search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2019 World Cup Cricket"

    கலீல் அகமது வீசிய பந்து விஜய் சங்கர் கையை பலமாக தாக்கியது. இதில் அவருக்கு முறிவு ஏதும் ஏற்படவில்லை என்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. நேற்று முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்த்து விளையாடியது. நேற்று முன்தினம் இந்த போட்டிக்கான வலைப்பயிற்சியில் விஜய் சங்கர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது கலீல் அகமது வீசிய பவுன்சர் பந்து விஜய் சங்கரின் வலது கையை (Forearm) பலமாக தாக்கியது.

    இதனால் அவர் வலியால் துடித்தார். அவர் கையில் எழும்பு முறிவு ஏற்பட்டிருக்குமோ? என்ற அச்சம் நிலவியது. இதனால் உடனடியாக ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்படவில்லை என்று தெரியவந்தது.



    இதனால் உலகக்கோப்பைக்கான அணியில் தொடர்ந்து நீடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் விளையாடவில்லை. 28-ந்தேதி வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் விளையாட வாய்ப்புள்ளது.
    உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி வீழ்த்தியது.
    உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் ஹசிம் அம்லா, மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    மார்கிராம் 21 ரன்கள் அடித்த நிலையில் வெளியேறினார். அதன்பின் 2-வது விக்கெட்டுக்கு ஹசிம் அம்லா உடன் கேப்டன் டு பிளிசிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அம்லா 61 பந்தில் 65 ரன்களும், டு பிளிசிஸ் 69 பந்தில் 88 ரன்களும் சேர்த்தனர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 138 ரன்கள் குவித்தது.

    வான் டெர் டஸ்சன் 40 ரன்களும், டுமினி 22 ரன்களும், பெலுக்வாயோ 25 ரன்களும், கிறிஸ் மோரிஸ் 26 ரன்களும் சேர்க்க தென்ஆப்பிரிக்கா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது.

    இங்கிலாந்து ஆடுகளங்களில் எளிதாக 300 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் தென்ஆப்பிரிக்கா அணியும் எங்களால் 300 ரன்களுக்கு மேல் குவிக்க இயலும் என்பதை நிரூபித்துள்ளது.

    இதனையடுத்து 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

    தொடக்க ஆட்டகாரர் குசல் பெரேரா 0 என்ற முறையிலும் அடுத்து வந்த திருமன்னே 10 ரன்களிலும் குசல் மெண்டிஸ் 37 ரன்களிலும் வெளியேறினார்கள். இந்நிலையில் குனரத்தினேவுடன் மேத்யுஸ்  ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர். இலங்கை அணி 170 ரன்கள் எடுத்திருந்த போது குனரத்தினே அவுட் ஆகி வெளியேறினார்.

    இதனையடுத்து களமிறங்கிய வீரரகள் வந்த வேகத்தில் திரும்பினர். மேத்யூஸ் பொறுப்புடன் ஆடி 64 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தனஜெய டி செல்வா 5, ஜீவன் மெண்டிஸ் 18, ஸ்ரீவர்த்தனா 5, வண்டார்சே 3, லக்மல் 1, என வெளியேற பேரேரா 8 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இலங்கை அணி 251 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் அண்ட்லி 4 விக்கெட்டுகளை அள்ளினார். லுங்கி 2 விக்கெட்டும் ரபாடா, தாஹிர், டவினி, டுமினி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
    உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் இன்று தொடங்கியது. ஒரு ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. பிரிஸ்டோலில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

     அதன்படி இமாம்-உல்-ஹக், பகர் ஜமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இமாம்-உல்-ஹக் 32 ரன்னும், பகர் ஜமான் 19 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். அடுத்து களம் இறங்கிய பாபர் ஆசம் 108 பந்தில் 112 ரன்கள் குவித்தார். அனுபவ வீரர் சோயிப் மாலிக் 59 பந்தில் 44 ரன்கள் சேர்த்தார்.

     மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 47.5 ஓவரில் 262 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் முகமது நபி மூன்று விக்கெட்டும், ரஷித் கான், தவ்லாத் ஜத்ரான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.

    263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.  தொடக்க ஆட்டக்காரர் ஷாசத் 23 ரன்கள் இருந்த போது காயம் காரணமாக வெளியேறினார்.



