search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Power outage"

    • மேகங்கள் சூழ்ந்து மழை தூறலும் பல பகுதிகளில் காணப்பட்டது.
    • சென்னையில் இன்று காலை திடீரென மின்தடை ஏற்பட்டது.

    சென்னை:

    சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேகங்கள் சூழ்ந்து மழை தூறலும் பல பகுதிகளில் காணப்பட்டது. இரவிலும் லேசான மழை பெய்து வந்த நிலையில் சென்னையில் இன்று காலை திடீரென மின்தடை ஏற்பட்டது.

    தலைமை செயலகம், எழிலகம், அண்ணாசாலை, எழும்பூர், ஆயிரம் விளக்கு, புரசைவாக்கம் உள்ளிட்ட மத்திய சென்னை பகுதியிலும், வட சென்னை பகுதியிலும் மின் தடை ஏற்பட்டது.

    காலை 10 மணி முதல் 11.30 மணி வரை மின்சாரம் தடைப்பட்டதால் அரசு அலுவலகங்கள் சிறிது நேரம் இருளில் மூழ்கின. பின்னர் ஜெனரேட்டர் இயக்கப்பட்டு மின் வினியோகம் வழங்கப் பட்டது.

    அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள், ஓட்டல்கள், ஜவுளி கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறு வனங்களும் இதனால் சிறிது நேரம் பாதிக்கப் பட்டன.

    பெரம்பூர், மாதவரம், கொடுங்கையூர், வியாசர் பாடி, தண்டையார் பேட்டை, வண்ணாரப் பேட்டை, மணலி, அண்ணாநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டதால் வீடுகளில் வீடுகளில் இருந்து மக்கள் வெளியே வந்தனர்.

    எண்ணூரில் இருந்து மணலி துணை மின் நிலையத்திற்கு மின்சாரம் வரக்கூடிய மின் வழித்தடத் தில் ஏற்பட்ட தடை காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மணலி துணை மின் நிலையத்தில் இருந்து சென்னையின் முக்கிய பகுதிகளுக்கும் மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. அங்கு வரக்கூடிய மின்சாரம் தடைப்பட்டதால் பெரும் பாலான இடங்களில் மின் தடை ஏற்பட்டது.

    இதையடுத்து அதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். போர்க்கால வேகத்தில் பழுது சரி பார்க்கப்பட்டதை தொடர்ந்து பகல் 11.30 மணியளவில் படிப்படியாக மின் வினியோகம் சீரானது.

    • குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
    • வீடுகளை சுற்றிலும் வெள்ளநீர் இன்னும் வடியாமல் உள்ளதால் வெளியே வரமுடியாமல் தவித்தபடி உள்ளனர்.

    பொன்னேரி:

    மிச்சாங் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டியது. மேலும் ஆந்திரா பகுதியிலும் பலத்த மழைபெய்தது. இதனால் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் இருந்து 16 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பொன்னேரி அடுத்த சோமஞ்சேரி, சின்னக்காவனம், தத்தை மஞ்சி ஆகிய 3 இடங்களில் ஆரணி ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கிராமங்களுக்குள் புகுந்தது. ஆரணி ஆற்றின் கரை உடைந்து பாதிக்கப்பட்ட பகுதியில் இதுவரை மின்சாரம், குடிநீர் வழங்கப்படாததால் அப்பகுதி மக்கள் குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். 5 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று குடத்தில் தண்ணீர் பிடித்து வரும்நிலை ஏற்பட்டு உள்ளது.

    மேலும் சூறைக்காற்றில் பொன்னேரி, மீஞ்சூர் பகுதியில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்ததில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதம் அடைந்தன. இதனால் 4-வது நாளான இன்னும் பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு பகுதியில் மின்சப்ளை சீராகவில்லை. பொன்னேரி மூகா ம்பிகை நகர், சின்ன க்காவனம், பழவேற்காடு வைரங்குப்பம், கரிமணல், தாழங்குப்பம், பிரளயம்பாக்கம் சோமஞ்சேரி, கம்மார் பாளையம், மீஞ்சூர் அத்திப்ப ட்டு புதுநகர், மேலூர், அரியன்வாயல் உள்ளிட்ட பகுதி களில் இன்னும் மின்தடை உள்ளதால் பொது மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் வீடுகளை சுற்றிலும் வெள்ளநீர் இன்னும் வடியாமல் உள்ளதால் வெளியே வரமுடியாமல் தவித்தபடி உள்ளனர்.

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் உள்ளே புகுந்ததால் அப்பகுதி மக்கள் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பழவேற்காடு அடுத்த ஆண்டார் மடம் பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ளதால் படகில் சென்று வருகிறார்கள்.

