என் மலர்
உலகம்
- அன்வர் இப்ராகிமின் அழைப்பை ஏற்று ஆசியான் உச்சி மாநாட்டில் டிரம்ப் பங்கேற்கிறார்.
- சீன அதிபர் ஜின்பிங்கை டிரம்ப் சந்தித்து பேச உள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று 3 ஆசிய நாடுகளுக்கான தனது பயணத்தை தொடங்குகிறார். அவர் 2-வது முறை அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஆசியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
டிரம்ப் முதலில் மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு செல்கிறார். மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமின் அழைப்பை ஏற்று கோலாலம்பூரில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் டிரம்ப் பங்கேற்கிறார்.
இதில் மலேசியா, தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். மேலும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலாடா சில்வா-டிரம்ப் சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசிய பயணத்துக்கு பிறகு டிரம்ப் ஜப்பானுக்கு செல்கிறார். இந்த பயணத்தில் ஜப்பான் பிரதமர் சனே தகைச்சியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அதன்பின் டிரம்ப், தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். இதில் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். குறிப்பாக இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங்கை டிரம்ப் சந்தித்து பேச உள்ளார்.
சமீபகாலமாக அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் நடந்து வருகிறது. நவம்பர் 1-ந்தேதி முதல் சீனா மீதான வரியை 155 சதவீதமாக உயர்த்து வேன் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் டிரம்ப்-ஜின்பிங் இடையேயான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- காஷ்மீர் மக்கள் தாங்கள் எந்த நாட்டுடன் இணைய வேண்டும் என்று ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்ய வேண்டும் என்று கோரினார்.
- பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மற்றும் பாதுகாக்கும் ஒரு நாடு பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இருப்பது வருந்தத்தக்கது
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் ஒடுக்குமுறையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஐநா சபையில் இந்தியா வலியுறுத்தி உள்ளது.
நேற்று ஐ.நா.வின் 80வது ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பி. ஹரிஷ் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "ஜம்மு காஷ்மீர் மக்கள் இந்திய அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள்ளும் ஜனநாயக மரபுகளின்படியும் தங்கள் அடிப்படை உரிமைகளைப் அனுபவிக்கின்றனர். இருப்பினும், இந்த அரசியலமைப்பு, ஜனநாயகம் உள்ளிட்ட கருத்துக்கள் பாகிஸ்தானுக்கு முற்றிலும் பரிச்சயமற்றவை என்பதை நாங்கள் அறிவோம்.
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பிரதேசங்களில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பாகிஸ்தானின் இராணுவ ஆக்கிரமிப்பு, ஒடுக்குமுறை மற்றும் வளங்களை சுரண்டுவதற்கு எதிராக அங்குள்ள மக்கள் வெளிப்படையாக கிளர்ச்சி செய்து வருகின்றனர்" என்று தெரிவித்தார்.
கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி, 1948 ஆம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி, காஷ்மீர் மக்கள் தாங்கள் எந்த நாட்டுடன் இணைய வேண்டும் என்று ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்ய பாகிஸ்தான் பிரதிநிதி கோரினார்.
இதற்கு பதிலளித்த இந்திய பிரதிநிதி ஹரிஷ், அந்த தீர்மானத்தின்படி பொது வாக்கெடுப்பு நடப்பதற்கு முன், பாகிஸ்தான் முதலில் காஷ்மீரின் தான் ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து தன்னுடைய இராணுவத்தையும், பொதுமக்களையும் முழுவதுமாகத் திரும்பப் பெற வேண்டும்.
ஆனால் அந்த நிபந்தனையை இதுவரை பாகிஸ்தான் நிறைவேற்றவில்லை. எனவே பொது வாக்கெடுப்பு கோரும் தீர்மானம் பற்றி இப்போது பேசுவது காலாவதியாகிவிட்டது." என்று தெரிவித்தார்.
