search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lakshmi"

    • பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாத முனிவரும் சிதம்பரம் தலத்தில் பரம்பொருளின் ஆனந்தக்கூத்து தரிசனம் பெற்றனர்.
    • திருக்கூத்து தரிசனம் அருளிச் செய்யுமாறு ஈசனை நோக்கித் தவம் புரிந்தனர்.

    பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாத முனிவரும் சிதம்பரம் தலத்தில் பரம் பொருளின் ஆனந்தக் கூத்து தரிசனம் பெற்றனர்.

    இதை அறிந்த தெய்வங்களும் தேவர்களும் சிவானந்தக்கூத்து காண விரும்பினார்கள்.

    பிரம்மன் விஷ்ணு லட்சுமி சரஸ்வதி பராசக்தி இந்திரன் முதலிய தேவர்கள் எல்லோரும் பூமியில் உள்ள தில்லை வனத்தை அடைந்தனர்.

    ஆகாயத்தலத்துப் பொன்மேனி அழகனைத் தொழுது போற்றிப் பூஜை செய்து வழிபட்டனர்.

    தில்லையம்பலத்தை பொன்னம்பலமாக்கிப் பொற்கூரை வேய்ந்து திருப்பணி செய்தனர்.

    திருக்கூத்து தரிசனம் அருளிச் செய்யுமாறு ஈசனை நோக்கித் தவம் புரிந்தனர்.

    பரமேஸ்வரன் மார்கழி மாதம் திருவாதிரை திருநாளன்று (ஆருத்திரா) தெய்வங்களுக்கும், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் ஆனந்த நடனத் திருக்காட்சி கொடுத்து அருளினார்.

    ஆனந்த நடராஜரின் திருக்காட்சி கண்டு ஆடிப்பாடி மகிழ்ந்த தேவர்களும், தேவியர்களும் விழுந்து வணங்கிப் பணிந்தனர்.

    பிரம்மன் இறைவனது திருநடனத்திற்கு கீதம் பாடலானார். மகாவிஷ்ணு புல்லாங்குழல் ஊதினார்.

    ருத்திரன் மிருதங்கம் வாசித்தார். பராசக்திபாடினாள். சரஸ்வதி வீணை வாசித்தாள்.

    லட்சுமி தாளம் போட்டாள். நந்தி குடமுழா இயக்கினார்.

    இவ்வாறு எல்லோரும் கண்டு களித்துப்பணி புரியப் பரமன் தெய்வங்களுக்கும் தேவர்களுக்கும் ஆனந்த நடனக் காட்சியளித்தார்.

    • கிருஷ்ண தலங்களில் திருமகள் ருக்மிணி எனும் பெயரில் அவருடன் வீற்றிருக்கிறாள்.
    • எட்டாவது அவதாரமான பலராம அவதாரத்தில் ரேவதி என்னும் பெயரில் லட்சுமி மகிழ்ந்திருந்தாள்.

    திருமால் அன்பர்களை காத்து அருள்புரிய எடுத்த பத்து அவதாரங்களில் மீன், ஆமை அவதாரங்கள் அவசர நிமித்தம் காரணமாக எடுத்து முடிக்கப்பட்ட அவதாரங்கள் ஆகும்.

    இவ்விரு அவதாரங்களிலும் மகாலட்சுமியை தேவியாகச் சொல்லவில்லை.

    திருமால் ஆமை அவதாரம் எடுத்து மலையைத் தாங்கியதாலேயே தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைய முடிந்தது. அப்போது பாற்கடலிலிருந்து லட்சுமி தோன்றினாள்.

    திருமால் ஆமை வடிவை நீக்கி அழகிய கோலத்துடள் சென்று அவளை மணந்து கொண்டார்.

    மூன்றாவது அவதாரமான வராக அவதாரத்தில் திருமால் கடலுக்கு அடியில் சென்று அங்கே ஒளித்து வைக்கப்பட்டிருந்த திருமகளின் மறுகூறான பூமிதேவியை மேற்கொண்டு வந்து உலகைப் படைத்தார்.

    அவரைப் பூவராகம் என்று போற்றுகின்றனர்.

