என் மலர்

  நீங்கள் தேடியது "Kurma"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முஸ்லீம்கள் நோன்பு காலத்தில் மட்டனை சமைத்து சாப்பிடுவார்கள்.
  • சூடான சாதத்துடன் சாப்பிடவும் இந்த ரெசிபி சூப்பராக இருக்கும்.

  தேவையான பொருட்கள்:

  மட்டன் - அரை கிலோ

  வரமிளகாய் - 18

  வெங்காயம் - 2

  பட்டை - 2

  இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

  சீரகப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்

  மட்டன் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்

  சோம்பு பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்

  புளி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

  உப்பு - தேவையான அளவு

  செய்முறை

  மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

  வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வாக்கி, பின் மட்டனை சேர்த்து சிறிது நேரம் பிரட்டி விட வேண்டும்.

  அடுத்து அதில் பட்டை, ஏலக்காய், இஞ்சி பூண்டு பேஸ்ட், சோம்பு பொடி, சீரகப் பொடி மற்றும் மட்டன் மசாலா சேர்த்து ஒரு முறை நன்கு பிரட்டி, பின் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி, 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

  பின் குக்கரை மூடி 2 விசில் போட வேண்டும்.

  வரமிளகாயில் உள்ள விதைகளை நீக்கி விட்டு தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைக்க வேண்டும். நன்றாக ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

  அரைத்த மிளகாய் விழுதுடன் புளிச்சாற்றினை சேர்த்து கலந்து, அதனை குக்கரில் உள்ள மட்டனுடன் சேர்த்து பிரட்டி, பச்சை வாசனை நீங்கி, மட்டனுடன் மசாலா அனைத்து ஒன்று சேரும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், காஷ்மீரி மட்டன் குருமா ரெடி!!!

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பச்சை பட்டாணி குருமா ரொம்பவே ஈஸியான ரெசிபி
  • இந்த ரெசிபியை எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்.

  தேவையான பொருட்கள்:

  பச்சை பட்டாணி - 1 கப்

  வெங்காயம் - 3

  தக்காளி - 4

  பச்சைமிளகாய் - 4

  மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்

  கரம் மசாலா தூள் - 1ஸ்பூன்

  இஞ்சி பூண்டு விழுது - 2ஸ்பூன்

  கொத்தமல்லி - தேவையான அளவு

  எண்ணெய் - தேவையான அளவு

  தேங்காய் பால் முதல் பால் - 1 கப்

  உப்பு - தேவையான அளவு

  செய்முறை:

  பச்சைப்பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

  கொத்தமல்லி, பச்சை மிளகாயை அரைத்து கொள்ளவும்.

  2 தக்காளியை தனியாக அரைத்து கொள்ளவும்.

  மீதமுள்ள 2 தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, சோம்பு, லவங்கம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  அடுத்ததாக வெட்டி நறுக்கி வைத்துள்ள 2 தக்காளியை சேர்த்து வதக்கவும்.

  தக்காளி குழைய வதங்கிய பின்னர் முன்பு அரைத்து வைத்த தக்காளி சேர்க்கவும்.

  தொடர்ந்து அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி விழுதை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

  பிறகு வேகவைத்த பச்சைப்பட்டாணி போட்டு உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.

  தொடர்ந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதி வந்த பிறகு தேங்காய்பால் சேர்த்து ஒரு கொதிவிட்டு கீழே இறக்கவும்.

  இப்போது நீங்கள் எதிர்பார்த்த டேஸ்டியான பச்சை பட்டாணி குருமா தயார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்த குருமாவை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி உடன் சேர்த்து சாப்பிடலாம்.
  • இந்த குருமாவை செய்ய அரை மணி நேரமே போதுமானது.

  தேவையான பொருட்கள்:

  காலிஃப்ளவர் - 1

  பச்சை பட்டாணி - 1/4 கப்

  வெங்காயம் - 1

  தக்காளி - 1

  மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

  மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

  கொத்தமல்லி - சிறிது

  எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

  உப்பு - தேவையான அளவு

  அரைப்பதற்கு...

  தேங்காய் - 1/4 கப்

  சோம்பு - 1 டீஸ்பூன்

  முந்திரி - 5

  வெங்காயம் - 1

  தக்காளி - 1

  பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்

  பூண்டு - 4 பற்கள்

  பச்சை மிளகாய் - 2

  பட்டை - 1/2 இன்ச்

  கிராம்பு - 1

  செய்முறை:

  முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

  தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  காலிஃப்ளவரை சுத்தம் செய்து, அதனை சுடுநீரில் போட்டு ஒருமுறை அலசி, பின் அதனை குக்கரில் போட்டு, அத்துடன் பச்சை பட்டாணி, உப்பு மற்றும் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் சிறிது ஊற்றி குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கி கொள்ள வேண்டும்.

  பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.

  பிறகு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, பின் அரைத்து அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, 1/4 கப் தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும்.

  இறுதியில் வேக வைத்துள்ள காலிஃப்ளவர் மற்றும் பட்டாணியை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், காலிஃப்ளவர் பட்டாணி குருமா ரெடி!!!

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நண்டு குருமா இட்லி, தோசையுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
  • சளி, வறட்டு இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இதை சாப்பிடலாம்.

  தேவையான பொருட்கள்:

  நண்டு - 1 கிலோ

  வெங்காயம் - 2

  தக்காளி - 1

  பச்சைமிளகாய் - 2

  தேங்காய் பால் - 2 டம்ளர்

  இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

  கொத்தமல்லிதழை - சிறிதளவு

  கறிவேப்பிலை - ஒரு கொத்து

  மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

  கரம் மசாலாத்தூள் - ½ டீஸ்பூன்

  எண்ணெய் - 100 மிலி

  உப்பு - தேவையான அளவு

  அரைக்க தேவையானவை:

  தேங்காய் துருவல் - ஒரு கப்

  மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்

  மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

  மல்லித்தூள் - 3 டீஸ்பூன்

  சீரகத்தூள் - 2 டீஸ்பூன்

  சோம்புத்தூள் - 1 டீஸ்பூன்

  முந்திரி - 10

  பாதாம் - 6

  பூண்டு - 5 பல்

  செய்முறை:

  நண்டை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.

  வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

  அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

  அரைத்த மசாலாவை பாத்திரத்தில் எடுத்து தேங்காய் பாலுடன் மேலும் இரண்டு டம்ளர் தண்ணீர், சிறிதுளவு உப்பு சேர்த்து கரைத்து விட்டு கொத்தமல்லிதழையை சேர்த்து கொள்ளவும்.

  ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

  வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி, அரை ஸ்பூன் உப்பும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

  அனைத்தும் நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

  இப்போது கரைத்து வைத்திருக்கும் கலவையை ஊற்றி நண்டை சேர்த்து கொதிக்க விடவும்.

  நன்றாக கொதித்து பச்சை வாசனை போனவுடன் கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான நண்டு குருமா ரெடி.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள குருமா சூப்பராக இருக்கும்.
  • இன்று வெள்ளை நிறத்தில் வெஜிடபிள் குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

  தேவையான பொருட்கள்:

  பெரிய வெங்காயம் - 2

  தக்காளி - 1

  பொட்டு கடலை - 3 ஸ்பூன்

  தேங்காய் - கால் மூடி

  இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்,

  பச்சை மிளகாய் - 7

  கிராம்பு - 3

  பட்டை சிறிய துண்டு - 1

  சோம்பு - 1 ஸ்பூன்

  கல்பாசி - அரை ஸ்பூன்,

  முந்திரி - 4

  எண்ணெய் - 5 ஸ்பூன்

  உப்பு - ஒன்றரை ஸ்பூன்

  கொத்தமல்லி தழை - ஒரு கொத்து.

  செய்முறை:

  வெங்காயம், தக்காளி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  மிக்சியில் பச்சை மிளகாய், தேங்காய் துருவல், கசகசா, சோம்பு, முந்திரி பருப்பு அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

  கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்பு அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

  வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.

  அடுத்து அதில் தக்காளி போட்டு வதக்கவும்.

  தக்காளி நன்றாக வதங்கியதும் காய்கறிகளுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேக வைக்கவும்.

  காய்கறி நன்கு வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை அதில் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

  சுவையான வெஜிடபிள் வெள்ளை குருமா ரெடி.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காளான் ரத்தத்தில் கலந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.
  • காளான் எளிதில் செரிமானமாவதுடன் மலச்சிக்கல் பிரச்சினையைத் தீர்க்கக்கூடியது.

  தேவையான பொருட்கள் :

  பட்டன் காளான் - 200 கிராம்

  சின்ன வெங்காயம் - 10 - 12 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும் )

  தக்காளி - 2 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும் )

  இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

  மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

  கொத்தமல்லி - சிறிதளவு

  உப்பு - தேவையான அளவு

  செட்டிநாடு மசாலா வறுத்து அரைப்பதற்கு :

  வர மிளகாய் - 4

  தனியா - 1 தேக்கரண்டி

  மிளகு - 1/2 தேக்கரண்டி

  சீரகம் - 1/2 தேக்கரண்டி

  பொட்டுக்கடலை - 1/2 மேஜைக்கரண்டி

  துருவிய தேங்காய் - 1 கைப்பிடி

  கசகசா - 1/2 தேக்கரண்டி(விருப்பத்திற்கேற்ப )

  தாளிப்பதற்க்கு :

  எண்ணெய் - தேவையான அளவு

  பிரியாணி இலை - 1

  பட்டை - 1/2 அளவு

  கிராம்பு - 2

  ஏலக்காய் - 1

  சோம்பு - 1/2 தேக்கரண்டி

  கறிவேப்பில்லை - 2 கொத்து

  செய்முறை :

  * சின்ன வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

  * காளானை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

  * கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வத்து வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து வறுக்கவும். கடைசியாக தேங்காய் சேர்த்து வறுக்கவும்.

