search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Abu Dhabi"

    ஜகார்த்தா நோக்கி சென்ற விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு குழந்தை பிறந்ததையடுத்து விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டது. #EtihadAirways #JakartaFlight
    மும்பை:

    அபுதாபியில் இருந்து இன்று இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகருக்கு எத்திஹாட் ஏர்வேஸ் பயணிகள் விமானம்  வந்துகொண்டிருந்தது. இந்திய வான் பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தில் பயணம் செய்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

    இதுபற்றி விமான பணிப்பெண்கள் மற்றும் விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்தனர். சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. தொடர்ந்து அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவை என்பதால், விமானம் உடனடியாக மும்பைக்கு திருப்பி விடப்பட்டது.



    மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதும், அந்த பெண்ணையும் குழந்தையையும் அந்தேரி மருத்துவமனையில் சேர்த்தனர்.  அதன்பின்னர் விமானம் மும்பையில் இருந்து மற்ற பயணிகளுடன் ஜகார்த்தாவுக்கு புறப்பட்டுச் சென்றது.

    விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டதும், 2 மணி நேரம் தாமதமாக ஜகார்த்தா செல்லும் என்றும், இதனால் பயணிகளுக்கு ஏற்படும் அசவுகரியங்களுக்காக வருந்துவதாகவும் விமான நிறுவனம்  தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. #EtihadAirways #JakartaFlight

    அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஒரே ஒரு டி-20 போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. #UAEvAUS
    அபுதாபி:

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக ஒரே ஒரு டி-20 அபுதாபியில் நேற்று நடைபெற்றது. 

    இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியினரின் சிறப்பான பந்துவீச்சில் அந்த அணி சிக்கியது.  

    இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகமாக ஷைமான் அன்வர் 41 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் நாதன் கால்டர் நைல் மற்றும் பில்லி ஸ்டான்லேக் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க வீரரான ஷார்ட் பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்து அசத்தினார். இறுதியில், ஆஸ்திரேலியா அணி 16.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. #UAEvAUS
    அபுதாபியில் வேலைபார்த்து வந்த கேரளாவை சேர்ந்த தொழிலாளி ஒருவருக்கு லாட்டரியில் ரூ.13 கோடி பம்பர் பரிசு விழுந்துள்ளது. #LotteryPrize
    அபிதாபி:

    கேர மாநிலம் காசர் கோடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது குஞ்சு மய்யலாத். இவர் ஐக்கிய அமீரக நாடுகளில் ஒன்றான அபுதாபியில் கடந்த 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.

    சமீபத்தில் அங்கு விற்பனையான ‘பிக் டிக்கெட்’ லாட்டரி சீட்டு வாங்கினார். அதன் குலுக்கல் நடந்தது. அதில் பம்பர் பரிசு தொகையான 70 லட்சம் திர்ஹாம் விழுந்தது.

    இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.13 கோடியாகும். இவரது சீட்டுக்கு பரிசு விழுந்துள்ளதாக நண்பர்கள் தெரிவித்தனர். அதை முதலில் அவர் நம்பவில்லை. விளையாட்டாக கேலி செய்கிறார்கள் என நினைத்தார். பின்னர் உண்மையில் பரிசு கிடைத்ததை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார்.

    லாட்டரியில் கிடைத்த பரிசு தொகையில் இருந்து ஒரு பகுதியை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளார். இவருடன் பணிபுரியும் நண்பரின் 2 சிறுநீரங்களும் செயலிழந்துவிட்டன. அவரது சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ய இருப்பதாகவும் கூறினார்.

    வழக்கமாக நண்பர்களுடன் இணைந்து தான் பரிசு சீட்டு வாங்குவேன். முதன் முறையாக நானே தனியாக லாட்டரி சீட்டு வாங்கினேன். அதற்கு தான் பரிசு கிடைத்துள்ளது என்றார். #Keralaman #LotteryPrize
    யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவில் உள்ள புராதன தளங்களை 12 மணி நேரத்தில் சுற்றி பார்த்ததற்காக துபாயைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தந்தைக்கும், மகனுக்கும் கின்னஸ் புத்தகத்தில் இடம் கிடைத்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவை பிறப்பிடமாக கொண்ட துபாயில் வாழும் முகமது தாகிர் என்பவரும், அவரது மகன் முகமது ஆயான் உடன் இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனம் நடத்திய சாகச போட்டி ஒன்றில் பங்கேற்றார். அந்த போட்டியில் 22 பேர் பங்கேற்றனர்.

    இந்த போட்டியின்போது இந்தியாவில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய நினைவிடங்களை 11 மணி நேரம் 33 நிமிடங்களில் சுற்றி பார்த்து சாதனை படைத்துள்ளனர் அந்த தந்தையும், மகனும்.

    இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த பயணத்துக்கு அவர்கள் பயன்படுத்தியது முழுக்க முழுக்க பொதுத்துறை வாகனங்கள் மட்டுமே. அதாவது இந்தியாவில் உள்ள போக்குவரத்து நெரிசலில், ஆட்டோ ரிக்‌ஷா, டாக்ஸி, அரசு பேருந்து, மற்றும் ரெயில்களில் பயணித்து சுமார் 300 கிலோ மீட்டர்களை அந்த குறைந்த நேரத்தில் கடந்துள்ளனர்.

    இந்த பயணத்தில் தாஜ் மகால் துவங்கி, ஆக்ரா கோட்டை,  உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஃபதேபூர் சிக்ரி, ராஜஸ்தானில் உள்ள கியோலடியோ தேசிய பூங்கா,  டெல்லியில் உள்ள முகலாய அரசர் உமாயுனின் கல்லறை, செங்கோட்டை, குதூப்மினார் உள்ளிட்ட இடங்களை அவர்கள் சுற்றிவந்துள்ளனர்.

    இதற்கு முன்னதாக கின்னஸ் சாதனையில் 24 மணி நேரத்தில் முடிக்கப்பட்ட இந்த சாதனை தற்போது 12 மணி நேரத்தில் முடிக்கப்பட்டு தந்தையும் மகனும் கின்னஸில் இடம் பிடித்துள்ளனர். இதுதொடர்பாக துபாய் பத்திரிக்கை ஒன்றில் பேட்டியளித்த தந்தை முகமது தாகிர், இந்த முழு பயணத்திலும், பேருந்துக்காகவும், ரெயிலுக்காகவும் காத்திருந்த சமயங்களில் மட்டுமே ஓய்வெடுத்ததாகவும், அந்த நேரத்திலேயே தங்களது சாப்பாட்டை முடித்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
    ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்து 2 வாரத்தில் பெண் குழந்தை தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கி 48 வயது பெண்ணின் உயிரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #organdonor
    அபுதாபி:

    உலகில் பல கோடி மக்கள் சரியான மாற்று உறுப்பு கிடைக்காமல் இறந்து விடுகின்றனர். இதனால் உடல் உறுப்புதானம் குறித்து அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதனை உணர்ந்த பலர் இறந்த பின் தங்கள் உடல்உறுப்புகளை தானமாக வழங்க முன் வருகின்றனர்.

    இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த பிறந்து 2 வாரமே ஆன பெண் குழந்தை தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கி பெண்ணின் உயிரை காப்பாற்றியுள்ளது. குழந்தை இறந்து விடும் என்பதை அறிந்த மருத்துவர்கள் பெற்றோரிடம் கூறினர். மேலும், உறுப்பு தானம் வழங்குவது குறித்து எடுத்துரைத்தனர்.

    குழந்தையின் பெற்றோர் அனுமதி பெற்று மருத்துவர்கள் குழந்தை இறந்த பின் சிறுநீரகத்தை அறுவை சிகிச்சை மூலம் பெண்ணிற்கு பொருத்தினர். 3 கிலோவிற்கும் குறைவான எடை கொண்ட குழந்தையின் சிறுநீரகத்தை பெற்ற பெண் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதே போல் அனைவரும் உடல் உறுப்புதானம் செய்ய முன்வந்தால் பலரின் உயிரை காப்பாற்ற முடியும். #organdonor

    துபாயில் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் விற்கப்படும் பிரசித்தி பெற்ற பிக் டிக்கெட் அபுதாபி என்ற லாட்டரியில் இந்தியர் ஒருவர் 18 கோடி ரூபாய் பரிசு வென்றுள்ளார்.
    அபுதாபி:

    அபுதாபியின் சர்வதேச விமானநிலையத்தில் பல காலமாக விற்கப்படும் பிரசித்தி பெற்ற லாட்டரியாக பிக் டிக்கெட் அபுதாபி திகழ்ந்து வருகிறது.

    சமீபத்தில், பிக் டிக்கெட் அபுதாபி வெளியிட்ட 10 அதிஷ்டசாலிகள் பட்டியலில் 5 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர். அதில் அதிகபட்சமாக நைஜீரியாவில் வாழும் இந்தியரான திக்சன் கட்டிதாரா ஆபிரகாம் என்பவருக்கு 10 மில்லியன் திர்காம் பரிசு அறிவிக்கப்பட்டது.

    இது இந்திய ரூபாய் மதிப்பில் 18 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதலே பிக் டிக்கெட் அபுதாபி லாட்டரியில் இந்தியர்கள் அதிக அளவில் பரிசு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
    ×