search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agnipath scheme"

    • விமானப்படையில் பணி நியமனத்துக்கான முன்பதிவு நடவடிக்கை கடந்த 24-ந்தேதி தொடங்கியது.
    • விண்ணப்பிக்கும் கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.

    புதுடெல்லி

    முப்படைகளில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறையும் வெடித்தன. ஆனாலும் இந்த திட்டத்தை திரும்பப்பெற முடியாது என அரசு உறுதியாக தெரிவித்தது.

    அதேநேரம் இந்த திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை முப்படைகளும் தொடங்கி உள்ளன. குறிப்பாக விமானப்படையில் பணி நியமனத்துக்கான முன்பதிவு நடவடிக்கை கடந்த 24-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஏராளமான இளைஞர்கள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தனர். இத்திட்டத்தின் கீழ் சேருவதற்காக தகுதியானவர்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 24ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.

    அந்தவகையில் "அக்னிபாத்" ஆட்சேர்ப்பு திட்டத்தின் கீழ் 7.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. கடந்த காலத்தில் வந்த 6,31,528 விண்ணப்பங்களுடன் ஒப்பிடுகையில், இந்த முறை மிக அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். அதாவது இந்த முறை 7,49,899 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

    • லக்னோவில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் மாநில அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் சஞ்சய் சிங் பேட்டியளித்தார்.
    • நாட்டைக் காக்க பணத்திற்காக அழ வேண்டாம் எனவும் சிங் கூறியுள்ளார்.

    மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, எதிர்க்கட்சியினர், இளைஞர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

    இந்நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக அடையாளப் போராட்டமாக ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் ரூ.420க்கான காசோலைகள் மற்றும் வரைவோலைகளை பிரதமர் மோடிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். இதனை அக்கட்சியினர் உத்தரப் பிரதேச பொறுப்பாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி இந்திய ராணுவத்தை ஏமாற்ற வேண்டாம் என்றும் நாட்டைக் காக்க பணத்திற்காக அழ வேண்டாம் எனவும் சிங் கூறியுள்ளார்.

    இதுகுறித்து லக்னோவில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் மாநில அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் சிங் கூறியதாவது:-

    மோடி அரசின் கொள்கைகளுக்கு எதிராக உ.பி முழுவதும் நன்கொடை அளிக்க இளைஞர்கள் மற்றும் மாணவர் பிரிவு உறுப்பினர்களை வலியுறுத்தப்படுகிறது. மோடி அரசுக்கு ரூ.420 காசோலைகள் மற்றும் டிமாண்ட் டிராப்ட் அனுப்புவதன் மூலம், அடையாளப் போராட்டத்தை பதிவு செய்ய கட்சி முடிவு செய்துள்ளது. ரதமர் மோடி இந்திய ராணுவத்தை ஏமாற்ற வேண்டாம் என்றும் நாட்டைக் காக்க பணத்திற்காக அழ வேண்டாம்.

    சில எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் பாஜகவின் கைப்பாவையாக மாறிவிட்டது. உதய்பூரில் தையல்காரரான கன்ஹையா லால் கொல்லப்பட்டதில் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை துணை அமைப்பான ராஷ்ட்ரிய முஸ்லீம் மஞ்ச் ஆகியவற்றின் பங்கு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விமானப்படையில் பணி நியமனத்துக்கான முன்பதிவு கடந்த 24-ந்தேதி தொடங்கியது.
    • வருகிற 5-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    புதுடெல்லி:

    முப்படைகளில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறையும் வெடித்தன.

    ஆனாலும் இந்த திட்டத்தை திரும்பப்பெற முடியாது என அரசு உறுதியாக தெரிவித்தது. அதேநேரம் இந்த திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை முப்படைகளும் தொடங்கி உள்ளன. குறிப்பாக விமானப்படையில் பணி நியமனத்துக்கான முன்பதிவு நடவடிக்கை கடந்த 24-ந்தேதி தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து ஏராளமான இளைஞர்கள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வருகின்றனர். அந்தவகையில் கடந்த 7 நாட்களில் மட்டும் 2.72 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக விமானப்படை தெரிவித்து உள்ளது.

