்டோன். அழுகையை அடக்க சில பீர்கள் தேவைப்பட்டது என குக் தெரிவித்துள்ளார். #AlastairCook
    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க பேட்ஸ்மேன் ஆக திகழ்பவர் அலஸ்டைர் குக். இவர் நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்கும் இந்தியாவிற்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெருகிறார்.

    ஓய்வு குறித்து சக வீரர்களிடம் அறிவிக்கும்போது ஆழுகையை அடக்குவதற்கு சில பீர்கள் தேவைப்பட்டது என்று குக் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து அலஸ்டைர் குக் கூறுகையில் ‘‘எனக்கு அங்கு சில பீர்கள் தேவைப்பட்டது. இல்லாவிடில், நான் ஏற்கனவே அழுததைவிட கூடுதலாக அழுதிருப்பேன். கடந்த 6 மாதங்களாக எனது மனத்திற்குள் ஓய்வு பெற வேண்டும் என்ற முடிவு ஓடிக்கொண்டே இருந்தது. மனதளவில் எனக்கு கடினமாக இருந்தது’’ என்றார்.
    சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இங்கிலாந்து தொடக்க வீரர் அலஸ்டைர் குக்கிற்கு சச்சின் தெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார். #AlastairCook #Sachin
    இங்கிலாந்து அணியின் முன்னணி தொடக்க வீரர் அலஸ்டைர் குக். 33 வயதாகும் இவர், கடந்த 2006-ம் ஆண்டு தனது 21 வயதில் இந்தியாவிற்கு எதிரான நாக்பூர் டெஸ்டில் அறிமுகமானார். அறிமுக டெஸ்டிலேயே சதம் அடித்து அசத்தினார்.

    டெஸ்ட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அலஸ்டைர் குக் இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும் பொறுப்பேற்றார். இவர் இதுவரை 160 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 32 சதங்கள், 56 அரைசதங்களுடன் 12254 ரன்கள் குவித்துள்ளார்.



    ஆனால் கடந்த ஒரு வருடமாக இவரது ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. தற்போது நடைபெற்று வரும் இந்தியாவிற்கு எதிரான முதல் நான்கு டெஸ்டிலும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இந்நிலையில் இந்தியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் வருகிற 7-ந்தேதி லண்டன், கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியோடு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    இங்கிலாந்து அணிக்காக 160 போட்டிகளிலும், அபாரமான ஆட்டத்தையும் வெளிப்படுத்திய அலஸ்டைர் குக்கிற்கு சச்சின் தெண்டுல்கர் டுவிட்டர் மூலம் புகழாரம் சூட்டியுள்ளார். சச்சின் தனது டுவிட்டரில் ‘‘இங்கிலாந்துக்கு அணிக்காக விளையாடிய தலைசிறந்த வீரர்களில் ஒருவர். கிரிக்கெட் மைதானத்திற்கும், வெளியேயும் இவரது செயல்பாடு அப்பழுக்கற்றது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    அலஸ்டைர் குக்கின் ஓய்வு முடிவால் சச்சின் தெண்டுல்கரின் சாதனையை துரத்திக் கொண்டிருந்த அச்சுறுத்தல் முடிவிற்கு வந்துள்ளது. #Sachin #ThankYouChef #CookRetires
    இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்றும், லிட்டில் மாஸ்டர் என்றும் அழைக்கப்படுபவர் சச்சின் தெண்டுல்கர். இவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 100 சதங்கள் விளாசியுள்ளார். தனது 24 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் (1989 முதல் 2013 வரை) 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 51 சதம், 68 அரைசதங்களுடன் 15921 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 248 ரன்கள் சேர்த்துள்ளார்.

    டெஸ்ட் போட்டியில் ஒரு தனிநபர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இந்த சாதனையை முறியடிக்க எவராலும் முடியாது என்று கருதப்படுகிறது. இந்த வேளையில்தான் இங்கிலாந்து வீரரான அலஸ்டைர் குக் விஸ்வரூபம் எடுத்தார். டெஸ்ட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.



    150 டெஸ்ட் போட்டியிலேயே 11 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்திருந்தார். அலஸ்டைர் குக் 160 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 32 சதங்கள், 56 அரைசதங்களுடன் 12254 ரன்கள் குவித்துள்ளார். அவருக்கு தற்போது 33 வயதே ஆவதால் 37 வயது வரை விளையாடினால் சச்சின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டது.

