search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "HomeMade Recipes"

    கேரட்டில் கூட்டு, பொரியல் செய்து இருப்பீங்க. இன்று கேரட்டை வைத்து சூப்பரான ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ஊறுகாய் தயிர் சாதத்திற்கு அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    கேரட் - கால் கிலோ
    எலுமிச்சை பழம் - ஐந்து
    பச்சை மிளகாய் - பத்து
    பெருங்காயம் - அரை டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - ஒரு தேகரண்டி
    கடுகு - ஒரு தேகரண்டி
    உப்பு - தேவைகேற்ப
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    கேரட்டை பெரிய பல் உள்ள துருவலில் துருவிக்கொள்ளவும்.

    எலுமிச்சை பழத்தில் இருந்து சாறு எடுத்து கொள்ளவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் கேரட் துருவல், பச்சை மிளகாய், எலுமிச்சை பழம் சாறு, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்து கொட்டி கிளறி பரிமாறவும்.

    சூப்பரான உடனடி கேரட் ஊறுகாய் ரெடி.

    குறிப்பு : விரும்பினால் கேரட்டை நீளமான துண்டுகளாகவும் வெட்டிக்கொள்ளலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினமும் காலையில் ஏதாவது ஒரு சாலட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று ஸ்பைசி கிரீன் ஆப்பிள் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    கிரீன் ஆப்பிள் - பெரியது 1
    வெங்காயம் - 1
    தக்காளி - சிறியது 2
    எலுமிச்சை சாறு - சுவைக்கு
    சிவப்பு மிளகாய் தூள் - சுவைக்கு
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    உப்பு - சுவைக்கு
    தக்காளி சாஸ் - சுவைக்கு



    செய்முறை :

    ஆப்பிள், வெங்காயம், நீளவாக்கில் மெலிதாக வெட்டிக்கொள்ளவும்.

    தக்காளியை சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் நறுக்கிய ஆப்பிள், வெங்காயம், தக்காளியை போட்டு நன்றாக கலக்கவும்.

    அடுத்து அதில் சிவப்பு மிளகாய் தூள், எலுமிச்சை சாறு, தக்காளி சாஸ், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

    சூப்பரான ஸ்பைசி கிரீன் ஆப்பிள் சாலட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாளை பொங்கல் பண்டிகைக்கு விதவிதமான பொங்கல் செய்து அசத்துங்கள். இன்று கரும்புச்சாறு பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - அரை கப்
    பாசிப்பருப்பு - கால் கப்
    பேரீச்சை - 10
    கரும்புச்சாறு - 1 கப்
    நெய் - சிறிதளவு
    முந்திரி பருப்பு - 10
    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு



    செய்முறை :

    பேரீச்சம் பழத்தை கொட்டை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் பாசிப்பருப்பை வாசம் வரும் வரை வறுத்துக்கொள்ளவும்.

    பின்னர் அதனை பச்சரிசியோடு சேர்த்து நீரில் கழுவி குக்கரில் கொட்டவும்.

    அதனுடன் கரும்புச் சாறு மற்றும் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

    நான்கு விசில் வந்ததும் இறக்கி ஆறவைக்கவும்.

    வாணலியில் நெய் ஊற்றி அது சூடானதும் முந்திரி, ஏலக்காய்த்தூள், பேரீச்சை ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்.

    பின்னர் அதனை பொங்கலில் சேர்த்து கிளறி இறக்கி ருசிக்கவும்.

    சூப்பரான கரும்புச்சாறு பொங்கல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாளை பொங்கல் பண்டிகைக்கு விதவிதமான பொங்கல் செய்து அசத்துங்கள். இன்று பனங்கற்கண்டு பால் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - அரை கப்
    பாசிப்பருப்பு - 100 கிராம்
    பனங்கற்கண்டு - 100 கிராம்
    தேங்காய்த் துருவல் - கால் கப்
    ஏலக்காய், உலர் திராட்சை - சிறிதளவு
    முந்திரி - 5
    பால் - தேவையான அளவு
    நெய் - சிறிதளவு



    செய்முறை :

    பனங்கற்கண்டை பொடித்து கொள்ளவும்.