    அந்நிலையில் அவர் மார்பில் வாழும் திருமகள் அகில வல்லி என்று அழைக்கப்படுகிறாள்.

    சில ஆலயங்களில் திருமகளை மடிமீது கொண்டுள்ள லட்சுமி வராகரையும், சில தலங்களில் புவிமகளை மடிமீது கொண்டுள்ள வராகரையும் காண்கிறோம்.

    ஆதிவராக ஷேத்திரமான ஸ்ரீமுஷ்ணத்தில் வராகமூர்த்தி இரு பெரும் தேவியருடன் காட்சியளிக்கின்றார்.

    நரசிம்ம அவதாரத்தில் அவர் இரண்யனின் குடலைப் பிடுங்கி மாலையாக அணிந்தும், ரத்தத்தைக் குடித்தும், ஆர்ப்பரித்தார்.

    அவருடைய கோபக் கனல் எல்லாரையும் வருத்தியது. தேவர்கள் அவருடைய உக்கிரமயமான கோபத்தை எளிதில் தணிக்கும் ஆற்றல் மகாலட்சுமிக்கே உண்டு என்பதால் அவளைப் பணிந்து சாந்தப்படுத்துமாறு வேண்டினர்.

    மகாலட்சுமி நரசிம்மரை அணுகிக் கோபத்தை மாற்றினாள்.

    பிறகு திருமால் அவளைத் தன் மடிமீது அமர்த்திக் கொண்டு லட்சுமி நரசிம்மனாக அனைவருக்கும் அருள்புரிந்தார்.

    இதையொட்டி நரசிம்மர் 'மாலோலன்' என்று அழைக்கப்படுகிறார்.

    ஏழாவது அவதாரமான ராம அவதாரத்தில் மகாலட்சுமி ஜனக புத்ரியாக சீதையாக தோன்றி, ராமபிரானை மணந்தாள்.

    அப்போது அவளுக்குச் சீதா, ஜானகி, மைதிலி, வைதேகி, ராகவி முதலான பெயர்கள் வந்தன.

    எட்டாவது அவதாரமான பலராம அவதாரத்தில் ரேவதி என்னும் பெயரில் லட்சுமி மகிழ்ந்திருந்தாள்.

    ஒன்பதாவது அவதாரமான கிருஷ்ண அவதாரத்தில் மகாலட்சுமி வைஷ்க மன்னனின் மகளாகத் தோன்றி ருக்மணி எனும் பெயரில் வளர்ந்து கிருஷ்ணனை மணந்தாள்.

    சிவனால் எரிக்கப்பட்டுப் பார்வதியால் உருவமில்லாதவனாக உயிர்ப்பிக்கப்பட்ட மன்மதன் அவளுக்குப் புத்யும்னன் எனும் பெயரில் மகனாகத் தோன்றினான்.

    கிருஷ்ண தலங்களில் திருமகள் ருக்மிணி எனும் பெயரில் அவருடன் வீற்றிருக்கிறாள்.

    திருவல்லிக்கேணிப் பார்த்தசாரதி ஆலயத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பார்த்தசாரதி கோலத்தில் நிற்க, அவருக்கு வலப்புறம் பெரிய வடிவில் ருக்மணியைக் காணலாம்.

    • மகாலட்சுமி ஒரே தெய்வமாக இருந்தாலும் பல சொரூபங்களாக அருள்புரிகிறாள்.
    • கருணை வேண்டும்போது காருண்ய லட்சுமியாக அருள்கிறாள்.

    விஷ்ணு ஆலயங்களில் மகாலட்சுமியை "தாயார்" என்று வணங்குகிறோம். முதலில் தாயாரை வழிப்பட்ட பிறகு பெருமாளை சேவிக்க வேண்டும்.

    மகாலட்சுமி ஒரே தெய்வமாக இருந்தாலும் பல சொரூபங்களாக அருள்புரிகிறாள்.

    மகாலட்சுமி வரமளிக்கும் நாளில் வரலட்சுமி ஆகிறாள்.