  * சுமார் 1 அல்லது 2 நிமிடம் வறுத்த பின்பு ஆறவிடவும். ஆறிய பொருட்களை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து வைக்கவும். இது தான் செட்டிநாடு மசாலா.

  * ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து தாளித்த பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

  * பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

  * இதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

  * இதனுடன் வெட்டி வைத்துள்ள காளான் சேர்த்து கிளறவும். காளான் வதங்கும் பொழுது தண்ணீர் விடும்.

  * காளான் தண்ணீர் விட ஆரம்பித்ததும் 1/2 - 1 கப் அளவு தண்ணீர் விட்டு மிதமான தீயில் கலவையை வேகவைக்கவும்.

  * குருமா சிறிது நேரத்தில் எண்ணெய் விட ஆரம்பிக்கும் அப்பொழுது கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.

  * காளான் வேக வெகு நேரம் ஆகாது. 15 நிமிடங்களே போதுமானது.

  * இப்போது சூப்பரான செட்டிநாடு காளான் குருமா ரெடி.

  குறிப்பு : இந்த குருமா செய்வதற்கு சின்ன வெங்காயம் உபயோகிக்கவும், பெரிய வெங்காயம் தவிர்க்கவும். வறுக்க கொடுத்துள்ள பொருட்களை மிதமான தீயில் வறுக்கவும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வெஜிடபிள் சால்னா பரோட்டா, தோசை, இட்லி, பூரி, சப்பாத்திக்கு தொட்டுகொள்ள சுவையாக இருக்கும்.
  • இதில் நாம் விருப்பப்பட்ட காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.

  தேவையான பொருட்கள்:

  வெங்காயம் - 2

  தக்காளி - 2

  இஞ்சி - ஒரு துண்டு பூண்டு - 4

  மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

  மல்லித் தூள் - அரை டீஸ்பூன்

  மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்

  தேங்காய் துருவல் - கால் கப்

  பிரியாணி இலை - 2

  பட்டை - 2

  ஏலக்காய் - 3

  கிராம்பு - 4

  சோம்பு - 2 டீஸ்பூன்

  சீரகம் - 1 டீஸ்பூன்

  பச்சை மிளகாய் - 3

  பீன்ஸ் - 12

  கேரட் - 2

  பட்டாணி - ஒரு கப்

  உருளைக்கிழங்கு - 1

  எண்ணெய் - 3 டீஸ்பூன்

  கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு.

  செய்முறை:

  தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

  ஒரு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்விட்டு சூடானதும், பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு, சீரகம் போட்டு வறுத்துக் கொள்ளவும்.

  அத்துடன், நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.

  கூடவே, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து பச்சை வாசமனை போகும் வரை வதக்கி இறக்கி ஆறவிடவும்.

  இதனை, மிக்ஸி ஜாரில் போட்டு, கூடனே தேங்காய்த் துருவல் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.

  இப்போது, குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்விட்டு சூடானதும் பிரியாணி இலை, பட்டை, சோம்பு, பச்சை மிளகாய் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, பட்டாணி, அரைத்து வைத்த மசாலா, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து, மூடிப் போட்டு 3 விசில்விட்டு வேக வைக்கவும்.

  காய்கள் வெந்த நிலையில், இறுதியாக கொத்தமல்லித் தூவி இறக்கினால் அட்டகாசமான சால்னா ரெடி..!.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தக்காளி குருமாவானது தோசைக்கு மட்டுமின்றி, சாதத்திற்கும் அருமையாக இருக்கும்.
  • தக்காளி குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

  தேவையான பொருட்கள்:

  தக்காளி - 3

  வெங்காயம் - 1

  மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

  மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்

  கொத்தமல்லி - சிறிது

  உப்பு - தேவையான அளவு

  அரைப்பதற்கு...

  துருவிய தேங்காய் - 1/4 கப்

  சோம்பு - 3/4 டீஸ்பூன்

  இஞ்சி - 1/4 இன்ச்

  பச்சை மிளகாய் - 1

  பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்

  கசகசா - 1 டீஸ்பூன்

  தாளிப்பதற்கு...