    வாணலியில் பாசிப்பருப்பை கொட்டி பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

    பச்சரிசியை நீரில் அலசி வைக்கவும்.

    கழுவிய பச்சரிசியுடன் பாசிப் பருப்பு, பால் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

    நன்கு வெந்ததும், ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்து அதில் சேர்க்கவும்.

    பின்னர் பனங்கற்கண்டு, தேங்காய் துருவல் ஆகியவற்றை கொட்டி கிளறவும்.

    இறுதியில் சிறிதளவு நெய் ஊற்றி கிளறி இறக்கி ருசிக்கலாம்.

    சூப்பரான பனங்கற்கண்டு பால் பொங்கல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அஜீரண கோளாறு, வயிறு பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி இந்த இஞ்சி பூண்டு சட்னியை செய்து சாப்பிடலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பூண்டு - 10 பற்கள் (அ) ஒரு முழுப்பூண்டு
    இஞ்சி - பெரிய துண்டு
    புளி - சிறு அளவு
    வரமிளகாய் -1
    உப்பு - தேவையான அளவு
    நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

    தாளிக்க :

    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    உளுந்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு



    செய்முறை  :

    இஞ்சியைத் தோல் சீவி வைக்கவும். பூண்டை தோலுரித்துக்கொள்ளவும்.

    இஞ்சி, பூண்டை மெல்லிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி, பூண்டு பொன்னிறமாக வதங்கியதும் புளி, வரமிளகாயைச் சேர்த்து மிளகாய் கருகாமல் வறுத்து ஆறவைக்கவும்.

    நன்றாக ஆறியதும் தேவையான உப்பு சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு அரைத்தெடுக்கவும். வதக்கும்போது இருக்கும் எண்ணெயையும் சேர்த்து அரைக்கவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

    சூப்பரான இஞ்சி பூண்டு சட்னி ரெடி.

    இட்லி - தோசை- சப்பாத்திக்கு பொருத்தமான சட்னி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மா இஞ்சி ஊறுகாய் சூப்பராக இருக்கும். இன்று இந்த ஊறுகாயை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மாங்காய் இஞ்சி - 1 கப்
    பச்சை மிளகாய் - 3
    எலுமிச்சம்பழம் - 1
    கடுகு - 1 தேக்கரண்டி
    உப்பு, எண்ணய் - தேவையான அளவு



    செய்முறை :

    மாங்காய் இஞ்சியை நன்றாக சுத்தம் செய்து தோல் நீக்கி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    பச்சை மிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

    ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மாங்காய் இஞ்சி துண்டுகள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.

    எலுமிச்சம்பழத்தை அதில் பிழிந்து நன்றாக கலக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகைப் போட்டு தாளித்து அதில் மங்காய் இஞ்சிக் கலவையை சேர்த்து கிளறவும்.

    முப்பது நிமிடங்கள் வரை நன்றாக கிளறிய பின்னர் பாட்டிலில் எடுத்து வைக்கலாம்.

    மா இஞ்சி ஊறுகாய் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சுலபமாக செய்யக்கூடிய மிகவும் ருசியான பருத்தி பால் உடல் நலத்திற்கும் ஏற்றது, (சர்க்கரை நோயாளிகளை தவிர). இன்று இந்த பருத்தி பாலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பருத்தி விதை - அரை கப்
    பச்சரிசி - கால் கப்
    சுக்குத்தூள் - சிறிதளவு
    ஏலக்காய் தூள் - சிறிதளவு
    தூளாக்கப்பட்ட வெல்லம் - தேவைக்கு



    செய்முறை:

    பருத்தி விதையை சுத்தம் செய்து தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் ஊறவைக்கவும்.

    அதுபோல் பச்சரிசியையும் ஊறவைக்க வேண்டும்.

    விதைகளை மிக்சியில் அரைத்து அதனுடன் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து பருத்தி பால் எடுத்துக்கொள்ளவும்.

    பச்சரிசியையும் மிக்சியில் அரைத்து மாவாக்கிக்கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் பருத்தி பால் மற்றும் பச்சரிசி மாவை கொட்டி கொதிக்க விடவும்.

