search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cell phone snatch"

    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
    • விசாரணையில் ஐஸ்வர்யாவை கீழே தள்ளி செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது.

    மணிமங்கலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 23). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை சி.ஐ.டி. அவென்யு பகுதியில் தங்கியிருந்து ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் ஐஸ்வர்யாவை கீழே தள்ளிவிட்டு ஐஸ்வர்யாவிடம் இருந்த செல்போனை பறித்து சென்றார்.

    இதுகுறித்து ஐஸ்வர்யா மணிமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இதுதொடர்பாக படப்பை பகுதியில் தங்கியிருந்த மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி பப்லு (வயது 28) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் ஐஸ்வர்யாவை கீழே தள்ளி செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து பப்லுவை போலீசார் கைது செய்தனர்.

    அயனாவரம் அருகே டாக்டரை தாக்கி செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர்:

    முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் லோகேஷ். டாக்டர். இவர் நேற்று இரவு காரில் ஐ.சி.எப். மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காரை இடித்தனர். இதில் லோகேசுக்கும், அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.

    பின்னர் லோகேஷ் காரை எடுத்துக்கொண்டு சென்றார். அயனாவரம் சிக்னலில் கார் நின்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களும் கார் கண்ணாடியை உடைத்தனர். மேலும் லோகேசை தாக்கி ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து கொண்டு தப்பினர். இதுகுறித்து லோகேஷ் ஓட்டேரி போலீசில் புகார் செய்தார்.

    காசிமேட்டில் கப்பல் ஊழியரிடம் கத்திமுனையில் பணம்-செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    காசிமேடு அமராஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ஜெலஸ்டின் ஜோஷ்யன்.

    இவர் பாரிமுனையில் உள்ள கப்பல் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று கம்பெனி வேலையாக எண்ணூர் சென்றார்.

    நள்ளிரவு 12.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் காசிமேடு எக்ஸ்யூஸ் சாலை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கும்பல் அவரை வழி மறித்தது.

    ஜெலஸ்டின் நின்றதும் அவரிடம் கத்தியை காட்டி, பணம், செல்போன் ஆகியவற்றை பறிக்க முயன்றனர். அவர் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஜெலஸ்டினை கத்தியால் தாக்கி, அடித்து உதைத்தனர்.

    அவரிடம் இருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், 5 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர்.

    இதற்குள் வழிப்பறி கும்பலை சேர்ந்தவர்கள் ஜெலஸ்டின் மோட்டார் சைக்கிள் மீது கல்லை தூக்கி போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். காயம் அடைந்த ஜெலஸ்டின் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து, வழிப்பறி கும்பலை தேடி வருகிறார்கள். இந்த பகுதியில் போலீசார் இரவு ரோந்தை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஓட்டேரி அருகே இளம் பெண்ணிடம் செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை ஓட்டேரி கிருஷ்ணதாஸ் சாலை, ஹைதர் கார்டன் தெருவை சேர்ந்தவர் சோபனா (26). திருவான்மியூரில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று மாலை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் இறங்கி ஓட்டேரி ஜமாலயா பகுதி அருகே சோபனா செல்லும் போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சோபனாவின் செல்போனை பறித்து சென்றனர்.

    இது குறித்து சோபனா ஓட்டேரி குற்றபிரிவு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். நேற்று மதியம் ஸ்டிபன்சன் சாலையில் உள்ள தனியார் வளாகத்தில் 2 பேர் மறைந்திருப்பது தெரிந்து அவர்களை சுற்றி வளைத்தனர்.

    விசாரணையில் புளியந்தோப்பு ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த ராஜேந்திரன்(25), ஜெகன் (23) என்பதும், சோபனாவிடம் செல்போன் பறித்ததும் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து ஒரு செல்போன் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சென்னை ஜாபர்கான்பேட்டையில் வாலிபரை தாக்கி செல்போன் பறித்த சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள குடிநீர் சப்ளை செய்து வரும் நிறுவனத்தில் பணி புரிந்து வருபவர் சாமுவேல் சக்கரவர்த்தி. இவர் நேற்று மாலை நண்பருடன் காசி தியேட்டர் அருகே செல்போனில் பேசியபடியே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த மூன்று பேர் திடீரென சாமுவேல் சக்கரவர்த்தியை சரமாரியாக தாக்கி அவரிட மிருந்து செல்போனை பறித்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து எம்.ஜி.ஆர். போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் செல்போன் பறித்து தப்பி சென்ற 3 பேரை கே.கே.நகர் பஸ் நிலையம் அருகே போலீசார் மடக்கி பிடித்தனர்.