    செல்வம் வேண்டும்போது தனலட்சுமி

    கல்வி வேண்டும்போது வித்யாலட்சுமி

    தைரியம் வேண்டும்போது வீரலட்சுமி

    வெற்றியை வேண்டும்போது விஜயலட்சுமி

    புகழ் வேண்டும்போது கீர்த்திலட்சுமிணீ

    சாந்தம் வேண்டும்போது சாந்த லட்சுமி

    கருணை வேண்டும்போது காருண்ய லட்சுமி

    உடல்நலம் வேண்டும்போது ஆரோக்கிய லட்சுமி

    ஞானத்தை வேண்டும்போது ஞானலட்சுமி

    மோட்சத்தை வேண்டும்போது மோட்ச லட்சுமி

    சந்தோஷம் வேண்டும்போது ஆனந்த லட்சுமி

    திருமணம் வேண்டும்போது வைபவ லட்சுமி

    நிலம், வீடு, ஆபரணம் வேண்டும்போது ஐஸ்வர்ய லட்சுமி

    விவசாயம் செய்யும் விவசாயிகள் வேண்டும்போது தானிய லட்சுமி

    அழகை வேண்டும்போது சவுந்தர்ய லட்சுமி

    மகப்பேறு வேண்டும்போது சந்தான லட்சுமி

    நோயிலிருந்து மீளவேண்டும்போது சக்தி லட்சுமி

    சாமர்த்தியம் வேண்டும்போது பக்தி லட்சுமி

    • முதலில் விநாயகர் பாடல் எல்லோருக்கும் தெரியும்.
    • கீழ்க்கண்ட போற்றியை 108, 1008 பூக்களை மட்டும் வைத்துக் கொண்டு உள்ளன்போடு போற்றினாலே போதும்.

    துதிப்பாடல்கள் மூல மந்திரங்கள், காயத்ரி மந்திரங்கள் தெரியவில்லையே என யாரும் பூஜை செய்யாமல் இருந்து விட வேண்டாம்.

    முதலில் விநாயகர் பாடல் எல்லோருக்கும் தெரியும். அதை சொல்லியே பின் கீழ்க்கண்ட போற்றியை 108, 1008 பூக்களை மட்டும் வைத்துக் கொண்டு உள்ளன்போடு போற்றினாலே போதும்.

    1. சகல சித்தியளிக்கும் ஆதிலட்சுமியே போற்றி!

    2. பிள்ளைப்பேறு அளிக்கும் சந்தான லட்சுமியே போற்றி!

    3. ராஜமரியாதை தரும்கஜலட்சுமியே போற்றி!

    4. செல்வச் செழிப்பைத் தரும்தனலட்சுமியே போற்றி!

    5. தான்ய விருத்தியளிக்கும் தான்ய லட்சுமியே போற்றி!

    6. எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றியைத் தரும் விஜயலட்சுமியே போற்றி!

    7. சவுபாக்கியங்கள் தரும் மகாலட்சுமியே போற்றி!

    8. மனதிலும், உடலிலும் சோர்வை அகற்றி தைரியத்தையும், தெம்பையும், வீரத்தையும் அருளும் வீரலட்சுமியே போற்றி!

    9. அனைத்து நன்மைகளையும் வரமாகத் தரும் வரலட்சுமியே போற்றி! போற்றி!!.

    • கார்த்திகை மாதப் பஞ்சமியை ‘ஸ்ரீபஞ்சமி’ என்று அழைத்து அன்று லட்சுமி பூஜை செய்கின்றனர்.
    • சுக்ரவார விரதம் வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமியை தியானித்து வழிபட செல்வ வளம் பெருகும்.

    ஆவணி மாதம் வளர்பிறை அஷ்டமியும் லட்சுமி விரதத்திற் குரிய காலமாகும். ஆவணி வளர்பிறைப் பஞ்சமிக்கு 'மகாலட்சுமி பஞ்சமி' என்று பெயர்.

    அன்று தொடங்கி அஷ்டமி வரை நான்கு நாட்கள் வழிபடுவது மகாலட்சுமி விரதம் ஆகும்.

    கார்த்திகை மாதப் பஞ்சமியை 'ஸ்ரீபஞ்சமி' என்று அழைத்து அன்று லட்சுமி பூஜை செய்கின்றனர்.