முன்னதாக வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேற்று டெல்லியில் நடந்த ஐ.நா.வின் 80வது ஆண்டு நினைவு முத்திரை வெளியீட்டு விழாவில் பேசுகையில், பயங்கரவாதத்தை ஊக்குவித்து பாதுகாக்கும் ஒரு நாடு பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இருப்பது வருந்தத்தக்கது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- தினமும் சுமார் 500 கொள்கலன் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.
- பாகிஸ்தானுக்கு பெரும்பாலான தக்காளி விநியோகம் ஆப்கானிஸ்தானிலிருந்து சென்றுகொண்டிருந்தது.
ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. அண்மையில் இரு நாடுகளுக்கும் எல்லையில் ஏற்பட்ட சண்டையில் பலர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து கத்தாரின் மத்யஸ்தத்தால் அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.
இந்த மோதலால் அக்டோபர் 11 முதல் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லை மூடப்பட்டிருப்பதால் இரு நாடுகளிலும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தடைபட்டுள்ளது.
இதனால் பாகிஸ்தானில் தக்காளியின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. எல்லை மூடப்படுவதற்கு முன் ஆப்கானிஸ்தானில் இருந்து தினமும் சுமார் 500 கொள்கலன் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. மேலும் பாகிஸ்தானுக்கு பெரும்பாலான தக்காளி விநியோகம் ஆப்கானிஸ்தானிலிருந்து சென்றுகொண்டிருந்தது.
இந்நிலையில் எல்லை மூடப்பட்டு விநியோகம் நின்றதால் தக்காளியின் விலை பாகிஸ்தானில் 400 சதவீதம் உயர்ந்து 1 கிலோ தக்காளி 600 ரூபாயாக்கு விற்கப்படுகிறது. பாகிஸ்தான் உணவில் தக்காளி முக்கிய பங்காற்றும் நிலையில் இந்த விலை உயர்வு மக்களை அதிகம் பாதித்து வருகிறது.
எல்லை மூடப்பட்டதால் போக்குவரத்து தடைபட்டு அத்தியாவசிய பொருட்கள் விநோயோகம் நின்றதால் இரு நாடுகளும் ஒவ்வொரு நாளும் 1 மில்லியன் டாலர்களை இழந்து வருவதாக பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் வர்த்தக சபையின் தலைவர் கான் ஜான் அலோகோசி கூறினார்.
- வயல்களில் போதைப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவித்து வருகிறார் என்று குற்றம்சாட்டினார்.
- அவர் ஒரு சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரி என்றும் அவர் போதை பொருளை தடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
அமெரிக்காவுக்குள் போதை பொருள் கடத்தப்படுவதை தடுக்க அதிபர் டிரம்ப் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதற்கிடையே போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் கொலம்பியா மீது டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, வயல்களில் போதைப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவித்து வருகிறார் என்று குற்றம்சாட்டிய டிரம்ப், அவர் ஒரு சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரி என்றும் அவர் போதை பொருளை தடுக்கவில்லை என்றும் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் அதிபர் பெட்ரோ இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார்.
அண்மையில் மத்திய கரீபியன் கடலில் போதைப்பொருள் ஏற்றிச் செல்வதாக சந்தேகப்படும் கப்பல்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல்களை அதிபர் பெட்ரோ விமர்சித்தார்.
இந்த நிலையில் உலகளாவிய போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கூறி கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது.
மேலும் அவரது மனைவி வெரோனிகா கார்சியா,மகன் நிக்கோலஸ் பெர்னாண்டோ பெட்ரோ பர்கோஸ் மற்றும் கொலம்பிய உள்துறை அமைச்சர் அர்மாண்டோ ஆல்பர்டோ பெனடெட்டி ஆகியோருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அமெரிக்காவில் உள்ள அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படும். மேலும் அமெரிக்கர்களுடன் அவர்கள் வர்த்தகம் செய்ய முடியாது.