    கொதிக்க தொடங்கியதும் வெல்லத்தை சேர்த்து கிளறிவிடவும்.

    அதனுடன் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி ருசிக்கலாம்.

    அருமையான பருத்தி பால் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    டீ மற்றும் காபியுடன் சாப்பி தட்டை சூப்பராக இருக்கும். இன்று வேர்க்கடலை தட்டையை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வேர்க்கடலை - அரை கப்
    பொட்டுக்கடலை - அரை கப்
    கடலை மாவு - அரை கப்
    அரிசி மாவு - அரை கப்
    மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
    பெருங்காயத் தூள் - சிறிதளவு
    வெண்ணெய் - தேவையான அளவு
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு



    செய்முறை:

    வாணலியில் வேர்க்கடலையை போட்டு லேசாக வறுத்தெடுத்து தோல் நீக்கி கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    பொட்டுக் கடலையையும் தூளாக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொட்டுக்கடலையை போட்டு அதனுடன் பொடித்த வேர்க்கடலை, அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், வெண்ணெய் ஆகியவற்றை கலந்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

    பதத்துக்கு வந்ததும் தட்டைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து ருசிக்கவும்.

    சூப்பரான வேர்க்கடலை தட்டை ரெடி.

    இதனை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் முதல் 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு ஃப்ரைடு ரைஸ் என்றால் விருப்பம் தான்.. அதிலும் பிஷ் ஃப்ரைடு ரைஸ் என்றால் ஒரு பிடி பிடித்து விடுவார்கள். இன்று பிஷ் ஃப்ரைடு ரைஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சாதம் - ஒரு கப்
    வறுத்த மீன் - 2 துண்டுகள்
    சோயா சாஸ் - 2 ஸ்பூன்
    உப்பு - தேவைக்கு
    தக்காளி சாஸ் - 1
    வினிகர் - 2 ஸ்பூன்
    வெங்காயம் - 2
    முட்டை - 1
    கறிவேப்பிலை - சிறிதளவு
    பச்சைமிளகாய் - 1
    கேரட், பீன்ஸ், கோஸ் - ஒரு கப்
    நெய் - 3 ஸ்பூன்
    பூண்டு - 4 பல்



    செய்முறை :

    வெங்காயம், பூண்டு, ப.மிளகாய், கேரட், பீன்ஸ், கோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீனை முள் இல்லாமல் எடுத்து வைக்கவும்.

    சாதத்தை உதிரியாக வடித்து கொள்ளவும்.

    முட்டையை உதிரியாக பொரித்து வைக்கவும்.

    கடாயில் நெய் விட்டு கறிவேப்பிலை, பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் சாஸ் வகைகள் மற்றும் வினிகரை சேர்த்து காய்கறிகளை வேகவிடவும்.

    அடுத்து அதில் பொரித்த முட்டை, வறுத்த மீன் மற்றும் சாதத்தை கொட்டி கிளறி இறக்கவும்.

    இப்போது சூப்பரான பிஷ் ஃப்ரைடு ரைஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பீட்சா என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் பன்னீர் வைத்து பீட்சா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மிளகுத் தூள் - தேவையான அளவு
    காய்ந்த மிளகாய் - 4
    தக்காளி சாஸ் - 2 மேசைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    வெங்காயம் - 2
    தக்காளி - ஒன்று
    சீஸ் - 50 கிராம்
    வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    பன்னீர் - ஒரு பாக்கெட்
    பீட்சா பேஸ் - ஒன்று



    செய்முறை :

    வெங்காயம் தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சீஸை நன்கு துருவிக் கொள்ளவும். (விரும்பினால் கடைகளில் கிடைக்கும் சீஸ் ஸ்லைஸைப் பயன்படுத்தலாம். இன்னும் நன்றாக இருக்கும்).

    பக்னீரைச் சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

    காய்ந்த மிளகாயிலுள்ள விதைகளை தனியாக எடுத்துக் கொண்டு மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்.

    அடுப்பில் பேனை வைத்து வெண்ணெய் ஊற்றி, அதில் பன்னீரைப் போட்டு லேசாகப் பொரித்தெடுக்கவும். பீட்சா பேஸில் வெண்ணெயைத் தடவிக் கொள்ளவும்.