    மற்ற வீரர்கள் பொறுப்புடன் ஆடினர். ஷாசய் 49, ரக்மட் ஷா 32, சகிடி  74, சமுல்லா 22, ஆப்கான் 7, நபி  34, சாட்ரன் 1, ரன்கள் அடித்திருந்தனர். நைப் 2 மற்றும் ரஷித் கான் 5 கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 49.4 ஓவரில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

    பாகிஸ்தான் தரப்பில் ரியாஷ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வாசிம் 2 விக்கெட்டும் சடப் கான், முகமது ஹஸ்னைன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
    இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கனுக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளதால், உலகக்கோப்பையில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
    உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக மோர்கன் உள்ளார். இவரது தலைமையில் கடந்த நான்கு ஆண்டுகளாக இங்கிலாந்து அணி வலுவானதாக உயர்ந்து நிற்கிறது. நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி முதன்முறையாக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    வருகிற 30-ந்தேதி இங்கிலாந்து தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. தற்போது உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இங்கிலாந்து நாளை ஆஸ்திரேலியாவையும், 27-ந்தேதி ஆப்கானிஸ்தானையும் எதிர்த்து விளையாடுகிறது.



    இதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது பீல்டிங் பயிற்சி மேற்கொண்ட கேப்டன் மோர்கனின் இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் காயத்தின் வீரியம் குறித்து அறிய எக்ஸ்-ரே எடுக்கப்படுகிறது. ஒருவேளை எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தால் மோர்கன் விளையாடுவது சந்தேகமே?
    உலகக்கோப்பையில் இந்த மூன்று பேட்ஸ்மேன்களும் ஜொலிப்பார்கள் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக் கணித்துள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இங்கிலாந்து  ஆடுகளங்கள் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், சுமார் 55 போட்டிகளில் 45-க்கும் மேற்பட்டதில் 300 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் முன்னணி பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது. ஒவ்வொரு அணிகளும் தலா 9 ஆட்டங்களில் விளையாடும் என்பதால் முன்னணி பேட்ஸ்மேன்கள் சர்வ சாதாரணமாக 500 ரன்களை தாண்டுவார்கள்.



    இந்நிலையில் ரன் குவிப்பில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் ஆகியோர் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பையில் விளையாடும் 9 அணி கேப்டன்கள் அடித்துள்ள சதங்களைவிட இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூடுதலாக ஒரு சதம் அடித்துள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. ஜூலை 14-ந்தேதி வரை நடக்கும் இந்தத் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன.

    இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி கேப்டன் பொறுப்பு ஏற்றபின் 19 சதங்கள் விளாசியுள்ளார். மற்ற 9 அணி கேப்டன்களின் ஒட்டுமொத்தமாக 18 சதங்களே அடித்துள்ளனர்.

    உலகக்கோப்பை நடைபெறும் இங்கிலாந்து ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தத் தொடரில் அதிக சதங்களை எதிர்பார்க்கலாம்.
    வேறு அணியில் இருந்து ஒரு வீரரைத் தேர்வு செய்ய வேண்டுமென்றால், யாரைத் தேர்வு செய்வீர்கள் என்று 10 அணி கேப்டன்களும் பதில் அளித்துள்ளனர்.
    12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. ஜூலை 14-ந்தேதி வரை இந்தத்தொடர்  நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட்இண்டீஸ் மற்றும் போட்டியை நடத்தும் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    ரவுண்டு ராபின் முறையில் இத்தொடர் நடக்கிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

    இந்தப்போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளின் கேப்டன்களும் லண்டனில் ஒரே மேடையில் தோன்றி உரையாற்றினார்கள். அப்போது ஒவ்வொரு அணி கேப்டன்களிடமும் உங்களுக்கு பிடித்த வீரர் யார்? என்று கேட்கப்பட்டது.

    இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனக்கு பிடித்த வீரர் தென்ஆப்பிரிக்கா கேப்டன் டுபிளிசிஸ் என்று பதில் அளித்தார். இந்த உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஜாப்ரா ஆர்சர் முக்கிய பங்கு வகிப்பார் என்றும் தெரிவித்தார்.



