search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aam Aadmi Party"

    வரும் பாராளுமன்ற தேர்தலில் டெல்லி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியினர் அறிவித்துள்ளனர். #ParlimentElection #AamAadmiParty
    புதுடெல்லி:

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து, மே மாதம் பாராளுமன்ற தேர்தலை நடத்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக பாஜக, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில்,  வரும் பாராளுமன்ற தேர்தலில் டெல்லி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியினர் அறிவித்துள்ளனர்.



    இதுதொடர்பாக, அக்கட்சியை சேர்ந்த தொழிலாளர் துறை மந்திரி கோபால் ராய் டெல்லியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் டெல்லி மற்றும் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடுகிறது என தெரிவித்துள்ளார். 

    கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் டெல்லியின் 7 தொகுதிகளிலும் பாஜக வென்றது நினைவிருக்கலாம். #ParlimentElection #AamAadmiParty
    வாரணாசி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியில்லை என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. #AamAadmi #Kejriwal

    லக்னோ:

    டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தொகுதியான வாரணாசியில் போட்டியிடுவார் என்று தகவல் வெளியானது.

    இதை ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது. அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய்சிங் இது தொடர்பாக கூறியதாவது:-


    கெஜ்ரிவால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் அவர் தீவிர கவனம் செலுத்துவார். வாரணாசி தொகுதியில் பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்துவோம்.

    பாராளுமன்ற தேர்தலில் டெல்லி, பஞ்சாப், அரியானா, கோவாவில் போட்டியிடுவோம். உத்தரபிரதேசத்தில் சில தொகுதிகளில் நிற்போம். அடுத்த மாதம் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பது பற்றி இறுதி முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #AamAadmi #Kejriwal

    டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதற்கு மத்திய அரசு மற்றும் அண்டை மாநில அரசுகள்தான் முக்கிய காரணம் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். #DelhiAirPollution #DelhisPollution #Kejriwal
    புதுடெல்லி:

    டெல்லியில் காற்றில் மாசின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. குளிர்காலத்தில் விவசாயிகள் தங்கள் வயல்களில் எஞ்சி நிற்கும் தாளடிகளை எரிப்பதாலும், வாகன புகையினாலும் காற்றின் தரம் குறைந்து வருகிறது. இன்று காற்றின் தரம் 348 என்ற நிலையில் இருந்தது. காற்று மாசை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    இந்நிலையில், காற்று மாசுக்கு மத்திய அரசு மற்றும் அண்டை மாநில அரசுகள் மீது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.


    “டெல்லியில் ஆண்டு முழுவதும் மாசு கட்டுக்குள் உள்ளது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் இந்த சீசனில் (குளிர்காலம்) மத்திய அரசு மற்றும் பாஜக தலைமையிலான அரியானா, காங்கிரஸ் தலைமையிலான பஞ்சாப் அரசுகளால் மோசமான மாசு சூழ்நிலையை டெல்லி எதிர்கொள்ள வேண்டி உள்ளது. காற்று மாசை கட்டுப்படுத்த நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டாலும், அவர்கள் எதையும் செய்ய தயாராக இல்லை. இந்த இரண்டு மாநிலங்களிலும் உள்ள விவசாயிகளும் அரசு மீது அதிருப்தியில் உள்ளனர்” என கெஜ்ரிவால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    பஞ்சாப் மாநில விவசாயிகளை பிரதமர் மோடி நேற்று வெகுவாகப் பாராட்டியதுடன், விவசாயிகள் தங்கள் நிலங்களில் உள்ள தாளடிகளை எரிக்கக்கூடாது என கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. #DelhiAirPollution #DelhisPollution #Kejriwal
    கனடா நாட்டுக்கு சென்ற ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏக்களை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்திய சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினர். #Canada #AamAadmiParty
    ஒட்டாவா:

    ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த குல்தர் சிங் சந்த்வான், அமர்ஜித் சிங் சண்டோ ஆகிய 2 எம்.எல்.ஏக்கள் சொந்த காரணங்களுக்காக கனடா சென்றுள்ளனர். அப்போது, டொரோண்டோ விமான நிலையத்தில் அவர்களை தடுத்து நிறுத்திய அந்நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள், கனடா வந்ததற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

    சுங்கத்துறை அதிகாரிகளின் கேள்விக்கு குல்தர் சிங் மற்றும் அமர்ஜித் சிங் முறையாக பதிலளிக்காததால், கனடாவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, விமானம் மூலம் மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்த செய்தியை கனடாவில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் உறுதி படுத்தியுள்ளார்.

    திருப்பி அனுப்பப்பட்ட எம்.எல்.ஏக்களில் அமர்ஜித் சிங் மீது பாலியல் புகார் நிலுவையில் இருப்பதால், அதன் காரணமாக கனட சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை திருப்பி அனுப்பி இருக்கலாம் என கூறப்படுகிறது. #Canada #AamAadmiParty
    டெல்லியின் முக்கிய பகுதிகளை கண்காணிக்க சி.சி.டி.வி. கொள்முதலில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டும் காங்கிரஸ் சார்பில் இன்று முதல் மந்திரிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.

    புதுடெல்லி:

    பெண்களின் பாதுகாப்பு கருதி டெல்லி முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ஆளும் ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், இதற்கான டெண்டர் விடப்பட்டதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த திட்டத்துக்கு கவர்னர் அனில் பைஜால் ஒத்துழைப்பு வழங்காமல் காலம்தாழ்த்தி வருகிறார். 

    இந்நிலையில், சி.சி.டி.வி. கொள்முதலில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டும் காங்கிரஸ் சார்பில் இன்று மெழுகு வர்த்திகளை ஏந்தி ஊர்வலமாக சென்று அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்தது. 

    அரவிந்த் கெஜ்ரிவால் முதல் மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று நடைபெறும் இந்த போராட்டத்துக்கான அறிவிப்பை டெல்லி காங்கிரஸ் பிரமுகர்கள் அரவிந்தர் சிங் லவ்லி மற்றும் ஹாரூன் யூசுப் ஆகியோர் வெளியிட்டனர்.



    இந்நிலையில், அறிவித்தபடி இன்று காங்கிரஸ் கட்சியினர் மெழுகு வர்த்திகளை ஏந்தி ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அஜய் மகான், பிசி சாக்கோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    ×