    வருகிற 5-ந்தேதி வரை முன்பதிவுக்கான கால அவகாசம் இருப்பதால், மேலும் அதிக இளைஞர்கள் விண்ணப்பிப்பார்கள் என விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

    • விமானப்படைக்கான ஆள்தேர்வு பணி கடந்த 24-ந் தேதி தொடங்கியது.
    • விண்ணப்பம் செய்ய ஜூலை 5-ந் தேதி கடைசிநாள் ஆகும்.

    புதுடெல்லி

    முப்படைகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய 'அக்னிபத்' திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. வடமாநிலங்களில் போராட்டம் வெடித்தபோதிலும், திட்டம் வாபஸ் பெறப்படாது என்று கூறிவிட்டது. ராணுவம், விமானப்படை, கடற்படை என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக ஆள்தேர்வு நடைபெறுகிறது.

    விமானப்படைக்கான ஆள்தேர்வு பணி கடந்த 24-ந்தேதி தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணையதளம், அன்று காலை 10 மணி முதல் செயல்பட தொடங்கியது.

    நேற்று காலை 10.30 மணி நிலவரப்படி, 94 ஆயிரத்து 281 பேர் விண்ணப்பித்துள்ளதாக ராணுவ அமைச்சக செய்தித்தொடர்பாளர் பாரத் பூஷண் பாபு தெரிவித்தார். விண்ணப்பம் செய்ய ஜூலை 5-ந் தேதி கடைசிநாள் ஆகும்.

    • அக்னிபாத் திட்டம் எதிர்கால வீரர்களுக்கு எதிரானது.
    • இந்த திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    பாக்பத் :

    முப்படைகளில் ஆள் சேர்க்கும் அக்னிபாத் திட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் மேகாலயா கவர்னர் சத்யபால் மாலிக்கும் அக்னிபாத் திட்டம் தொடர்பாக மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'எதிர்கால போர் வீரர்களான இளைஞர்களுக்கு அக்னிபாத் திட்டத்தில் 6 மாதம் பயிற்சியும், 6 மாதம் விடுப்பும் கிடைக்கிறது. மீதமுள்ள 3 ஆண்டுகள் பணி முடித்து ஓய்வூதியமும் இன்றி வீடு திரும்பும் அவர்களுக்கு திருமண வரன்கள் எதுவும் அமையாது. அந்தவகையில் அக்னிபாத் திட்டம் எதிர்கால வீரர்களுக்கு எதிரானது. அவர்களின் நம்பிக்கை மீதான மோசடி இது' என சாடினார்.

    எனவே ஒப்பந்த அடிப்படையில் ஆள்தேர்வு செய்யும் இந்த திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

    முன்னதாக, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் கவர்னர் சத்யபால் மாலிக் போர்க்கொடி உயர்த்தி அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 5-ந்தேதி கடைசி நாளாகும்.
    • ஆன்லைன் தேர்வு வரும் ஜூலை 24ஆம் தேதி நடத்தப்படும்.

    புதுடெல்லி:

    முப்படையில் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் 'அக்னிபாத்' திட்டத்தை மத்திய அரசு கடந்த 14-ந்தேதி அறிமுகம் செய்தது.

    இந்த திட்டத்தின் கீழ் இளைஞர்களை சேர்க்கும் பணிகளில் முப்படைகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த 24-ந்தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களில் மொத்தம் 56,960 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த தகவல் இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 5-ந்தேதி கடைசி நாளாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய விமானப் படையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://careerindianairforce.cdac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களைளுக்கு ஆன்லைன் தேர்வு வரும் ஜூலை 24ஆம் தேதி நடத்தப்படும் என்றும் இந்திய விமானப் படை அறிவித்துள்ளது.

    • காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
    • கேப்டன் பானா சிங்கின் ட்வீட்டின் ஸ்கிரீன்ஷாட்டை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேசும் பகிர்ந்துள்ளார்.