அதிபர் பெட்ரோவின் அமெரிக்க விசா கடந்த மாதம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ராஜமாதா சிரிகிட் உடைய பிறந்தநாள் அந்நாட்டில் அன்னையர் தினமாக கொண்டாடப்பட்டு பொது விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
- தனது 18 வயதில் மன்னர் பூமிபால்-ஐ அவர் சிரிகிட் திருமணம் செய்து கொண்டார்.
தாய்லாந்தின் தற்போதைய மன்னர் வஜிராலங்கார்னின் தாயாரான ராஜமாதா சிரிகிட் (Queen Mother Sirikit) உடல்நலக்குறைவால் காலனமார். அவருக்கு வயது 93.
ராஜமாதா சிரிகிட், தாய்லாந்தை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரான பூமிபால் அதுல்யதேஜின் மனைவியாவார்.
அக்டோபர் 17 ஆம் தேதி முதல் இரத்தத் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9.14 மணியளவில் பாங்காக்கில் உள்ள சுலாலோங்கார்ன் மருத்துவமனையில் காலமானார் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உடல், இறுதிச் சடங்கு வரை பாங்காக்கில் உள்ள கிராண்ட் பேலஸில் வைக்கப்பட உள்ளது.
1932 ஆகஸ்ட் 12 பிறந்த ராஜமாதா சிரிகிட் உடைய பிறந்தநாள் அந்நாட்டில் அன்னையர் தினமாக கொண்டாடப்பட்டு பொது விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
தனது 18 வயதில் மன்னர் பூமிபால்-ஐ அவர் சிரிகிட் திருமணம் செய்து கொண்டார். கடந்த 2016 இல் பூமிபால் காலமான பின் இவர்களது மகன் வஜிராலங்கார்ன் மன்னராக முடிசூடினார்.

2012 முதல் சிரிகிட் பொதுவெளியில் அதிகம் தோன்றாமல் இருந்து வந்தார். தாய்லாந்தில் கிராமப்புற மேம்பாடு பெண்களின் கைவினை தொழில்களுக்கு உதவுதல், சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வு மற்றும் பல்வேறுநலத்திட்ட பணிகளை சிரிகிட் மேற்கொண்டு வந்தார்.
- தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் அடுத்த மாதம் 16-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
- அதிபருக்கு வழங்கிய சாக்லெட்டுகளை சோதனை செய்தபோது அதில் நச்சுப்பொருட்கள் இருப்பது தெரிந்தது.
குயிட்டோ:
தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் அதிபர் டேனியல் நோபோவா (37) தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது பதவிக் காலம் விரைவில் முடிய உள்ளதால் அடுத்த மாதம் 16-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் அவர் மீண்டும் போட்டியிடுவதால் நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் மற்றும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். அதன்படி சமீபத்தில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.
அப்போது அன்பளிப்பாக அவருக்கு சாக்லெட்டுகள் வழங்கப்பட்டன. அந்த சாக்லெட்டுகளை சோதனை செய்தபோது அதில் அதிக செறிவூட்டப்பட்ட நச்சுப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து அதிபர் டேனியல் நோபோவா கூறுகையில், இந்த சம்பவம் தற்செயலான நிகழ்வு அல்ல. எனவே விஷசாக்லெட் கொடுத்து தன்னை கொல்ல சதி நடப்பதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து அவரது பாதுகாப்புக்கு பொறுப்பான ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது.
ஏற்கனவே எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக அரசாங்கத்தை கண்டித்து இந்த மாதம் போராட்டம் நடைபெற்றது. அப்போது அதிபர் டேனியல் சென்ற வாகனம் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கி–னர். அவரது வாகனத்தில் சில தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
இந்த தாக்குதல் அதிபரை கொல்ல முயற்சி என ராணுவ மந்திரி கியான் கார்லோ லோப்ரெடோ கூறினார். தற்போது ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக அவரை கொல்ல சதி நடைபெற்ற சம்பவம் ஈகுவடார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் அடைந்துள்ளது.