    ஆனால் கடந்த ஒரு வருடமாக அவரது ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. இந்தியாவிற்கு எதிரான நான்கு டெஸ்டில் 7 இன்னிங்சில் பேட்டிங் செய்துள்ளார். ஆனால் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இந்நிலையில் இந்தியாவிற்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால் சச்சின் தெண்டுல்கரின் சாதனையை துரத்திக் கொண்டிருந்த அச்சுறுத்தல் முடிவிற்கு வந்துள்ளது.



    ரிக்கி பாண்டிங் 13378 ரன்களுடன் 2-வது இடத்திலும், கல்லீஸ் 13289 ரன்களுடன் 3-வது இடத்திலும், ராகுல் டிராவிட் 13288 ரன்களுடன் 4-வது இடத்திலும், சங்ககரா 12400 ரன்களுடன் 5-வது இடத்திலும் உள்ளனர். கடைசி டெஸ்டில் 147 ரன்கள் அடித்தால் சங்ககராவை பின்னுக்குத் தள்ளி 5-வது இடத்தை பிடிப்பார்.
    இங்கிலாந்து அணியின் முன்னணி தொடக்க வீரராக திகழும் அலஸ்டைர் குக் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். #AlastairCook
    இங்கிலாந்து அணியின் முன்னணி தொடக்க வீரர் அலஸ்டைர் குக். 33 வயதாகும் இவர், கடந்த 2006-ம் ஆண்டு தனது 21 வயதில் இந்தியாவிற்கு எதிரான நாக்பூர் டெஸ்டில் அறிமுகமானார். அறிமுக டெஸ்டிலேயே சதம் அடித்து அசத்தினார்.

    டெஸ்ட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அலஸ்டைர் குக் இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும் பொறுப்பேற்றார். இவர் இதுவரை 160 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 32 சதங்கள், 56 அரைசதங்களுடன் 12254 ரன்கள் குவித்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் சாதனையை இவரால் முறியடிக்க முடியும் என்ற ஒரு பார்வை இருந்தது.



    ஆனால் கடந்த ஒரு வருடமாக இவரது ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. தற்போது நடைபெற்று வரும் இந்தியாவிற்கு எதிரான முதல் நான்கு டெஸ்டிலும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இந்நிலையில் இந்தியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் வருகிற 7-ந்தேதி லண்டன், கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.

    இந்த டெஸ்ட் போட்டியோடு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையோடு அலஸ்டைர் குக் விடைபெறுகிறார்.



    குக் 92 ஒருநாள் மற்றும் நான்கு டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டியில் 5 சதங்களுடன் 3204 ரன்கள் அடித்துள்ளார். டி20 போட்டியில் 61 ரன்கள் அடித்துள்ளார்.
    இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான அலஸ்டைர் குக் இந்தியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்டில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. #ENGvIND #Cook
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. நான்காவது டெஸ்ட் வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது.

    இந்த டெஸ்ட் போட்டி நடைபெறும் அதேவேளையில் அலஸ்டைர் குக்கின் மனைவிற்கு 3-வது குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தை பிறக்கும் நேரத்தில் குக் மனைவியின் அருகில் இருக்க விருப்பம் தெரிவித்தால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவருக்கு அனுமதி அளிக்கும்.



    இதனால் நான்காவது டெஸ்டில் அலஸ்டைர் குக் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. ஒரு வேளை அலஸ்டைர் குக் விளையாடாவிட்டால் தொடர்ச்சியாக 157 டெஸ்டில் விளையாடி படைத்திருக்கும் சாதனை முடிவுக்கு வரும்.
    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இடது கை பந்து பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழந்து வருகிறார். #Ashwin
    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. இந்த போட்டியில் அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா? என்ற விவாதம் எழுந்தது.

    ஆனால், குல்தீப் யாதவை பின்னுக்குத் தள்ளி அஸ்வின் ஆடும் லெவனில் இடம்பிடித்தார். எட்ஜ்பாஸ்டன் ஆடுகளம் வேகப்பந்து வீச்சு பெரிய அளவில் சாதகமாக இல்லை. இதனால் அஸ்வினை 7-வது ஓவரிலேயே இந்தியா அறிமுகப்படுத்தியது. அஸ்வினும் சிறப்பாக பந்து வீசினார்.

