என் மலர்
தலைப்புச்செய்திகள்
- தல்லாகுளம் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் ஸ்ரீ கிருஷ்ணாவதார காட்சி.
- தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-9 (வியாழக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : திருதியை காலை 6.09 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : சுவாதி இரவு 7.03 மணி வரை பிறகு விசாகம்
யோகம் : அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சதுர்த்தி விரதம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம்
இன்று சதுர்த்தி விரதம். மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் பட்டாபிஷேக அலங்கார காட்சி. தல்லாகுளம் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் ஸ்ரீ கிருஷ்ணாவதார காட்சி. மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் பவனி. பழனி ஸ்ரீ ஆண்டவர், தேரெழுந்தூர் ஸ்ரீ ஞானசம்பந்தர் புறப்பாடு. சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம்.
திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சனம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தனம்
ரிஷபம்-மாற்றம்
மிதுனம்-பயணம்
கடகம்-பரிசு
சிம்மம்-வரவு
கன்னி-களிப்பு
துலாம்- நிம்மதி
விருச்சிகம்-ஆதாயம்
தனுசு- அமைதி
மகரம்-கவனம்
கும்பம்-யோகம்
மீனம்-நிறைவு
- புதினும் ரஷியாவும் பெரும் பொருளாதாரச் சிக்கலில் உள்ளனர்.
- உக்ரைன் செயல்பட இதுவே சரியான நேரம்.
உக்ரைன் போர் விவகாரத்தில், ரஷிய அதிபர் புதினை இதுவரை மென்மையாகக் கையாண்டு வந்த டிரம்ப், சமீபத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார்.
ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பேசிய டிரம்ப், ரஷியா ஒரு காகிதப் புலி என்றும் இழக்கப்பட்ட போரை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
ரஷியாவல் போரை விரைவாக வெல்ல முடியவில்லை என்றும் கேலி செய்த டிரம்ப், உக்ரைன் தனது இழந்த பகுதிகள் அனைத்தையும் ரஷிய படைகளிடம் இருந்து மீட்க முடியும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
மேலும்,"புதினும் ரஷியாவும் பெரும் பொருளாதாரச் சிக்கலில் உள்ளனர்; உக்ரைன் செயல்பட இதுவே சரியான நேரம்" என்றும் டிரம்ப் கூறியிருந்தார்.
இந்நிலையில் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ஆர்.பி.சி. வானொலியில் பேசுகையில், "ரஷ்யா ஒருபோதும் புலி அல்ல. அது பாரம்பரியமாகவே கரடியாக பார்க்கப்படுகிறது. காகிதத்தால் ஆன கரடி என்று ஒன்று இல்லை. ரஷியா ஒரு உண்மையான கரடி... அதில் காகிதம் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று தெரிவித்தார்
மேலும், 2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீதான முழு அளவிலான தாக்குதலைத் தொடர்ந்து மேற்குலக நாடுகள் விதித்த தடைகள் காரணமாக சில பதட்டங்கள் இருந்தாலும், ரஷியா பொருளாதார நிலைத்தன்மையுடன் நீடிப்பதாகவும் பெஸ்கோவ் தெரிவித்தார்.
- ஜார்ஜியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளை புதினின் ஆதிக்கத்திலிருந்து காப்பாற்றும் வாய்ப்பை மேற்குலகம் ஏற்கனவே தவறவிட்டுவிட்டது.
- ஆயிரக்காணக்கான உக்ரைன் குழந்தைகளை ரஷியா கடத்திச் சென்றுள்ளது.
80வது ஐநா பொதுச்சபை கூட்டம் அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடந்து வருகிறது.
நேற்றைய கூட்டத்தில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, "புதினை இப்போது தடுத்து நிறுத்தவில்லை என்றால், உக்ரைனின் எல்லைகளுக்கு அப்பால் ஐரோப்பாவுக்கும் போரை விரிவுபடுத்துவார்.
ரஷிய டிரோன்கள் மற்றும் ஜெட் விமானங்கள் நேட்டோ வான்வெளியில் அத்துமீறி நுழைகின்றன.
ரஷியாவை இப்போதே தடுத்துநிறுத்த ஐ. நா கட்டாயம் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.
நேச நாடுகள் ஒன்றிணைந்து உக்ரைனுக்கு ஆதரவு கொடுத்தால் மட்டுமே ரஷியாவின் ஆக்கிரமிப்பிலிருந்து பிற நாடுகளைக் காப்பாற்ற முடியும்.
ஜார்ஜியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளை புதினின் ஆதிக்கத்திலிருந்து காப்பாற்றும் வாய்ப்பை மேற்குலகம் ஏற்கனவே தவறவிட்டுவிட்டது. அதேபோல ஐரோப்பிய நாடுகள் மோல்டோவாவையும் ரஷியாவிடம் இழந்துவிடக் கூடாது.