- வர்த்தக ஒப்பந்தங்கள் வெறும் வரிகள் மட்டும் உள்ளடக்கியது கிடையாது என்றார்.
பெர்லின்:
இந்தியா, அமெரிக்கா இடையே பரிந்துரை செய்யப்பட்ட இருநாட்டு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்ட பேச்சுவார்த்தையை நவம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என இரு நாட்டு தலைவர்களும் தங்கள் நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி விவாதிக்க மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் ஜெர்மனி சென்றுள்ளார். பெர்லினில் நடந்த நிகழ்ச்சியில் பியூஷ் கோயல் பேசியதாவது:
இந்தியா அவசரமாக எந்த வர்த்தக ஒப்பந்தத்திலும் கையெழுத்திடாது.
வர்த்தக ஒப்பந்தங்கள் வெறும் வரிகள் மட்டும் உள்ளடக்கியது கிடையாது.
வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கான இந்தியாவின் அணுகுமுறை, உடனடி வர்த்தக இலக்குகளை அடைவதற்கான அழுத்தத்தால் அல்ல, நீண்டகால தொலைநோக்கு பார்வையைக் கொண்டது. வர்த்தக ஒப்பந்தங்கள் நீண்ட காலத்திற்கு உரியவை.
இந்தியாவும் அமெரிக்காவும் தங்கள் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. விரைவில் ஒரு நியாயமான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பமென நம்புகிறோம் என தெரிவித்தார்.
- இஸ்ரேல் இதுவரை போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை கடைபிடித்துள்ளது.
- ஹமாஸ் ஆயுதங்களை கீழே போட வேண்டும்.
இஸ்ரேல்- காசா இடையிலான டொனால்டு டிரம்பின் முயற்சியால் அமைதிக்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முதற்கட்டாக உயிருடன் உள்ள 20 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.
தாக்குதலின்போது உயிரிழந்தவர்களின் உடலையும் ஹமாஸ் அமைப்பினர் எடுத்துச் சென்றனர். அந்த உடல்களை இன்னும் முழுமையாக ஒப்படைக்கவில்லை என இஸ்ரேல் கூறுகிறது. அதேவேளையில், அதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஹமாஸ் விதிமுறையை மீறியதாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஹமாஸ் மறுத்துள்ளது.
இதனால் அமைதி ஒப்பந்தத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால, அமைதி ஒப்பந்தத்தை வலிமையாக அமெரிக்காவின் முன்னிணி அதிகாரிகள், அமைச்சர்கள் மத்திய கிழக்கு பகுதிக்கு பயணம் செய்தவாறு உள்ளனர்.
இன்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியா, இஸ்ரேல் வந்தடைந்துள்ளார். அவர் "காசாவில் நிரந்தரமான அமைதியை உருவாக்குவதற்காக, டொனால்டு டிரம்ப் தயார் செய்த ஒரு திட்டத்தை தவிர்த்து வேறு எந்த திட்டமும் இல்லை. இது சிறந்த திட்டம். ஒரே திட்டம்தான்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இஸ்ரேல் இதுவரை போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை கடைபிடித்துள்ளது. ஹமாஸ் ஆயுதங்களை கீழே போட வேண்டும். ஹமாஸ் அமைப்பு மிரட்டல் விடுக்கும் வகையில் நடந்து கொண்டால், அவர்கள் மீதான தாக்குதலை மீண்டும் தொடங்க, அமெரிக்காவின் அனுமதி இஸ்ரேலுக்கு தேவையில்லை" என்றார்.
- சீனாவின் நீண்ட தூர HQ-9 தரை-வான் ஏவுகணைகளுக்கு ஏற்றவையாக இருக்கும்.