    9-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் குக் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் க்ளீன் போல்டானார். எப்போதுமே அஸ்வின் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசக்கூடியவர். இவர் பந்தை எதிர்கொள்ள குக் மிகவும் திணறினார். இன்றைய போட்டியின் மூலம் 8 முறை குக்கை வீழ்த்தியுள்ளார்.



    அஸ்வினை எதிர்த்து குக் 12 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 8 முறை குக்கை அஸ்வின் அவுட்டாக்கி அசத்தியுள்ளார். இரண்டு முறை போல்டு, 1 முறை ஸ்டம்பிங், 3 முறை விக்கெட் கீப்பர் கேட்ச், இரண்டு முறை பீல்டரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்துள்ளார்.

    வார்னர் 9 முறை அவுட்டாகி முதல் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியா வீரர் கோவன் 7 போட்டியில் 7 முறை ஆட்டமிழந்துள்ளார். டேரன் பிராவோ, சாமுவேல்ஸ், மோர்னே மோர்கல், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் 6 முறை ஆட்டமிழந்துள்ளனர்.



    இதில் பெரும்பாலானோர் இடது கை பேட்ஸ்மேன்கள் ஆவார்கள். இந்த புள்ளி விவரங்கள் அடிப்படையில் அஸ்வின் இடது கை பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
    எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இங்கிலாந்து முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை 1 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் சேர்த்துள்ளது. #ENGvIND #1000thTest
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் புஜாரா நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார். தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக பணிபுரிகிறார்.

    அலஸ்டைர் குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 6 ஓவர் முடிந்த நிலையிலேயே அஸ்வின் பந்து வீச அழைக்கப்பட்டார். இதற்கு நல்ல பலனும் கிடைத்தது. 9-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் அலஸ்டைர் குக் க்ளீன் போல்டானார். அவர் 13 ரன்கள் சேர்த்தார்.


    ஜென்னிங்ஸ்

    அடுத்து ஜென்னிங்ஸ் உடன் கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் இந்திய பந்து வீச்சாளர்களால் முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.


    ஜோ ரூட்

    முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 28 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்துள்ளது. ஜென்னிங்ஸ் 38 ரன்னுடனும், ஜோ ரூட் 31 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    இந்தியாவுடன் நான் கடந்த 10 ஆண்டுகள் விளையாடியதில் இதுபோன்ற வேகப்பந்து யுனிட்டை நான் பார்த்ததில்லை என்று அலஸ்டைர் குக் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடருகான இந்திய அணியில் பும்ரா, புவனேஸ்வர் குமார், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகிய ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.



    இந்த ஐந்து பேரும் மாறுபட்ட திறமைகளை கொண்டவர். இப்படிப்பட்ட ஒரு பந்து வீச்சு யுனிட்டை நான் பார்த்ததில்லை என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், தொடக்க வீரரும் ஆன அலஸ்டைர் குக் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து குக் கூறுகையில் ‘‘இந்திய அணி பலவகையான பந்து வீச்சாளர்கள், வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. வேகப்பந்து வீச்சின் பலம் எப்போதும் இல்லாத வகையில் வழக்கத்திற்கு மாறானது.



    கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக, குறிப்பாக கடைசி 10 வருடத்தில் நான் இந்திய அணியுடன் விளையாடியுள்ளேன். அவர்கள் ஐந்து முதல் ஆறு மாறுபட்ட குணம் கொண்ட வேகப்பந்து வீச்சாளர்கள் கொண்டதில்லை. என்னுடைய கடந்த கால அனுபவத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. அடுத்த 6 வாரங்களில் அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்’’ என்றார்.
    இங்கிலாந்து அணி மிகவும் கோபமான அணி, விராட் கோலிக்கு சவால் ஆகிய மந்திரத்துடன் களம் இறங்குங்கள் என்று முன்னான் வீரர் வாகன் இங்கிலாந்துக்கு அறிவுரை வழங்கியுள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது. 2011 மற்றும் 2014-ல் படுதோல்வியடைந்த இந்தியா, இந்த முறை தொடரை கைப்பற்றும் என நம்பப்படுகிறது.

