search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "54வது ஞானபீடம் விருது"

    இலக்கிய துறையில் சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு அளிக்கப்படும் மிக உயரிய ‘ஞானபீடம்’ விருதுக்கு ஆங்கில எழுத்தாளர் அமிதவ கோஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். #JnanpithAward #AmitavGhosh
    புதுடெல்லி:

    இலக்கிய துறையில் சாதனை படைத்தவர்களுக்கு சாகித்ய அகாடமி, ஞானபீடம் உள்ளிட்ட விருதுகளை ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கி கவுரவித்து வருகிறது.
     
    அந்த வகையில், இந்த ஆண்டின் (54-வது) ஞானபீடம் விருதுக்கு பிரபல ஆங்கில நாவலாசிரியர் அமிதவ் கோஷ் (62) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    அமிதவ் கோஷ் 1956-ம் ஆண்டில் கொல்கத்தாவில் பிறந்தவர். தற்போது நியூயார்க்கில் வசித்து வருகிறார். இவரது மனைவி டெபோரா பேக்கர்.

    டெல்லியில் படித்த இவர், ஆக்ஸ்போர்டு மற்றும் அலெக்சாண்டிரியா பல்கலைக்கழகங்களில் படித்துள்ளார். பத்மஸ்ரீ மற்றும் சாகித்ய அகாடமி விருதுகளை பெற்றுள்ளார்.



    ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 15 மொழிகளுள் சிறந்த எழுத்தாளருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. 7 லட்சம் ரூபாய்க்கான காசோலை, தங்கமும் செம்பும் கலந்த பட்டயமும், பாராட்டுப் பத்திரம் மற்றும் பித்தளையால் ஆன கலைமகள் சிலையை உள்ளடக்கிய இந்த விருது 1961-ல் நிறுவப்பட்டது.

    இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழிகளில் எழுதும் எந்த ஓர் எழுத்தாளரும் இந்த விருதுக்கு தகுதியானவர் ஆவார். இதுவரை, அதிகபட்சமாக, கன்னட மொழி எழுத்தாளர்கள் 7 முறையும், இந்தி மொழி எழுத்தாளர்கள் 6 முறையும் இந்த விருதைப் பெற்றுள்ளார்கள். தமிழில் பிரபல எழுத்தாளர்கள் அமரர் அகிலன், ஜெயகாந்தன் ஆகியோர் கடந்த 1975 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் ஆகியோர் ஞானபீடம் விருதினை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #JnanpithAward #AmitavGhosh
    இன்று பிறந்தநாள் கொண்டாடும் பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். #AmitShah #Modi
    புதுடெல்லி:

    பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா இன்று தனது 54-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    பிரதமர்  மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘அமித் ஷாவின் தலைமையில் இந்தியா முழுவதும் பாஜக கணிசமான வளர்ச்சியை பெற்றுள்ளது. அவரது கடின உழைப்பு கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து ஆகும். அவர் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ வாழத்துகிறேன்’ என கூறியுள்ளார்.

    கடின உழைப்பு மற்றும் வியக்கத்தக்க ஒருங்கிணைப்புத் திறமை கொண்ட அமித் ஷாவின் தலைமையில் பா.ஜ.க. புதிய உச்சங்களை எட்டியிருப்பதாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார்.

    மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் டுவிட்டர் மூலம் அமித் ஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். #AmitShah #Modi
    சீன நாட்டின் ஜிங்கே மாகாணத்தில் 5.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. #Earthquake
    பெய்ஜிங்:

    சீனா நாட்டின் ஜிங்கே மாகாணத்தில் நேற்று சுமார் 5.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் உருவானதாக சீனாவின் நிலநடுக்க ஆய்வு மையம் கணித்துள்ளது.
     
    ஜிங்ஜியாங் மாகாணத்தில் கடல் மட்டத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக மாகாண தலைநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. #Earthquake
    ஆசிரியர் தம்பதி வீட்டின் கதவை உடைத்து 54 பவுன் நகைகள்- ரூ.35 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் மன்னார்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள காசன்குளம் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் கணேசன்(வயது 52). இவர், சவளக்காரன் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சாந்தி(45). இவர் திருராமேஸ்வரம் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    நேற்று வழக்கம்போல் கணேசனும் அவருடைய மனைவியும் தங்களது வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்று விட்டனர்.

    இந்த நிலையில் வீடு பூட்டப்பட்டு இருந்ததை தெரிந்து கொண்ட மர்ம கும்பல் கணேசன் வீட்டுக்குள் சென்றனர்.

    வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று உள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த 2 பீரோக்களையும் உடைத்து அதில் இருந்த 54 பவுன் நகைகள் மற்றும் ரூ.35 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு சென்று விட்டனர்.

    நேற்று மாலை பள்ளி முடிந்த பின்னர் வீட்டுக்கு வந்த கணேசனும், அவருடைய மனைவியும் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு இனிகோ திவ்யன், இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாயும் அங்கு வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து அருகே உள்ள பாலம் வரை ஓடி சென்று நின்று விட்டது.

    இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து 54 பவுன் நகைகள்- ரூ.35 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் மன்னார்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×