    அதற்கு மேலே தக்காளி சாஸை நன்றாகத் தடவவும். பிறகு நறுக்கிய வெங்காயத்தை பரவலாக வைக்கவும்.

    வெங்காயத்திற்கு மேல் தக்காளியைப் பரவலாக வைக்கவும்.

    அதன் பிறகு பொரித்த பன்னீரைப் பரவலாக வைத்து, அதன் மேல் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத் தூளைத் தூவி, அரைத்து வைத்துள்ள மிளகாயைத் தூவவும்.

    அதன் மீது சீஸைத் தூவவும். கடைசியாக மைக்ரோவேவ் அவனில் 200 டிகிரியில் 15 நிமிடங்கள் வைத்தெடுக்கவும்.

    சுடச்சுட பன்னீர் பீட்சா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான பைனாப்பிள் சுவிஸ் ரோல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பைனாப்பிள் ப்ளெயின் கேக் பொடித்தது - 1/2 கப்,
    வெண்ணெய் - 3 டீஸ்பூன்,
    கிரீம் சீஸ் - 1/2 கப்,
    பவுடர் சுகர், பால் பவுடர் - தலா 1/4 கப்,
    வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்,
    விருப்பமான ஜாம் - 2 டீஸ்பூன்.



    செய்முறை :


    ஒரு பவுலில் 2 டீஸ்பூன் கிரீம் சீஸ், 1 டீஸ்பூன் வெண்ணெய், 2 டீஸ்பூன் பவுடர் சுகர் சேர்த்து நன்றாக கலந்து, அதனுடன் 1/2 டீஸ்பூன் உதிர்த்த கேக், 1/2 டீஸ்பூன் வெனிலா எசென்ஸ் சேர்த்து கலந்து, வெண்ணெய் தடவிய பட்டர் பேப்பரில் சமமாக பரப்பவும்.

    மற்றொரு பவுலில் மீதியுள்ள கிரீம் சீஸ், பால் பவுடர், வெனிலா எசென்ஸ், பவுடர் சுகர், வெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கேக் கலவையில் பரப்பவும்.

    நடுவில் ஒரு கோடு போல் ஜாம் வைத்து, பட்டர் பேப்பரை நன்கு இறுக்கமாக சுற்றி ஃப்ரிட்ஜில் 4 மணிநேரம் வைத்திருந்த பின்னர் வெளியில் எடுத்து துண்டுகள் போட்டு பரிமாறவும்.

    சூப்பரான பைனாப்பிள் சுவிஸ் ரோல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு சிப்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
    உப்பு - 1/2 டீஸ்பூன்
    தனி மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
    எண்ணெய் - 150 கிராம்



    செய்முறை :

    உருளைக்கிழங்கை நன்றாக கழுவி அதனை மெல்லியதாக சீவி வைத்துக் கொள்ளவும்.

    ஒரு கப்பில் தேவைக்கேற்ப உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றைக் கலந்து தனியாக வைத்து கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் சீவிய உருளைக்கிழங்கைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

    பொரித்த உருளைக்கிழங்கு சிப்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் மேல் மிளகாய் தூள் கலவையைத் தூவி எல்லா சிப்ஸிலும் நன்றாகப் படும்படி குலுக்கி வைக்கவும்.

    இதோ சுவையான மொறு மொறு சிப்ஸ் ரெடி!!!

    காற்று புகாத டப்பாவில் போட்டு 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.

    குறிப்பு :

    உருளைக்கிழங்கை சீவி நீண்ட நேரம் வைத்தால் நிறம் மாறி போகும், ஆகவே சீவியதும் அதனை ஒரு துணி மேல் பரப்பி உடனே பொரித்து விட வேண்டும். துணி மேல் போடுவதால் உருளையில் ஈரம் இல்லாமல், நல்ல மொறு மொறுப்பாக இருக்கும்.

    மிளகாய் தூள் பிடிக்காதவர்கள் மிளகு தூள், உப்பு சேர்த்தும் செய்யலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×