    அன்று அஷ்ட லட்சுமிகளுக்குப் பால் நிவேதனம் செய்து, வருபவர்களுக்கு வழங்கினால் தோஷங்கள் நீங்கும்.

    ஐப்பசி மாதப் பவுர்ணமியில் மகாலட்சுமியை வழிபடச் செல்வம் பெருகும்.

    ஐப்பசி அமாவாசையன்று (தீபாவளிக்கு அடுத்த நாள்) மகாலட்சுமி பூஜை செய்யப்பட வேண்டும்.

    புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை அஷ்டமி வரை 16 நாட்கள் விரதமிருந்து மகாலட்சுமியை வழிபடுவது சோடச லட்சுமி விரதமாகும். இதனால் 16 செல்வங்களையும் நிறைவாக பெற்று வாழலாம்.

    இந்நாட்களில் ஒரு வேளை பகலில் மித உணவு உண்டு, மாலையில் ஸ்ரீ மகாலட்சுமி மற்றும் அஷ்ட லட்சுமிகளை வணங்கி, நிவேதனம் செய்த பால் பழம் உண்டு விரதம் முடிப்பது பழக்கம் ஆகும்.

    சுக்ரவார விரதம் வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமியை தியானித்து வழிபட செல்வ வளம் பெருகும்.

    நவராத்திரி லட்சுமி விரதம் சாரதா நவராத்திரியில் 4, 5, 6ம் நாட்களில் லட்சுமிவரும் நாளாகக் கருதி விரதம் செய்யலாம்.

    பைரவ லட்சுமி விரதம் புளிப்புப் பண்டங்கள் சேர்க்காத படையல்களை வைத்து வெள்ளிக்கிழமை தொடங்கி அடுத்து வரும் 8 வெள்ளிக்கிழமைகள் செய்து முடிக்க வேண்டும்.

    எப்படி அழைத்தாலும் வரக்காத்திருக்கும் வரலட்சுமி விரத நாளில் நமது வீட்டில் உள்ள பூஜைப் பொருட்களை பயன்படுத்தி எளிமையாகவும், பூஜை செய்யலாம்.

    • இந்த மலைக் கோவிலில் தனிச் சந்நிதியில் அமிர்தவல்லித் தாயார் எழுந்தருளியுள்ளார்
    • இங்கு தாயார் அமிர்தவல்லி திருச்சந்திதியில் ஒரு பெரிய தேன்கூடு உள்ளது.

    உத்திரமேரூர்:- உத்திரமேரூர் திருத்தலத்தின் தாயார் ஆனந்த வல்லி ஆவார். தாயாருக்குத் தனிச் சந்நிதி உண்டு. இப்பிராட்டியாரின் திருவருளால் மாங்கல்ய பாக்கியம், பிள்ளைப்பேறு முதலியன கிடைப்பதால் இத்தலத்திற்குத் திருமாங்கல்யம் அதிக அளவில் காணிக்கையாகக் கிடைக்கிறது. அழகிய அஷ்டாங்க விமானம் கொண்ட அற்புதத் தலம் இது.

    காஞ்சீபுரம்:- காஞ்சீபுரம் ஸ்ரீ அஷ்டபுஜம் திருக்கோவிலின் தாயார் புஷ்பவல்லி ஆவார். பகவானின் திரு நாமம் அஷ்டபுஜத்தான் என்பது. இத்தலத்தில் ஸ்ரீ வராகப் பெருமாள் தாயாரைத் தன் மடியில் வைத்துக் கொண்டு சேவை சாதிக்கிறார்கள். இது வன்றி ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீலஷ்மி தேவிக்கென தனிச் சந்நிதி உள்ளது.

    சோழிங்கபுரம்:- வடஆற்காடு மாவட்டம் அரக்கோணத்திலிருந்து மேற்கே சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம் சோழிங்கபுரம் ஆகும். இந்த மலைக் கோவிலில் தனிச் சந்நிதியில் அமிர்தவல்லித் தாயார் எழுந்தருளியுள்ளார். அண்டிவரும் அன்பர்களுக்கு அமிர்தமயமான பலன் களை வழங்கி வருகிறார்.