- இந்தியாவின் நியோமா போர் விமான தளத்திற்கு எதிரே இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியா-சீனா எல்லை கட்டுப்பாடு கொடு அமைந்துள்ள திபெத்தில் தங்கள் பக்கம் உள்ள பகுதியில் சீனா கட்டுமானங்களை செய்து வருகிறது. இதுகுறித்து மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது.
இந்நிலையில் திபெத்தின் பாங்காங் ஏரியின் கிழக்குக் கரையில் வான் பாதுகாப்பு வளாகம் ஒன்றை சீனா கட்டி வருவது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
2020இல் திபெத்தின் கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறி சீன வீரர்கள் தாக்குதல் நடத்தி 20 இந்திய வீரர்களை கொன்ற இடத்தில் இருந்து சுமார் 110 கி.மீ தொலைவில் இந்த சீன வான் பாதுகாப்பு வளாக கட்டுமானம் முழுவீச்சில் நடைபெறுவதை புகைப்படங்கள் காட்டுகின்றன.
இந்த வளாகத்தில் மறைவான ஏவுகணை ஏவுதளங்கள் இடம்பெற்றுள்ளது. இங்கு ஏவுகணைகளை ஏற்றிச் சென்று சுடும் வாகனங்களை பாதுகாத்து மறைத்துவைக்க கூரைகள் பொருத்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. கூரைகள் திறக்கப்பட்டவுடன் ஏவுகணைகளைச் சுட அனுமதிக்கிறது. இதன்பின் எதிர்தாக்குதலில் இருந்து தப்பிக்க கூரைகள் மீண்டும் மூடப்படும்.

இந்த பாதுகாப்பு அமைப்பு, சீனாவின் நீண்ட தூர HQ-9 தரை-வான் ஏவுகணைகளுக்கு ஏற்றவையாக இருக்கும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இந்த வடிவமைப்பைக் கொண்ட ஒரு மாதிரி வளாகம், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்து சுமார் 65 கி.மீ தொலைவில் உள்ள கார் கவுண்டியில், இந்தியாவின் நியோமா போர் விமான தளத்திற்கு எதிரே இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
எல்லைப் பகுதியில் சீனா தனது ராணுவ உள்கட்டமைப்பைத் தொடர்ந்து பலப்படுத்தி வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.
- ரோஸ் நெப்ட் மற்றும் அகோயில் ஆகியவற்றிற்கு பொருளாதார தடை விதித்தார்.
- சுய மரியாதை கொண்ட நாடும், சுயமரியாதை கொண்ட மக்களும் அழுத்தத்திற்காக எதையும் முடிவு செய்ய மாட்டார்கள்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தான் பதவி ஏற்றபிறகு ரஷியாவுடன் உறவுகளை மேம்படுத்த முயன்றார். அந்நாட்டு அதிபர் புதினுடன் தொலைபேசியிலும் பேசி நட்பை வளர்த்தார்.
மேலும், உக்ரைனுடன் ரஷியா நடத்தி வரும் போரை நிறுத்தும் முயற்சியிலும் டிரம்ப் ஈடுபட்டார். ஆனால் அவரது முயற்சி எந்தவித பலனும் அளிக்கவில்லை.
இதனால் விரக்தி அடைந்த டிரம்ப் ரஷியா வின் மிகப்பெரிய 2 எண்ணை நிறுவனங்களான ரோஸ் நெப்ட் மற்றும் அகோயில் ஆகியவற்றிற்கு பொருளாதார தடை விதித்தார்.
ரஷியாவுக்கு எதிராக டிரம்ப் எடுத்த முதல் நடவடிக்கை இதுவாகும். ரஷியாவின் இந்த 2 எண்ணெய் நிறுவனங்களும் உலக கச்சா எண்ணை வினியோகத்தில் 6 சதவீத பங்கை கொண்டு உள்ளன. ரஷிய அரசுக்கான மிகப் பெரிய வருவாய் ஆதாரமாக இந்நிறுவனங்கள் உள்ளன.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து ரஷிய அதிபர் புதின் கூறியதாவது:-
ரஷியா மீதான தடைகள் நட்பற்ற செயல். இது நிச்சயமாக ரஷியா மீது அழுத்தம் கொடுக்கும் முயற்சிதான். இவை சில விளைவுகளை ஏற்படுத்தினாலும் எங்களது பொருளாதாரம் பாதிக்கும் வகையில் இருக்காது. இவை நீண்ட காலம் நீடிக்காது என்று நம்புகிறோம்.