    அவர்கள் எம்.ஜி.ஆர். நகர் சூளை பள்ளம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், மணிகண்டன் மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட ஒரு சிறுவன் என்பது தெரிந்தது. மேலும் 3 பேரும் பல்வேறு இடங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர். கார்த்திக் தற்போது நிபந்தனை ஜாமீனில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவன் மீது ஏற்கனவே எம்.ஜி.ஆர். நகர், ராமாபுரம் காவல் நிலையங்களில் பல்வேறு வழிப்பறி வழக்குகள் உள்ளது.

    வேலூர் கிரீன் சர்க்கிளில் டாக்டரிடம் செல்போன் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர்:

    வேலூர் சங்கரன்பாளையத்தை சேர்ந்தவர் வாசு (வயது 50). ஹோமியோபதி டாக்டர். இவர் நேற்று கிரீன் சர்க்களில் செல்போன் பேசிக் கொண்டு நின்றிருந்தார். அப்போது அங்கு ஒரு பைக்கில் வந்த 3 பேர் கும்பல் திடீரென வாசுவை தாக்கிவிட்டு அவரிடம் இருந்து செல்போனை பறித்துச் சென்று விட்டனர்.

    அதிர்ச்சியடைந்த வாசு திருடன், திருடன் என கத்தி கூச்சலிட்டார். அதற்குள் அந்த மர்ம கும்பல் தப்பிச் சென்று விட்டது. இது குறித்து வாசு வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பகுதியில் உள்ள ஓட்டல் கண்காணிப்பு கேமராவில் செல்போன் பறிப்பு சம்பவம் பதிவாகி உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே இடத்தில் ஒரு பெண்ணிடம் செயின் பறிப்பு நடந்தது. இந்த பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    எனவே போலீசார் இந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைத்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    சென்னையில் ஒரே நாளில் கடற்படை அதிகாரி உள்பட 7 பேரிடம் செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை, மெரினா கடற்கரையில் கடற்படை அதிகாரி ரிஷிக்குமார் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ரிஷிக்குமார் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.

    அதேப்போல் மாதவரத்தில் ராபர்ட், அயனாவரத்தில் நிர்மல், ஐஸ்அவுசில் தமீம், ராயப்பேட்டையில் ஜாபர்சாதிக், பெரம்பூரில் ரமேஷ், கொடுங்கையூரில் சிவா ஆகியோரிடமும் செல்போன் பறிக்கப்பட்டு உள்ளது. ஒரே நாளில் 7 பேரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது ஒரே கும்பலா? என்று விசாரணை நடந்து வருகிறது.

    கோவை அருகே கூட்டநெரிசலை பயன்படுத்தி செல்போன் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    தீபாவளியையொட்டி கோவை நகர கடை வீதிகளில் கூட்டம் அலைமோதுகிறது.நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட்டில் ஈடுபடுபவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    சப்-இன்ஸ்பெக்டர் மாரி முத்து தலைமையில் போலீசார் கார்த்தி, உமா ஆகியோர் அடங்கிய குழுவினர் காந்திபுரத்தில் சாதாரண உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சதீஷ்குமார்(28) என்ற வாலிபரிடம் இருந்து செல்போனை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கோவை கள்ளபாளையத்தை சேர்ந்த கணேஷ்(60), கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(42) என்பது தெரிய வந்தது. இதில் கணேஷ் மீது 50-க்கும் மேற்பட்ட பிக்பாக்கெட் வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    சென்னையில் ஒரே நாளில் 6 பேரிடம் செல்போன் பறிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னையில் ஒரே நாளில் 6 பேரிடம் செல்போன் பறிக்கப்பட்டுள்ளது.

    நொளம்பூரில் விஜய், கோடம்பாக்கத்தில் சுவேதா, பாண்டிபஜாரில் குகன், புளியந்தோப்பில் ஹரிபிரியா, தேனாம்பேட்டையில் கார்முகிலன், கோவிந்த ராஜன் ஆகிய 6 பேரிடம் அடுத்தடுத்து செல்போன்களை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பறித்து தப்பி சென்று விட்டனர்.

    இந்த செல்போன் பறிப்பில் ஈடுபட்டது ஒரே நபர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    பெருங்களத்தூர்-பல்லாவரத்தில் இளம்பெண்-என்ஜினீயரை தாக்கி செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    பெருங்களத்தூரை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகள் ஜமுனாராணி. பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள கால்சென்டரில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு அவர் பணிமுடிந்து வீட்டுக்கு மொபட்டில் திரும்பி வந்து கொண்டிருந்தார். பெருங்களத்தூர் இரணியம்மன் கோவில் அருகே வந்தபோது 3 வாலிபர்கள் அவரை வழிமறித்தனர்.

