search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "icc world cup 2019"

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்றைய லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தியது.
    நாட்டிங்காம்:

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. கேப்டன் ஹோல்டரின் இந்த முடிவுக்கு கைமேல் பலன் கிடைத்தது. 

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. முன்னணி வீரர்கள் கூட சொற்ப ரன்களில் வெளியேறினர். 21.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த பாகிஸ்தான் அணி, 105 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக பகார் ஜமான், பாபர் ஆசம் இருவரும் தலா 22 ரன்கள் எடுத்தனர். வகாப் ரியாஸ் 18 ரன்கள் சேர்த்தார்.

    இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 13.4 ஓவர்களில் இலக்கை எட்டியது. அதிரடியாக ஆடிய துவக்க வீரர் கெயில் வலுவான அடித்தளம் அமைத்தார். அவர் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஹோப் 11 ரன்களிலும், பிராவோர ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 

    பின்னர் இணைந்த பூரன்-ஹெட்மயர் ஜோடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்  சென்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி, 13.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பூரன் 34 ரன்களுடனும், ஹெட்மயர் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஓஷேன் தாமஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி 105 ரன்களில் சுருட்டியது.
    நாட்டிங்காம்:

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. கேப்டன் ஹோல்டரின் இந்த முடிவுக்கு கைமேல் பலன் கிடைத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துகளை எதிர்கொள்ள பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் திணறினர்.

    துவக்க வீரர் இமாம் உல் ஹக் 2 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், பகார் ஜமான்-பாபர் ஆசம் இருவரும் சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்த முயற்சி செய்தனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த ஜோடியை ரஸல் பிரித்தார். பகார் ஜமான் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அபாபர் ஆசமும் 22 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதன்பிறகு விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.


    ஹாரிஸ் சோகைல் (8), சர்பிராஸ் அகமது (8), இமாத் வாசிம் (1), சதாப் கான் (0), ஹசன் அலி (1) என அடுத்தடுத்து அவுட் ஆகினர். சரிவில் இருந்து மீட்டெடுக்க கடுமையாகப் போராடிய முகமது ஹபீஸ் 16 ரன்களும், வகாப் ரியாஸ் 18 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இதனால், 21.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த பாகிஸ்தான் அணி, 105 ரன்களில் சுருண்டது.

    வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் தாமஸ் 4 விக்கெட்டுகளும், ஹோல்டர் 3 விக்கெட்டுகளும், ரஸல் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

    இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது.
    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில், ஸ்டோக்சின் அதிரடியால் 311 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி, தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 312 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
    லண்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று இங்கிலாந்து அணியும், தென் ஆப்பிரிக்கா அணியும் விளையாடுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. 

    தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாகிர் முதல் ஓவரை வீசினார். வழக்கமாக முதல் ஓவரை வேகப்பந்து வீச்சாளர்தான் வீசுவார்கள் ஆனால், இந்த போட்டியில் சுழற்பந்துவீச்சை கேப்டன் டுபிளசிஸ் தேர்வு செய்தார். அவரது முயற்சிக்கு பலனும் கிடைத்தது. தாகிர் இரண்டாவது பந்திலேயே விக்கெட் எடுத்தார். துவக்க வீரர் பேர்ஸ்டோ டக் அவுட் ஆகி வெளியேறினார்.

    இது இங்கிலாந்து வீரர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. எனினும் அடுத்து வந்த வீரர்கள் பதற்றமின்றி கவனமாக ஆடினர். இரண்டாவது விக்கெட்டுக்கு இணைந்த ஜேசன் ராய்- ஜோ ரூட் ஜோடி வலுவான அடித்தளம் அமைக்க, அணியின் ஸ்கோர் உயர்ந்தது. ஜேசன் ராய் 54 ரன்களிலும், ஜோ ரூட் 51 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். 

    கேப்டன் இயன் மார்கன் தன் பங்கிற்கு, தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். விறுவிறுப்பாக ஆடிய அவர் 4 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட 57 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பட்லர் (18), மொயின் அலி (3), வோக்ஸ் (13) ஆகியோர் விரைவில் பெவிலியன் திரும்பினர். 