    திருத்தங்கல்:-விருதுநகர் மாவட் டம் திருத்தங்கல் என்னும் திருத்தலத்தில் முனிவர்களின் வேண்டுகோளுக் கிணங்க திருமகள் அருண கமல மகாதேவி (செங்கமல நாச்சியார்) என்னும் திரு நாமத்துடன் திருநின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார்.

    திருக்கண்ண மங்கை:-திரு வாரூருக்கு அடுத்துள்ள திருத்தலம் திருக் கண்ண மங்கையாகும். இங்கு தாயார் அமிர்தவல்லி திருச்சந்திதியில் ஒரு பெரிய தேன்கூடு உள்ளது. பல ஆண்டுகளாக இத்தேன்கூடு இருந்து வருவதாகக் கூறுகிறார்கள். முனிவர்கள் தேனீ வடிவத்தில் இருந்து தாயாரையும் பெருமாளையும் சேவித்து வருவதாக ஐதீகம்.

    உத்தமர்கோவில்:- திருச்சிக்கு அருகில் உள்ள திருத்தலம் பிச்சாண்டார் கோவிலாகும். உத்தமர் கோவில் என்றும் இதனை அழைப்பர். சிவன், பிரும்மா, விஷ்ணு மூவருக்கும் தனிச் சந்நிதிகள் ஒரே ஆலயத்தினுள் அடங்கியுள்ளன. இந்த அற்புதத் திருத்தலத்தின் நாச்சியார் பூர்ணவல்லித் தாயார் ஆவர். பூர்வா தேவி என்றும் அழைக்கப் பெறுகிறார்.

    • தெய்வ பக்தி உடையவர்களிடத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.
    • தர்ம வழியில் நடப்பவர்களிடத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.

    1. சிறந்த ஆற்றல் உடையவர்கள்,

    2. துணிவுடையவர்கள்,

    3. கோபம் கொள்ளாதவர்கள்,

    4. தெய்வ பக்தி உடையவர்கள்,

    5. செய் நன்றி மறவாதவர்கள்,

    6. ஐம்புலனை அடக்குபவர்கள்,

    7.சத்துவ குணத்தை உடையவர்கள்,

    8.தர்ம வழியில் நடப்பவர்கள்,

    9. பிறர் மனதை அறிபவர்கள்,

    10. காலத்தை வீணாக்காதவர்கள்.

    11. பசுக்களைப் பராமரிப்பவர்கள்,

    12. கற்றவர்களை மதிப்பவர்கள்,

    13. எவற்றையும் தூய்மையாக வைத்திருப்பவர்கள்,

    14. பொறுமை கொண்டவர்கள்,

    15. ஊக்கத்தோடு உழைப்பவர்கள்,

    16. இயற்கையை வளர்ப்பவர்கள்,

    17. சத்தியம் தவறாதவர்கள்,

    18. சொன்னபடி நடப்பவர்கள்,

    19. நேர்மையோடு வாணிகம் செய்பவர்கள்,

    20. அன்னதானம் செய்பவர்கள்.

    21. கற்றோர் வழி நடப்பவர்கள்,

    22. விருந்தினரை உபசரிப்பவர்கள்,

    23. உள்ளன்போடு நடப்பவர்கள்,

    24. பெற்றோரை மதிப்பவர்கள்,

    25. கற்பித்த குருவைத் தொழுபவர்கள்,

    26. சுறுசுறுப்புடன் பணியாற்றுபவர்,

    27. அகந்தை அற்றவர்கள்,

    28. பிறர் கஷ்டத்தை துயர் களைபவர்கள்,

    29.வெள்ளை உடை உடுத்துபவர்கள்,

    30. பொறாமை கொள்ளாதவர்கள்,

    31. பகைமை பாராட்டாதவர்கள்,

    32. துணிவாகச் செயல்படுபவர்கள்,

    33.பொது நலம் விரும்புகிறவர்கள்,

    34. ஊனமுற்றோர்க்கு உதவுபவர்கள்,

    35. நித்திய கர்மத்தை அனுஷ்டிப்பவர்கள்,

    36. பேராசை கொள்ளாதவர்கள்,

    37. அழகிய தோற்றம் கொண்டவர்கள்,

    38. கற்பு நெறி காப்பவர்கள்,

    39.பிரதிபலனை எதிர் பார்க்காதவர்கள்,

    40. பிறன்மனை நோக்காதவர்கள்.