    தென்ஆப்பிரிக்க கேப்டன் டுபிளிசிஸ் கூறும்போது, “பேட்டிங்கில் விராட் கோலியை பிடிக்கும். பந்து வீச்சில் பும்ரா, ரஷித்கான் ஆகியோரை பிடிக்கும் என்றார். மற்ற கேப்டன்களுக்கு விரும்பிய வீரர்கள் விவரம்:-

    வில்லியம்சன் (நியூசிலாந்து)- ரஷித் கான்.

    மோர்தசா (வங்காளதேசம்)- விராட் கோலி.

    மோர்கன் (இங்கிலாந்து)- ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலிய பயிற்சியாளர்களில் ஒருவராக தற்போது இருக்கிறார்).

    சர்பராஸ் அகமது (பாகிஸ்தான்)- பட்லர்.

    ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா)- ரபாடா.

    கருணாரத்னே (இலங்கை)- பென் ஸ்டோக்ஸ்.

    ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்)- எனது அணியில் உள்ள வீரர்களுடன் மகிழ்ச்சி

    குல்பாதின் நைப் (ஆப்கானிஸ்தான்)- யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஆட்டத்தை பொறுத்து முடிவு.
    உலகக்கோப்பையில் பங்கேற்க உள்ள மற்ற 9 அணிகளின் கேப்டன்களுடன் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சந்தித்து உரையாற்றினார்.
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து உள்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. உலகக்கோப்பையில் பங்கேற்கும் 10 அணிகளும் இங்கிலாந்து சென்றடைந்துள்ளன.



    தற்போது பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்ற 9 அணிகளின் கேப்டன்களை சந்தித்து உரையாற்றினார். அப்போது பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமதுடன் சம்பிரதாயம் முறையாக கைக்குலுக்கினார்.
    உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இறுதி பட்டியலை வெளியிட்டது இங்கிலாந்து. ஜாப்ரா ஆர்சர் அணியில் இடம்பிடித்துள்ளார்.
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. ஜூலை 14-ந்தேதி வரை நடக்கும் இந்தத் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன.

    கடந்த மாதம் 20-ந்தேதிக்குள் முதற்கட்ட அணியை அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி கூறியிருந்தது. ஆனால் நாளைமறுநாள் (மார்ச் 23-ந்தேதி) வரை தேவைப்பட்டால் அணியில் உள்ள வீரர்களை மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    நேற்று பாகிஸ்தான் அணி மூன்று வீரர்களை மாற்றியிருந்தது. இங்கிலாந்து அணியின் முதற்கட்ட பட்டியலில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஜாப்ரா ஆர்சர், லியாம் டாசன் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

    பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஆர்சர் இடம்பிடித்திருந்தார். இந்நிலையில் இன்று இங்கிலாந்து 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. இதில் ஆர்சர், டாசன் இடம்பிடித்துள்ளனர்.



    15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. மோர்சன் (கேப்டன்), 2. மொயீன் அலி, 3. பேர்ஸ்டோவ், 4. ஜோஸ் பட்லர், 5. டாம் குர்ரான், 6. லியாம் டாசன், 7. லியாம் பிளங்கெட், 8. அடில் ரஷித், 9. ஜோ ரூட், 10. ஜேசன் ராய், 11. பென் ஸ்டோக்ஸ், 12. ஜேம்ஸ் வின்ஸ், 13. கிறிஸ் வோக்ஸ், 14. மார்க்வுட். 15. ஜாப்ரா ஆர்சர்.

    முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த அலேக்ஸ் ஹேல்ஸ், ஜோ டென்லி ஆகியோர் தற்போது நீக்கப்பட்டுள்ளனர்.
    உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்துள்ளீர்கள் என்று தொலைபேசி அழைப்பு வரவேண்டும் என இங்கிலாந்து வீரர்கள் அவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என கிறிஸ் வோக்ஸ் தெரிவித்துள்ளார்.
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது.

