search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டோனியின் ஓய்வு முடிவை அவரே எடுப்பார்: யாரும் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை- வார்னே
    X

    டோனியின் ஓய்வு முடிவை அவரே எடுப்பார்: யாரும் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை- வார்னே

    டோனியின் ஓய்வு குறித்து யாரும் விமர்சனம் செய்ய தேவையில்லை. அவரது ஓய்வு குறித்து அவரே முடிவு செய்வார் என்று வார்னே தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட்டுக்கு பெருமை சேர்த்த முக்கியமான வீரர்களில் ஒருவர் மகேந்திர சிங் டோனி என்றால் அது மிகையாகாது. இந்திய அணிக்கு இரண்டு உலகக்கோப்பையை (2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை, 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை) பெற்று கொடுத்து உள்ளார்.

    இந்திய அணியின் 3 நிலைக்கும் கேப்டனாக பணியாற்றிய டோனி 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். 37 வயதான அவர் பின்னர் ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டியில் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இந்த இரு அணியிலும் மட்டும் அவர் விளையாடி வருகிறார்.

    தற்போது நடைபெற இருக்கும் உலகக்கோப்பையில் டோனி அதிக முக்கியத்துவம் வாய்ந்த வீரராக இருக்கிறார். தவிர்க்க முடியாத வீரரான அவர் உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு ஒய்வு முடிவை வெளியிடுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. ரிஷப் பந்த் போன்ற இளம் வீரர்கள் அவரது இடத்துக்கான வரிசையில் காத்திருக்கிறார்கள்.

    இந்த நிலையில் டோனிக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய முன்னாள் பிரபல சுழற்பந்து ஜாம்பவான் வார்னே கருத்து தெரிவித்துள்ளார். டோனி எப்போது விரும்புகிறாரோ அப்போது ஓய்வு பெறலாம் என்று கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய கிரிக்கெட்டின் அற்புதமான வீரர் டோனி. அவர் இந்திய அணிக்கு பெருமைகளை தேடிக்கொடுத்து உள்ளார். டோனி இல்லாத உலகக்கோப்பைக்கான இந்திய அணியை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

    உலகக்கோப்பை போட்டிக்கான அணியில் அவர் இடம் பெற்று இருப்பது குறித்து சிலர் கேள்வி எழுப்புவதை என்னால் நம்ம முடியவில்லை. அவரது ஓய்வு குறித்து யாரும் எதுவும் நினைக்க தேவையில்லை.



    ஓய்வு பெறுவதற்கு சரியான நேரம் எது என்று டோனிக்கு மட்டுமே தெரியும். அவர் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்று விரும்புகிறாரோ அவரே முடிவு செய்வார். தற்போது டோனி மிகவும் நல்ல நிலையில் உள்ளார்.

    இவ்வாறு வார்னே கூறியுள்ளார்.

    2018-ம் ஆண்டு டோனியின் ஆட்டம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. 20 ஒருநாள் போட்டியில் 275 ரன்களே எடுத்தார். இதில் சதமோ, அரைசதமோ இல்லை. அதிகபட்சமாக 42 ரன்களே எடுத்தார். இதனால் அவர் கடும் விமர்சனத்துக்குள்ளானார்.

    ஆனால் அதற்கு இந்த ஆண்டில் டோனி பதிலடி கொடுத்தார். அவரது ஆட்டம் அபாரமாக இருந்தது. 9 ஆட்டத்தில் 327 ரன்கள் குவித்தார். சராசரி 81.75 ஆகும். இதில் 4 அரைசதம் அடங்கும். அதிகபட்சமாக 87 ரன் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் 78.22 ஆகும்.

    சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியிலும் டோனி முத்திரை பதிக்கும் வகையில் ஆடினார். அவர் 12 இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தார். சராசரி 83. 20 ஆகும். ஸ்டிரைக் ரேட் 134.62 ஆக இருந்தது.
    Next Story
    ×