ஆயிரக்காணக்கான உக்ரைன் குழந்தைகளை ரஷியா கடத்திச் சென்றுள்ளது. அவர்களில் சிலரை மட்டுமே மீட்டுக் கொண்டு வந்திருக்கிறோம்.
அவர்கள் அனைவரையும் மீட்க இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும்? அவர்களை நாம் மீட்பதற்குள் தங்கள் குழந்தைப் பருவத்தை அவர்கள் கடந்துவிடுவர் போலத் தெரிகிறது.
தற்போது உலகின் ராணுவத் தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால் மனித வரலாற்றிலேயே மிக அழிவுகரமான ஆயுதப் போட்டியில் வாழ்கிறோம். "யார் பிழைக்கிறார்கள் என்பதை ஆயுதங்களே தீர்மானிக்கின்றன.
டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் போன்ற ஆயுதங்கள், பாரம்பரியப் போர்களை விட அதிக ஆபத்தை உருவாக்குகின்றன.
ராணுவ ஆயுதங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்துவது குறித்து சர்வதேச விதிகள் தேவை.
சர்வதேச அமைப்புகள் உக்ரைனுக்குப் பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்குவதில் மிகவும் பலவீனமாக செயல்படுகின்றன. நேட்டோவில் இருப்பது மட்டுமே பாதுகாப்பைக் கொடுக்காது.
- விளையாட்டில் டார்கெட்களை அடைய முடியாதபோது சிறுவன் ஆக்ரோஷமடைவது வழக்கம்.
- விளையாட்டின் தாக்கத்தால் இந்தக் கொலையைச் செய்ததாகக் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.
பாகிஸ்தானில் ஆன்லைன் PUBG விளையாட்டில் ஏற்பட்ட வெறியின் உச்சத்தில் தனது தாயார் மற்றும் மூன்று சகோதரர்களை சுட்டுக் கொன்ற 17 வயதுச் சிறுவனுக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
லாகூரின் கஹ்னா பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஜைன் அலி. 2022 இல் இந்த சம்பவம் நடந்த போது ஜைன் அலிக்கு 14 வயது.
PUBG விளையாட்டில் தீவிரமாக அடிமையாக இருந்த சிறுவன், விளையாட்டில் அதிக நேரத்தைச் செலவழிப்பதாகத் தாயார் நாகித் முபாரக் (45) கண்டித்து வந்தார்.
மேலும், விளையாட்டில் டார்கெட்களை அடைய முடியாதபோது சிறுவன் ஆக்ரோஷமடைவது வழக்கம்.
அப்போது ஒரு நாள், பல மணி நேரம் PUBG விளையாடிய ஜைன் அலி, ஒரு இலக்கைத் தவறவிட்டதால் ஆத்திரமடைந்தான். அதேநேரம் தாயாரும் சிறுவனை அதிக நேரம் விளையாட்டில் மூழ்கியிருப்பதாக கண்டிக்கவே அவன் மேலும் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தாயார் நாகித் முபாரக், அண்ணன் தைமூர் (20), மற்றும் இரண்டு சகோதரிகள் மஹ்னூர் (15), ஜன்னத் (10) ஆகியோர் தூங்கும் சமயத்தில் வீட்டில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து சிறுவன் ஜைன் அலி அவர்களை சுட்டுக் கொன்றான்.
விளையாட்டின் தாக்கத்தால் இந்தக் கொலையைச் செய்ததாகக் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்த வழக்கை விசாரித்த லாகூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
குற்றவாளி ஜைன் அலிக்கு அவனது வயது காரணமாக, மரண தண்டனைக்குப் பதிலாக நான்கு ஆயுள் தண்டனைகள் (ஒவ்வொரு கொலைக்கும் 25 ஆண்டுகள்) என மொத்தம் 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், 4 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
- சரணடைந்தவர்களில் 21 பெண்கள், ஒரு 17 வயதுச் சிறுவன், மற்றும் 16, 17 வயதுடைய இரண்டு சிறுமிகள் ஆகியோரும் அடங்குவர்
- சரணடைந்த மாவோயிஸ்டுகள் அனைவருக்கும் ஆரம்ப நிதியுதவியாக தலா ரூ. 50,000 வழங்கப்பட்டது.
சத்தீஸ்கரின் தாந்தேவாடா மாவட்டத்தில் நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில் 71 மாவோயிஸ்டுகள் காவல்துறை அதிகாரிகளிடம் சரணடைந்தனர்.