    41. அதிகாலை எழுபவர்கள்,

    42. நல்ல நோக்கத்திற்காகப் பாடுபடுபவர்கள்,

    43. இனிமையாகப் பேசுபவர்கள்,

    44. புன்னகை முகம் கொண்டவர்கள்,

    45. சங்குகள்,

    46. மாவிலைகள்,

    47. யானைகள்,

    48. ஸ்வத்திகா சின்னம்,

    49. கண்ணாடி,

    50. குங்குமம், மஞ்சள்,

    51. சந்தனம், பஞ்சகவ்யம்,

    52.வெற்றிலை,

    53.கோலம்,

    54.திருமண சூர்ணம்,

    55. கும்பம், தீபச்சுடர் ஒளி, கற்பூர ஜோதி,

    56. வாழைமரம்,

    57. நீதிநெறி வழுவாதவர்கள்,

    58.வீரம் உடையவர்கள்,

    59. விவேகம் உடையவர்கள்.

    • மகாவிஷ்ணுவுக்கு பிடித்த துளசி லட்சுமியின் அம்சம் ஆகும்.
    • வாழை, மாவிலை, எலுமிச்சம் பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.

    மகாவிஷ்ணுவுக்கு பிடித்த துளசி லட்சுமியின் அம்சம் ஆகும்.

    வீட்டில் துளசி மாடம் வைத்து வழிபட்டு வந்தால் எல்லா செல்வங்களும் கிடைக்கும்.

    வாழை, மாவிலை, எலுமிச்சம் பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.

    அதனால் தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப் படுகின்றன.

    தலை முடியின் முன்வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால் மணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர்.

    நெற்றியின் இரண்டு புருவங்களுக்கு இடையில் ஆக்ஞா சக்கரம் உள்ளது.

    ஆத்ம சக்தி பிரம்மத்தை அடைய நெற்றியின் புருவ மத்தியில் குங்குமம் இட வேண்டும்.

    தீபாவளி அன்று அதிகாலை மட்டும் மகாலட்சுமி நல்லெண்ணையில் வாசம் செய்கிறாள்.

    மேலும் யானையின் முகத்திலும், குதிரையின் முகத்திலும் வாசம் செய்கிறாள்.

    • ஆதிகாலத்தில் வெட்ட வெளிகளில்தான் ஹோமங்கள், யாகங்கள் நடத்தப்பட்டன.
    • செல்வம் சேர்க்கும் தர்ம வழியே தனாகர்ஷண ஹோமம் ஆகும்.

    ஹோமங்கள் பல்வேறு நன்மைகளை வேண்டி நடத்தப்படுகிறது.

    ஆதிகாலத்தில் வெட்ட வெளிகளில்தான் ஹோமங்கள், யாகங்கள் நடத்தப்பட்டன.

    தற்போது எல்லா இடங்களிலும் தேவைக்கு ஏற்ப ஹோமம் செய்யப்படுகிறது.

    ஆயுள் பெற, பித்ருக்கள் ஆசி பெற என்று பலவகை ஹோமங் கள் உள்ளது.

    அந்த வகையில் செல்வம் பெறவும் ஹோமம் இருக்கிறது.

    அந்த வகை ஹோமத்துக்கு தானகர்ஷன ஹோமம் என்று பெயர்.

    செல்வம் சேர்க்கும் தர்ம வழியே தனாகர்ஷண ஹோமம் ஆகும்.

    வடநாட்டில் தனலட்சுமி பூஜை தீபாவளி சமயத்தில் கொண்டாடப்படுகிறது.

    தாம் சேர்த்த பொருளையெல்லாம் வட நாட்டவர்கள் அந்த யாக பூஜையில் வைத்து வழிபடுவர்.

    ஸ்ரீரங்கத்தில் தீபாவளியன்று 'ஜாலி அலங்காரம்' என கொண்டாடப்படுகிறது.

