search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agricultural Products"

    • முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 14,272 தேங்காய்கள் வரத்து இருந்தன.
    • தேங்காய் கிலோ ரூ.20.75 முதல் ரூ.24.05 வரை விற்பனையானது.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 7.10 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனையாயின.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 14,272 தேங்காய்கள் வரத்து இருந்தன.

    இவற்றின் எடை 5,706 கிலோ.தேங்காய் கிலோ ரூ.20.75 முதல் ரூ.24.05 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.23.45.81 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. எடை 1,987 கிலோ. கொப்பரை கிலோ ரூ.68.70 முதல் ரூ.81.70 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.77.35.ஏலத்தில் மொத்தம் 109 விவசாயிகள், 12 வணிகா்கள் பங்கேற்றனா்.ஒட்டுமொத்த விற்பனைத்தொகை ரூ.2.65 லட்சம் என விற்பனைக்கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    • முதல் கட்டமாக 35 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • அதிகாலை4 மணி முதல்7 மணி வரை உற்பத்தியாளர்கள் தங்கள் வேளாண் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் செயல்படுகின்றன.

    திருப்பூர் :

    திருப்பூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் சார்பில், வேளாண் உற்பத்தி பொருட்கள் விற்பனை வளாகம் துவங்கப்பட்டுள்ளது.வியாபாரிகள், பொதுமக்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இச்சங்கம் சார்பில் திருப்பூர் புஷ்பா சந்திப்பில் உள்ள சங்க வளாகத்தில் விவசாய குழுக்கள், வேளாண் பொருள் உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் வகையில் கூட்டுறவு சந்தை என்ற பெயரில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதில் முதல் கட்டமாக 35 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அதிகாலை4 மணி முதல்7 மணி வரை உற்பத்தியாளர்கள் தங்கள் வேளாண் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் வகையில் கடைகள் செயல்படுகின்றன.அதன் பின்னர் விற்பனைக்கு வைத்துள்ள பொருட்களை சங்க பிரதிநிதிகள் காலை 9 மணி வரை விற்பனை செய்வர். அதன் தொகை, உற்பத்தியாளர் வங்கி கணக்கில் சேர்க்கப்படும்.

    இதில் காய்கறி வகைகள், செக்கு எண்ணெய் வகைகள், நாட்டு சர்க்கரை, வெல்லம், சிறு தானியங்கள் உள்ளிட்ட பல்வேறு வேளாண் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.இந்த கூட்டுறவு சந்தை முறையை விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கூட்டுறவு துறை அழைப்பு விடுத்துள்ளது.

    • 15 ஆயிரத்து 908 தேங்காய்களும் கொண்டு வரப்பட்டு டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது.
    • கடந்த 14 வார காலமாக ரூ.90-க்கும் கீழே விலை சரிந்து ஏலம் விடப்பட்டு வருகிறது.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளை பொருட்களின் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 17 சிவப்பு ரகம் அடங்கிய எள் மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் டெண்டர் முறையில் நடைபெற்ற ஏலத்தில் சிவப்பு ரக எள் அதிகபட்சமாக ரூ.115.09-க்கும், குறைந்தபட்சமாக ரூ.92.94-க்கும் ஏலம் விடப்பட்டது.

    மேலும் 15 ஆயி–ரத்து 908 தேங்காய்களும் கொண்டு வரப்பட்டு டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது. இதில் 1 கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.26.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.20.15-க்கும் ஏலம் விடப்பட்டது. மேலும் 44 தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் 1 கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக ரூ.85.79-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.57.70-க்கும் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது.

    மேலும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் 9 சிவப்பு ரக எள் மூட்டைகள் குறைவாகவும், 5 ஆயிரத்து 365 தேங்காய்கள் கூடுதலாகவும், 22 தேங்காய் பருப்பு மூட்டைகள் குறைவாகவும் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதில் எள் ஒரு கிலோவிற்கு ரூ.11.80-ம், தேங்காய் 1 கிலோவிற்கு கடந்த வாரத்தை விட இந்த வாரம் 35 பைசாவும், தேங்காய் பருப்பு 1 கிலோவிற்கு ரூ.1.39-ம் கூடுதலாகவே விவசாயிகளுக்கு கிடைத்தது. மேலும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தேங்காய் பருப்பு விலை கிலோ ரூ.90-ஐ தாண்டி ஏலம் விடப்பட்டு வந்த நிலையில் கடந்த 14 வார காலமாக ரூ.90-க்கும் கீழே விலை சரிந்து ஏலம் விடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு, எள் மூட்டைகள் 9¼ டன் அளவில் மொத்தம் ரூ‌.3 லட்சத்து 65 ஆயிரத்து 426-க்கு வேளாண் விளைபொருட்கள் ஏலம் விடப்பட்டது.இந்த தகவலை முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் கே.தங்கவேல் தெரிவித்தார்.

