search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சக்தி"

    • ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம் மும்பையில் நிறைவடைந்தது.
    • அப்போது பேசிய அவர், நாங்கள் சக்தியை எதிர்த்து போராடுகிறோம் என்றார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம் மும்பையில் நிறைவடைந்தது.

    அப்போது பேசிய ராகுல் காந்தி, நாங்கள் தனியொரு நபரான மோடி அல்லது பா.ஜ.க.வை எதிர்த்துப் போராடவில்லை. சக்தியை எதிர்த்து போராடுகிறோம். இந்த சக்தி வாக்குப்பதிவு இயந்திரம், வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் வசம் உள்ளது என பேசினார்.

    இந்நிலையில், பா.ஜ.க. எம்.பி. ரவிசங்கர் பிரசாத் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ராகுல் காந்தி நேற்று இந்து கலாசாரத்தை அவமதித்தார். அவர் தன் தவறை உணர்ந்து கொள்வார் என நினைத்தோம்.

    ஒருநாள் ஆன பிறகும் அந்த அறிக்கையை சரிசெய்யும் முயற்சிகள் இல்லை. கூட்டணி கட்சியினர் அவரது கருத்துக்கு அர்த்தத்தைத் தேடி, அதை நியாயப்படுத்த முயல்கின்றனர்.

    ராகுல் காந்தியின் கீழ் உள்ள காங்கிரஸ் கட்சி மகாத்மா காந்தியின் கொள்கைகள் மற்றும் லட்சியங்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சியாக இல்லை.

    பிரிவினை மனப்பான்மையும், மாவோயிஸ்ட் சிந்தனையும், இந்து விரோத சிந்தனையும் கொண்ட காங்கிரஸ் கட்சி இது. ராகுல் காந்தி இந்தக் கூறுகளின் ஆதிக்கத்தில் முழுமையாக இருக்கிறார்.

    பிற மத எண்ணங்கள் அல்லது கடவுள்களின் நம்பிக்கையின் அடிப்படைக் கொள்கைகள் குறித்து அதே இழிவான வார்த்தைகளில் பேச உங்களுக்கு தைரியம் உள்ளதா? என கேள்வி எழுப்பினார்.

    • இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உரையாற்றினார்.
    • ராஜாவின் ஆன்மா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இன்று ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் நிறைவு விழா நடைபெற்றது.

    இதில், இந்தியா கூட்டணியை சேர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட முக்கிய தலைவர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உரையாற்றினார்.

    இப்போது அவர் பேசியதாவது:-

    இந்து மதத்தில் சக்தி என்ற வார்த்தை உள்ளது. ஒரு சக்திக்கு எதிராக நாம் போராடுகிறோம். அது என்ன சக்தி என்பது கேள்வி.

    ராஜாவின் ஆன்மா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இல்லாமல் மோடியால் வெற்றிப் பெற முடியாது. இது உண்மை.

    ராஜாவின் ஆன்மா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் மற்றும் நாட்டின் ஒவ்வொரு நிறுவனத்தின் ஆன்மா அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறையிலும் உள்ளது.

    மகாராஷ்டிராவை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் காங்கிரசை விட்டு வெளியேறி என் அம்மாவிடம் கதறி அழுதார். 'சோனியா ஜி, இந்த சக்தியை எதிர்த்துப் போராட எனக்கு தெம்பு இல்லை என்பதில் நான் வெட்கப்படுகிறேன். நான் சிறைக்குச் செல்ல விரும்பவில்லை' என்றார்.

    ஆயிரக்கணக்கான மக்கள் இப்படி அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாத முனிவரும் சிதம்பரம் தலத்தில் பரம்பொருளின் ஆனந்தக்கூத்து தரிசனம் பெற்றனர்.
    • திருக்கூத்து தரிசனம் அருளிச் செய்யுமாறு ஈசனை நோக்கித் தவம் புரிந்தனர்.

    பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாத முனிவரும் சிதம்பரம் தலத்தில் பரம் பொருளின் ஆனந்தக் கூத்து தரிசனம் பெற்றனர்.

    இதை அறிந்த தெய்வங்களும் தேவர்களும் சிவானந்தக்கூத்து காண விரும்பினார்கள்.

    பிரம்மன் விஷ்ணு லட்சுமி சரஸ்வதி பராசக்தி இந்திரன் முதலிய தேவர்கள் எல்லோரும் பூமியில் உள்ள தில்லை வனத்தை அடைந்தனர்.

