search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "detention"

    • ஆம்பர் ரோஸ், 7 வருடங்கள் மைக்கேல் ரிக்கருடன் நட்பில் இருந்தார்
    • சிறைக்கு சென்ற ரிக்கர், 12 நாட்களில் ஜாமீனில் வெளியே வந்தார்

    அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் லின்கன் கவுன்டி பகுதியில் வசித்து வந்தவர்கள் 63 வயதான லெசா ஆர்ம்ஸ்ட்ராங் ரோஸ் (Lesa Armstrong Rose), அவர் கணவர் டெட்டி (Teddy) மற்றும் அவர்களது மகள், ஆம்பர் ரோஸ் (Amber Rose).

    ஆம்பர் ரோஸ், சுமார் 7 வருடங்கள் 36 வயதான மைக்கேல் ஸ்டீவன் ரிக்கர் (Michael Steven Ricker) எனும் ஆண் நண்பருடன் நட்பில் இருந்தார். பிறகு, அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

    சில மாதங்களுக்கு முன் ரிக்கர், ஆம்பர் ரோஸை தாக்கியுள்ளார். இதனையறிந்த ரோஸின் தந்தை, ரிக்கரை அழைத்து விசாரித்தார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலாக மாறியது. இதையடுத்து ரிக்கர், டெட்டியை துப்பாக்கியால் சுட்டார். இதில் டெட்டி பலத்த காயமடைந்தாலும், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    சம்பவ இடத்தில் இருந்து தப்பிய ரிக்கர், காவல்துறையின் தேடலில் சிக்கினார். கைது செய்யப்பட்ட ரிக்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், 12 நாட்களில் ஜாமீனில் வெளியே வந்தார்.

    இதையடுத்து சில நாட்களில் ரோஸ் வீட்டிற்கு மீண்டும் ரிக்கர் வந்தார். அப்போது அங்கு ஆம்பர் இல்லை. ஆனால், ஆம்பர் ரோஸின் தாயார் லெஸா இருப்பதை கண்டு அவருடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கி கொலை செய்தார். இதில் லெஸா உயிரிழந்தார்.

    இச்சம்பவத்தையடுத்து காவல்துறையினரின் தீவிர தேடலில் மீண்டும் ரிக்கர் சிக்கினார்.

    இந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வில் நீதி அமைப்பில் உள்ள சுலபமான வழிகளில் ரிக்கர் போன்றவர் தப்பித்து வந்து மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடுவதை ஆம்பர் ரோஸ் விமர்சித்துள்ளார்.

    அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:

    ரிக்கர் எங்கள் குடும்பத்தை தங்கள் குடும்பமாக நினைத்தான். நாங்களும் ரிக்கரை எங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்துத்தான் பழகி வந்தோம். உண்மையில் நான் நீதித்துறையின் மீதுதான் கடுங்கோபத்தில் இருக்கிறேன். ஜாமீனில் வந்தவனால் என் குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்படலாம் என தெரிந்தும் காவல்துறை எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை. தேவையற்ற விஷயங்களை குறித்து நீதித்துறை கவலைப்படுகிறது. சிறிதளவு போதை பொருள் வைத்திருப்பவர்கள் எளிதாக ஜாமீனில் வர முடிவதில்லை. ஆனால், கொலைக்குற்றம் சாட்டப்பட்டவன் வெளியே சுலபமாக வந்து மீண்டும் கொலை செய்கிறான்.

    இவ்வாறு ரோஸ் தெரிவித்தார்.

    ஆம்பர் ரோஸின் கருத்துக்களுக்கு சமூக வலைதளங்களில் பல பயனர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆகஸ்ட் 9ம் தேதி 'கிராந்தி திவஸ்' எனும் பெயரில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
    • துஷாரை காந்தியை வீட்டு வாசலில் நின்றிருந்த ஒரு காவல்துறை அதிகாரி தடுத்தார்.

    இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் "வெள்ளையனே வெளியேறு" எனும் இயக்கம் 1942ல் ஆரம்பிக்கப்பட்டது.

    பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கெதிராக இந்தியாவில் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கமான ஆகஸ்ட் புரட்சி என்றும் அழைக்கப்படும் இந்த போராட்டம், மகாத்மா காந்தியின் இந்திய விடுதலைக்கான அழைப்பினையடுத்து 1942 ஆகஸ்ட் 9 அன்று தொடங்கப்பட்டதாகும்.

    இதில் ஈடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 9ம் தேதி 'கிராந்தி திவஸ்' எனும் பெயரில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு மும்பை கிராந்தி மைதானத்தில் இதற்கான கொண்டாட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    இதில் கலந்து கொண்டு மணிப்பூர் கலவரத்திற்கெதிராக அமைதி வழியில் போராட மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் துஷார் காந்தியும் அவரது ஆதரவாளர்களும் திட்டமிட்டிருந்தனர்.

    ஆனால் 8ம் தேதி இரவு மும்பை காவல்துறை இவர்களின் கொண்டாட்டத்திற்கு தடையுத்தரவு பிறப்பித்தது. அவர் வீட்டு வாசலில் சுமார் 20 காவல்துறை அதிகாரிகள் நிறுத்தப்பட்டனர்.

    தடையை மீறிய துஷார், ஆகஸ்ட் 9 தேதி காலை 07:00 மணியளவில் நிகழ்ச்சியில் பங்கேற்க வீட்டிலிருந்து புறப்பட்டார். துஷாரை அங்கு நின்றிருந்த ஒரு காவல்துறை அதிகாரி தடுத்தார்.

    இதனை மீறி துஷார் புறப்பட்டதால் அவரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி மும்பை சான்டா க்ரூஸ் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அந்த நிகழ்ச்சிக்கான கொண்டாட்டங்கள் நிறைவடையும் வரை அவர் அங்கேயே வைக்கப்பட்டார்.

    இது குறித்து துஷார் காந்தி கூறுகையில், 'வெள்ளையர்களால் என் கொள்ளு தாத்தாவும் கொள்ளு பாட்டியும் கைது செய்யப்பட்ட நாளிலேயே என்னை காவலில் வைத்ததற்கு காவல் துறைக்கு நன்றி. இந்தியாவில் இன்றிருக்கும் நிலை அன்று பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த அடக்குமுறை நாட்களை போன்றே உள்ளது' என்றார்.

    • அழகாபுரம், அயோத்தியாபட்டினம் உள்பட தமிழகம் முழுவதும் 86 இடங்களில் அமுதசுரபி சிக்கன கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கி 58 கோடி மோசடி நடந்தது.
    • அம்மாபேட்டையை சேர்ந்த பாஸ்கரன் அயோத்தி யாபட்டினம் சங்கத்தில் பல்வேறு திட்டத்தில் ரூ.2.92 லட்ச முதலீடு செய்து அந்த பணத்தை திரும்ப பெற முடியவில்லை.

    சேலம்:

    சேலம் அழகாபுரம், அயோத்தியாபட்டினம் உள்பட தமிழகம் முழுவதும் 86 இடங்களில் அமுதசுரபி சிக்கன கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கி 58 கோடி மோசடி நடந்தது.

    அம்மாபேட்டையை சேர்ந்த பாஸ்கரன் அயோத்தி யாபட்டினம் சங்கத்தில் பல்வேறு திட்டத்தில் ரூ.2.92 லட்ச முதலீடு செய்து அந்த பணத்தை திரும்ப பெற முடியவில்லை. பாதிக்கப்பட்ட அவர் சேலம் பொருளாதார குற்றப்பிரி வில் புகார் அளித்தர்.

    விசாரணையில் மோசடி அம்பலமானதால் சங்க தலைவர் ஜெயவேல் (வயது 67), கணக்காளர் கண்ணன் (27), இயக்குனர் தங்கப்பழம் (43) ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். கடந்த 23-ந் தேதி அயோத்தி யாபட்டினத்தை சேர்ந்த சங்க இயக்குனர் சரண்யா (31) கைது செய்யப்பட்டார். அவரை 4 நாள் காவலில் வைத்து விசாரிக்க கோவை டான் பிட் நீதிமன்றத்தில் போலீசார் அனுமதி கேட்டனர்.