  எண்ணெய் - 3 டீஸ்பூன்

  பட்டை - 1/4 இன்ச்

  கிராம்பு - 2

  ஏலக்காய் - 1

  பூண்டு - 1 டேபிள் ஸ்பூன்

  செய்முறை:

  வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

  வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

  வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

  தக்காளியில் இருந்து பச்சை வாசனை போன பின்னர், அதில் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.

  இறுதியில் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், தக்காளி குருமா ரெடி!!!

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாண், சப்பாத்தி, இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள அருமையாக இருக்கும் வெங்காய குருமா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
  தேவையான பொருட்கள் :

  பெ.வெங்காயம் - 4
  தக்காளி - 3
  பச்சை மிளகாய் - 2
  கடலை பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
  கடலை மாவு - 1 டீஸ்பூன்
  கடுகு - சிறிதளவு
  சோம்பு தூள் - 1 டீஸ்பூன்
  மிளகாய் தூள், மஞ்சள் தூள் - சிறிதளவு
  மல்லித்தூள் - கால் டீஸ்பூன்
  கறிவேப்பிலை - சிறிதளவு
  கொத்தமல்லி - சிறிதளவு
  உப்பு - தேவைக்கு

  செய்முறை:

  தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

  அதனுடன் கடலைப்பருப்பு, வெங்காயம், தக்காளி, மிளகாய், சோம்பு தூள் சேர்த்து வதக்கவும்.

  பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் மற்றும் போதுமான அளவு தண்ணீர் விட்டு மூடி கொதிக்கவிடவும்.

  நன்கு வெந்ததும் கடலை மாவை சிறிதளவு தண்ணீரில் கலந்து ஊற்றவும்.

  மீண்டும் கொதிக்க தொடங்கியதும் கொத்தமல்லி தூவி கீழே இறக்கி பரிமாறலாம்.

  சூப்பரான வெங்காய குருமா ரெடி.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தோசை, இட்லி, சூடான சாத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் வாழைப்பூ குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
  தேவையான பொருட்கள்

  வாழைப்பூ (பொடியாக நறுக்கியது) - 1 கப்
  வெங்காயம் - 2
  தக்காளி - 1
  மிளகாய் வற்றல் - 4
  சோம்பு - 1 டீஸ்பூன்
  பொட்டுக்கடலை - 4 டீஸ்பூன்
  பச்சைப் பட்டாணி - 1 கப்
  மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
  தனியா - 1 டீஸ்பூன்
  தேங்காய்த் துருவல் - 4 டீஸ்பூன்
  எண்ணெய், உப்பு - தேவையான அளவு
  கொத்தமல்லி - சிறிதளவு
  கடுகு - 1 டீஸ்பூன்
  முந்திரி - 4
  கரம் மசாலா - 1 டீஸ்பூன்  செய்முறை :

  பட்டாணியையும் வாழைப்பூவையும் வேகவைத்து எடுங்கள்.

  கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  மிளகாய் வற்றல், சோம்பு, பொட்டுக்கடலை, தனியா, முந்திரி ஆகியவற்றை ஊறவைத்து அவற்றுடன் தேங்காய் சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளுங்கள்.

  வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

  வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்குங்கள்.

  தக்காளி குழைய வெந்ததும் வேகவைத்த வாழைப்பூவையும் பட்டாணியையும் சேர்த்துக் கிளறுங்கள்.

  அடுத்து அதில் அரைத்த விழுதை ஊற்றி, கரம் மசாலா துள், மஞ்சள் தூள் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள்.

  குழம்பு திக்கான பதம் வந்ததும் கடுகு தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவி இறக்குங்கள்.

  சூப்பரான வாழைப்பூ குருமா ரெடி.

  இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சப்பாத்தி, நாண், தோசை, பூரி, இட்லிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மீல் மேக்கர் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
  தேவையான பொருட்கள் :

  மீல் மேக்கர் - 1 கப்
  பெ.வெங்காயம் - 2
  தக்காளி - 2
  இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
  பச்சை மிளகாய் - 2
  மஞ்சள் தூள், மிளகாய் தூள் - சிறிதளவு
  மல்லித்தூள் - அரை டீஸ்பூன்
  சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
  கரம் மசாலா - அரை டீஸ்பூன்
  தேங்காய் பால் - கால் கப்
  எண்ணெய், உப்பு - தேவைக்கு  செய்முறை:

  வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  மீல் மேக்கரை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்துக்கொள்ளவும்.

  பின்னர் நீரை வடிகட்டி மீல் மேக்கரை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

  வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

  வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

  தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத்தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து கிளறி விடவும்.

  ஓரளவு வெந்ததும் மீல் மேக்கர், தேங்காய் பால், உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

  ருசியான மீல் மேக்கர் குருமா ரெடி.

  இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.