search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SideDish"

    • பன்னீர் என்றாலே கால்சியமும், புரதச்சத்துக்களும் தான் நினைவுக்கு வரும்.
    • இது பற்கள், எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

    தேவையான பொருட்கள்

    பன்னீர் - 200 கிராம்

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 3

    பூண்டு - 2 பல்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

    இஞ்சி - சிறிய துண்டு

    சீரகம் - 1 டீஸ்பூன்

    கடுகு - ½ டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - ½ டீஸ்பூன்

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    * இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    * பூண்டை தோல் நீக்கி நசுக்கிகொள்ளவும்.

    * ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    * பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    * ஒரு ஒரு கடாய்யை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, சீரகம், சேர்த்து தாளிக்கவும்.

    * பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் நசுக்கிய பூண்டு, இஞ்சி துருவல், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

    * பிறகு துருவி வைத்துள்ள பன்னீர் சேர்த்து அதனுடன் மிளகுத் தூள், சேர்த்து கிளறி கொத்தமல்லி தலை தூவி இறக்கவும்.

    * இப்பொழுது சுவையான பன்னீர் பொடிமாஸ் தயார்.

    சப்பாத்தி, நாண், சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மீல் மேக்கர் கிரேவி. இன்று மீல் மேக்கர் கிரேவியை எப்படி எளிய முறையில் செய்வதென்று பார்ப்போம்.
    தேவையான பொருட்கள்:

    மீல் மேக்கர் - 1/2 கப்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    பெரிய வெங்காயம் - 1/2
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
    தண்ணீர் - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    பால் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    அரைப்பதற்கு...


    தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
    மிளகு - 1/2 டீஸ்பூன்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    வெங்காயம் - 1 (சிறியது)
    தக்காளி - 2 (சிறியது)

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது



    செய்முறை:

    கொத்தமல்லி, பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் தண்ணீர் ஊற்றி சூடானதும் அதில் மீல் மேக்கரைப் போட்டு சில நிமிடங்கள் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மீல் மேக்கரை எடுத்து, குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, தனியாக வைத்துக் கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி இறக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் அரைப்பதற்கு கொடுத்துள்ள எஞ்சிய பொருட்களையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.

    பின் அதில் மீல் மேக்கரை சேர்த்து, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி மிதமான தீயில் 1 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்து, கிரேவியை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொத்தமல்லியைத் தூவினால், மீல் மேக்கர் கிரேவி ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாங்காய் சீசன் தொடங்கி விட்டது. இன்று மாங்காயை வைத்து புளிப்பான, காரசாரமான துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மாங்காய்  - 1,
    காய்ந்த மிளகாய் - 8,
    பச்சை மிளகாய் - 2,
    உ.பருப்பு - 1 கைப்பிடி,
    க.பருப்பு - 2 ஸ்பூன்,
    பெருங்காயம்   சிறு துண்டு,

    தாளிக்க

    எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை.



    செய்முறை

    மாங்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும உ.பருப்பு, க.பருப்பு இவைகளை பொன்னிறமாக வறுக்கவும்.

    பின்பு துருவிய மாங்காய், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.

    சூடு ஆறியவுடன் மிக்சியில் போட்டு மாங்காய் கலவையை அரைத்த பின்னர் பருப்பு கலவையை சேர்த்து கரகரப்பாய் அரைத்து எடுக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து துவையலில் கலந்து பரிமாறவும்.

    சுவையான மாங்காய் துவையல் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சுண்டைக்காயில் கூட்டு, குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சுண்டைக்காயை வைத்து சூப்பரான துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை சுண்டைக்காய் - 1 கைப்பிடி
    பச்சை மிளகாய் - 4
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1 (சிறியது)
    தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    புளி - நெல்லிக்காய் அளவு
    பெருங்காயம் - சிறிதளவு
    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    உளுந்து - 2 டீஸ்பூன்.



    செய்முறை :

    பச்சை சுண்டைக்காய்களை கழுவி இரண்டாக நறுக்கித் தண்ணீரில் போடவும். பிறகு அதனை நன்கு கழுவ வேண்டும். அதில் உள்ள விதைகள் வெளிவந்ததும் தனியாக எடுத்து வைக்கவும்.

    பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை கழுவிப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு காடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சைமிளகாய், சுண்டைக்காயைப் போட்டு வதக்கவும்.

    அது பாதி வதங்கும்போது வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும். முக்கால் பதம் வதங்கியதும் உப்பு புளி சேர்த்து தேங்காய்த் துருவல் போட்டு அரைநிமிடம் வதக்கி இறக்கி ஆறவிடவும்.

