என் மலர்
நீங்கள் தேடியது "Satyapal Malik"
- 2018- 19-ம் காலகட்டத்தில் சத்யபால் மாலிக் ஜம்மு காஷ்மீர் கவர்னராக பதவி வகித்தார்.
- சத்யபால் மாலிக் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
சென்னை:
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் கவர்னரான சத்யபால் மாலிக் உடல்நலக் குறைவால் காலமானார் என டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனை தெரிவித்துள்ளது. 2018- 19-ம் காலகட்டத்தில் ஜம்மு காஷ்மீர் கவர்னராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சத்யபால் மாலிக் மறைவால் மிகவும் வருத்தமடைந்தேன். அமைதியின் ஊடாக உயர்ந்து, அதிகாரத்திற்கு உண்மையைப் பேசத் துணிந்த ஒரு மனிதர். அவர் வகித்த பதவிகளை மட்டுமல்ல, அவர் எடுத்த நிலைப்பாடுகளையும் வரலாறு நினைவில் வைத்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
- ஜம்மு காஷ்மீரின் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் உடல்நலக் குறைவால் காலமானார்.
- 2018- 19-ம் காலகட்டத்தில் ஜம்மு காஷ்மீர் கவர்னராக பதவி வகித்தார்.
புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் கவர்னரான சத்யபால் மாலிக் உடல்நலக் குறைவால் காலமானார் என டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனை தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சத்யபால் மாலிக். இவர் பாரதிய கிராந்தி தள், ஜனதா தள், இந்திய தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இணைந்து மக்கள் பணியாற்றியிருக்கிறார்.
2018- 19-ம் காலகட்டத்தில் ஜம்மு காஷ்மீர் கவர்னராக பதவி வகித்தார்.
- சத்யபால் மாலிக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
- அவரை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் நேரில் சென்று சந்தித்தார்.
புதுடெல்லி:
ஜம்மு-காஷ்மீர் மாநிலமாக இருந்தபோது 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 23 முதல் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி வரை சத்யபால் மாலிக் கவர்னராக பதவி வகித்தார். அப்போது ரூ.2,200 கோடி மதிப்பிலான கிரு நீர் மின் திட்ட கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடைப்பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் அடிப்படையில் தனியார் நிறுவன முன்னாள் தலைவர் நவீன்குமார் சவுத்ரி, பிற அதிகாரிகளான பாபு, மிட்டல், மிஸ்ரா உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த 2022-ம் ஆண்டு எப்.ஐ.ஆர் பதிவுசெய்து சிபிஐ, சத்யபால் மாலிக்குக்கு சொந்தமான இடங்கள் மற்றும் வழக்கில் தொடர்புடைய பிறருக்குச் சொந்தமான இடங்களில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சோதனை நடத்தியது.
இந்த ஊழல் வழக்கு தொடர்பாக சத்யபால் மாலிக் உள்பட 8 பேருக்கு எதிராக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டு நடந்த விசாரணைக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த குற்றப்பத்திரிகையில் சத்யபால் மாலிக், அவரின் இரு உதவியாளர்களான வீரேந்தர் ராணா, கன்வர் சிங் ராணா உள்பட 8 பேர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, கடந்த 11-ம் தேதி சத்யபால் மாலிக்கிற்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்யபால் மாலிக்கின் இரு சிறுநீரங்களும் செயல் இழந்துவிட்டன. ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சத்யபால் மாலிக்கை நேற்று சந்தித்தார். அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
- அக்னிபாத் திட்டம் எதிர்கால வீரர்களுக்கு எதிரானது.
- இந்த திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
பாக்பத் :
முப்படைகளில் ஆள் சேர்க்கும் அக்னிபாத் திட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் மேகாலயா கவர்னர் சத்யபால் மாலிக்கும் அக்னிபாத் திட்டம் தொடர்பாக மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'எதிர்கால போர் வீரர்களான இளைஞர்களுக்கு அக்னிபாத் திட்டத்தில் 6 மாதம் பயிற்சியும், 6 மாதம் விடுப்பும் கிடைக்கிறது. மீதமுள்ள 3 ஆண்டுகள் பணி முடித்து ஓய்வூதியமும் இன்றி வீடு திரும்பும் அவர்களுக்கு திருமண வரன்கள் எதுவும் அமையாது. அந்தவகையில் அக்னிபாத் திட்டம் எதிர்கால வீரர்களுக்கு எதிரானது. அவர்களின் நம்பிக்கை மீதான மோசடி இது' என சாடினார்.
எனவே ஒப்பந்த அடிப்படையில் ஆள்தேர்வு செய்யும் இந்த திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் கவர்னர் சத்யபால் மாலிக் போர்க்கொடி உயர்த்தி அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.