இதில், 30 மாவோயிஸ்டுகள் மொத்தமாக ரூ. 64 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்த முக்கிய நபர்கள் ஆவர்.
சரணடைந்தவர்களில் 21 பெண்கள், ஒரு 17 வயதுச் சிறுவன், மற்றும் 16, 17 வயதுடைய இரண்டு சிறுமிகள் ஆகியோரும் அடங்குவர்.
பஸ்தர் சரக காவல்துறை அறிமுகப்படுத்திய மறுவாழ்வுத் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு இவர்கள் சரணடைந்துள்ளதாக தாந்தேவாடா காவல்துறை கண்காணிப்பாளர் கவுரவ் ராய் தெரிவித்தார்.
சரணடைந்த மாவோயிஸ்டுகள் அனைவருக்கும் ஆரம்ப நிதியுதவியாக தலா ரூ. 50,000 வழங்கப்பட்டது.
நாராயண்பூர் மாவட்டத்தில் திங்களன்று நடந்த மோதலில், மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியத் தலைவர்களான ராஜு தாதா மற்றும் கோசா தாதா இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 2022 செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.
- ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதில் நீண்டகால அனுபவம் உண்டு
முப்படை தலைமை தளபதி அனில் சவுகானின் பதவிக்காலம் 2026 வரை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
முப்படை தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் டிசம்பர் 2021 இல் உயிரிழந்ததை தொடர்ந்து அந்த பதவிக்கு அனில் சவுகான் கடந்த 2022 செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.
இந்திய இராணுவத்தில் சுமார் 40 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அனில் சவுகான் பல உயரிய பதக்கங்களை பெற்றுள்ளார். அவருக்கு ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதில் நீண்டகால அனுபவம் உண்டு.
இந்நிலையில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முப்படைத் தளபதி மற்றும் ராணுவ விவகாரங்கள் துறை செயலாளராக அனில் சௌஹானின் பதவிக்காலம் 2026 மே 30-ஆம் தேதி வரையில் அல்லது மறு உத்தரவு வரும் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மால் ஹயாம் ஷாப்பிங் சென்டர் அருகே ஏராளமான உள்ளூர்வாசிகளும் சுற்றுலாப் பயணிகளும் கூடியிருந்தனர்.
- இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகள் நடத்திய பதில் தாக்குதல்களில் மக்கள் படுகாயமடைந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இஸ்ரேலின் எயிலாட் நகரத்தின் மீது ஏமனில் இருந்து ஏவப்பட்ட டிரோன்கள் நடத்திய தாக்குதல்களில் 20 பேர் படுகாயமடைந்தனர்.
இஸ்ரேலின் அயன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பை கடந்து நேற்று பின்னேரத்தில் டிரோன்கள் நகரத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டது.
சுற்றுலா நகரமாக அறியப்படும் ஏலாட்டில் உள்ள மால் ஹயாம் ஷாப்பிங் சென்டர் அருகே ஏராளமான உள்ளூர்வாசிகளும் சுற்றுலாப் பயணிகளும் கூடியிருந்த பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர். பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து காயமடையாதோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஏமனில் இருந்து இஸ்ரேலின் மீது தொடர் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் என்று யூகிக்கப்படுகிறது.
டிரோன்களை தகர்க்க இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகள் நடத்திய பதில் தாக்குதல்களில் மக்கள் படுகாயமடைந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு படை விசாரணை நடத்தி வருகிறது.
- 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்து அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர் இவர்.
- கமர்குச்சி கிராமத்தில் கர்க்கின் உடல் அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை(செப். 23) தகனம் செய்யப்பட்டது.
பிரபல அசாமிய பாடகர் ஜூபின் கார்க் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்தபோது விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்து அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர் இவர்.
கவுஹாத்தி அருகேயுள்ள கமர்குச்சி கிராமத்தில் கர்க்கின் உடல் அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை(செப். 23) தகனம் செய்யப்பட்டது.
மறுபுறம் கார்க்கின் மரணம் விபத்து தானா என்பது குறித்த சந்தேகங்களும் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், ஜூபின் கார்க் மரண வழக்கை விசாரிக்க உருவக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவுக்கு ஐபிஎஸ் அதிகாரி எம். பி. குப்தா தலைமை வகிப்பார் என்றும், 10 அதிகாரிகள் கொண்ட இந்த குழு விரிவன விசாரணை நடத்தி அறிக்கையை அஸ்ஸாம் அரசிடம் விரைவில் தாக்கல் செய்யும் என்று அம்மநில முதல்வர் ஹிமந்த பிச்வவா சர்மா தெரிவித்தார்.
- கொரோனா காலத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக செயல்பட்டார்.