    போட்டியை நடத்தும் இங்கிலாந்து வலுவான அணியாக திகழ்கிறது. அந்த அணி முதல் முறையாக உலகக்கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட முதற்கட்ட அணியை இங்கிலாந்து அறிவித்திருந்தது. வரும் 23-ந்தேதிக்குள் வீரர்களை மாற்றிக்கொள்ள முடியும். இதனால் இங்கிலாந்து அணியில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்த அணியின் கேப்டன் மோர்கன் இதுவரை 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் குறித்து எந்த செய்தியையும் கசியவிடவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இடம்பிடித்துள்ள 17 பேரும் அபாரமாக விளையாடினர். இதனால் யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியவில்லை.



    இந்நிலையில் தேர்வாளர்களின் போன் அழைப்புக்காக இங்கிலாந்து வீரர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கிறிஸ் வோக்ஸ் கூறுகையில் ‘‘ஒவ்வொரு வீரர்களும் தேர்வுக்குழுவின் போன் அழைப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் உறுதியாக இடம் கிடைக்கும் என்றாலும், அவர்கள் வாயில் இருந்து நல்ல வார்த்தை வரும் வரை உறுதி கிடையாது’’ என்றார்.
    பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளரான முகமது அமிர் உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பிடித்துள்ளார்.
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடக்கிறது. வருகிற 30-ந்தேதி தொடங்கும் இந்தத் தொடரில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    10 அணிகளும் கடந்த மாதம் 24-ந்தேதிக்குள் 15 பேர் கொண்ட முதல்கட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. பாகிஸ்தான் அணியில் அபிட் அலி, ஜுனைத் கான், பஹீம் அஷ்ரப் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்து இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிருக்கு இடம் கிடைக்கவில்லை. இதற்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.



    உலகக்கோப்பைக்கான அணியில் வருகின்ற 23-ந்தேதிக்குள் மாற்றங்கள் செய்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்ததால் முகமது அமிருக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அபிட் அலி, ஜுனைத் கான், பர்ஹீம் அஷ்ரப் ஆகியோர் நீக்கப்பட்டு முகமது அமிர், வஹாப் ரியாஸ், ஆசிப் அலி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. சர்பராஸ் அகமது, 2. பகர் ஜமான், 3. இமாம்-உல்-ஹக், 4. பாபர் ஆசம், 5. சோயிப் மாலிக், 6. முகமது ஹபீஸ், 7. ஆசிப் அலி, 8. சதாப் கான், 9. இமாத் வாசிம், 10. ஹரிஸ் சோஹைல், 11. ஹசன் அலி, 12. ஷஹீன் அப்ரிடி, 13. முகமது அமிர், 14. வஹாப் ரியாஸ், 15. முகமது ஹஸ்னைன்.
    உலகக்கோப்பைக்கான நேரத்தை ஆஷஸ் தொடர் பயிற்சிக்காக பயன்படுத்த விரும்புகிறேன் என்று ஹசில்வுட் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வுட். பந்தை ‘ஸ்விங்’ செய்வதில் வல்லவரான இவருக்கு உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைக்கவில்லை. ஜைல் ரிச்சர்ட்சன் காயத்தால் விலகியபோது, இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், கேன் ரிச்சர்ட்சன் அணியில் சேர்க்கப்பட்டார்.

    கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் விளையாடிய ஹிசில்வுட், இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், உலகக்கோப்பை நடைபெறும் மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேிதி வரையிலான நாட்களை ஆஷஸ் தொடருக்கு பயன்படுத்த இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹசில்வுட் கூறுகையில் ‘‘உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைக்காதது சற்று ஏமாற்றம் அளிக்கிறது. உலகக்கோப்பை நான்கு வருடத்திற்கு ஒரு முறைதான் வரும். கடந்த முறை சொந்த மைதானத்தில் விளையாடிய அனுபவம் எனக்கு உள்ளது. சொந்த மைதானத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம்.



    உலகக்கோப்பை நடக்கும்பொழுது நான் டிவி-யில் பார்த்துக் கொண்டிருப்பேன். அதுதான் சற்று வருத்தத்தை கொடுக்கிறது. தொடரில் பாதியில் யாராவது ஒருவருக்கு காயம் அடைந்தால், வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.

    உலகக்கோப்பை இடம்பெறாத நிலையில், மேலும் சில நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. இது ஆஷஸ் தொடருக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும்’’ என்றார்.
    ×