search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Waqar Younis"

    • விக்கெட்டுகளுக்கு இடையில் ரன் எடுப்பதில் விராட்கோலி எப்போதும் சிறந்தவராக இருக்கிறார்.
    • அவர் தனது உடல் தகுதி விஷயத்தில் மிகுந்த ஆர்வத்துடன் பணி செய்கிறார்.

    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட்கோலி, லோகேஷ் ராகுல் சதம் அடித்து பல்வேறு சாதனைகளை படைத்தனர்.

    122 ரன்கள் குவித்ததன் மூலம் விராட்கோலி ஒருநாள் போட்டியில் 47-வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் டெண்டுல்கரை அவர் நெருங்கியுள்ளார். டெண்டுல்கர் 463 போட்டிகளில் விளையாடி 49 சதங்கள் அடித்துள்ளார். அவரது சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 3 செஞ்சூரி தேவை.

    மேலும் விராட்கோலி 13 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் கடந்து டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். கோலி 267 இன்னிங்சில் 13 ஆயிரம் ரன்னை தொட்டார். டெண்டுல்கர் 321 இன்னிங்சில்தான் இந்த ரன்னை எடுத்தார்.

    சர்வதேச போட்டிகளில் விராட்கோலி 77 செஞ்சூரி அடித்து (டெஸ்ட் 29 + ஒருநாள் போட்டி 47 + 20 ஓவர் 1) 2-வது இடத்தில் உள்ளார். டெண்டுல்கர் 100 சதத்துடன் முதல் இடத்தில் இருக்கிறார்.

    இந்த நிலையில் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பதோடு மட்டுமல்லாமல் விராட்கோலி ஒருநாள் போட்டிகளில் 100 சதங்களை அடிப்பார் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரர் வாக்கர் யூனுஸ் தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    விராட்கோலிக்கும், மற்ற வீரர்களுக்கு இடையே நிறைய வேறுபாடு இருக்கிறது. டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்கையை முடிக்கும் போது ஒருநாள் போட்டியில் 49 சதங்கள் அடித்து இருந்தார். விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிப்பதற்கு நீண்ட காலம் இருக்கிறது. அவர் டெண்டுல்கரின் சாதனையை எளிதில் கடப்பார். நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அவர் 100 சதங்கள் அடிப்பார்.

    விக்கெட்டுகளுக்கு இடையில் ரன் எடுப்பதில் விராட்கோலி எப்போதும் சிறந்தவராக இருக்கிறார். அவர் தனது உடல் தகுதி விஷயத்தில் மிகுந்த ஆர்வத்துடன் பணி செய்கிறார்.

    இவ்வாறு வாக்கர் யூனுஸ் கூறியுள்ளார்.

    • அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • ஹசரங்கா 10 ஓவர்களில் 79 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா 10 ஓவர்களில் 79 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸின் உலக சாதனையை ஹசரங்கா சமன் செய்துள்ளார்.

    ஹசரங்கா முந்தைய இரு ஆட்டங்களில் முறையே ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக 6 விக்கெட்டும், ஓமனுக்கு எதிராக 5 விக்கெட்டும் வீழ்த்தியிருந்தார்.

    சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் 5 விக்கெட் வீழ்த்திய 2-வது பவுலர் என்ற சிறப்பை அவர் பெற்றார். ஏற்கனவே பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் 1990-ல் தொடர்ந்து 3 முறை 5 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

    அவருடன் அந்த அரிய சாதனை பட்டியலில் 25 வயதான லெக்ஸ்பின்னர் ஹசரங்கா இப்போது இணைந்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஷகீன் அப்ரிடியின் பந்து வீச்சில் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டானார்கள்
    • இப்போது இந்திய பேட்ஸ்மேன்கள் நிம்மதி அடைந்திருப்பார்கள் என்று வக்கார் யூனிஸ் கருத்து தெரிவித்தார்.

    மும்பை:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 27-ந்தேதி முதல் செப்டம்பர் 11-ந்தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது.

    6 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி தொடரில் பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த முன்னணி வீரர் ஷகீன்ஷா அப்ரிடி காயம் காரணமாக விலகுவதாக அறிவிக்கப்பட்டது. வலது கால் முட்டி தசை நாரில் காயமடைந்த அவர் ஆசிய கோப்பை போட்டி தொடங்குவதற்குள் குணம் அடைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் குணமடையாததால் போட்டி தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    இதற்கிடையே ஷகீன்ஷா அப்ரிடி விலகல், இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்குத்தான் பெரும் நிம்மதியாக இருக்கும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் டுவிட்டரில் கருத்து தெரிவித்தார்.

    கடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஷகீன்ஷா அப்ரிடி பந்து வீச்சில் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டானார்கள். இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் நிம்மதி அடைந்திருப்பார்கள் என்று வக்கார் யூனிஸ் கருத்து தெரிவித்தார்.

    இந்த நிலையில், வக்கார் யூனிஸ் கருத்துக்கு இந்திய அணி முன்னாள் வீரர் இர்பான் பதான் பதிலடி கொடுத்துள்ளார்.

    இது தொடர்பாக இர்பான் பதான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும் போது, ஆசிய கோப்பை போட்டித்தொடரில் இந்திய அணியில் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் இல்லாதது மற்ற அணிகளுக்கு நிம்மதியை தரும் என்று கூறியுள்ளார்.

