search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலியை அவுட்டாக்குவது எப்படி?- வக்கார் யூனிஸ் டிப்ஸ்
    X

    விராட் கோலியை அவுட்டாக்குவது எப்படி?- வக்கார் யூனிஸ் டிப்ஸ்

    விராட் கோலியை அவுட்டாக்குவது எப்படி என்பது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் ஆலோசனை வழங்கியுள்ளார். #ViratKohli
    இந்திய அணியின் கேப்டனும், தலைசிறந்த பேட்ஸ்மேனும் விராட் கோலி விளங்கி வருகிறார். 2014-ம் ஆண்டு இந்தியா இங்கிலாந்து சென்றிருந்த போது விராட் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

    ஆனால் தற்போது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இன்-ஸ்விங், அவுட்-ஸ்விங் என இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் அச்சுறுத்தினாலும் இரண்டு சதங்களுடன் 580 ரன்களுக்கு மேல் குவித்தார்.

    இந்நிலையில் ஸ்விங் பந்து ஜாம்பவான் ஆன பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் விராட் கோலியை அவுட்டாக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

    விராட் கோலி குறித்து வக்கார் யூனிஸ் கூறுகையில் ‘‘ஒவ்வொரு வீரர்களுக்கும் பலவீனம் இருக்கும். ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் பந்தை வீசினால் விராட் கோலியின் பலவீனத்தை கண்டுபிடித்து விடலாம். ஏனென்றால், ஆடுகளத்திற்கு வந்த உடனேயே டிரைவ் ஷாட் ஆட விரும்புவார்.

    விராட் கோலிக்கு பந்து வீசும் பந்து வீச்சாளர் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். நேருக்குநேர் மோதலில் விராட் கோலியை வீழ்த்த முடியாது. உங்களுடைய திட்டத்தில் அப்படியே உறுதியாக இருக்க வேண்டும்.



    என்னுடைய காலத்தில் எடுத்துக் கொண்டால், நான் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பந்தை வீசி விராட் கோலி விட்டு பந்து விலகிச் செல்லும்படி செய்வேன். லெந்த் தூரத்திற்கு சற்று முன் பந்தை பிட்ச் செய்து, அவரை டிரைவ் ஆட தூண்டுவேன். நீங்கள் ஒரு அவுட்-ஸ்விங் பந்து வீச்சாளராக இருந்தால் இது சிறந்த திட்டம்.

    பாகிஸ்தான் அணிக்காக 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வக்கார் யூனிஸ் 373 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். 262 ஒருநாள் போட்டியில் 416 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார்.
    Next Story
    ×