என் மலர்
செய்திகள்

சென்னையில் ஒரே நாளில் கடற்படை அதிகாரி உள்பட 7 பேரிடம் செல்போன் பறிப்பு
சென்னையில் ஒரே நாளில் கடற்படை அதிகாரி உள்பட 7 பேரிடம் செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை, மெரினா கடற்கரையில் கடற்படை அதிகாரி ரிஷிக்குமார் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ரிஷிக்குமார் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.
அதேப்போல் மாதவரத்தில் ராபர்ட், அயனாவரத்தில் நிர்மல், ஐஸ்அவுசில் தமீம், ராயப்பேட்டையில் ஜாபர்சாதிக், பெரம்பூரில் ரமேஷ், கொடுங்கையூரில் சிவா ஆகியோரிடமும் செல்போன் பறிக்கப்பட்டு உள்ளது. ஒரே நாளில் 7 பேரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது ஒரே கும்பலா? என்று விசாரணை நடந்து வருகிறது.
Next Story