- கொரோனா பரவல் காலத்தில் சுகாதாரத்துறை செயலாளராக திறம்பட பணியாற்றிய இவரது மறைவு, மிகப் பெரும் இழப்பாகும்.
தமிழக எரிசக்தித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பீலா வெங்கடேசன் (55), ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் கொரோனா காலத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக செயல்பட்டார்.
இதனிடையே, பீலா வெங்கடேசன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீலா வெங்கடேசன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் எதிர்கட்சித் தலைவர் இபிஎஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர். பீலா வெங்கடேசன் இ.ஆ.ப. அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், அரசு ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட இரங்கல் பதிவில், ஐஏஎஸ் அதிகாரி திருமதி பீலா வெங்கடேசன் அவர்களின் மறைவுச் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
கொரோனா பரவல் காலத்தில் சுகாதாரத்துறை செயலாளராக திறம்பட பணியாற்றிய இவரது மறைவு, மிகப் பெரும் இழப்பாகும்.
திருமதி பீலா வெங்கடேசன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன். ஓம் சாந்தி!" என்று குறிப்பிட்டுள்ளார்.
- இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.
- சைப் ஹசன் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார்.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.
இந்நிலையில், துபாயில் நடைபெறும் சூப்பர் 4 சுற்றுக்கான போட்டியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின.
டாஸ் வென்ற வங்கதேசம் அணி பவுலிங் தேர்வு செய்தள்ளது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா, சுப்மன் கில் இறங்கினர்.
முதலில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி அடுத்து அதிரடியில் இறங்கியது. பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் குவித்தது.
முதல் விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்த நிலையில் சுப்மன் கில் 29 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா அரை சதம் கடந்தார். அவர் 37 பந்தில் 5 சிக்சர், 6 பவுண்டரி உள்பட் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ஷிவம் துபே 2 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 5 ரன்னும், திலக் வர்மா 5 ரன்னும் எடுத்து வெளியேறினர்.
கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய பாண்ட்யா 38 ரன்னும், அக்சர் படேல் 10 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக சைப் ஹசன் மற்றும் டான்சித் ஹசன் தமீம் களம் கண்டனர்.
சைப் ஹசன் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார். இருப்பினும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர்.
19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வங்கதேச அணி 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன் மூலம் 41 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
- தேதி வாரியாக தேர்வுகள் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் வெளிநாடுகளிலும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
2025-26ம் கல்வியாண்டுக்கான சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான உத்தேச கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி முதல் ஜுலை 15ம் தேதிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடம், தேதி வாரியாக தேர்வுகள் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது உத்தேச அட்டவணை என்றும், பள்ளிகள் மாணவர்களின் இறுதிப் பட்டியலைச் சமர்ப்பித்த பிறகு இறுதி கால அட்டவணை வெளியிடப்படும் என்றும் CBSE தெரிவித்துள்ளது.
இந்த தேர்வில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 45 லட்சம் மாணவர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் வெளிநாடுகளிலும் பள்ளிகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- சாமியாரின் நோக்கங்களுக்கு இணங்குமாறு சில ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களும் கட்டாயப்படுத்தினர்.
- மாணவிகளை சாமியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்த ஆசிரம வார்டன்களின் வாக்குமூலம் அளித்தனர்.
டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ஆசிரமத்துக்கு சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி என்ற பார்த்தசாரதி என்பவர் இயக்குநராக உள்ளார்.
இந்த ஆசிரமத்தின் கீழ் ஸ்ரீ சாரதா இந்திய பொறியியல் மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவை (EWS) சேர்ந்த மாணவிகள் ஸ்காலர்ஷிப் பெற்று படித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களில், முதுநிலை டிப்ளமோ படித்து வரும் 17 மாணவிகள் சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளனர்.
அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்துதல், ஆபாசமான வாட்ஸ்அப் மற்றும் எஸ்.எம்.எஸ் செய்திகளை அனுப்புதல், மற்றும் தேவையற்ற உடல் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்தல் போன்ற பல குற்றச்சாட்டுகளை சாமியார் மீது மாணவிகள் சுமத்தியுள்ளனர்.
சாமியாரின் நோக்கங்களுக்கு இணங்குமாறு சில ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களும் தங்களை கட்டாயப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய டெல்லி போலீஸ், மாணவிகளை சாமியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்த ஆசிரம வார்டன்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் துன்புறுத்தல் உள்பட பிரிவுகளின் கீழ் சாமியார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதாயறிந்த சைதன்யானந்த சரஸ்வதி தலைமறைவாகி உள்ளார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அவரை பதவிநீக்கம் செய்து ஆசிரம நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.






