என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டுறவு சங்க பெண் இயக்குனரை காவலில் எடுத்து விசாரணை
- அழகாபுரம், அயோத்தியாபட்டினம் உள்பட தமிழகம் முழுவதும் 86 இடங்களில் அமுதசுரபி சிக்கன கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கி 58 கோடி மோசடி நடந்தது.
- அம்மாபேட்டையை சேர்ந்த பாஸ்கரன் அயோத்தி யாபட்டினம் சங்கத்தில் பல்வேறு திட்டத்தில் ரூ.2.92 லட்ச முதலீடு செய்து அந்த பணத்தை திரும்ப பெற முடியவில்லை.
சேலம்:
சேலம் அழகாபுரம், அயோத்தியாபட்டினம் உள்பட தமிழகம் முழுவதும் 86 இடங்களில் அமுதசுரபி சிக்கன கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கி 58 கோடி மோசடி நடந்தது.
அம்மாபேட்டையை சேர்ந்த பாஸ்கரன் அயோத்தி யாபட்டினம் சங்கத்தில் பல்வேறு திட்டத்தில் ரூ.2.92 லட்ச முதலீடு செய்து அந்த பணத்தை திரும்ப பெற முடியவில்லை. பாதிக்கப்பட்ட அவர் சேலம் பொருளாதார குற்றப்பிரி வில் புகார் அளித்தர்.
விசாரணையில் மோசடி அம்பலமானதால் சங்க தலைவர் ஜெயவேல் (வயது 67), கணக்காளர் கண்ணன் (27), இயக்குனர் தங்கப்பழம் (43) ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். கடந்த 23-ந் தேதி அயோத்தி யாபட்டினத்தை சேர்ந்த சங்க இயக்குனர் சரண்யா (31) கைது செய்யப்பட்டார். அவரை 4 நாள் காவலில் வைத்து விசாரிக்க கோவை டான் பிட் நீதிமன்றத்தில் போலீசார் அனுமதி கேட்டனர்.
நேற்று 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி செந்தில்குமார் உத்தர விட்டார். இதையடுத்து சரண்யாவை சேலம் அழைத்து வந்து போலீசார், விசாரணை நடத்தி வரு கிறார்கள். விசாரணை முடி வில் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்ப தால் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.