    இந்நிலையில் இங்கிலாந்து கோபமான அணி, விராட் கோலிக்கு சவால் ஆகிய தார்மீக மந்திரத்துடன் களம் இறங்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து மைக்கேல் வாகன் கூறுகையில் ‘‘ஜோ ரூட் தன் அணி வீரர்களிடம், நாம் நிரூபிக்க வேண்டியுள்ளது என்று சம்மட்டியடித்தது போல், பாகிஸ்தானுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் தோற்று பிறகு ஹெட்டிங்லேயில் கோபமாக மீண்டெழுந்து வெற்றி பெற்றதுபோல் விராட் கோலி அணிக்கு எதிராக இங்கிலாந்து கோபம் மற்றும் ஆவேசமாக ஆட வேண்டும் என்று அணியிடம் வலியுறுத்த வேண்டும்.

    பாகிஸ்தானுக்கு எதிரான ஹெட்டிங்லே 2-வது டெஸ்டின் முதல் நாளில் என்ன நினைத்துக் கொண்டிருந்தீர்கள்? என்று கேட்க வேண்டும் என்று வீரர்களிடம் கூற வேண்டும். சில வேளைகளில் அணியின் விவாதத்தின்போது இப்படி செய்ய இயலாது. சில நேரங்களில் ஒவ்வொரு வீரர்களிடம் பேசும்போது அதற்கு பலன் கிடைக்கும். இதனால் ஒவ்வொரு வீரர்களிடமும் சென்று, பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் விளையாட லீட்ஸிற்கு ஏன் தீவிர நோக்கத்துடன் வந்தீர்கள்? என்று கூற வேண்டும்.

    உதை வாங்கி விட்டு விமர்சனங்களுக்கு பதில் கொடுப்பதை விடுத்து தொடக்கத்திலேயே இங்கிலாந்து இத்தகைய அணுகுமுறையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆதில் ரஷித் விவகாரம் இதற்கு உதவும்.

    இங்கிலாந்து ஒவ்வொரு போட்டியிலும் வெல்ல முடியாது. அந்த அளவுக்கு அணி நன்றாக இல்லை. ஆனால் ஒவ்வொரு வாரமும் மனநிலையில் அதே சிந்தனையை வைத்துக் கொள்ள முடியும்.

    ஜோ ரூட் 16 டெஸ்டுகளில் 50-க்கும் மேல் சராசரி வைத்துள்ளார், ஆனால் அவர் அரைசதங்களை சதமாக மாற்றத் திணறுகிறார். இதை சரிசெய்ய வேண்டும்.



    கோலியின் முன் கால் நகர்த்தலுக்கு பிராட், ஆண்டர்சன் சவால் அளிக்க வேண்டும். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே தொடர்ந்து வீசி ஒரு பந்தை ஸ்ட்ரெய்ட்டாக வீசி அவரை ஆட வைத்து அவுட் ஆக்க வேண்டும்.

    கோலியின் இடது கால் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வர வைக்கப்பட வேண்டும். அப்போதுதான் தன் ஆஃப் ஸ்டம்ப் எங்கிருக்கிறது என்ற சந்தேகம் அவருக்கு எழும். அப்போது ஆஃப் திசையில் ஸ்கொயராக ஆடும்போது எட்ஜ் வாய்ப்புகள் அதிகம்.

    ஆஃப் ஸ்டம்புக்கு ஒரு அடி வெளியே செல்லும் பந்துகளுக்கு அவர் பலவீனம் தெரிகிறது. இதனால் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் எழுச்சி பெற்று கோலியின் பிரன்ட் ஃபுட் ஆட்டத்திற்கு சவால் கொடுக்க வேண்டும்” என்றார்.
    இந்தியாவிற்கு எதிரான டெஸ்டிற்கு தயாராகும் இங்கிலாந்தின் மூத்த வீரர்களான ஆண்டர்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன் யோ-யோ டெஸ்டில் அசத்தியுள்ளனர். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை பர்மிங்காமில் தொடங்குகிறது. இதற்கு ஆயத்தம் ஆகும் வகையில் இங்கிலாந்து வீரர்கள் யோ-யோ டெஸ்டில் கலந்து கொண்டார்கள்.