    ஆனால் மறுமுனையில் நங்கூரம் போல் நின்று தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களை தெறிக்க விட்ட ஸ்டோக்ஸ், அரை சதம் கடந்தார். அணியின் ஸ்கோரும் 300ஐ தாண்டியது. ஆனால், 49வது ஓவரின் கடைசி பந்தில், அவர் நிகிடியிடம் விக்கெட்டை இழந்தார். களத்தில் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து ஆடிய ஸ்டோக்ஸ், 79 பந்துகளில் 9 பவுண்டரி உள்பட 89 ரன்கள் சேர்த்தார்.

    கடைசி ஒவரில் பிளங்கட் மற்றும் ஆச்சர் இருவரும் சேர்ந்து 11 ரன்கள் சேர்க்க, 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்தது. 

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் நிகிடி 3 விக்கெட்டுகளும், ரபாடா 2 விக்கெட்டுகளும், இம்ரான் தாகிர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 

    இதையடுத்து 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்குகிறது. 
    லண்டனில் இன்று நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் முதல் ஆட்டத்தில், துவக்க விக்கெட்டை ஆரம்பத்திலேயே இழந்தபோதிலும், இங்கிலாந்து அணி விறுவிறுப்பாக ஆடி வருகிறது.
    லண்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இன்று தொடங்கியது.

    உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. 1992-ம் ஆண்டு உலக கோப்பை பாணியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குள் நுழையும்.


    முதல் நாளான இன்று போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி, தென்ஆப்பிரிக்காவை லண்டன் ஓவலில் சந்திக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்கிறது. துவக்க வீரர் பேர்ஸ்டோ 2வது பந்திலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

    அதன்பின்னர் மற்றொரு துவக்க வீரர் ஜேசன் ராயுடன், ஜோ ரூட் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அடிக்க வேண்டிய பந்துகளை மட்டும் அடித்து ஆடினர். 9-வது ஓவரில் 50 ரன்னை எட்டியது.
    டோனியின் ஓய்வு குறித்து யாரும் விமர்சனம் செய்ய தேவையில்லை. அவரது ஓய்வு குறித்து அவரே முடிவு செய்வார் என்று வார்னே தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட்டுக்கு பெருமை சேர்த்த முக்கியமான வீரர்களில் ஒருவர் மகேந்திர சிங் டோனி என்றால் அது மிகையாகாது. இந்திய அணிக்கு இரண்டு உலகக்கோப்பையை (2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை, 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை) பெற்று கொடுத்து உள்ளார்.

    இந்திய அணியின் 3 நிலைக்கும் கேப்டனாக பணியாற்றிய டோனி 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். 37 வயதான அவர் பின்னர் ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டியில் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இந்த இரு அணியிலும் மட்டும் அவர் விளையாடி வருகிறார்.

    தற்போது நடைபெற இருக்கும் உலகக்கோப்பையில் டோனி அதிக முக்கியத்துவம் வாய்ந்த வீரராக இருக்கிறார். தவிர்க்க முடியாத வீரரான அவர் உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு ஒய்வு முடிவை வெளியிடுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. ரிஷப் பந்த் போன்ற இளம் வீரர்கள் அவரது இடத்துக்கான வரிசையில் காத்திருக்கிறார்கள்.

    இந்த நிலையில் டோனிக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய முன்னாள் பிரபல சுழற்பந்து ஜாம்பவான் வார்னே கருத்து தெரிவித்துள்ளார். டோனி எப்போது விரும்புகிறாரோ அப்போது ஓய்வு பெறலாம் என்று கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய கிரிக்கெட்டின் அற்புதமான வீரர் டோனி. அவர் இந்திய அணிக்கு பெருமைகளை தேடிக்கொடுத்து உள்ளார். டோனி இல்லாத உலகக்கோப்பைக்கான இந்திய அணியை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

    உலகக்கோப்பை போட்டிக்கான அணியில் அவர் இடம் பெற்று இருப்பது குறித்து சிலர் கேள்வி எழுப்புவதை என்னால் நம்ம முடியவில்லை. அவரது ஓய்வு குறித்து யாரும் எதுவும் நினைக்க தேவையில்லை.



    ஓய்வு பெறுவதற்கு சரியான நேரம் எது என்று டோனிக்கு மட்டுமே தெரியும். அவர் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்று விரும்புகிறாரோ அவரே முடிவு செய்வார். தற்போது டோனி மிகவும் நல்ல நிலையில் உள்ளார்.