    நேற்று 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி செந்தில்குமார் உத்தர விட்டார். இதையடுத்து சரண்யாவை சேலம் அழைத்து வந்து போலீசார், விசாரணை நடத்தி வரு கிறார்கள். விசாரணை முடி வில் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்ப தால் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதிதாக கொடிக்கம்பம் அமைப்பதற்கு ஒன்றுதிரண்டு வந்தனர்.
    • எந்தவித அனுமதியும் இன்றி கொடிக்கம்பம் வைக்கக் கூடாது என திட்டவட்டமாக போலீசார் தெரிவித்தனர்

    கடலூர்:

    கடலூர் அருகே செல்லங்குப்பம் பகுதியில் நேற்று நள்ளிரவு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதிதாக கொடிக்கம்பம் அமைப்பதற்கு நிர்வாகிகள் ஒன்றுதிரண்டு பணிகள் மேற்கொண்டு வந்தனர். தகவல் அறிந்த கடலூர் போலீஸ் டி.எஸ்.பி. கரிகால் பாரி சங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்‌. பின்னர் புதிதாக கொடிக்கம்பம் அமைப்பதற்கு சிமெண்ட் கட்டை மற்றும் இரும்பு பைப் அமைக்கும் பணி நடைபெற்றதை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    பின்னர் புதிதாக கொடிக்கம்பம் அமைக்க வேண்டுமானால் வருவாய்த்துறை மற்றும் போலீசாரிடம் உரிய முறையில் அனுமதி பெற்றிருக்க வேண்டும்‌. மேலும் அனுமதி இல்லாமல் கொடிக்கம்பம் அமைத்தால் அதனை பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்‌. இது மட்டுமின்றி ஏற்கனவே இந்த பகுதியில் கொடிக்கம்பம் உள்ள நிலையில் எந்தவித அனுமதியும் இன்றி கொடிக்கம்பம் வைக்கக் கூடாது என திட்டவட்டமாக போலீசார் தெரிவித்தனர்.

    அப்போது அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கொடிக்கம்பம் உடனடியாக அங்கிருந்து அகற்றி அவர்கள் கொண்டு சென்றனர் . இனி வருங்காலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    வெனிசுலாவில் நாடாளுமன்ற சபாநாயகர் ஜூவான் கெய்டோ கைது செய்யப்பட்டதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. #Venezuela #AssemblyPresident #JuanGuaido
    கராக்கஸ்:

    வெனிசுலா நாடாளுமன்றத்தில் முழுவதுமாக எதிர்க்கட்சியினர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவர்கள் நிகோலஸ் மதுரோ 2-வது முறையாக அதிபர் ஆவதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். எனினும் அவர் கடந்த 10-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு முன்னிலையில் 2-வது முறையாக அந்நாட்டின் அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள் நிகோலஸ் மதுரோ பதவி விலக வேண்டும் என்றும், புதிய தேர்தலை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையில் நாடாளுமன்ற சபாநாயகரான ஜூவான் கெய்டோ, தான் அதிபர் ஆவதற்கு தயாராகி வருவதாக அறிவித்தார்.

    இந்த நிலையில், தலைநகர் கராக்கசில் நடைபெறும் பேரணியில் பங்கேற்பதற்காக ஜூவான் கெய்டோ நேற்று முன்தினம் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பாதுகாப்புபடை வீரர்கள் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

    இது எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் செயல் எனக் கூறி அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. #Venezuela #AssemblyPresident #JuanGuaido
    கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிகளில் நக்சலைட்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்களின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள மாவட்டம் ஆகும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3-ல் ஒரு பங்கு வனப்பகுதி உள்ளன. குறிப்பாக ஆந்திரா, கர்நாடக மாநில எல்லைப்பகுதியையொட்டிய வனப்பகுதிகளும் கிருஷ்ணகிரி மாவட்டத்தையொட்டி அமைந்துள்ளன.

    இந்தநிலையில் இன்று (புதன்கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில எல்லையில் உள்ள வனப்பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம் எதுவும் உள்ளதா? என நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் கிருஷ்ணகிரி, பர்கூர், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட வனப்பகுதிகளில் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது வனப்பகுதியையொட்டி உள்ள கிராமமக்களிடம் சந்தேகத்திற்கு இடமான வகையில் யாராவது நடமாடினால் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். 
    ×