என் மலர்
உலகம்

ஒரு கிலோ தக்காளி ரூ.600.. பதறும் பாகிஸ்தான் மக்கள் - ஆப்கானிஸ்தான் வைத்த ஆப்பு!
- தினமும் சுமார் 500 கொள்கலன் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.
- பாகிஸ்தானுக்கு பெரும்பாலான தக்காளி விநியோகம் ஆப்கானிஸ்தானிலிருந்து சென்றுகொண்டிருந்தது.
ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. அண்மையில் இரு நாடுகளுக்கும் எல்லையில் ஏற்பட்ட சண்டையில் பலர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து கத்தாரின் மத்யஸ்தத்தால் அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.
இந்த மோதலால் அக்டோபர் 11 முதல் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லை மூடப்பட்டிருப்பதால் இரு நாடுகளிலும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தடைபட்டுள்ளது.
இதனால் பாகிஸ்தானில் தக்காளியின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. எல்லை மூடப்படுவதற்கு முன் ஆப்கானிஸ்தானில் இருந்து தினமும் சுமார் 500 கொள்கலன் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. மேலும் பாகிஸ்தானுக்கு பெரும்பாலான தக்காளி விநியோகம் ஆப்கானிஸ்தானிலிருந்து சென்றுகொண்டிருந்தது.
இந்நிலையில் எல்லை மூடப்பட்டு விநியோகம் நின்றதால் தக்காளியின் விலை பாகிஸ்தானில் 400 சதவீதம் உயர்ந்து 1 கிலோ தக்காளி 600 ரூபாயாக்கு விற்கப்படுகிறது. பாகிஸ்தான் உணவில் தக்காளி முக்கிய பங்காற்றும் நிலையில் இந்த விலை உயர்வு மக்களை அதிகம் பாதித்து வருகிறது.
எல்லை மூடப்பட்டதால் போக்குவரத்து தடைபட்டு அத்தியாவசிய பொருட்கள் விநோயோகம் நின்றதால் இரு நாடுகளும் ஒவ்வொரு நாளும் 1 மில்லியன் டாலர்களை இழந்து வருவதாக பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் வர்த்தக சபையின் தலைவர் கான் ஜான் அலோகோசி கூறினார்.