    ஆறியதும் மிக்சியில் போட்டு தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து துவையலில் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சுவையான, ஆரோக்கியமான சுண்டைக்காய் துவையல் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சிக்கனில் சுவையான பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம்
    வெங்காயம் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    ப.மிளகாய் - 4
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    தனியா தூள் - அரை டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    மிளகு தூள் - 1 டீஸ்பூன்
    கரம்மசாலா தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    சோம்பு - கால் டீஸ்பூன்



    செய்முறை :

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து அதில் சிக்கன், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு போட்டு நன்றாக வதக்கவும். சிக்கனில் உள்ள தண்ணீரில் சிக்கன் வேக வேண்டும். சிக்கனில் தண்ணீர் எல்லாம் வற்றியதும் சிக்கனை மிக்சியில் போட்டு உதிரியாக அரைத்து கொள்ளவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானது சோம்பு போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் கறிவேப்பிலை, மிளகாய் தூள், மிளகு தூள், தனியா தூள், கரம்மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த சிக்கனை போட்டு வதக்கவும்.

    சிக்கனில் நன்றாக மசாலா சேர்ந்து உதிரியாக வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சிக்கன் கீமா பொடிமாஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேரட்டில் கூட்டு, பொரியல் செய்து இருப்பீங்க. இன்று கேரட்டை வைத்து சூப்பரான ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ஊறுகாய் தயிர் சாதத்திற்கு அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    கேரட் - கால் கிலோ
    எலுமிச்சை பழம் - ஐந்து
    பச்சை மிளகாய் - பத்து
    பெருங்காயம் - அரை டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - ஒரு தேகரண்டி
    கடுகு - ஒரு தேகரண்டி
    உப்பு - தேவைகேற்ப
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    கேரட்டை பெரிய பல் உள்ள துருவலில் துருவிக்கொள்ளவும்.

    எலுமிச்சை பழத்தில் இருந்து சாறு எடுத்து கொள்ளவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் கேரட் துருவல், பச்சை மிளகாய், எலுமிச்சை பழம் சாறு, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்து கொட்டி கிளறி பரிமாறவும்.

    சூப்பரான உடனடி கேரட் ஊறுகாய் ரெடி.

    குறிப்பு : விரும்பினால் கேரட்டை நீளமான துண்டுகளாகவும் வெட்டிக்கொள்ளலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, இட்லி, சப்பாத்தி, இடியாப்பத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் வெள்ளை காய்கறி குருமா. இன்று இந்த குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 3
    உருளைக்கிழங்கு - 2
    பீன்ஸ் - 50கிராம்
    கேரட் - 50கிராம்
    பட்டாணி - 50கிராம்
    பச்சை மிளகாய் - 5
    தேங்காய்துருவல் - கால்மூடி
    கசகசா - அரை ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு,
    சோம்பு - 1  ஸ்பூன்
    முந்திரி பருப்பு  - 5
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1  ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய்  - 5 ஸ்பூன்

    தாளிக்க

    கிராம்பு
    பட்டை
    ஏலக்காய்



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சை மிளகாய், தேங்காய்துருவல், கசகசா, சோம்பு, முந்திரி பருப்பு அனைத்தையும் மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்பு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் நறுக்கிய காய்கறிகள் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேக வைக்கவும்.

    காய்கறி நன்கு வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை அதில் சேர்த்து   நன்கு கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    இதோ சுவையான வெஜிடபிள் வெள்ளை குருமா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மீனை வைத்து ஹோட்டலில் செய்வதைப்போல் மஞ்சூரியன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துண்டு மீன் - 1/2 கிலோ,
    சோளமாவு, மைதா - தலா 25 கிராம்,
    முட்டை - 1,
    கொத்தமல்லி - சிறிது,
    எண்ணெய், உப்பு - தேவைக்கு,
    வெங்காயம் - 2,
    பூண்டு - 6 பல்,
    இஞ்சி - 1 துண்டு,
    பச்சைமிளகாய் - 5,
    சோயா சாஸ், தக்காளி சாஸ், வெங்காயத்தாள் - தேவைக்கு.



    செய்முறை :


    கொத்தமல்லி, வெங்காயம், வெங்காயத்தாள், பூண்டு, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சோளமாவு, மைதா, முட்டை, உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து அதில் மீனை போட்டு சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

    ஊற வைத்த மீனை சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, சோயா சாஸ், தக்காளி சாஸ், மீன்  சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.

    கடைசியாக அதில் கொத்தமல்லி, வெங்காயத்தாள் போட்டு சூடாக பரிமாறவும்.

    சூப்பரான மீன் மஞ்சூரியன் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாம்பார் சாதம், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த குடைமிளகாய் உருளைக்கிழங்கு மசாலா. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குடைமிளகாய் - ஒன்று,
    உருளைக்கிழங்கு - 2,
    மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    உருளைக்கிழங்கைத் தோல் சீவி குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைத்துக்கொள்ளவும்.

    வேக வைத்த உருளைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

    குடைமிளகாயின் நடுவில் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டுச் சிறு சிறு சதுரங்களாக நறுக்கிக்கொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்த்து வதக்கவும்.

    அதனுடன் குடைமிளகாயைச் சேர்த்து லேசாக நிறம் மாறாமல் வதக்கவும். குடைமிளகாய் நன்றாக வேகக்கூடாது.