    ஆகாயத்தலத்துப் பொன்மேனி அழகனைத் தொழுது போற்றிப் பூஜை செய்து வழிபட்டனர்.

    தில்லையம்பலத்தை பொன்னம்பலமாக்கிப் பொற்கூரை வேய்ந்து திருப்பணி செய்தனர்.

    திருக்கூத்து தரிசனம் அருளிச் செய்யுமாறு ஈசனை நோக்கித் தவம் புரிந்தனர்.

    பரமேஸ்வரன் மார்கழி மாதம் திருவாதிரை திருநாளன்று (ஆருத்திரா) தெய்வங்களுக்கும், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் ஆனந்த நடனத் திருக்காட்சி கொடுத்து அருளினார்.

    ஆனந்த நடராஜரின் திருக்காட்சி கண்டு ஆடிப்பாடி மகிழ்ந்த தேவர்களும், தேவியர்களும் விழுந்து வணங்கிப் பணிந்தனர்.

    பிரம்மன் இறைவனது திருநடனத்திற்கு கீதம் பாடலானார். மகாவிஷ்ணு புல்லாங்குழல் ஊதினார்.

    ருத்திரன் மிருதங்கம் வாசித்தார். பராசக்திபாடினாள். சரஸ்வதி வீணை வாசித்தாள்.

    லட்சுமி தாளம் போட்டாள். நந்தி குடமுழா இயக்கினார்.

    இவ்வாறு எல்லோரும் கண்டு களித்துப்பணி புரியப் பரமன் தெய்வங்களுக்கும் தேவர்களுக்கும் ஆனந்த நடனக் காட்சியளித்தார்.

    • சந்திர கிரகத்துக்கு திங்கள் கிழமைகளில் வெள்ளை அலரி மலர் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.
    • புதன் கிரகத்துக்கு புதன் கிழமைகளில் துளசி கொண்டு பூஜிக்கலாம்.

    ராகு கால பூஜைக்கான மலர்கள்

    ராகு கால நேரம் என்பது வாரத்தில் அனைத்து நாட்களிலும் உண்டு.

    இதில் செவ்வாய் கிழமை மற்றும் வியாழக் கிழமைகளில் செய்யப்படும் ராகு கால பூஜை மிகவும் சிறப்பானது.

    இதைத்தவிர மற்ற நாட்களிலும் ராகு கால பூஜை செய்யலாம்.

    ஒவ்வொரு கிழமைகளில் ஒவ்வொரு விதமான மலர்களைக் கொண்டு பூஜை செய்வதால் வாழ்வில் நிம்மதியும் வளங்களும் பெருகும்.

    சூரிய கிரகத்துக்கு ஞாயிற்று கிழமைகளில் பாரிஜாதம் மற்றும் வில்வ மலர்களைக் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.

    சந்திர கிரகத்துக்கு திங்கள் கிழமைகளில் வெள்ளை அலரி மலர் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.

    செவ்வாய் கிரகத்துக்கு செவ்வாய் கிழமைகளில் செவ்வரளி, செந்தாமரை மற்றும் செம்பருதி மலர் கொண்டு ராகு கால பூஜை செய்வது செவ்வாய் தோஷம் விலகும்.

    புதன் கிரகத்துக்கு புதன் கிழமைகளில் துளசி கொண்டு பூஜிக்கலாம்.

    வியாழக்கிழமைகளில் குரு கிரகத்துக்கு மஞ்சள் நிற மலர்கள் மற்றும் சாமந்தி மலர் கொண்டு பூஜை செய்யவேண்டும்.

    சுக்கிரனுக்கு வெள்ளிக் கிழமைகளில் வெள்ளை அரளி கொண்டு பூஜை செய்யலாம்.

    சனி பகவானுக்கு சனிக் கிழமைகளில் நீல நிற சங்கு மலர் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

    மேற் கண்ட ஒவ்வொரு தினத்திலும் குறிப்பிட்ட மலர்களைக் கொண்டு பூஜை செய்தால் இல்லத்தில் அமைதி மற்றும் சுபிட்சம் பெருகும்.

    • மாலை 6 மணிக்கு தீபாராதனை முடிந்ததும், 6.30 மணிக்கு புஷ்பாஞ்சலி நடைபெறும்.
    • மஞ்சள் மலர்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித்தரும் அபார சக்தி உண்டு.

    இறைவன் காலடியில் மலர் போடுங்கள்!

    ஒரு கூடை அரளியைச் சேகரித்துக்கொண்டு, ஒவ்வொரு நாமமாகச் சொல்லி நிதானமாக இறைவனுக்கு அர்ப்பணம் செய்து பாருங்கள்.

