search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "oath"

    • தமிழ்நாடு ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்வி.
    • ஆளுநரின் செயல்பாடுகள் மிகவும் கவைல அளிக்கும் விதமாக இருப்பதாக கருத்து.

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி உள்ளார்.

    பொன்முடி எம்.எல்.ஏ.வாக வந்துள்ள நிலையில் அவரை மீண்டும் அமைச்சராக்க முடிவு செய்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இந்த கடிதத்துக்கு கவர்னர் மாளிகையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

    டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய கவர்னர் ஆர்.என்.ரவி, இன்னும் பொன்முடியை அமைச்சராக பதவி ஏற்க வரும்படி அழைப்பு விடுக்கவில்லை.

    இந்நிலையில் பொன்முடி அமைச்சர் பதவி விவகாரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

    இந்த மனு தொடர்பான விசாரணையின்போது, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுத்த தமிழ்நாடு ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் நேற்று சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தது.

    ஆளுநரின் செயல்பாடுகள் மிகவும் கவைல அளிக்கும் விதமாக இருப்பதாக தலைமை நீதிபதி கருத்து தெரிவித்து இருந்தார்.

    24 மணி நேரத்திற்குள் சாதகமான தகவலை தெரிவிக்காவிட்டால், தமிழ்நாடு ஆளுநருக்கு உச்சநீதிமன்றமே உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    ஆளுநருக்கு காலக்கெடு விடுக்கப்பட நிலையில், இன்று காலை 9 மணிக்கு திமுக எம்எல்ஏ பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • தேவகோட்டையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மரியாதை செலுத்தினர்.
    • மாவட்ட செயலாளர் அசோகன் உறுதிமொழி வாசிக்க அனைவரும் திரும்பக்கூறி எடுத்துக்கொண்டனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆர்ச் பூங்கா அருகில் ஓ.பி.எஸ்.அணி அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆரின் 35-வது ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் அசோகன், கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் தலைமை தாங்கினார்.

    திருச்சி-ராமேசுவரம் சாலையில் சங்கரபதி அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் அசோகன், கொள்கை பரப்பு செயலா ளர் மருதுஅழகுராஜ் தலைமையில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்ப ட்டோர் தேவகோட்டை ஒன்றிய அலுவலகத்தில் இருந்து மவுன ஊர்வலமாக புறப்பட்டனர்.

    திருப்பத்தூர் சாலை வழியாக தியாகிகள் அருகே அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் மாவட்ட செயலாளர் அசோகன் உறுதிமொழி வாசிக்க அனைவரும் திரும்பக்கூறி எடுத்துக்கொண்டனர்.

    மாநில மாணவரணி செயலாளர் ஆசைத்தம்பி, நகர் செயலாளர்கள் ரவிக்குமார், பாலா, ஒன்றிய செயலாளர்கள் மருத்தாணி வினோத், தியாகராஜன், ராமசந்திரன், பாவாசி கருப்பையா, கண்ணங்குடி ஒன்றிய செயலாளர்கள் உலக்குடி பாலசுப்பிர மணியன், பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கஞ்சா உபயோகபடுத்த மாட்டேன்.
    • இந்திய தண்டனை சட்டம் 109ன் கீழ் கைது செய்யபட்டவர்கள் உறுதிமொழி.

    பல்லடம் :

    பல்லடம், காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலைய எல்லைப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வது, மற்றும் உபயோகித்து வந்து,போலீசாரால் இந்திய தண்டனை சட்டம் 109ன் கீழ் கைது செய்யபட்ட 27 பேர் மனம் திருந்தி வாழவும், இனி வரும் நாட்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட மாட்டேன்,கஞ்சா உபயோகபடுத்த மாட்டேன்என்கிற உறுதி மொழியை பல்லடம் வட்டாட்சியரும், வருவாய் துறை வட்ட நடுவருமான நந்தகோபால் முன்னிலையில் ஏற்றனர்.

    அவர்கள் ஒரு ஆண்டு பிணையத்தால் (ஜாமீன்) விடுவிக்கப்பட்டு போலீசாரின் கண்காணிப்பில் இருப்பார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

    நாட்டின் புதிய தலைமை தகவல் ஆணையரான சுதிர் பார்கவாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். #ChiefInformationCommissioner #SudhirBhargava #RamnathKovind
    புதுடெல்லி:

    நாட்டின் தலைமை தகவல் ஆணையராக இருந்த ஆர்.கே.மாத்தூர், தகவல் ஆணையர்கள் யசோவர்தன் ஆசாத், ஸ்ரீதர் ஆச்சார்யலு, அமிதவா பட்டாச்சார்யா ஆகியோரின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து புதிய ஆணையர்களும், தலைமை ஆணையரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நியமனத்துக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை அடுத்து, மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக பெயர்களை அறிவித்துள்ளது.

    நாட்டின் புதிய தலைமை தகவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்ட சுதிர் பார்கவாவுக்கு டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.



    இந்த நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, நிதி மந்திரி அருண் ஜெட்லி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

    மேலும், ஓய்வுபெற்ற ஐஎப்எஸ் அதிகாரிகள் யஷ்வர்தன் குமார் சின்ஹா, வனஜா என் சர்னா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி நீரஜ் குமார் குப்தா, முன்னாள் சட்ட செயலாளர் சுரேஷ் சந்திரா ஆகியோர் தகவல் ஆணையர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். #ChiefInformationCommissioner #SudhirBhargava #RamnathKovind
    ×