    உருளைக்கிழங்கு நன்கு பொன்னிறமாக வதங்கியதும் மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான குடைமிளகாய் உருளைக்கிழங்கு மசாலா ரெடி.

    குறிப்பு: குடமிளகாயை மற்ற காய்கறிகளைப் போல் அதிக நேரம் சமைக்காமல் லேசாக வதக்கினால் அதன் சத்துகள் முழுவதுமாகக் கிடைக்கும்.

    இந்தப் பொரியல் குழந்தைகள் விரும்பி உண்ணும் ஃப்ரைடு ரைஸுக்கு ஏற்ற சைடிஷ். மிளகுத்தூளுக்குப் பதிலாக, சாம்பார் பொடி சேர்த்து இதைச் செய்து எலுமிச்சை சாதம் போன்ற கலவை சாதங்களுக்கு சைடிஷ்ஷாகப் பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிக்கன் குழம்பு வகைகளில் தனியா (கொத்தமல்லி) சிக்கன் வகை கொஞ்சம் புதுமையானது. இதை சப்பாத்தி, நாண், தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் துண்டுகள் - 1 கிலோ
    கொத்தமல்லி இலை - 2 கட்டு
    புதினா இலை - 1 கட்டு
    வெங்காயம் - 3
    இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 4
    தயிர் - 250 மில்லி லிட்டர்
    தனியா தூள் - 3 டீஸ்பூன்
    சீரகத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப



    செய்முறை :

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    கொத்தமல்லி இலை, புதினாவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தயிரில் பாதி அளவு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலந்து சிக்கனை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் பூண்டு, இஞ்சி விழுதை சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி, பூண்டு விழுது நன்றாக வதங்கியதும் அதில் பச்சைமிளகாய், சீரகத்தூள், தனியா தூள் சேர்த்து கிளறவும்.

    சிக்கன் துண்டுகளை வடித்து கடாயில் சேர்த்து அதிக பட்ச தீயில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.

    மீதமுள்ள மிளகாய் தூள், தயிரை சேர்க்கவும்.

    அதோடு கொத்தமல்லி இலை, புதினாவை சேர்த்து கிளறவும்.

    அடுத்து மூடி போட்டு சிக்கன் வேகும்வரை குறைந்த தீயில் வைத்திருக்கவும்.

    வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

    இப்போது சூடான தனியா சிக்கன் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, ஆப்பத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் வடைகறி. ஹோட்டலில் செய்வது போல் வடைகறியை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தக்காளி - 2
    கடலைப்பருப்பு - 1 கப்
    சோம்பு, ஏலக்காய், லவங்கம், பட்டை, பிரிஞ்சி இலை - சிறிதளவு
    வெங்காயம் - 1
    ப.மிளகாய் - 4
    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
    காரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
    பொட்டுக்கடலை மாவு - 2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    தக்காளியை நறுக்கி மிக்சியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடலை பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடிகட்டி உப்பு சேர்த்து மிக்சியில் கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும்.

    இட்லி தட்டில் எண்ணெய் தடவி இந்த கலவையை வைத்து இட்லி போல் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, ஏலக்காய், லவங்கம், பட்டை, பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்த பின்னர், நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, சிறிது நேரம் வதக்கியவுடன், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், காரம் மசாலாத்தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.

    அடுத்து அதில் அரைத்த தக்காளி விழுது, உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு கொதிக்க விடவும். கொதி வந்தவுடன் வேக வைத்த கடலைப்பருப்பை ஒன்றிரண்டாக உதிர்த்து போட்டு அதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி சிறிது நேரம் கொதிக்க விடவும்.

    கடைசியில் பொட்டுக்கடலை மாவை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.

    இப்போது சுவையான வடைகறி தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சூடான சாதத்தில் மாசி கருவாட்டு தொக்கு போட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று இந்த தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மாசி - 1 துண்டு (25 கிராம்)
    பெரிய  வெங்காயம் - 100 கிராம்
    பழுத்த தக்காளி - 100 கிராம்
    பச்சை மிளகாய் - 1
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
    எண்ணெய் - ஒரு குழிகரண்டி
    கடுகு, உளுந்து - தலா அரைடீஸ்பூன்
    கொத்தமல்லி கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவைக்கு



    செய்முறை :

    மாசி கருவாட்டு துண்டை அம்மியில் வைத்து பொடித்து கொள்ளவும்.

    வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக்கொள்ளவும்.

    தக்காளியையும் பச்சைமிளகாயும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து சேர்த்து தாளித்த பின்னர் கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு பொரிந்து வந்ததும் வெங்காயம் சோத்து வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி போல் வந்ததும் மிளகாய் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

    பின்னர் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    தக்காளி வெந்ததும் மாசித்தூள் மற்றும் அரை டம்ளர் அளவுக்கு நீர் சேர்த்து பிரட்டவும். உப்பு சரி பார்த்துக்கொண்டு ஒரு சேர தொக்குபக்குவம் வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    சூப்பரான மாசி தொக்கு ரெடி.

    சாத வகைகளுடன் சாப்பிட அருமையான சைட்டிஷ் இது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×