search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Congress executive"

    • அடையாளம் தெரியாத 5 பேர் சேர்ந்து கார்த்திக்வினோவை தாக்கி துப்பாக்கி காட்டி மிரட்டினர்.
    • 12 பிரிவுகளின் கீழ் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பிருந்தாவனம் முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக்வினோ (வயது36) காங்கிரஸ் பிரமுகர்.

    இவருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 15-ந் தேதி இரவு சென்னை ஆலந்தூர் வருண்குமார், (35) என்பவர் கார்த்தி வினோவை காரில் கடத்தி சென்று அரியாங்குப்பம் பகுதியில் உள்ள வீட்டில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது.

    அங்கு வருண்குமாருடன் வந்த இளைஞர் காங்கிரஸ் தேசிய செயலாளர் ஜோஸ்வா ஜெரால்டு (37) புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த் பாபுநடராஜன் (35) கண்ணன் (35) சுரேஷ்(35) மற்றும் அடையாளம் தெரியாத 5 பேர் சேர்ந்து கார்த்திக்வினோவை தாக்கி துப்பாக்கி காட்டி மிரட்டினர்.

    மேலும் அவரை நிர்வா ணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டி அரியாங்குப்பத்தில் இருந்து திண்டிவனம் அழைத்து சென்று அங்கு அவர் அணிந்திருந்த 1½ பவுன் மோதிரம், கைச்சங்கி லியை பறித்தும், வங்கி கணக்கில் இருந்து ரூ.89 ஆயிரம் பணம், கையில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் பணம் பெற்று கொண்டு ரூ.10 லட்சம் கடன் பெற்ற தாக மிரட்டி கையெழுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கார்த்திக் வினோ திண்டிவனம் போலீசில் முதலில் புகார் தெரிவித்தார். ஆனால் கடத்தல் அரியாங்குப்பத்தில் நடந்ததால் அரியாங்குப்பம் போலீசில் புகார் அளிக்க அனுப்பினர்.

    அரியாங்குப்பம் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கார்த்திக் வினோ கடத்தி சென்றதாக கூறிய இடங்களில் உள்ள சி.சி.டி.வி. கேமரா உள்ளிட் டவற்றை ஆய்வு செய்து விசாரித்தபோது பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது. இதனால் வழக்கு பதிவு செய்ய தாமதம் ஆனது.

    இதையடுத்து கார்த்திக் வினோ புதுச்சேரி கோர்ட்டில் தன்னுடைய புகார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க மனு தாக்கல் செய்தார். அந்த புகார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதைத் தொடர்ந்து வருண்குமார், ஜோஸ்வா ஜெரால்டு, ஆனந்த்பாபு நடராஜன், கண்ணன், சுரேஷ் மற்றும் அடையாளம் தெரியாத 5 பேர் உட்பட 10 பேர் மீது கடத்தல், தாக்குதல், துப்பாக்கி முனையில் மிரட்டல் என 12 பிரிவுகளின் கீழ் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்.
    • பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது.

    நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடந்து வருகிறது.

    2 மருத்துவர் குழு பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது.

    பிதேர பரிசோதனை முடிந்த பிறகே, இது கொலையா ? தற்கொலையா உ என தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், சம்பவத்தில் உடலை வாங்க மறுத்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

    சம்பவ இடத்தில் டிஐஜி ஆய்வு செய்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    • பாளை காமராஜ்நகர் 2-வது மெயின்ரோட்டை சேர்ந்தவர் டியூக்துரைராஜ் (வயது44). காங்கிரஸ் பிரமுகரான இவர் ஒப்பந்த அடிப்படையில் கட்டுமான பணிகளும் செய்து கொடுத்து வருகிறார்.
    • மோட்டார் சைக்கிள் உடைப்பு தொடர்பாக அவர் பாளை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சண்முகமூர்த்தி வழக்குப்பதிவு செய்து மரியராஜை கைது செய்தார்.

    நெல்லை:

    பாளை காமராஜ்நகர் 2-வது மெயின்ரோட்டை சேர்ந்தவர் டியூக்துரைராஜ் (வயது44). காங்கிரஸ் பிரமுகரான இவர் ஒப்பந்த அடிப்படையில் கட்டுமான பணிகளும் செய்து கொடுத்து வருகிறார்.

    இவரிடம் பாளை அண்ணா தெருவை சேர்ந்த மோசஸ் பிரபாகரன் என்ற பிரபு என்பவர் வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் பிரபு சம்பளம் வாங்குவதற்காக டியூக்துரைராஜின் வீட்டிற்கு சென்றார். அப்போது ஊதியம் தொடர்பாக அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

    பின்னர் அங்கிருந்து சென்ற பிரபு தனது நண்பரான நடுவக்குறிச்சியை சேர்ந்த மரியராஜ் மற்றும் சிலருடன் மீண்டும் செந்தில்நகரில் உள்ள டியூக்துரைராஜ் வீட்டிற்கு சென்றார்.

    அப்போது அங்கு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிளை அடித்து உடைத்த கும்பல் டியூக்துரைராஜை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    இது தொடர்பாக அவர் பாளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகமூர்த்தி வழக்குப்பதிவு செய்து மரியராஜை கைது செய்தார்.

    மேலும் பிரபு மற்றும் அவரது மற்றொரு நண்பரை தேடி வருகின்றனர்.

    ×