    புதுடெல்லி:

    ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்த திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

    அவ்வகையில், அக்னிபாத் திட்டத்தை விமர்சித்து பரம்வீர் சக்ரா விருது பெற்ற கேப்டன் பானா சிங் வெளியிட்ட டுவிட்டர் பதிவை ராகுல் காந்தி இன்று பகிர்ந்துள்ளார்.

    ஒரு பக்கம் நாட்டின் பரம்வீரும், மறுபக்கம் பிரதமரின் ஆணவமும் சர்வாதிகாரமும் உள்ளது. புதிய இந்தியாவில் நண்பர்கள் சொல்வது மட்டும் கேட்கப்படுமே தவிர, நாட்டின் ஹீரோக்களின் கருத்துக்கள் அல்ல என ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

    கேப்டன் பானா சிங்கின் ட்வீட்டின் ஸ்கிரீன்ஷாட்டை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேசும் பகிர்ந்துள்ளார்.

    • 17 அரை வயது முதல் 21 வயது வரையுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
    • ஜூலை 5-ம் தேதி வரை அக்னிபாத் திட்டத்தில் சேருவதற்கு கால அவகாசம் உள்ளது.

    புதுடெல்லி :

    இந்திய ராணுவத்தில் முப்படைகளிலும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற அக்னிபாத் என்ற திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியது. ராணுவத்தில் 4 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் பணியாற்ற, 17 அரை வயது முதல் 21 வயது வரையுள்ள இளைஞர்கள் ஜூன் 24 முதல் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது.

    இதன்படி, விமானப்படை மற்றும் கடற்படையில் பணியாற்ற விருப்பம் உள்ள இளைஞர்கள், இன்று முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காலை 10 மணிக்கு விமானப்படை இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும், ஜூலை 5-ம் தேதி வரை அக்னிபாத் திட்டத்தில் சேருவதற்கு கால அவகாசம் உள்ளது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

    1999ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் தேதி முதல் 2005ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி வரையிலான கால கட்டத்திற்குள் பிறந்தவர்கள் அக்னி வீரர்களாகும் தகுதி படைத்தவர்கள் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

    • அக்னிபாத் திட்டத்திற்கு வட மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மத்திய அரசு ராணுவத்தின் பலத்தை அதிகப்படுத்துவதை விட்டுவிட்டு பலவீனப்படுத்தி வருகிறது என ராகுல் காந்தி கூறினார்.

    புதுடெல்லி:

    ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் சேர்ப்பதற்கு அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். அதன்பின் ராகுல் காந்தி பேசியதாவது:

    நாட்டில் மிகப்பெரிய பிரச்னையாக வேலைவாய்ப்பு உருவாகி உள்ளது. ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய பணிகளில் சேர வேண்டும் என்று கனவோடு தன்னை தயார்படுத்தி கொண்டு வந்த இளைஞர்களின் கனவை மத்திய அரசு உடைத்துள்ளது.

    மத்திய அரசு முதலில் ஒரே பதவி மற்றும் ஒரே ஓய்வூதியம் குறித்துப் பேசி வந்தனர். தற்போது பதவியும் இல்லை. ஓய்வூதியமும் இல்லை என்று அறிவித்துள்ளது. ராணுவத்தின் பலத்தை அதிகப்படுத்துவதை விட்டுவிட்டு மத்திய அரசு அதனை பலவீனப்படுத்தி வருகிறது.

    வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்றுக் கொள்ளும் என நான் கூறினேன். அதேபோல் மத்திய அரசு வேளாண் சட்டத்தை திரும்ப பெற்றது. அதைபோல அக்னிபாத் திட்டத்தையும் மத்திய அரசு திரும்ப பெறும் என தெரிவித்தார்.

    • விளாத்திகுளம் அருகே உள்ள தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு சார்பில் விரைவில் வீடு கட்டி தரப்படவுள்ளது.
    • அக்னிபாத் திட்டம் என்பது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு நிலையை உருவாக்குவதாக சொல்லி, நெருப்பில் நடக்கின்ற மாதிரியான சூழலை உருவாக்கி உள்ளனர்.

    எட்டயபுரம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு சார்பில் விரைவில் வீடு கட்டி தரப்படவுள்ளது.

    இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதால் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சமூக நலன், மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் தாப்பாத்தி முகாமில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்‌.

    பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் ஆலோசனைப்படி தமிழகம் முழுவதும் 106 இலங்கை மறுவாழ்வு முகாமில் வசிக்கக் கூடிய மக்களுக்கு புதியதாக வீடு கட்டித்தரும் திட்டத்தினை ரூ. 317 கோடியில் அறிவித்துள்ளார். முதற்கட்டமாக தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி முகாமில் உள்ள மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    நாட்டின் முதுகெலும்பு விவசாயம். அந்த விவசாயிகள் கருத்துக்கு முரண்பட்டதாக வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தனர். ஆண்டுக்கணக்கில் விவசாயிகள் ஒரே இடத்தில் தொடர்ந்து போராடினார்கள். பல விவசாயிகள் உயிர் நீத்தனர். அதன் பின்னர் தான் ஒன்றி அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது.

    அக்னிபாத் திட்டம் என்பது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு நிலையை உருவாக்குவதாக சொல்லி, நெருப்பில் நடக்கின்ற மாதிரியான சூழலை உருவாக்கி உள்ளனர்.

    இத்திட்டத்திற்கு எதிராக விவரமறிந்த இளைஞர்கள் போராடி வருகின்றனர்.விவரம் அறியாத இளைஞர்கள் போராடவில்லை.

    மாணவர்கள் நினைத்தால் முடித்து காட்டுவார்கள் என்று தமிழகத்தில் ஏற்கனவே ஒரு வரலாறு படைத்தது இருக்கிறார்கள். அது இந்தியா அளவில் படைப்பதற்காக மாணவர்கள் மத்தியில் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    • நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அனைவரும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
    • காவிரியில் அணை கட்டக்கூடாது என மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    இந்திய சுதந்திரத்தின 75-வது ஆண்டு கொண்டாட்டங்களையொட்டி புதுவையில் சிறப்பு தூய்மை பணிகள் நடந்து வருகிறது.

    இன்று காலை கவர்னர் தமிழிசை புதுவை பாரதி வீதி மற்றும் நேரு வீதி பகுதிகளில் நடைபெறும் தூய்மை பணிகளை பார்வையிட்டு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். தொடர்ந்து லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் பள்ளி முதல் விமான நிலையம் வரையிலும் நடைபெறும் பணிகளை பார்வையிட்டார்.

    இதைத்தொடர்ந்து வில்லியனூர் பைபாஸ் சாலை, வீராம்பட்டினம் கடற்கரை பகுதி, பாகூர் கன்னியகோவில் சாலை சந்திப்பு பகுதிகளில் தூய்மை பணிகளை பார்வையிட்டு பணிகளை வேகப்படுத்தினார். ஆய்வின்போது கவர்னர் தமிழிசை கூறியதாவது:-

    புதுவையில் நேற்று முதல் சுத்தப்படுத்தும் பணியை தொடங்கி உள்ளோம். பல்வேறு இடங்களில் உள்ள பிரச்சினைகள் குறித்து என்னிடம் புகார் தெரிவித்தனர்.

    இதை அரசு மட்டுமே செய்யக்கூடிய பணி அல்ல. அனைவரும் புதுவையை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்களின் பங்களிப்பு அவசியம்.

    கடற்கரையில் சுத்தப்படுத்தும் பணியின்போது சாப்பிட்ட பொருட்களின் குப்பைகள்தான் அதிகமாக இருந்தது. சாப்பிடுவது எவ்வளவு முக்கியமோ? அதேபோல குப்பைகளையும் குப்பை தொட்டியில் போடுவதும் முக்கியம். பிரதமர் தூய்மை இந்தியா திட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறார்.

    அதில் நமது பங்களிப்பும் அவசியம் இருக்க வேண்டும்.

    நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அனைவரும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இதுகுறித்து இன்று மாலை ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட உள்ளது.

