search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆனந்த நடனம்"

    • பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாத முனிவரும் சிதம்பரம் தலத்தில் பரம்பொருளின் ஆனந்தக்கூத்து தரிசனம் பெற்றனர்.
    • திருக்கூத்து தரிசனம் அருளிச் செய்யுமாறு ஈசனை நோக்கித் தவம் புரிந்தனர்.

    பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாத முனிவரும் சிதம்பரம் தலத்தில் பரம் பொருளின் ஆனந்தக் கூத்து தரிசனம் பெற்றனர்.

    இதை அறிந்த தெய்வங்களும் தேவர்களும் சிவானந்தக்கூத்து காண விரும்பினார்கள்.

    பிரம்மன் விஷ்ணு லட்சுமி சரஸ்வதி பராசக்தி இந்திரன் முதலிய தேவர்கள் எல்லோரும் பூமியில் உள்ள தில்லை வனத்தை அடைந்தனர்.

    ஆகாயத்தலத்துப் பொன்மேனி அழகனைத் தொழுது போற்றிப் பூஜை செய்து வழிபட்டனர்.

    தில்லையம்பலத்தை பொன்னம்பலமாக்கிப் பொற்கூரை வேய்ந்து திருப்பணி செய்தனர்.

    திருக்கூத்து தரிசனம் அருளிச் செய்யுமாறு ஈசனை நோக்கித் தவம் புரிந்தனர்.

    பரமேஸ்வரன் மார்கழி மாதம் திருவாதிரை திருநாளன்று (ஆருத்திரா) தெய்வங்களுக்கும், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் ஆனந்த நடனத் திருக்காட்சி கொடுத்து அருளினார்.

    ஆனந்த நடராஜரின் திருக்காட்சி கண்டு ஆடிப்பாடி மகிழ்ந்த தேவர்களும், தேவியர்களும் விழுந்து வணங்கிப் பணிந்தனர்.

    பிரம்மன் இறைவனது திருநடனத்திற்கு கீதம் பாடலானார். மகாவிஷ்ணு புல்லாங்குழல் ஊதினார்.

    ருத்திரன் மிருதங்கம் வாசித்தார். பராசக்திபாடினாள். சரஸ்வதி வீணை வாசித்தாள்.

    லட்சுமி தாளம் போட்டாள். நந்தி குடமுழா இயக்கினார்.

    இவ்வாறு எல்லோரும் கண்டு களித்துப்பணி புரியப் பரமன் தெய்வங்களுக்கும் தேவர்களுக்கும் ஆனந்த நடனக் காட்சியளித்தார்.

    ×