    தை மாத வெள்ளிக்கிழமை நல்ல முகூர்த்தத்தில் தானகர்ஷன ஹோமத்தைச் செய்யலாம்.

    இதனால் தொழில், வியாபாரம், வேலை இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானமும், செல்வமும் பெருகும்.

    தனம் சேர்வது தானம் செய்ய, தானம் செய்வது தர்மம் தலை காக்க என்று சொல்லுவார்கள்.

    எனவே மற்ற அருளைவிட லட்சுமியின் அருள் ஒன்றே தலை சிறந்தது.

    அதை பெற்றுத் தர வழி வகுக்கும் ஹோமம் இதுவாகும்.

    இந்த ஹோமம் செய்யும் தினத்தன்று அதிகாலையில் குளித்து, சுத்தமான துணி உடுத்தி, திலகமிட்டுக் கொண்டு ஹோமத்திற்குத் தயாராக வேண்டும். முதலில் பூஜையில் அமர்ந்து உரிய முறையில் சங்கல்பம் செய்து கொள்ளவும்.

    பிறகு நம் செல்வத்தையெல்லாம் ஒரு குடத்திலிட்டு அதில் சுவர்ண லட்சுமியை ஆவாஹனம் செய்ய வேண்டும்.

    வட்டமான ஹோம குண்டத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து பூஜிக்க வேண்டும்.

    தேவதா ஆஜ்யபாகம், சமீதா தானம் செய்யவும். பிறகு சுத்தமான பசுநெய், தாமரைப்பூ, தங்கக்காசு, சர்க்கரைப் பொங்கல் மூலம் 108 தடவை ஆவர்த்தி 'ஹிரண்யவர்ணா..-.' என்ற வேத மந்திரம் மூலம் ஹோமம் செய்யவும்.

    அடுத்து பிராயச்சித்த ஹோமம் செய்யவும். சொக்கத் தங்கம், பட்டு முதலியவற்றுடன் மட்டைத் தேங்காய் வைத்து பூர்ணாஹுதி செய்து ஹோமம் முடிக்கவும்.

    • அன்னை லட்சுமி தேவர்களுக்கு ஸ்ரீ என்னும் 10 வரிகள் உடைய சக்திமிக்க துதியை உபதேசித்தாள்.
    • முயற்சி செய்து மனப்பாடம் செய்து படித்தால் பெண்களுக்கு நல்ல காலம் வரும்

    அன்னை லட்சுமி தேவர்களுக்கு ஸ்ரீ என்னும் 10 வரிகள் உடைய சக்திமிக்க துதியை உபதேசித்தாள்.

    இந்த 10 வரி துதியை வெள்ளிக்கிழமைகளில் கூறுவோர் என் அருள்பெற்று அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கப்பெறுவர் என்று சொல்லி மறைந்தாள்.

    அந்த 10 வரி வருமாறு:

    நமோ லக்ஷ்மியை மகாதேவ்யை பத்மாயை ஸததும் நம!

    நமோ விஷ்ணு விலாசின்யை பத்மஸ்தாயை நமோ நம!!

    த்வம் சாட்சாத் ஹரிலட்சஸ்தா ஸீரே ஜ்யேஷ்டா வரோத்பவா!

    பத்மாக்ஷீ பத்ம ஸம்ஸாதாநா பத்மஹஸ்தா பராமயீ!!

    பரமானந்ததா அபாங்கீ ஹ்ருத சம்ஸ்ருத துர்க்கதி

    அருணா நந்தினீ லக்ஷ்மீ மகாலக்ஷ்மீ த்ரிசக்திகா

    ஸாம்ராஜ்யா ஸர்வஸீகதா நிதிநாதா நிதிப்ரதா

    நிதீஸ பூஜ்யா நிகமஸ்துதா நித்ய மகோந்நதி!!

    ஸம்பத்தி ஸம்மதா சர்வ சுபகா சம்ஸ்துதேஸ்வரி

    ரமா ரட்சாகரீ ரம்யா ரமணி மண்டலோத்தமா!!

    இந்த துதி 10 வரிகள் தான்.