    இவ்வாறு வார்னே கூறியுள்ளார்.

    2018-ம் ஆண்டு டோனியின் ஆட்டம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. 20 ஒருநாள் போட்டியில் 275 ரன்களே எடுத்தார். இதில் சதமோ, அரைசதமோ இல்லை. அதிகபட்சமாக 42 ரன்களே எடுத்தார். இதனால் அவர் கடும் விமர்சனத்துக்குள்ளானார்.

    ஆனால் அதற்கு இந்த ஆண்டில் டோனி பதிலடி கொடுத்தார். அவரது ஆட்டம் அபாரமாக இருந்தது. 9 ஆட்டத்தில் 327 ரன்கள் குவித்தார். சராசரி 81.75 ஆகும். இதில் 4 அரைசதம் அடங்கும். அதிகபட்சமாக 87 ரன் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் 78.22 ஆகும்.

    சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியிலும் டோனி முத்திரை பதிக்கும் வகையில் ஆடினார். அவர் 12 இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தார். சராசரி 83. 20 ஆகும். ஸ்டிரைக் ரேட் 134.62 ஆக இருந்தது.
    ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வரும் டிவில்லியர்ஸ் உலக கோப்பை வெல்லப்போது யார்? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். #WorldCup2019 #ABdeVilliers
    புதுடெல்லி:

    12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது.

    இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் உலககோப்பை போட்டியில் ஆடமாட்டார். சர்வதேச போட்டிகளில் இருந்து அவர் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார். சிறந்த அதிரடி வீரரான அவர் இந்த உலககோப்பையில் இல்லாதது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமே.

    ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வரும் டிவில்லியர்ஸ் உலக கோப்பை வெல்லப்போது யார்? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நான் கடந்த ஆண்டு ஓய்வு முடிவை அறிவித்தேன். 100 சதவீத திருப்தியுடன் இந்த முடிவை எடுத்தேன்.

    உலககோப்பையில் மீண்டும் விளையாட ஆர்வமாகவே இருந்தேன். ஆனாலும் ஓய்வு முடிவு மகிழ்ச்சியானதே. ஓய்வு முடிவை எடுத்ததற்காக நான் வருத்தம் எதுவும் படவில்லை.

    உலககோப்பையை வெல்லப்போவது யார்? என்று கணிப்பது கடினம். ஏனென்றால் பல அணிகளும் திறமையுடன் உள்ளன.

    இந்தியா, பாகிஸ்தான் அணிகள் சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளார்கள். இங்கிலாந்து சொந்த மண்ணில் ஆடுகிறது. நியூசிலாந்து எப்போதுமே உலககோப்பையில் நன்றாக ஆடும். தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சு பலம் வாய்ந்து காணப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #WorldCup2019 #ABdeVilliers
    2019-ல் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ளதாக வக்கார் யூனிஸ் கருத்து தெரிவித்துள்ளார். #ICCWorldCup
    இங்கிலாந்தில் கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த தோல்வியால் பாகிஸ்தான் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறுவது கடினம் எனக் கூறப்பட்டது. ஆனால், அதன்பின் தோல்வியை சந்திக்காமல் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொண்டது. இதில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில் அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பையையும் பாகிஸ்தான் அணி கைப்பற்ற வாய்ப்புள்ளதாக வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வக்கார் யூனிஸ் கூறுகையில் ‘‘சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அணியை பார்க்கும்போது, பாகிஸ்தான் அணி, தனது மீதான உறுதியை கட்டமைத்துக் கொண்டே வருகிறது. இதன்மூலம் நம்பிக்கை வந்து கொண்டிருக்கிறது.



    பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரை வெல்ல வாய்ப்புள்ளது என்பதை என்னால் நியாயமான அளவிற்கு சொல்ல முடியும். நெருக்கடி இருக்கத்தான் செய்யும். நாடு முழுவதும் எதிர்பார்ப்பு இருக்கும்.

    இங்கிலாந்தில் ஏராளமான பாகிஸ்தானியர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் மைதானத்திற்குச் சென்று சென்று அணிக்கு ஆதரவு அளிப்பார்கள். ஆதராளவர்கள் அதிகமான அளவு மைதானத்திற்கு வருவதால் நெருக்கடி உருவாகும்’’ என்றார்.
    ×