    இளம் வீரர்களான பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், ஜோஸ் பட்லர் ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்கள். ஆனால், 33 வயதிற்கு மேலான குக், ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் திணறுவார்கள் என்று எதிர்பார்த்தனர்.



    ஆனால், அலஸ்டைர் குக் யோ-யோ டெஸ்டில் அசால்டாக பாஸ் ஆனார். அதேபோல் ஜேம்ஸ் ஆண்டர்சனும் தேர்ச்சி பெற்றார். இந்திய அணி வீரர்கள் 16.1 புள்ளி பெற்றாலே பாஸ். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் 19 புள்ளிகள் பெற வேண்டும்.

    யோ-யோ டெஸ்டிற்கு முன் அலஸ்டைர் குக் 3 கி.மீட்டர் தூரம் ஓடியதாக தெரிகிறது.
    இந்தியா ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் 180 ரன்கள் குவித்து இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனக்கான இடத்தை ரிஜிஸ்டர் செய்தார் அலஸ்டைர் குக் #INDA #Cook
    இந்தியா ‘ஏ’ அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. நேற்று தொடங்கிய நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது.

    இங்கிலாந்து லயன்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. பர்ன்ஸ், அலஸ்டைர் குக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அலஸ்டைர் குக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். அடுத்து வந்த கப்பின்ஸ் 73 ரன்னும், தாவித் மலன் அரைசதமும் அடிக்க இங்கிலாந்து லயன்ஸ் நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்தது.

    அலஸ்டைர் குக் 154 ரன்னுடனும், தாவித் மலன் 59 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. அலஸ்டைர் குக் 180 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தாவித் மலன் 74 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இங்கிலாந்து லயன்ஸ் 112.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 380 ரன்கள் குவித்து முதல இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியுள்ளது.



    33 வயதாகும் அலஸ்டைர் குக் இங்கிலாந்து அணிக்காக நீண்டகாலமாக விளையாடி வருகிறார். சமீப காலமாக அவரது ஆட்டம் சிறப்பானதாக அமையவில்லை. ஆஷஸ் தொடரில் 0-4 என இங்கிலாந்து தோல்வியடைந்தபோது, மெல்போர்ன் டெஸ்டில் மட்டும் இரட்டை சதம் அடித்தார். இந்த போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.

    சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு டெஸ்டில் விளையாடியது. அப்போதும் பெரிய அளவில் ஸ்கோர் அடிக்கவில்லை. தற்போது இந்திய ‘ஏ’ அணிக்கெதிராக 180 ரன்கள் குவித்ததன் மூலம் இந்தியாவிற்கு எதிரான இங்கிலாந்து அணியில் தனது பெயரை ரிஜிஸ்டர் செய்துள்ளார்.
    தொடர்ச்சியாக 153 டெஸ்டில் பங்கேற்று இங்கிலாந்து தொடக்க வீரர் அலஸ்டைர் குக் ஆலன் பார்டர் சாதனையை சமன் செய்துள்ளார். #ENGvPAK
    இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் அலஸ்டைர் குக். இடது கை பேட்ஸ்மேன் ஆன இவர் அதிக ரன்கள் அடித்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இன்று இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இடம் பிடித்ததன் மூலம் அலஸ்டைர் குக், தொடர்ச்சியாக 153 டெஸ்ட் விளையாடிய வீரர் என்ற ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஆலன் பார்டர் சாதனையை சமன் செய்துள்ளார். இந்தியாவிற்கு எதிராக 2006-ல் அலஸ்டைர் குக் அறிமுகமானார். இந்த டெஸ்டில் சதம் அடித்து அசத்தினார். அதற்கு அடுத்த டெஸ்டில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் விளையாடவில்லை.



    தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் அவரின் 155-வது டெஸ்ட். அதற்குப்பிறகு தொடர்ச்சியாக 153 டெஸ்டில் விளையாடியுள்ளார். 155 டெஸ்டில் 12078 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 294 ரன்னாகும்.

    இடது கை பேட்ஸ்மேன் ஆன ஆலன் பார்டர் 156 டெஸ்டில் 27 சதத்துடன் 11174 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×