    திடீரென அவர்கள் ஜமுனா ராணியை சரமாரியாக தாக்கி அவரிடமிருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்று விட்டனர். முகத்தில் பலத்த காயம் அடைந்த ஜமுனா ராணி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    இதுகுறித்து பீர்க்கன்கரணை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பல்லாவரம், மல்லிகா நகரை சேர்ந்தவர் ரமேஷ் குமார். சாப்ட்வேர் என்ஜினீயர். ஓரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார்.

    நேற்று இரவு 11 மணி அளவில் அவர் பணிமுடிந்து பல்லாவரம் பஸ்நிலையத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் ரமேஷ் குமாரை தாக்கி செல்போனை பறித்து தப்பினர்.

    இந்த இரண்டு சம்பவத்திலும் ஈடுபட்டது ஒரே நபர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னையில் மீண்டும் நேற்று இரவு ஒரே நாளில் 5 பேரிடம் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    சென்னையில் செல்போன் மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

    இருப்பினும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரே நாளில் 14 பேரிடம் செல்போன், செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன.

    இதனை தொடர்ந்து போலீசார் 2 ஷிப்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இரவு 10 மணியில் இருந்து காலை 4 மணி வரையிலும், 4 மணியில் இருந்து 8 மணி வரையிலும் ரோந்து பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    இதனையும் மீறி சென்னையில் நேற்று இரவு ஒரே நாளில் 5 பேரிடம் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சேகர் (26). இவர் ராயப்பேட்டை பகுதியில் விடுதி ஒன்றில் தங்கி உள்ளார். இவர் ராயப்பேட்டை ஆஸ்பத்திரி அருகே நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் செல்போனை பறித்துச் சென்றனர்.

    எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த நாகராஜன் தனியார் வங்கியில் மேலாளராக உள்ளார். இவர் அபிராமபுரம் சி.வி.ராமசாமி சாலையில் சென்றபோது அவரிடமிருந்த செல்போனையும் மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

    மயிலாப்பூர் பல்லக்கு மாநகரை சேர்ந்த ஆறுமுகம் அதே பகுதியில் உள்ள சமஸ்கிருத கல்லூரி அருகே நடந்து சென்றார். அவரிடமிருந்த செல்போனையும் மோட்டார் சைக்கிள் ஆசாமிகள் பறித்துச் சென்றனர்.

    மயிலாப்பூர் பாலகிருஷ்ணா ரோடு பகுதியில் வசித்து வரும் சாரதி என்பவரிடம், முண்டககண்ணி ரெயில் நிலையம் அருகே வைத்து செல்போன் பறிக்கப்பட்டது.

    ஓட்டேரி திடீர் நகரைச் சேர்ந் தவர் சீனிவாசன். தனியார் நிறுவன ஊழியர். நேற்று இரவு அவர் பணி முடிந்து ஓட்டேரி சுடுகாடு அருகே நடந்து வந்தார். அப்போது 4 பேர் கும்பல் சீனிவாசனிடம் இருந்த செல்போனை பறித்தனர். இதனை தடுக்க முயன்ற அவரை கத்தியால் வெட்டி தப்பி ஓடி விட்டனர். இதில் சீனிவாசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து தலைமைச் செயலக காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டேரி திடீர் நகரைச் சேர்ந்த பெருமாள், அரவிந்தன், சுரேஷ், சர்மா ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    ஒரே நாளில் சென்னையில் அடுத்தடுத்து நடந்த செல்போன் பறிப்பு சம்பவங்களால் வழிப்பறியை தடுக்க முடியாமல் போலீசார் திணறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    வத்தலக்குண்டுவில் அடுத்தடுத்து 2 வாலிபர்களிடம் செல்போன்களை பறித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு கே.கே.நகரைச் சேர்ந்தவர் மதன் (வயது 20). கல்லூரி மாணவர். நேற்று இரவு தனது வீட்டில் இருந்து பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஆட்டோ ஸ்டாண்டு அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரது முதுகை தட்டினர். இதில் மதன் கையில் வைத்திருந்த செல்போன் கீழே விழுந்தது.

    உடனே அவர்கள் செல்போனை தூக்கிக் கொண்டு சென்று விட்டனர். இது குறித்து வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வத்தலக்குண்டு வேட்டுவர் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 23). இவர் திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டுக்கு பஸ்சில் வந்து கொண்டு இருந்தார். காளியம்மன் கோவில் அருகே இறங்கியதும் உடன் வந்த ஒருவர் தனக்கு பல்வேறு அதிகாரிகளை தெரியும் என்றும் அவர்களைக் கொண்டு வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.

    மேலும் அவரது செல்போனை வாங்கி தனது எண்ணை பதிவு செய்து கொள்ளும்படி கூறிக் கொண்டே அதனை பறித்துக் கொண்டு ஓடி விட்டார். இது குறித்தும் வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #Tamilnews

    ×