அமெரிக்கா அல்லது வேறு எந்த நாட்டின் அழுத்தத்திற்கும் ரஷியா ஒரு போதும் அடிபணியாது. சுய மரியாதை கொண்ட நாடும், சுயமரியாதை கொண்ட மக்களும் அழுத்தத்திற்காக எதையும் முடிவு செய்ய மாட்டார்கள். சுய மரியாதை கொண்ட எந்த நாடும் அப்படி செய்யாது. ரஷியா வின் எரிசக்தி துறை நம்பிக்கையுடன் உள்ளது.
போரை விட பேச்சுவார்த்தை எப்போதும் சிறந்தது. போர் தீர்க்கப்படும் என நம்புகிறோம்.
அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய டோமோ ஹாக் ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தினால் அதற்கான பதிலடி கடுமையாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- செக்போஸ்ட்-ஐ குறிவைத்து முதல் தாக்குதல் நடத்தப்பட்டது.
- பின்னர் அப்பகுதிக்கு சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடந்த அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் 3 போலீசார் உயிரிழந்தனர்.
முதலில் போலீஸ் செக்போஸ்ட்-ஐ குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது அந்த போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் 3 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹங்கு நகரில் நடைபெற்ற இந்த தாக்குதலில் எஸ்.பி. படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நுழைந்து காபூல் நதியில் இணைகிறது.
- இது இறுதியாக அட்டோக்கில் சிந்து நதியுடன் இணைகிறது.
ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. அண்மையில் இரு நாடுகளுக்கும் எல்லையில் ஏற்பட்ட சண்டையில் பலர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து கத்தாரின் மத்யஸ்தத்தால் அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.
இந்த சூழலில் தங்கள் நாட்டில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் குனார் ஆற்றில் ஒரு பெரிய அணையைக் கட்டி, நீர் ஓட்டத்தைக் தடுக்க தாலிபான் முடிவு செய்துள்ளது.
அணையின் கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்க நீர் மற்றும் எரிசக்தி அமைச்சகத்திற்கு தாலிபான் உச்ச தலைவர் மௌல்வி ஹிபதுல்லா அகுண்ட்சாடா உத்தரவிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் நீர் மற்றும் எரிசக்தி அமைச்சகம் இதை உறுதிப்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைகளில் உருவாகும் 480 கி.மீ நீளமுள்ள குனார் நதி, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நுழைந்து காபூல் நதியில் இணைகிறது. பாகிஸ்தானில், இது சித்ரல் நதி என்று அழைக்கப்படுகிறது.
காபூல் நதி ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பாயும் மிகப்பெரிய நதியாகும். இது இறுதியாக அட்டோக்கில் சிந்து நதியுடன் இணைகிறது.
குனார் நதியில் அணை கட்டப்பட்டால், அதன் தாக்கம் காபூல் நதியிலும், பின்னர் சிந்து நதியிலும் இருக்கும். இது பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு கடுமையான நெருக்கடியை உருவாக்கும்
முன்னதாக ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பின் பாகிஸ்தானுடன் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது போல ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானின் நீராதாரத்தை குறிவைத்து நடவடிக்கை எடுத்து வருவது கவனம் பெற்றுள்ளது.
தாலிபான்கள் இந்தியாவிடம் சேர்ந்து டங்காக்குக்கு எதிராக பயங்கரவாத சதி திட்டம் தீட்டி செயல்பட்டு வருவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.