    தடுப்பூசி போடாதவர்கள், குழந்தைகள், பூஸ்டர் தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும். நாம் கட்டாயப்படுத்தி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்துவது தேவையில்லை. 2 ஆண்டில் கொரோனா பாதிப்பு எப்படி இருந்தது? என்பதை நாம் கண்கூடாக கண்டுள்ளோம்.

    எனவே, அனைவரும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய மார்க்கெட் கட்டப்பட உள்ளது. வியாபாரிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு, அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். சாலையோரத்தில் கடைகள் அகற்றப்படும்.

    காவிரியில் அணை கட்டக்கூடாது என மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தெளிவாக ஆலோசனை நடத்தப்பட வேண்டும்.

    அக்னிபாத் திட்டம் குறித்து முப்படை ராணுவ தளபதிகள் நாட்டுக்கு இளைஞர் படை தேவையாக உள்ளதை கருத்தில் கொண்டு நாட்டின் பாதுகாப்பு கருதியும் ஓராண்டாக திட்டமிட்டு வடிவமைத்தனர்.

    இதனால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். ராணுவ வீரர்கள் போல அக்னி வீரர்கள் தேவை எனவும் தெரிவித்துள்ளனர். எனவே, இதை அரசியலாக்குவதை விட, நாட்டின் பாதுகாப்பு கருதி அரசு முடிவெடுக்கிறது என்ற எண்ணத்தோடு அணுக வேண்டும் என்பதே என் கருத்து.

    கவர்னர் மாளிகை மக்கள் எளிதில் அணுகும் மாளிகையாகவே உள்ளது. அதிகளவு தடுப்புகள் அகற்றப்பட்டுவிட்டது. கடற்கரை சாலையில் உள்ள தடுப்புகள் மக்களின் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    லாஸ்பேட்டையில் தூய்மைப்பணியை பார்வையிட சென்ற கவர்னர் தமிழிசை தேசிய மாணவர் படை தலைமையகத்தையும் பார்வையிட்டார்.

    அப்போது துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டிருந்த என்.சி.சி. மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாட்டில் கொண்டு வரப்பட்டுள்ள அனைத்து சீர்திருத்த நடவடிக்கைகளையும் எதிர்க்கட்சிகள் கைவிட முயல்கின்றன.
    • ஆயுதப்படைகளை சீர்திருத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் முயன்று வருகிறோம்.

    மத்திய அரசின் அக்னிபாத் பாதுகாப்பு ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து மத்திய அமைச்சரும், முன்னாள் ராணுவ தளபதியுமான வி.கே.சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

    சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சிங் நாட்டில் கொண்டு வரப்பட்டுள்ள அனைத்து சீர்திருத்த நடவடிக்கைகளையும் எதிர்க்கட்சிகள் கைவிட முயல்கின்றன என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேற்கொண்டு அவர் கூறியதாவது:-

    அக்னிபாத் திட்டத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. காங்கிரசால் வெளியிடப்பட்ட அறிக்கைகளைப் பாருங்கள். நான் இப்படிப் பேசியதும், டுவிட்டரில் பதிவிட்டதும் காங்கிரசால் ட்ரோல் செய்யப்பட்டேன். யார் ட்ரோல் செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.

    நாம் எப்போது எந்த சீர்திருத்த நடவடிக்கைகளை கொண்டு வர விரும்புகிறோமோ, அப்போதெல்லாம் மக்கள் அதை கீழே இழுக்க முயற்சிக்கிறார்கள். ஏனென்றால் அவர்களால் ஆட்சியில் இருந்தபோதெல்லாம் எந்த சீர்திருத்தமும் செய்ய முடியவில்லை. ஆயுதப்படைகளை சீர்திருத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் முயன்று வருகிறோம்.

    எங்களுக்கு எந்தப் பயமும் இல்லை. ஓய்வெடுக்க அனைத்து அரசியல் எதிர்ப்பாளர்களும் தொடர்ந்து அச்சத்துடன் இருப்பார்கள். அதைக் கொடுத்து இளைஞர்களை தவறாக வழிநடத்துவார்கள். ஒரு போரில் ஆபத்துக்களை தடுக்கக்கூடிய இளைஞர்கள் தேவை. அது இளைஞர்களின் திறன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×