    விவசாய உற்பத்தி பொருட்கள் கொள்முதலில் மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை போதுமானதாக இல்லை என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவநாமிநாதன் தெரிவித்துள்ளார். #MSPHike ##MSSwaminathan
    சென்னை:

    வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவநாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நெல் மற்றும் விவசாய உற்பத்தி பொருட்களுக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது. இது விவசாய நெருக்கடியை குறைக்கும்.

    மத்திய அமைச்சரவை விவசாயிகளின் பொருளாதார பிரச்சனைகளை அங்கீகரித்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான மசோதாக்களை அறிவித்துள்ளது.

    விவசாயிகளுக்கு சந்தை ஆதரவு தேவை என்பதால், அந்தக் கொள்கை மூன்று ஒருங்கிணைந்த கூறுகளைக் கொண்டிருக்க வேண்டும்.

    குறைந்தபட்ச ஆதரவு விலை. விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பெறுவதை உறுதி செய்ய சாதகமான கொள்முதல் கொள்கையை கொண்டு வரவேண்டும். உணவுப் பாதுகாப்பு சட்டம், பள்ளி மதிய உணவுத் திட்டம் முதலியன திறம்படச் செயல்படுத்துவதன் மூலம் நுகர்வு அதிகரிக்கும்.

    அரசு வெளியிட்ட அறிவிப்பு பின்வரும் தாக்கங்களைக் கொண்டுள்ளது.

    குறைந்தபட்ச ஆதரவு விலையானது முழுமையான விதிமுறைகளில் அதிகமாக உள்ளது. ஆனால் பரிந்துரைக்கப்பட்ட அளவிற்கு கீழே உள்ளது.

    அதிகபட்ச எம்.எஸ்.பிக்கள் (குறைந்தபட்ச ஆதரவு விலை) வரவேற்கப்படுகின்றன. ஆனால் கோதுமை, அரிசி ஆகியவற்றில் தவிர்த்து, மசோதாவில் பொது மக்களின் கொள்முதல் எம்.எஸ்.பி. (குறைந்த பட்ச ஆதரவு விலை) போதுமானதாக இல்லை.

    கொள்முதல் எதிர்பார்ப்பில் அதிக பருப்புகளை பயிரிட்ட விவசாயிகளின் அனுபவத்தில் இருந்து இது தெளிவாகிறது. ஆனால் சந்தை விலைகளில் ஒரு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

    உண்மையில் பல பயிர்களுக்கு உளுந்து, மைதா, துவரம் பருப்பு, சோளம், நிலக்கடலை, சோயாபீன், கடுகு, எண்ணெய் வித்து பயிரான ஆகியவை பருவ மழைக்கு முந்தைய சராசரி மார்க்கெட்டின் விலையானது அதனுடன் தொடர்புடைய குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் கீழே இருந்தது.

    விவசாயிகளுக்கு தேசிய ஆணையம் பரிந்துரை செய்யப்பட்ட பிற நடவடிக்கைகளும், வருவாய் நிலைத்தன்மையும், மொத்த வருமானமும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். நிலத்தடி நீர் சுரண்டல் மற்றும் சுற்றுச்சூழல் அழிவு நடவடிக்கைகள் குறைவாக இருப்பதை உறுதி செய்ய பொருத்தமான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.

    ஆக, அதிகமான குறைந்தபட்ச ஆதரவு விலைகளை அறிவிப்பது, விவசாய நெருக்கடியை மீறுவதற்கான செயல்முறையின் முதல் படியாகும். குறிப்பாக கொள்முதல் மற்றும் சேமிப்பகத்தின் அடிப்படையில் மேலே குறிப்பிட்டபடி இதில் மேலும் அரசு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #MSPHike ##MSSwaminathan
    ×