search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    மகாலட்சுமி கோவில்கள்
    X

    மகாலட்சுமி கோவில்கள்

    • இந்த மலைக் கோவிலில் தனிச் சந்நிதியில் அமிர்தவல்லித் தாயார் எழுந்தருளியுள்ளார்
    • இங்கு தாயார் அமிர்தவல்லி திருச்சந்திதியில் ஒரு பெரிய தேன்கூடு உள்ளது.

    உத்திரமேரூர்:- உத்திரமேரூர் திருத்தலத்தின் தாயார் ஆனந்த வல்லி ஆவார். தாயாருக்குத் தனிச் சந்நிதி உண்டு. இப்பிராட்டியாரின் திருவருளால் மாங்கல்ய பாக்கியம், பிள்ளைப்பேறு முதலியன கிடைப்பதால் இத்தலத்திற்குத் திருமாங்கல்யம் அதிக அளவில் காணிக்கையாகக் கிடைக்கிறது. அழகிய அஷ்டாங்க விமானம் கொண்ட அற்புதத் தலம் இது.

    காஞ்சீபுரம்:- காஞ்சீபுரம் ஸ்ரீ அஷ்டபுஜம் திருக்கோவிலின் தாயார் புஷ்பவல்லி ஆவார். பகவானின் திரு நாமம் அஷ்டபுஜத்தான் என்பது. இத்தலத்தில் ஸ்ரீ வராகப் பெருமாள் தாயாரைத் தன் மடியில் வைத்துக் கொண்டு சேவை சாதிக்கிறார்கள். இது வன்றி ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீலஷ்மி தேவிக்கென தனிச் சந்நிதி உள்ளது.

    சோழிங்கபுரம்:- வடஆற்காடு மாவட்டம் அரக்கோணத்திலிருந்து மேற்கே சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம் சோழிங்கபுரம் ஆகும். இந்த மலைக் கோவிலில் தனிச் சந்நிதியில் அமிர்தவல்லித் தாயார் எழுந்தருளியுள்ளார். அண்டிவரும் அன்பர்களுக்கு அமிர்தமயமான பலன் களை வழங்கி வருகிறார்.

    திருத்தங்கல்:-விருதுநகர் மாவட் டம் திருத்தங்கல் என்னும் திருத்தலத்தில் முனிவர்களின் வேண்டுகோளுக் கிணங்க திருமகள் அருண கமல மகாதேவி (செங்கமல நாச்சியார்) என்னும் திரு நாமத்துடன் திருநின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார்.

    திருக்கண்ண மங்கை:-திரு வாரூருக்கு அடுத்துள்ள திருத்தலம் திருக் கண்ண மங்கையாகும். இங்கு தாயார் அமிர்தவல்லி திருச்சந்திதியில் ஒரு பெரிய தேன்கூடு உள்ளது. பல ஆண்டுகளாக இத்தேன்கூடு இருந்து வருவதாகக் கூறுகிறார்கள். முனிவர்கள் தேனீ வடிவத்தில் இருந்து தாயாரையும் பெருமாளையும் சேவித்து வருவதாக ஐதீகம்.

    உத்தமர்கோவில்:- திருச்சிக்கு அருகில் உள்ள திருத்தலம் பிச்சாண்டார் கோவிலாகும். உத்தமர் கோவில் என்றும் இதனை அழைப்பர். சிவன், பிரும்மா, விஷ்ணு மூவருக்கும் தனிச் சந்நிதிகள் ஒரே ஆலயத்தினுள் அடங்கியுள்ளன. இந்த அற்புதத் திருத்தலத்தின் நாச்சியார் பூர்ணவல்லித் தாயார் ஆவர். பூர்வா தேவி என்றும் அழைக்கப் பெறுகிறார்.

    Next Story
    ×