    மேலும் இர்பான் பதான் கூறும்போது, ஆசிய கோப்பை போட்டி மிகவும் முக்கியமானது. ஆனால் நான் 20 ஓவர் உலக கோப்பையை எதிர்நோக்கும் போது, விராட் கோலி ஆசிய கோப்பையில் சிறந்த பார்முக்கு திரும்ப வேண்டும்.

    ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் கோலி சிறப்பாக விளையாடுபவர். எனவே இந்திய அணிக்கு சிறந்த பார்மில் உள்ள விராட்கோலி தேவை. இது அவருக்கும், இந்திய அணிக்கும் முக்கியமானது, என்றார்.

    விராட் கோலியை அவுட்டாக்குவது எப்படி என்பது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் ஆலோசனை வழங்கியுள்ளார். #ViratKohli
    இந்திய அணியின் கேப்டனும், தலைசிறந்த பேட்ஸ்மேனும் விராட் கோலி விளங்கி வருகிறார். 2014-ம் ஆண்டு இந்தியா இங்கிலாந்து சென்றிருந்த போது விராட் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

    ஆனால் தற்போது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இன்-ஸ்விங், அவுட்-ஸ்விங் என இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் அச்சுறுத்தினாலும் இரண்டு சதங்களுடன் 580 ரன்களுக்கு மேல் குவித்தார்.

    இந்நிலையில் ஸ்விங் பந்து ஜாம்பவான் ஆன பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் விராட் கோலியை அவுட்டாக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

    விராட் கோலி குறித்து வக்கார் யூனிஸ் கூறுகையில் ‘‘ஒவ்வொரு வீரர்களுக்கும் பலவீனம் இருக்கும். ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் பந்தை வீசினால் விராட் கோலியின் பலவீனத்தை கண்டுபிடித்து விடலாம். ஏனென்றால், ஆடுகளத்திற்கு வந்த உடனேயே டிரைவ் ஷாட் ஆட விரும்புவார்.

    விராட் கோலிக்கு பந்து வீசும் பந்து வீச்சாளர் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். நேருக்குநேர் மோதலில் விராட் கோலியை வீழ்த்த முடியாது. உங்களுடைய திட்டத்தில் அப்படியே உறுதியாக இருக்க வேண்டும்.



    என்னுடைய காலத்தில் எடுத்துக் கொண்டால், நான் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பந்தை வீசி விராட் கோலி விட்டு பந்து விலகிச் செல்லும்படி செய்வேன். லெந்த் தூரத்திற்கு சற்று முன் பந்தை பிட்ச் செய்து, அவரை டிரைவ் ஆட தூண்டுவேன். நீங்கள் ஒரு அவுட்-ஸ்விங் பந்து வீச்சாளராக இருந்தால் இது சிறந்த திட்டம்.

    பாகிஸ்தான் அணிக்காக 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வக்கார் யூனிஸ் 373 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். 262 ஒருநாள் போட்டியில் 416 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார்.
    2019-ல் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ளதாக வக்கார் யூனிஸ் கருத்து தெரிவித்துள்ளார். #ICCWorldCup
    இங்கிலாந்தில் கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த தோல்வியால் பாகிஸ்தான் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறுவது கடினம் எனக் கூறப்பட்டது. ஆனால், அதன்பின் தோல்வியை சந்திக்காமல் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொண்டது. இதில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில் அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பையையும் பாகிஸ்தான் அணி கைப்பற்ற வாய்ப்புள்ளதாக வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வக்கார் யூனிஸ் கூறுகையில் ‘‘சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அணியை பார்க்கும்போது, பாகிஸ்தான் அணி, தனது மீதான உறுதியை கட்டமைத்துக் கொண்டே வருகிறது. இதன்மூலம் நம்பிக்கை வந்து கொண்டிருக்கிறது.



    பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரை வெல்ல வாய்ப்புள்ளது என்பதை என்னால் நியாயமான அளவிற்கு சொல்ல முடியும். நெருக்கடி இருக்கத்தான் செய்யும். நாடு முழுவதும் எதிர்பார்ப்பு இருக்கும்.

    இங்கிலாந்தில் ஏராளமான பாகிஸ்தானியர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் மைதானத்திற்குச் சென்று சென்று அணிக்கு ஆதரவு அளிப்பார்கள். ஆதராளவர்கள் அதிகமான அளவு மைதானத்திற்கு வருவதால் நெருக்கடி உருவாகும்’’ என்றார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியதற்காக முன்னாள் பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். #waqaryounis #Apologisetofans
    இஸ்லாமாபாத்:

    வங்கதேசம் - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது. இந்த போட்டியின்போது முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரமின் 52-வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக வக்கார் யூனிஸ் கேக் வெட்டி கொண்டாடினார்.

    புனித ரமலான் மாதத்தில் பொது இடத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்வு பாகிஸ்தான் ரசிகர்களிடையே அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வக்கார் யூனிஸ் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.



    ‘வாசிம் அக்ரமின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். புனிதமிக்க ரமலான் மாதத்தையும், நோன்பு கடைபிடிப்பவர்களையும் மதித்திருக்க வேண்டும். மன்னியுங்கள்’ என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் வக்கார் யூனிஸ். #waqaryounis #Apologisetofans
    ×