search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minimum Support Price"

    • பருப்பு வகைக்கு குவிண்டாலுக்கு ரூ.500 ஆதரவு விலை உயர்வு.
    • குங்குமப்பூ குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.209 அதிகரிப்பு.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் 2023-24ம் ஆண்டுக்கான சந்தைப் பருவத்திற்கு அனைத்து ரபி பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியாகும் விலையை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பருப்பு வகைக்கு குவிண்டாலுக்கு ரூ.500-ம், கடுகுக்கு குவிண்டாலுக்கு ரூ.400-ம் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. குங்குமப்பூ குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.209 அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மேலும் கோதுமை, உளுந்து, கொள்ளு ஆகியவற்றுக்கு குவிண்டாலுக்கு ரூ.110-ம், பயறு வகைகளுக்கு ரூ.105 ம், பார்லிக்கு குவிண்டாலுக்கு ரூ.100-ம் குறைந்த பட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கான கூலி, எந்திரக் கருவிகள், நிலத்திற்கு வழங்கப்படும் குத்தகை, விதைகள், உரங்கள், பாசன கட்டணம், பம்ப் செட்டுக்கு பயன்படுத்தும் டீசல் அல்லது மின்சாரம் போன்ற அனைத்து செலவுகளையும் உள்ளடக்கி குறைந்த பட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களை பார்த்து காங்கிரஸ் கட்சியினர் தூக்கத்தை இழந்து தவிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
    சண்டிகர் :

     பஞ்சாப் மாநிலம், முக்த்சர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டதில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    ’விவசாய பொருட்களுக்கான அடிப்படை விலையை மத்திய அரசு உயர்த்திய பிறகு விவசாய சகோதர்கள் இப்போது நிம்மதியாக வாழலாம், அதிகமாக வருமானம் ஈட்டலாம், அமைதியாக தூங்கலாம். ஆனால், இந்த மக்கள் நலதிட்டங்களை பார்த்து காங்கிரஸ் கட்சியினர் தூக்கத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

    தேசத்தின் ஆன்மாவான விவசாயிகள், இத்தனை வருடங்களாக விவசாயத்தில் முதலீடு செய்த தொகையில் இருந்து 10 சதவிகதம் மட்டுமே கூடுதலாக வருமானம் கிடைத்துள்ளது. இதற்கான காரணங்கள் எனக்கு தெரியும் இவ்வளவு வருடங்களாக காங்கிரஸ் பொய்களை மட்டுமே கூறி விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது.

    வருகிற 2022-ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்தும் வகையில் அரசு முயற்சி மேற்கொண்டுவருகிறது’.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    விவசாய உற்பத்தி பொருட்கள் கொள்முதலில் மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை போதுமானதாக இல்லை என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவநாமிநாதன் தெரிவித்துள்ளார். #MSPHike ##MSSwaminathan
    சென்னை:

    வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவநாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நெல் மற்றும் விவசாய உற்பத்தி பொருட்களுக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது. இது விவசாய நெருக்கடியை குறைக்கும்.

    மத்திய அமைச்சரவை விவசாயிகளின் பொருளாதார பிரச்சனைகளை அங்கீகரித்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான மசோதாக்களை அறிவித்துள்ளது.

    விவசாயிகளுக்கு சந்தை ஆதரவு தேவை என்பதால், அந்தக் கொள்கை மூன்று ஒருங்கிணைந்த கூறுகளைக் கொண்டிருக்க வேண்டும்.

    குறைந்தபட்ச ஆதரவு விலை. விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பெறுவதை உறுதி செய்ய சாதகமான கொள்முதல் கொள்கையை கொண்டு வரவேண்டும். உணவுப் பாதுகாப்பு சட்டம், பள்ளி மதிய உணவுத் திட்டம் முதலியன திறம்படச் செயல்படுத்துவதன் மூலம் நுகர்வு அதிகரிக்கும்.

    அரசு வெளியிட்ட அறிவிப்பு பின்வரும் தாக்கங்களைக் கொண்டுள்ளது.

    குறைந்தபட்ச ஆதரவு விலையானது முழுமையான விதிமுறைகளில் அதிகமாக உள்ளது. ஆனால் பரிந்துரைக்கப்பட்ட அளவிற்கு கீழே உள்ளது.

    அதிகபட்ச எம்.எஸ்.பிக்கள் (குறைந்தபட்ச ஆதரவு விலை) வரவேற்கப்படுகின்றன. ஆனால் கோதுமை, அரிசி ஆகியவற்றில் தவிர்த்து, மசோதாவில் பொது மக்களின் கொள்முதல் எம்.எஸ்.பி. (குறைந்த பட்ச ஆதரவு விலை) போதுமானதாக இல்லை.

    கொள்முதல் எதிர்பார்ப்பில் அதிக பருப்புகளை பயிரிட்ட விவசாயிகளின் அனுபவத்தில் இருந்து இது தெளிவாகிறது. ஆனால் சந்தை விலைகளில் ஒரு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

    உண்மையில் பல பயிர்களுக்கு உளுந்து, மைதா, துவரம் பருப்பு, சோளம், நிலக்கடலை, சோயாபீன், கடுகு, எண்ணெய் வித்து பயிரான ஆகியவை பருவ மழைக்கு முந்தைய சராசரி மார்க்கெட்டின் விலையானது அதனுடன் தொடர்புடைய குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் கீழே இருந்தது.

    விவசாயிகளுக்கு தேசிய ஆணையம் பரிந்துரை செய்யப்பட்ட பிற நடவடிக்கைகளும், வருவாய் நிலைத்தன்மையும், மொத்த வருமானமும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். நிலத்தடி நீர் சுரண்டல் மற்றும் சுற்றுச்சூழல் அழிவு நடவடிக்கைகள் குறைவாக இருப்பதை உறுதி செய்ய பொருத்தமான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.

    ஆக, அதிகமான குறைந்தபட்ச ஆதரவு விலைகளை அறிவிப்பது, விவசாய நெருக்கடியை மீறுவதற்கான செயல்முறையின் முதல் படியாகும். குறிப்பாக கொள்முதல் மற்றும் சேமிப்பகத்தின் அடிப்படையில் மேலே குறிப்பிட்டபடி இதில் மேலும் அரசு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #MSPHike ##MSSwaminathan
    ×