    முயற்சி செய்து மனப்பாடம் செய்து படித்தால் பெண்களுக்கு நல்ல காலம் வரும் என்று இதன் விதி கூறுகிறது.

    • மந்திரத்தை வரலட்சுமி விரத நாளில் தொடங்கி ஒரு வருட காலம் வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வாருங்கள்.
    • உங்கள் முகத்தில் அழகும், முகவசீகரமும், தாராளமான பணவரவும், நிதிச்சேர்க்கையும் இருப்பதைக் காணலாம்.

    ஸ்ரீ த்ரிபுர ரகஸ்யம் என்னும் ரிக்வேத பகுதி நூலில் சொல்லப்பட்ட ஸ்ரீ என்னும் ஐஸ்வர்ய லட்சுமி வஸ்யரகஸ்ய

    மந்திரத்தை வரலட்சுமி விரத நாளில் தொடங்கி ஒரு வருட காலம் வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வாருங்கள்.

    உங்கள் முகத்தில் அழகும், முகவசீகரமும், தாராளமான பணவரவும், நிதிச்சேர்க்கையும் இருப்பதைக் காணலாம்.

    ஒரு சமயம் தேவர்கள் மகாலட்சுமியைக் குறித்துத் தவம், யாகம் செய்து கொண்டிருந்தனர்.

    அங்கு வந்த அசுரர்கள் அவர்களை கேலியும்,கிண்டலும் செய்து யாகப்பொருட்களையும், யாக மேடையையும் நாசப்படுத்தினர்.

    சிதறி ஓடிய தேவர்கள் மகாலட்சுமியை குறித்து தியானித்தனர்.

    அப்போது அன்னை லட்சுமி அஷ்டாதசபுஜ துர்க்கையாக (18 கைகளுடைய துர்க்கை) அவதாரம் எடுத்து அசுரர்களை விரட்டி வதம் செய்தாள்.

    உடனே தேவர்கள் பக்கம் திரும்பியவள் யாகத்தை சாஸ்திர விதியுடன் நடத்துங்கள் என்று கூறி அங்கே சாந்த சொரூபினியாக ஐஸ்வர்ய லட்சுமி வடிவம் கொண்டு அருளினாள்.

    • திருமகளோடு தொடர்புடைய சிவத் தலங்களின் தீர்த்தங்கள் ‘லட்சுமி தீர்த்தம்’ என்றழைக்கப்படுகின்றன.
    • ராமேஸ்வரத்திலுள்ள ராமநாதர் ஆலயத்தில் லட்சுமி தீர்த்தம் என்ற பெரிய திருக்குளம் உள்ளது.

    சோழர்கள் தாங்கள் அமைத்த சிவா லயங்களில் பெருமாளுக்குரிய அஷ்ட பரிவாரங்களில் ஒருத்தியாக

    மகா லட்சுமியை அமைத்து வழிபட்டனர்.

    தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அமைந்துள்ள பெரும்பாலான சோழர் காலச்சிவன் திருக்கோவில்களில்

    பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் தனிச்சன்னதியில் கிழக்கு நோக்கிக் கஜலட்சுமி அமைந்திருப்பதைக் காணலாம்.

    லட்சுமியின் தவ வலிமை கண்ட சிவன் பத்துக் கரங்களுடன் 'லட்சுமி தாண்டவம்' என்ற நடனத்தை ஆடினார்

    எனத் திருப்புத்தூர்ப் புராணம் எடுத்துரைக்கிறது.

    திருமகளோடு தொடர்புடைய சிவத் தலங்களின் தீர்த்தங்கள் 'லட்சுமி தீர்த்தம்' என்றழைக்கப்படுகின்றன.

    திருப்புத்தூர், பனையூர், திருவாரூர் (கமலாலயம்), திருநின்றவூர் முதலிய தலங்களில் லட்சுமி தீர்த்தங்கள்" உள்ளன.

    ராமேஸ்வரத்திலுள்ள ராமநாதர் ஆலயத்தில் லட்சுமி தீர்த்தம் என்ற பெரிய திருக்குளம் உள்ளது.

    அக்குளக் கரையில் லட்சுமி தேவியின் ஆலயம் உள்ளது.

    ×