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மருத்து வக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

    எனவே மருத்துவ க்கல்லூரி பகுதிகள், ஈஸ்வரி நகர், முனிசிபல்காலனி, திருவேங்கடம்நகர், கருப்ஸ் நகர், ஏ.வி.பி. அழகம்மாள் நகர், மன்னர் சரபோஜி நகர், மாதாக்கோட்டை, சோழன் நகர், தமிழ்ப்பல்கலைக்கழகம், மேல வஸ்தாசாவடி, பிள்ளையார்பட்டி, மானோ ஜிப்பட்டி, ரெட்டிபாளையம் ரோடு, காந்திபுரம், வஹாப் நகர், சப்தகிரிநகர், ஐஸ்வர்யா கார்டன், ராஜலிங்கம் நகர் மற்றும் அதனை சுற்றி உள்ள இடங்ளுக்கு நாளை காலை மணி 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • மருத்துவக்கல்லூரி சாலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி வெளியிட்டு ள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

    எனவே கரந்தை, பள்ளிஅக்ரஹாரம், பள்ளியேரி, திட்டை, பலோபநந்தவனம், சுங்கான் திடல், நாலுகால் மண்டபம், அரண்மனை பகுதிகள், விளார், நாஞ்சிக்கோட்டை, காவேரிநகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி.காலனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல், திருவையாறு உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவையாறு, மேலத்திருப்பூந்துருத்தி ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெற உள்ள பராமரிப்பு பணி காரணமாக திருவையாறு, கண்டியூர், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டைகரூர், கீழத்திருப் பூந்துருத்தி, மேலத்திருப்பூந்துருத்தி, திருவாலம் பொழில், நடுக்காவேரி, ஆச்சனூர், வைத்தியநாதன்பேட்டை, பனையூர், கடுவெளி, தில்லைஸ்தானம், பெரும்புலியூர், புனவாசல், விளாங்குடி, வில்லியநல்லூர், செம்மங்குடி, அணைக்குடி, திருப்பழனம், திங்களூர், ராயம்பேட்டை, காருகுடி, பொன்னாவரை, கல்யாணபுரம், புதுஅக்ரஹாரம், நடுக்கடை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பாராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது
    • நாளை மின் விநியோகம் இருக்காது

    பல்லடம் : 

    பல்லடம் அருகே பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பாராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 23-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள்: பனப்பாளையம், சிங்கனூா், பெத்தாம்பாளையம், கணபதிபாளையம், குங்குமம்பாளையம், மாதேஸ்வரன் நகா், மாதப்பூா், நல்லாகவுண்டம்பாளையம், ராயா்பாளையம் (ஒரு பகுதி).

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
    • செயற்பொறியாளர் தகவல்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நாளை 22-ந்தேதி மேற்கொள்ளப்பட உள்ளது.

    எனவே, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காவேரிப்பாக்கம்,திருப்பாற்கடல், அத்திப்பட்டு, சுமைதாங்கி, ஆலப்பாக்கம், கடப்பேரி, சங்கரமல்லூர், பாகவெலி, முசிறி, ஆகிய கிராம பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது என்று செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

    • வீரபாண்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (21-ந்தேதி) மேற்கொள்ளப்பட உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீரபாண்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (21-ந்தேதி) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆட்டையாம்பட்டி, வேலநத்தம், மருளையம் பாளையம், ெபத்தாம்பட்டி, ராஜா பாளையம், கூலிப்பட்டி, எட்டிமாணிக்கம்பட்டி, ராக்கிப்பட்டி, எஸ்.பாப்பாரப்பட்டி, சென்ன கிரி, முத்தனம்பாளையம், ஏரிக்காடு, வீரபாண்டி, பாலம்பட்டி, கோணயநாயக்கனூர், அரசம்பாளையம், புதுப்பாளையம், வாணியம்பாடி, பைரோஜி, உத்தமசோழபுரம், அரியானூர், சீரகாப்பாடி, சித்தனேரி உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை சேலம் தெற்கு மின்வாரிய செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார். 