    அதுவும் மலர்களை சுவாமியின் மீது தூக்கி வீசாமல், அழகாக ஒவ்வொரு மலராக அலங்காரம் செய்வது போல் சுவாமி காலடியில் வைத்துப்பாருங்கள்.

    உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளும், இனம் புரியாத ஆனந்தம் உள்ளுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும்.

    நாள் முழுவதும் சந்தோஷமாகக் கழியும்.

    மஞ்சள் மலர்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித்தரும் அபார சக்தி உண்டு.

    அய்யப்பனுக்கு புஷ்பாஞ்சலி

    மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதும் முதலில் அய்யப்பனுக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்படும்.

    மாலை 6 மணிக்கு தீபாராதனை முடிந்ததும், 6.30 மணிக்கு புஷ்பாஞ்சலி நடைபெறும்.

    தாமரை, செண்பகம், முல்லை, பிச்சி, அரளி, துளசி உள்பட பல்வேறு மலர்கள் புஷ்பாஞ்சலிக்கு பயன்படுத்தப்படும்.

    புஷ்பாஞ்சலி செய்ய விரும்பும் பக்தர்கள் ரூ.8,500 செலுத்தி ரசீது பெற்று சென்றால் அவர்கள் பெயரில் அய்யப்பனுக்கு புஷ்பாஞ்சலி செய்யப்படும்.

    புஷ்பாஞ்சலிக்கு தேவையான மலர்களை பக்தர்கள் கொண்டு செல்ல வேண்டியதில்லை.

    கோவில் சார்பில் மலர்கள் பயன்படுத்தப்படும்.

    தரமற்ற பூக்கள் பூஜைக்கு பயன்படுத்துவதை தடுக்கவே இந்த ஏற்பாட்டை திருவாங்கூர் தேவசம் போர்டு செய்துள்ளது.

    • 2022-ஆம் ஆண்டிற்கான ‘நாரி சக்தி புரஸ்காா் விருது’ உலக மகளிா் தினமான மாா்ச் 8-ல் வழங்கப்பட உள்ளது.
    • விண்ணப்பிக்க அக்டோபர் 20-ந்தேதி கடைசி நாளாகும். விருதுடன் சான்றிதழ், ரூ.2 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாபி சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2022-ஆம் ஆண்டிற்கான 'நாரி சக்தி புரஸ்காா் விருது' உலக மகளிா் தினமான மாா்ச் 8-ல் வழங்கப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான நபா்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு, கலை மற்றும் கலாசாரம், பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் ஆரோக்கியம், கல்வித் திறன் மேம்பாடு, வாழ்க்கைத்திறன் போன்ற பாரம்பரியம் மற்றும் பாரம்பரியமற்ற துறைகளில் சிறந்த சேவை புரிந்த தனிநபரோ, குழுவாகவோ, அரசு சாரா அமைப்பு மற்றும் நிறுவனத்திற்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுக்கு இணையதளம் மூலமாகவே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க அக்டோபர் 20-ந்தேதி கடைசி நாளாகும். விருதுடன் சான்றிதழ், ரூ.2 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். மேலும் விவர ங்களுக்கு, மாவட்ட சமூகநல அலுவலர் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    • சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 26ந் தேதி பூச்சாட்டுதலுடன் ஆடித்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.
    • தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜை செய்யப்படுகிறது.

    சேலம்:

    சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 26ந் தேதி பூச்சாட்டுதலுடன் ஆடித்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜை செய்யப்படுகிறது.

    இதனால் சேலம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.


     



    விடுமுறை நாளான நேற்று கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் தங்களது வீடுகளில் இருந்து சமைத்து கொண்டு வந்த ராகி கூழ், கம்மங்கூழ், மோர், சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், லெமன் சாதம், புளி சாதம் உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு அன்னதானமாக வழங்கினர்.

    ஆடித் திருவிழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) மற்றும் 11, 12ந் தேதி ஆகிய 3 நாட்களில் பக்தர்கள் பொங்கல் வைத்தல், மாவிளக்கு நேர்த்திக்கடன் செலுத்தலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதனால் கோவிலுக்கு விடிய, விடிய அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொங்கல் வைக்கும் இடமான கோவில் பின்புறம் பக்தர்களின் வசதிக்காக தண்ணீர், அடுப்பு போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வருகிற 16ந் தேதி காலை 10.30 மணிக்கு பால்குட விழாவும், தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதனையும் நடக்கிறது. 

    ×