    • தஞ்சை நகர துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தஞ்சை உதவி செயற்பொறியாளர் பாலநேத்திரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை நகர துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    எனவே தஞ்சை மேம்பாலம், சிவாஜிநகர், சீதா நகர், சீனிவாசபுரம், ராஜன் ரோடு, தென்றல்நகர், கிரி ரோடு, காமராஜ் ரோடு, ஆப்ரகாம்பண்டிதர்நகர், திருநகர், ஆண்டாள்நகர், எஸ்.பி.குளம், விக்னேஷ்வரநகர், உமாசிவன்நகர், வெங்டகடசலாபதி நகர், பி.ஆர்.நகர், ஜெபமாலைபுரம், சுந்தரபாண்டியன் நகர், கூட்டுறவு காலனி, களிமேடு - 3 களிமேடு-4, மேலவீதி, தெற்கு வீதி,பெரிய கோவில், செக்கடி ரோடு, மேல அலங்கம், ரெயிலடி, சாந்தபிள்ளைகேட், மகர்நோன்புச்சாவடி, வண்டிக்கார தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வி.பி. கோவில், சேவியர் நகர், சோழன்நகர், கல்லணை கால்வாய் ரோடு, திவான் நகர்,சின்னையாபாளையம், மிஷன் சர்ச் ரோடு, ஜோதி நகர், ஆடக்காரத்தெரு, ராதாகிருஷ்ணன் நகர், பர்மா பஜார், ஜூபிடர் தியேட்டர் ரோடு, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்.என்.எம்.ரஹ்மான் நகர், அரிசிக்காரதெரு, கொள்ளுபேட்டை தெரு, வாடிவாசல் கடை தெரு, பழைய மாரியம்மன் கோவில் ரோடு, ராவுத்தர் பாளையம், கரம்பை, சாலக்காரதெரு, பழைய பஸ் நிலையம், கொண்டி ராஜபாளையம், மகளிர் போலீஸ் நிலையம் , வ. உ .சி நகர், சிறுவர் சீர்திருத்த பள்ளி, ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை 21-ந் தேதி இந்த துைண மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    அவினாசி :

    அவினாசி மின்வாரிய செயற் பொறியாளர் பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

    அவினாசி அருகே உள்ள நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 21-ந் தேதி இந்த துைண மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட பச்சாம் பாளையம், பரமசிவம்பாளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், பொங்குபாளையம், காளம்பாளையம், பழைய ஊஞ்சப்பாளையம், புதுஊஞ்சப்பாளையம், குப்பாண்டம்பாளையம், துலுக்கமுத்தூர், நல்லாத்துப்பாளையம், வ.அய்யம்பாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம், வேலூர், மகாராஜா கல்லூரி, எஸ்.எஸ்.நகர், வீதிக்காடு, முட்டியங்கிணறு, திருமலை நகர், பெ.அய்யம்பாளையம் ஒரு பகுதி, கணக்கம்பாளையம், சிட்கோ ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    • கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    சேலம்:

    சேலம் கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி சிவதாபுரம், கந்தம்பட்டி, மேம்பாலம் நகர், நெடுஞ்சாலைநகர், கென்னடிநகர், வசந்தம் நகர், கிழக்கு திருவாக்கவுண்டனூர், மேத்தாநகர், காசக்காரனூர், கோனேரிக்கரை, கே.பி.கரடு வடபுறம், மூலப்பிள்ளை யார்கோவில், சண்முக செட்டிக்காடு, ஆண்டிப்பட்டி, வேடுகாத்தாம்பட்டி, திருமலைகிரி, புத்தூர், நெய்காரப்பட்டி,பெருமாம்பட்டி, சேலத்தாம்பட்டி, வட்டமுத்தம்பட்டி, மஜ்ரா கொல்லப்பட்டி, தளவாய்பட்டி, சர்க்கார் போடிநாயக்கன்பட்டி, கொல்லப்பட்டி, சுந்தர்நகர், மல்லமூப்பம்பட்டி, காந்தி நகர், சித்தனூர், கக்கன் காலனி, உடையார் தோட்டம், ராமகவுண்டனூர், எம்.ஜி.ஆர்.நகர், காமநாய்க்கன்பட்டி, அரியாகவுண்டம்பட்டி, சோளம்பள்ளம் மற்றும் பழைய சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை செயற்பொறியாளர் ராஜவேலு தெரிவித்துள்ளார்.

    • ேசாழவந்தானில் வருகிற 21-ந்தேதி மின்தடை ஏற்படும்.
    • இந்த தகவலை சமயநல்லூர் மின்செயற் பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 21-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) நடைபெற இருப்ப தால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சோழவந்தான், தச்சம்பத்து வாட்டர் பம்பிங் ஸ்டேசன், இரும்பாடி, மீனாட்சி நகர், ஜெயராம் டெக்ஸ், விஜய லட்சுமி பேக்டரி, மேலக்கால், தாராப்பட்டி, கச்சிராயி ருப்பு, கீழமட்டையான், மேலமட்டையான், நாராய ணபுரம், தேனூர், திருவேட கம், தச்சம்பத்து, மேலக்கால் பாலம், தென்கரை, ஊத்துக் குழி, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித் துறை, சித்தாதிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இந்த தகவலை சமயநல்லூர் மின்செயற் பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    • திண்டுக்கல் அங்கு நகர் துணைமின் நிலையத்தில் நாளை 18-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அங்கு நகர் துணைமின் நிலையத்தில் நாளை 18-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திண்டுக்கல் நகர், செட்டி நாயக்கன்பட்டி, என்.எஸ்.நகர், குரும்பபட்டி, பொன்மாந்துரை, விராலி ப்பட்டி, சென்னமநாயக்க ன்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×